வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. செய்திகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

First News Paper in India

James Augustus Hickey or Hicky, a highly eccentric Irishman who had previously spent two years in gaol for debt, Hickey's Bengal Gazette or the Calcutta General Advertiser was the first English language newspaper, and indeed the first printed newspaper, to be published in the Indian sub-continent.

It was a weekly newspaper, and was founded in 1779, in Calcutta, the capital of British India. The memoirist William Hickey (who, confusingly, was not in fact related to the paper's founder) describes its establishment shortly after he had succeeded (in his capacity as an attorney-at-law) in having James Hicky released from debtor's gaol.

http://en.wikipedia.org/wiki/
Hickey's_Bengal_Gazette


 
  ------------------------------  
 

Guinness World Record for the world's smallest newspaper

From The Guinness World Records 2010: 'the smallest newspaper measures 32 x 22 mm (1.25 x 0.86 in) achieved by First News Newspaper in West Horsley, Surrey, UK published on the November 8, 2007 in celebration of Guinness World Records Day.'

http://www.firstnews.co.uk/
weird/first-news-is-the-worlds-smallest-newspaper-i97

 
     
   
செய்திகள்
1
 

          உலகின் முதல் செய்தி தாள்

 

Johann Carolus (1575 - 1634) was the publisher of the first newspaper, called Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien (Collection of all distinguished and commemorable news). The Relation is recognised by the World Association of Newspapers[1], as well as many authors[2] as the world's first newspaper. The German Relation was published in Strassburg, which had the status of an imperial free city in the Holy Roman Empire of the German Nation.

 

 
  ---------------------------------  
  ஸ்வதேசமித்ரன்

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட தமிழின் முதல் செய்தி் தாள்.

இந்த செய்தி தாள் இந்தியா மட்டுமின்றி, பர்மா, சிங்கப்பூர், மலேசியாவின் சில பகுதிகள், பெனாங், இலங்கை, சுமத்ரா, சீனா, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளில் கூட பரவலாக வாசகர்களைப் பெற்றிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த செய்தி தாள் பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.indianetzone.com/
24/swadesamitran_first_
tamil_newspaper.htm
 
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS செய்திகள் செய்திகள் வாயில்


'விருந்து' நாடக நூல் வெளியீட்டு விழா


சா.ரு. மணிவில்லன்  

பரிக்ஷா ராஜமணி எழுதிய ‘விருந்து’ நாடக நூல் வெளியீட்டு விழா 14.11.10 அன்று மாலை 7 மணியளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பத்திரிகையாளர் ஞாநி, எழுத்தாளர் இந்துமதி, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, நடிகை கலைராணி, ஜி.கே., நடிகர் பாரதிமணி, சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘விருந்து’ நாடகநூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட நடிகை கலைராணி பெற்றுக்கொண்டார்.

‘எனக்கு பிறந்த நாள் விழா பிடிக்கும். இன்று ராஜமணி சாருக்கு பிறந்த நாள். விருந்து நூல் வெளியீட்டு விழாவை குடும்ப விழாவாக பார்க்கிறேன்’ என்று நடிகை கலைராணி கூறினார்.

எழுத்தாளர் இந்துமதி

விருந்து நாடக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விருந்து உணர்வுபூர்வமான நாடகமாகும்.

நாடகத்தின் களமாக பிராமணியத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? ராஜாமணியும் பிராமணர் என சொல்லக் கூடும். நாடகத்தில் பூநூலை அறுத்து எரிவது போன்று ஒரு காட்சி வருகிறது.

ஒரு சர்தார் தன் தலைப்பாகையை கழற்றி எரிவதாகவோ அல்லது ஒரு முஸ்லிம் தன் குல்லாவை கழற்றி எறிவதாகவோ அல்லது ஒரு கிறுத்துவர் தன் சிலுவையை கழற்றி எறிவதாகவோ காட்சி அமைத்து நாடகம் எழுத முடியுமா? முடியாது. ஏனென்றால் பயம். பிராமணியத்தின் மீது கைவைத்தால் யாரும் கேட்கமாட்டார்கள் என்று நம்பிக்கை. நவீன இலக்கியத்தில் ஷாக் ட்ரீட்மென்ட்-க்காக செய்வது போல் உள்ளது.

நடிகர் பாரதி மணி

விருந்து நாடகம் எனக்கு பிடிக்க வில்லை. நாடகம் மனதில் தோன்றியவுடனேயே எழுதிவிட வேண்டும் என்று அவசியமில்லை. பல மாதங்கள் மனதுக்குள் ஊறபோட வேண்டும். நாடகம் ஒரு சட்டகத்துக்குள் இல்லை. கதை களம், பெண்கள் சோரம் போதல் என விசயங்கள் திணிக்கப்பட்டுள்ளது.

சாமிநாதன்

விருந்து நாடகம் நல்ல முயற்சி. சமகால அரசியல் சூழலை உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்சி மேலும் தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

தொடர்கதைக்கு பதிலாக இன்று சீரியல் உள்ளது. சீரியலை நாடகம் என சொல்வது தவறு. விருந்து நாடகத்தை நான் நேரமின்மை காரணமாக முழுமையாக வாசிக்க முடியவில்லை. அதனால் நாடகம் பற்றி கருத்து சொல்வதற்கில்லை. ராஜாமணிக்கு என்னைவிட வயது அதிகம். ஆனால் வயது வித்தியாசம் பார்க்காமல் நட்பு பாராட்டுபவர். நண்பர் என்ற முறையில் இந்த நூலை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன்.

பத்திரிகையாளர் ஞாநி

1975 ஆண்டு முதல் ராஜாமணி பழக்கம். சரியாக 35 ஆண்டுகளாக நண்பர். பரிக்ஷா நாடக குழுவில் தொடர்ந்து செயல்படுபவர். துணுக்குகள், கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளார். அவையெல்லாம் சனரஞ்சகமானவைகள் அதனால்தான் 35 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தும் அவரை நாடகம் எழுதுமாறு சொன்னதே இல்லை.

ராஜாமணி ஓய்வு பெற்ற பிறகு உள் நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார். அமெரிக்காவில் மகள் வீட்டில் இருந்தபோது இந்த நாடகத்தை எழுதியுள்ளார்.

ஹெரால் பிரிண்டரை நேரடியாக மொழிபெயர்க்காமல் அந்த வடிவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு நம் சூழல் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி இந்நாடகத்தை எழுதியுள்ளளர். இந்நாடகத்தில் நடிக்க ராஜாமாணி, கலைராணி, பாரதிமணி முன்வந்தால் நாடகம் போட நான் தயாராக உள்ளேன்.

நாடகத்திற்கு பிராமணியம் ஏன் களமாக கொள்ளளப்பட்டது என கேள்வி எழுப்பினார்கள். ஒவ்வொருவரும் தன் சொந்த சாதி மீது விமர்சனம் வைக்க வேண்டும். இதை பாரதி தொடங்கி வைத்தார். எழுத்தாளர்கள் மாதவைய்யா, வா.ரா. போன்றோர் பின் தொடர்ந்தனர். கெடுவாய்ப்பாக அதன் பின் வந்த தமிழ் எழுத்தாளர்கள் யாரும் தொடரவில்லை. சாதி ஒழிய வேண்டுமானால் சுயசாதி விமர்சனம் தேவையாகும்.

விருந்து நாடகத்திலுள்ள மற்றொரு சிறப்பம்சம் அதிகாரத்திற்கு எதிரான அதன் பார்வையாகும்.

பார்ப்பானிய பெண்கள் சோரம் போவதாக எழுதியுள்ளது. வருத்தமளிப்பதாக பாரதிமணி கூறினார். சுஜாதா ஒரு சிறுகதையில் கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்காக அரசு அதிகாரிக்கு லஞ்சமாக பெண் ஏற்பாடு செய்யும் நாயகனைப்பற்றி எழுதியிருப்பார். அந்த நாயகன் தான்தான் என பாரதிமணி ஏற்கனவே கூறியுள்ளார். இதற்கு யாரை குறை கூறுவது. ஏன் அந்த சமூகம இப்படியுள்ளது என யோசிப்பதுதானே மாற்றத்தைக் கொண்டு வரும்.

சபா நாடகங்களுக்கு காவல்துறை அனுமதி பெறுவது எளிது. அவர்கள் படிக்காமலேயே பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி கொடுக்கலாம். ஆனால் தீவிர நாடகங்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு முறை கொடுத்தால் மறுமுறை கொடுக்க மாட்டார்கள். காரணம் உளவுத்துறைதான்.

வெளிநாட்டு கலாச்சார அமைப்புகளான பிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மன், கலாச்சார மையங்களில் நாடகம் போடுகிறோம். அங்கு நாடகம் போட காவல்துறையின் அனுமதி தேவையில்லை. அந்த வளாகங்களுக்குள் நுழைய காவல்துறைக்கும் அனுமதி இல்லை.

பரிக்ஷா ‘ராஜாமணி’

சமூகத்தின் அசிங்கமான உண்மைகளையும், வசீகரமற்ற தன்மைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் நாடகம் என ஒரு மேற்கோளை அண்மையில் வாசித்தேன். அந்த வகையில் விருந்து நாடகம் ஒரு சிறுமுயற்சிதான். விழாவில் கலந்து கொண்டு விமர்சனங்களை வழங்கிய ஆளுமைகளுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.



   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</