வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

கௌதம நீலாம்பரன்

கௌதம நீலாம்பரன், 'தீபம்' ந. பார்த்தசாரதியின் இலக்கிய சீடரான இவர், தொடர்ந்து நாற்பதாண்டுக் காலம் பத்திரிக்கை துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனந்த விகடன், குங்குமம் போன்ற புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கையில் பணியாற்றிய இவர், வெகு ஜனப் பத்திரிக்கையில் பணியாற்றியபோதும்,
"இதயம் பேசுது" போன்ற சிறுபத்திரிக்கையிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

தமிழின் சரித்திர நாவலாசிரியர்களில் மிக முக்கியமானவர். இவர் எழுதிய சரித்திர நாவல்கள், தமிழக ஹாரிபாட்டர் கதைகள், யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி, தத்வமஸி, நலம் தரும் நற்சிந்தனை, அன்பின் அலைவரிசை, ராஜபொக்கிஷம், பல்லவன் தந்த அரியணை, சேது பந்தனம் போன்றவை தமிழ் மொழியின் சரித்திரப் பங்களிப்பில் முக்கியமானவை. இவர் எழுதிய சேது பந்தனம் சரித்திர நூல், ஆனத விகடன் பொன் விழா ஆண்டில் நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
 

கதை சொல்லி - சரித்திர நூலாசிரியர் கௌதம நீலாம்பரன்

வேளச்சேரியின் மிக உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் கதை சொல்லிப் பகுதிக்காக திரு. கௌதம நீலாம்பரன் அவர்களை சந்தித்தபோது அடுக்குமாடிக் கட்டிடம் போல் அவர்களது மனமும் உயர்ந்தே நின்றது. தமிழ் மரபில் மறந்துப் போன, குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் மறக்கடிக்கப்பட்ட விருந்தோம்பல் முறையை மீண்டும் கண் முன் கொண்டுவந்தவர். அன்பான உபசரிப்பு, பணிவான பேச்சு, என நம் மனதை முதல் சந்திப்பிலேயே கவர்ந்து விடுவதில் வல்லவர்.


கதை சொல்லிப் பகுதியின் நோக்கம் பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும் எடுத்து சொன்ன பிறகு மிகவும் ஆவலாக கதை சொல்லி பகுதிக்கு தயாரானார். கொளுத்தும் வெயிலின் மத்தியானப் பகுதி என்றாலும், பெரிய அளவில் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக பல வசதிகளை இழந்து கதை சொல்லிப் பகுதியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவர் எழுதிய மூன்று கதைகளை மிக நேர்த்தியாக சொல்லி முடித்தார். குறிப்பாக மூட நம்பிக்கைகளையும், புறம் பேசுதலையும் உடைத்தெறியும் அவரது கதைகள் எக்காலத்திற்கும் எற்றவையாகவே இருக்கின்றன.

கௌதம நீலாம்பரன் கதைகள் - ஆகாய ஓவியம்

 

நிமிடம்: 26 --  நொடி: 01

 



கௌதம நீலாம்பரன் கதைகள் - நரகாசுரவதம்

 

நிமிடம்: 26--  நொடி: 03

 



கௌதம நீலாம்பரன் கதைகள் - களிப்பூட்டு

 

நிமிடம்: 10 --  நொடி: 00