வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

'கோவை' ஞானி

கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி. பழனிச்சாமி ஒரு தமிழாசிரியர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வருகிறார். 'இடைவிடாது இயங்கிவரும் ஆய்வறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது' என்று இவரை வர்ணிப்பார்கள். தமிழின் நவீன இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். நுட்பமான இலக்கிய உணர்வும், நவீன இலக்கியங்களைத் திறந்த மனத்துடன் அணுகும் பண்பும் கொண்டவர். இவர் ‘நிகழ்’ என்ற சிற்றிதழைப் பல ஆண்டுகளாக தமிழின் புதிய இலக்கியக் களமாக நடத்தி வந்தார். 24 திறனாய்வு நூல்கள், 12 தொகுப்பு நூல்கள், 4 கட்டுரைத் தொகுதிகள், 2 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் 'இந்தியாவில் தத்துவம், கலாச்சாரம்', 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை', 'தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்', 'மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்' ஆகியவை முக்கியமானவை. இவர் தமிழ்ப் பணிக்காக 'விளக்கு விருது', 'தமிழ் தேசியச் செம்மல் விருது', 'தமிழ் தேசியத் திறனாய்வு விருது', 'பாரதி விருது' ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.


கோவை ஞானியின் சில நூல்கள் :

இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்

கடவுள் ஏன் இன்னமும் சாகவில்லை?

சுடும் நிலவு

ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1

ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 2

தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்

தமிழ் வாழ்வியல் : தடமும் திசையும்

தமிழ், தமிழர், தமிழ் இயக்கம்
தமிழ்க் கவிதை (ஞானி கட்டுரைகள் - 3)

தமிழன்பன் படைப்பும் பார்வையும்
தமிழில் நவீனத்துவம், பின் - நவீனத்துவம்

புதிய காளி

மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்

மார்க்சியத்திற்கு ஆழிவில்லை

மார்க்சியம் - தேடலும் திறனாய்வும்

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - 'கோவை' ஞானி (Kovai Gnani)

 

 

லிவி

 

 

கதை சொல்லிக்காக கோவை ஞானியை அணுகியபோது "நான் சிறுகதை எழுத்தாளனோ, நாவல் ஆசிரியரோ அல்ல! என்னிடம் என்ன கதை கேட்க போகீறீர்கள்?" என சற்றே தயங்கினார்." நீங்கள் எழுதிய கதை தான் கூற வேண்டும் என்று இல்லை, நீங்கள் படித்த கதைகள், உங்களுக்கு யாரேனும் சொல்லக் கேட்டு பிடித்த கதைகள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்" என்று எடுத்துக் கூறிய பிறகு ஒப்புக்கொண்டார்.கோவை ஞானி நவீனத் தமிழிலக்கியத்தில் உள்ள மிகச் சிறந்த விமர்சகர். அவருடைய பார்வை மார்க்ஸிய தன்மை கொண்டதெனினும் இலக்கியத்தை இலக்கிய விதிகளால் அணுகியவர்.அதனாலே மிகச் சிறந்த விமர்சகராக இன்றும் கொண்டாடப் படுகிறார். ஜெயமோகனின் முதல் சிறுகதையை சுந்தரராமசாமி பிரசுரிக்க மறுத்தபோது அக் கதையை முதலில் பிரசுரிக்க செய்தவர் ஞானி. இன்று ஜெயமோகன் தமிழ் கூறும் நல்லுலகின் தவிர்க்க இயலாத எழுத்தாளர். இதுவே அவர் புகழுக்குச் சான்று. கோவை ஞானியை கோவையில் உள்ள வெள்ளக் கவுண்டன் பிரிவு என்னும் அவர் ஊரில் கதை சொல்லிக்காக் சந்தித்தேன்.

கோவை ஞானி தன் கண்களை இழந்திருந்தார். அவரின் உதவிக்காக பெண் வாசிப்பாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்தி வைத்திருந்தார். எம்மை இன்முகத்துடன் வரவேற்ற பிறகு அவர் தம் அறைக்கு அழைத்துச் சென்றார். அறை முழுதும் அலமாரியில், தரையில் என அடுக்கி வைக்கப்பட்ட எண்ணற்ற புத்தகங்கள். கதை சொல்லிக்காக பதிவு செய்யத் தொடங்கினோம். மிக ஆர்வமுடன் கதைகளை கூறத் தொடங்கியவர், மளமளவென கதைகளை சொல்லிக் கொண்டே போனார். மணிமேகலையிலிந்து கதைகள், தான் படித்து பிடித்த கதைகள், தன் சிறு வயதில் சந்தித்த நக்ஸல் தோழர் ஒருவர் என கதைகளை அடுக்கிக் கொண்டே போனார். தாத்தாவிடம் பேரன் கேட்கும் கதைகளை போல் மெய்மறந்து கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் அவர் மனைவி தேநீருடன் பலகாரங்கள் என அன்புடன் உபசரித்தார். பிறகும் கதைகளை தொடர்ந்து பதிவு செய்யத் தொடங்கினோம். அறையின் வெளியே அமர்ந்திருந்த என் நண்பன் கையை பார்த்து ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர் மனைவி.

கதைகளை பதிவு செய்து முடித்த பிறகு இலக்கியம் பற்றிய உரையாடல்களில் எங்கள் பேச்சு தொடர்ந்தது. ஜெயமோகன் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகள் சுவாரசியமானவை. ஜெயமோகன் தன் முதல் சிறுகதையை எழுதி சுந்தரராமசாமியிடம் கொடுத்திருக்கிறார். "இது கதையே இல்லை" எனக் கூறி அதை பிரசுரிக்க மறுத்து விட்டார். பின்னர் ஜெயமோகன் அதைக் கோவை ஞானியிடம் கொடுத்தருக்கிறார். அக்கதையை பாராட்டி அதை பிரசுரம் பண்ணியிருக்கிறார் கோவை ஞானி. இதை ஜெயமோகன் சுந்தரராமசாமியிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் "கோவை ஞானிக்கு இலக்கியம் தெரியாது" என்றிருக்கிறார். இன்றைக்கு ஜெயமோகன் அடைந்திருக்கும் உயரங்களை வைத்து நான் "சுந்தரராமசாமிக்கு இலக்கியம் தெரியாது!" எனக் கூறலாமா என்றார் கோவை ஞானி. முன்பெல்லாம் ஜெயமோகன் அடிக்கடி கோவை வருவாராம், வந்து ஞானியுடன் சிலப்பதிகாரத்திலிருந்து சமகால இலக்கியம் வரை பேசிக் கொண்டிருப்பார்களாம். ஜெயமோகன் தன் ஆசானாக் குறிப்பிட்டவர்களில் கோவை ஞானியும் ஒருவர். ஒரு முறை ஜெயமோகனிடம் "இந்திய ஜனநாயகம் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்ற கேள்விக்கு 'மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக' பதில் சொல்லியிருக்கிறார். அதற்கு ஞானி "ஜெயமோகன் இலக்கியத்தை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுக்கள் அரசியலை எங்களிடம் விட்டு விடுங்கள்" என்றிருக்கிறார். அதற்கு "ஆம்" என்று ஒப்புக் கொண்டாராம் ஜெயமோகன்.

இன்று வரை தன் அரைவேக்காட்டு அரசியலால் எரிச்சலை கிளப்பிக் கொண்டு இருப்பவர் ஜெயமோகன். ஒன்றை யாரேனும் சரி என்று சொன்னால் தவறென்பார், தவறென்றால் சரியென்பார்.அப்போது தான் விளம்பரமும் சினிமா சான்சும் கிடக்குமோ என்னமோ! என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

பிறகு பேச்சு கவிதைகளை பற்றி நகர்ந்தது குறிப்பாக வானம் பாடிகளை பற்றியதாக இருந்தது. "1970 களின் தொடக்கத்தில் உலகம் முழுதுமே எழுச்சி பெற்று அரசியல் மாற்றம் கொள்ளும் என முழுதாக நம்பினோம்.பொதுவாக வானம்பாடிக் கவிஞர்கள் எல்லாம் மத்தியதர வர்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழாசிரியர்கள் அல்லது பேராசிரியர்கள். லட்சியவாதம் என்பது மத்தியதரவர்கத்தினரிடையே உள்ள இயல்பான குணங்களில் ஒன்று.மேலும் அவர்களில் யாரும் புரட்சிக்காரர்களும் அல்ல. 1975 வது எமர்ஜென்சி காலகட்டங்களுக்குப் பிறகு அவர்களின் நம்பிக்கை கலையத் தொடங்கியது. வானம் பாடி இயக்கமும் வழுவிழக்கத் தொடங்கியது". ஆனால் இன்றும் வானம்பாடிகளே சாகித்திய அகாடெமி விருதுகளை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கின்றனர். கடந்தமுறை வானம்பாடிகளில் ஒருவரான கவிஞர் புவியரசுக்கு இரண்டாம் முறை சாகித்திய அகாடெமி விருது கிடைத்தது. அதற்கு ஞானி எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.அதனால் புவியரசுக்கு சிறு வருத்தம். அதற்காக "இந்த வயதில் உங்களுக்கு இந்த விருது தேவையா? நம்மைத் தாண்டி இன்று எத்தனை சிறந்த எழுத்தாளர்கள் வந்து விட்டார்கள். அவர்களுக்கு இவ்விருதுகளைக் கொடுத்து நாம் பெருமை பெற்றுக் கொள்வதா? இல்லை இவ்வாறு செய்வது நம் மொழிக்கு செய்யும் துரோகம் இல்லையா" என அவரை வாழ்த்தி ஒரு கடிதம் அனுப்பினேன் என்று நகைக்காமல் சொன்னார் கோவை ஞானி.

இக்கதை சொல்லிப் பகுதியில் நமக்காக சிலக் கதைகளை கோவை ஞானி பகிர்ந்துகொள்கிறார்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)


கோவை ஞானியின் கதைகள் - 1

 

நிமிடம்: 08 --  நொடி: 02

 



கோவை ஞானியின் கதைகள் - 2
நிமிடம்: 06 --  நொடி: 42

 
கோவை ஞானியின் கதைகள் - 3
நிமிடம்: 05 --  நொடி: 07
 
கோவை ஞானியின் கதைகள் - 4
நிமிடம்: 08 --  நொடி: 03
 
 
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)


  </