வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


வம்சி இரண்டு புத்தகங்கள் வெளியீடு (29-01-2011)

படிமை ஆனந்த்  


29-01-2011 அன்று வம்சி புத்தக நிறுவனத்தார் நடத்திய இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. அதன் ஒருங்கிணைப்பை தமிழ் ஸ்டுடியோ செய்தது. விழா இரண்டு அமர்வுகளாக நடந்தது, முதல் அமர்வில் பாலுமகேந்திராவின் “கதை நேரம். பாகம்-2”ம். இரண்டாம் அமர்வில் மிஷ்கின் மொழிபெயர்த்த “நத்தை போன பாதையில்” ஹைக்கூ கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.



விழாவின் தொடக்கத்தில் மறைந்த “முத்துக்குமார்” அவர்களுக்கு அவரின் நினைவு நாளையொட்டி எல்லோரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்,

கதைநேரம் – பாகம்-2

பாலுமகேந்திரா எழுதிய இப்புத்தகம் கதை. திரைக்கதை. குறுந்தகடு என மூன்று வடிவத்தினாலானது, எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் பெற்றுக் கொண்டார், அதன் பிறகு எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.

எஸ். ராமகிருஷ்ணன்:-

பாலுமகேந்திராவின் இந்த முயற்சி எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக இருக்கிறது, சத்யஜித்ரே-வின் மகன் அவரது கதைகளை இயக்கினார், ஆனால் இவர் எடுத்துக் கொண்டதெல்லாம் வேறு. வேறு எழுத்தாளர்களின் கதைகள், எல்லாமே மத்திய வர்க்க மனிதர்களின் கதைகள், கதையாகவும். திரைக்கதையாகவும். குறும்படமாகவும் பார்க்கும்போது மூன்று விதமான அனுபவங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

"GOD OF SMALL THINGS” என்று அருந்ததிராய் எழுதிய புத்தகம் அப்படியே பாலுமகேந்திரா அவர்களுக்குப் பொருந்தும், இவரின் படங்களில் காட்டப்படும் ஊட்டியைக் காண எத்தனையோ முறை ஊட்டிக்கு சென்றிருக்கிறேன், ஆனால் நிஜ ஊட்டி இவர் காட்டியதைப் போல இல்லை, ஒரு மாற்று குறைவாகத்தான் இருக்கிறது, இவரின் படைப்புகள் எல்லாவற்றிலும் வீடு ஒரு படிமமாக இருக்கிறது, இசையை ஆகச்சிறந்ததாகப் பயன்படுத்துகிறார், ஆண். பெண் இருவருக்குமான உறவு மற்றும் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி அலசுகிறார், சினிமாவில் வெளிப்படுத்திய அழகியலை தொலைக்காட்சித் தொடரிலும் வெளிப்படுத்தினார், அவை இவரது பேராண்மையின் சிறு. சிறு துகள்கள். ஆனாலும் முழுமையானவை, சமகாலத் தமிழ் வாழ்க்கை பெருமைப்படக் கூடியதாக இல்லை, நம் எல்லோரின் மன்சாட்சியின் குரலை எழுப்பிய மகத்தான கலைஞன் பாலுமகேந்திரா,

ஒளிப்பதிவாளர் செழியன் :-

பாலுமகேந்திரா எப்போதுமே எனக்கு ஆசிரியர், என் குறைகளைத் திருத்தியவர், கதை நேரத்துக்கும். எனக்கும் சிறு தொடர்பு உண்டு, ட.இ.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த சமயம் கதைநேரத்தில் 100 படங்கள் எடுப்பதாக திட்டமிட்டு இருந்தனர், நானும் ஓர் கதையை எழுதி அனுப்பினேன், 52 படங்கள்தான் எடுத்தனர், அதனால் என் கதை தேர்வாகி இருந்தாலும் படமாக வரவில்லை, செயலுக்கும் சித்திரத்துக்குமான இடைவெளி எப்படி என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம், அதை நான் விவரிப்பதை விட நீங்களே படித்துப் பார்த்தால்தான் அதன் வீரியம் புரியும், பாலுமகேந்திரா அவர்களைப் பற்றி விரிவான ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் அனைவரின் முன் வைக்கிறேன்.

மிஷ்கின் :-

நான் மேடையில் பேசினால் பாலுமகேந்திரா அவர்களுக்குப் பிடிக்காது, குரோசேவா-வை நேரில் பார்க்க வேண்டும் என்ற என் கனவு. கனவாகவே போய்விட்டது, இங்கு பாலுமகேந்திராவை வாழும் குரோசேவாகப் பார்க்கிறேன், ஒவ்வொரு படைப்பாளியும் பால்யத்தில் தான் பார்த்து வியந்த விசயத்தில் இருந்தே உருவாகிறான், மூன்றாம்பிறை போன்ற படங்களை பார்த்து வியந்திருக்கிறேன், கமல். ஸ்ரீதேவி. நாய்க்குட்டி சுப்பிரமணி. ரயில்பாதை என வியப்பதற்கு நிறைய இருக்கிறது அப்படத்தில், நானும் இளையராஜாவும் அதிகமாகப் பேசிக் கொண்டது பாலுமகேந்திராவைப் பற்றித்தான், இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்தது என்னுரை, தன்னை ஒரு எழுத்தாளனாகவும். வெறிகொண்ட வாசிப்பாளனாகவும் சொல்லும் இவர் இலக்கியத்துக்குப் பிறகே சினிமா சம்பவித்தது என்கிறார், இவரின் அமைதி இவரை ஜென் துறவியென நினைக்க வைக்கிறது.

நிகழ்ச்சியின் முடிவில் பாலுமகேந்திரா ஏற்புரை வழங்கினார்,

பாலுமகேந்திரா :-

நண்பர்களே. எல்லோருமே என்னை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள், யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று சந்தேகமே வந்துவிட்டது, என்ன பேசுவது என்று வார்த்தையே கிடைக்காத சமயம் இப்போது, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப்போல இவர்களுக்கு குரோசேவா போல காட்சியளிக்கிறேன், என் வகுப்புகளில் கூட இலக்கியம் படியுங்கள் என்று வற்புறுத்துகிறேன், இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான நெருக்கம் வேறெதற்கும் இல்லை, பிரபஞ்சன் எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களுள் ஒருவர், நான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைக் காதலித்திருப்பேன், என் படைப்புகளில் நிறைய தவறுகளை தெரிந்தே செய்திருக்கிறேன், பவா செல்லத்துரை மற்றும் ஷைலஜா தம்பதியரைக் காணும்போது அவர்களுக்கிடையேயான அந்நியோன்யம் நிறைவைத் தருகிறது, தங்கள் குழந்தைகளுக்கு அருமையான சூழலை உருவாக்கித் தருகிறார்கள், கொஞ்ச காலம் சும்மா இருந்து விட்டதாக தோன்றுகிறது, எனவே அடுத்த படைப்புக்கான முயற்சியில் இருக்கிறேன், இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு பேர் வந்திருப்பது நிறைவைத் தருகிறது, நன்றி.

இரண்டாம் – அமர்வு

நத்தை போன பாதையில்

நிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வில் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் மொழிபெயர்த்த “நத்தை போன பாதையில்” என்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது, நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வெளியிட ஓவியர் மருது அவர்கள் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.

ஓவியர் மருது :-

எனக்கு மிஷ்கினை வெகுநாட்களாகவே தெரியும், அவரிடம் ஒரு தேடல் இருக்கிறது, எனதருமை நண்பர் பாலுமகேந்திராவைப் போலவே மிஷ்கினும் Most Disipline Film Maker. அடிப்படையில் இருவருமே எழுத்தாளர்கள், எனக்கு எப்போதுமே Asian Films  விருப்பமுடையதாக இருக்கிறது, படைப்பாளிக்கு இலக்கியம் என்பது தன்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் ஒரு வழி, பாலுமகேந்திராவைப் போலவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் மிஷ்கின்.

Wide Angle ரவிசங்கர் :-

மீடியாவில் எனது வாழ்க்கை பத்திரிக்கை  Photographer ஆகத்தான் தொடங்கியது, அப்போது மிஷ்கின் பற்றியும் கட்டுரை எழுதியிருக்கிறேன், அவர் இயக்குநராக உருவானதை கொண்டாடும் விதமாக LANDMARK–ல் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது, அதை கட்டுரையாக்கினோம், WIDE ANGLE என்பது ஒவியர் மருதுவிடமிருந்து பெற்றது, மீடியாவில் நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவசியம்,

பிரபஞ்சன் :-

நான் கணக்கு டீச்சரை கொல்ல நினைத்ததை நினைவூட்டுகிறார்கள், கணக்கு டீச்சரை மட்டுமல்ல ஒரு 250 பேரையாவது கொல்ல ஆசைப்படுகிறேன், ஆனால் அது முடியாது, ஆகவே நாம் கைகுலுக்கிக் கொள்ளலாம், சினிமாவும். இலக்கியமும் சந்தித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது, 1970களில் ஓவியமும் இலக்கியமும் சந்தித்துக் கொண்டன, அதன் வெளிப்பாடுகளில் ஒருவர்தான் ஓவியர் மருது, பாலுமகேந்திரா பெண்ணாகப் பிறந்திருந்தால் என்னை காதலித்திருப்பார் என்றார், அவர் பெண்ணாக பிறக்காதது அவரின் அதிர்ஷ்டம். என் துரதிர்ஷ்டம், இந்த நூல் மொழிபெயர்ப்பு அல்ல. மொழி ஆக்கம், இது உருவானபோது மூன்று மழை இரவுகள் மிஷ்கினுடன் நான் இருந்திருக்கிறேன், கவிதைக்கும். ஹைக்கூக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது, ஹைக்கூ சாதாரணமானவற்றை பேசுபவை, அசாதாரணமானவற்றை அல்ல, ஆனால் நமக்கு சாதாரணமானவை தெரிவதுமில்லை. புரிவதுமில்லை, புத்தனை தேடும் நாம் புத்தனாக மாற முற்படுவதில்லை, ஹைக்கூ நம்மை மனிதனாக்குகிறது, சங்க இலக்கியம் நட்பு நட்பு என்றுதான் காதலைச் சொல்கிறது, சங்க இலக்கியம் தரும் இன்பத்தை ஹைக்கூவும் தருகிறது.

பிரபஞ்சன் அவர்கள் தன் பேச்சினூடே நூலில் இருந்து தன்னைக் கவர்ந்த கவிதைகளை வாசித்துக் காட்டினார், அவரின் பேச்சுமொழியில் கவிதை கேட்ட பார்வையாளர்களுக்கு அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது,

பிரபஞ்சனின் கலகலப்பான பேச்சிற்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் அவர்கள் ஏற்புரை வழங்கினார்,

மிஷ்கின் :-

ஒரு மழை இரவில் மது அருந்திவிட்டு நண்பர்களுக்காக மொழிபெயர்த்த கவிதைகள் இவை, நான் சினிமாவை எப்படித் தொழுகிறேனோ அதேபோல ஹைக்கூவையும் தொழுகிறேன், எனக்கு கிடைத்த நண்பர்களில் பெரும்பாலானோர் இலக்கிய வாசிப்பு என்ற ஒற்றை ரசனையில் கிடைத்தவர்கள், இதை புத்தகமாக கொண்டு வந்த வம்சி நிறுவனத்தார்க்கு நன்றி,

நிகழ்ச்சியின் இறுதியில் வம்சி புத்தக நிறுவனம் தொடங்க உறுதுணையாக இருந்த கருணா அவர்களுக்கு பவா செல்லத்துரை. ஷைலஜா தம்பதியர் நினைவுப்பரிசு ஒன்றை அளித்தனர், மேடையில் பேசிய இருவரும் பாலுமகேந்திரா பற்றிய ஆவணப்படம் மே மாதம் சாத்தியப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினர்,

நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்கள். விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் தமிழ் ஸ்டுடியோ அருண் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

தொகுப்பு: ஆனந்த் (படிமை மாணவர்)

ஒளிப்படங்கள்: செல்லையா முத்துசாமி


உதவி. அஜந்தன் (படிமை மாணவர்)


நிகழ்வு தொடர்பான மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/thamizhstudio/CwDIIG#

நிகழ்வின் காணொளியைக் காண:

http://koodu.thamizhstudio.com/oliyum_oliyum_vamsi_br_chn_1.php


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </