வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


கலாப்ரியா, எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கூடு வாசகர்களுக்காக கலாப்ரியா அவர்கள் எழுதும் தொடர் பற்றி அவரது வார்த்தைகள் மூலமே அறிவோம்.

ஜெயகாந்தன் அவருடைய ``சத் சங்கத்தில்’’ சொன்னதாக, பாடியதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.

"வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
வாழ்ந்துவிட்டுச் சொல்லுகிறேன் அந்த வித்தியாசம்".

வாழ்க்கை ஒருவருக்கொருவர் வித்தியாசப் படுகிறது. பொதுப் புத்தி சார்ந்து அந்த வித்தியாசம் அவ்வளவாய் உணரப் படாமல் போகலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு படகாய் மிதக்காமல், ஒரு பெரிய பூமித் தெப்பமாய் சமூகம் கட்டிப் போட்டிருக்கிறது.. இதனால்த்தான் என் அனுபவங்களுக்குள் நீங்களும் உங்கள் அனுபவத்திற்குள் நானும் நிழல் தேடிக் கொள்ள முடிகிறது.

தனியாய், ஒரு குழந்தை ஆடிக் கொண்டிருக்கும் ஊஞ்சலுக்கு அருகே இன்னொன்று வந்து நானும் ஏறிக் கொள்கிறேன் என்கிறது. அப்புறம் இன்னொன்று, மீண்டும் ஒன்று என்று ஊஞ்சலில் ஆசையாய்க் குழந்தைகள், ஊஞ்சல்ப் பலகை கொள்ளும் மட்டும் ஏறிக் கொள்கின்றன. சில இறங்கியதும் புதிதாய்ச் சில ஏறுகின்றன.....என் வாழ்க்கைப் பாடுகள் உந்திய உந்துதலில் ஒரு ஊஞ்சலை ஆட்ட ஆரம்பிக்கிறேன்.....உயரத்திலே தங்கி விடாமல் உங்கள் அருகேயே அமர்ந்து கொஞ்சம் நினைவு, கொஞ்சம் புனைவு என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்னை.....

அன்புடன்
கலாப்ரியா

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 

முனைவர்.பா.செல்வராஜ்

முனைவர்.பா.செல்வராஜ், கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல் துறையில் உதவி பேராசிரியராகப் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

அத்துறையில் செயல்பட்டு வரும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மையத்தில் மனநல ஆலோசகராக கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள், அவர்தம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். உணர்ச்சியறிவு, சாதனை ஊக்கம், புதுவித சிந்தனை ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்த இவர் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இக்கருத்துக்கள் பற்றிய பயிற்சிகளை நடத்தி வருகிறார். மக்களுக்குப் பயனக்களிக்கக்கூடிய உளவியல் விசயங்களைப் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் கட்டுரை, பேட்டி ஆகியவை மூலமாக தெரிவித்து வருகிறார். மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் என்னும் இவரின் நூல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாகும்.

கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி, போலீஸ் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் கௌரவ பேராசிரியாரான இவர் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உளவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உளவியல் தொடர்பான அறிவியல் ஆய்வு கட்டுரை ஒன்றினைப் பதிப்பித்துள்ளார். இவரின் வலைப் பூ உளவியல் கருத்துக்கள் நிறைந்த சிறந்த வலைப் பூவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்கள் வாயில்

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் - பா.செல்வராஜ்
 
# தலைப்பு
11 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 11
10 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 10
9 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 9
8 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 8
7 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 7
6 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 6
5 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 5
4 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 4
3 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 3
2 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 2
1 உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 1



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </