வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 12

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

செல்லப்பாவை மணியக்காரத் தாத்தாவை பார்த்துவருமாறு அனுப்பினார் சாமிஅய்யா. மணியக்காரர் இளம் வயதில் ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்து நான்கு முறை துணி மாற்றுவார் என்று கூட கேள்வி. அவருக்கு ஆண்வாரிசு இன்றி மூன்று பெண்களை பெற்றவர், சொத்துக்கு அதிபதியானவர். அவர் கீழே விழும் முன்புவரை அவரை கவனித்து கொள்ள மூன்று பெண்களும் நீ, நான் என முந்திக்கொண்டனர். மணியக்காரர் கண்பார்வை இழந்தபோது தான் உடுத்தியிருந்த வெள்ளை வேட்டி கலர் மாறியது, அவர் பற்களை இழக்காமல் இருந்தபோதும் அவர் சொல்பேச்சு கேட்கும் நபர்களை இழந்தார். அவர் தடுக்கி கீழே விழுந்தபோது அவர் இழந்தது கால்களை மட்டும் அல்ல, அவரை காப்பாற்றிவந்த அவர் சொத்துக்களையும் தான். இனி நாம் இறந்துவிடுவோம் என்று தன் மகள்கள் மூவருக்கும் சொத்தை பிரித்துக்கொடுத்த அன்றுமட்டுமே அவர்அருந்திய உணவு அவருக்கு ருசித்தது.

செல்லப்பா மணியக்காரர் மகளிடம் தாத்தா எங்கே என்றுகேட்க, அதோ அந்த மாட்டுக்கொட்டககிட்ட போயி பாரு என்றால் அவள். அவன் கண்டகாட்சி அவனை குலை நடுங்க செய்தது. மாடுகள் கட்டி இருக்கும் இடத்தில் சுற்றிலும் கிழிந்த சாக்குகள் (கோணிப்பைகள்) தொங்க அந்த சாக்குகள் அனைத்தும் கொசுக்களால் நெய்யப்பட்டிருந்தன. மணியக்காரர் கிடந்த கோலம் அவர் உடுத்தியிருந்த ஆடைக்கும் கோணிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. உதிர்ந்தகாலத்தில் அவர் சாலையில் நடந்து வரும்போது குதிரை போல் நடந்தும் யாணைபோல் பிளிறிக்கொண்டும் வரும்போது ஊரே அவரை வனங்கும். ஒருமுரை வெள்ளையர்களிடம் அவர் இங்லீசை தங்லீசாக பேசியபோது வெள்ளைக்காரர்களுடன் கிராமமக்களும்சேர்ந்து நகைத்தனர். ஏண்டா என் இங்கிலீஷ் தப்பா இருக்குல்ல? வெள்ளைக்காரன் இங்கிலீஷ் சரியாஇருக்கு! அப்படித்தானே இருக்கும். டேய் அவுங்கவூருல பிச்சைகாரன் கூட நல்லா இங்கிலீஷ் பேசுவான், ஏன்னா அதுஅவன் தாய்மொழி. சரி நா,,, தத்தக்கா புத்தக்கானு பேசுரேன் வெள்ளைக்காரனை தமிழ் பேசசொல்லு பார்க்கலாம் என்றார் மணியக்காரத் தாத்தா.

ஊரே வாய் அடைத்துபோனார்கள். இன்று அவரின் நிலை கொசுக்கடிக்கு பயந்து கோணியை இழுத்து மூடிக்கொண்டு அறுந்து தொங்கும் கயிற்றுக்கட்டிலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதைத்தான் (பணம் பந்தயிலே.. சனம் சந்தியிலே.. குணம் குப்பையிலே என்றனரோ.) அவர் மகள்களிடம் சொத்தை கொடுத்தப் பிறகு தான் எதற்கும் ஆகாத சொத்தை ஆகிபோனோமே என்று கணத்த குரலில் “ஆலகால விஷத்தை நம்பலாம், கோலமாமத யாணையை நம்பலாம், கொல்லவரும் வேங்கைபுலியை நம்பலாம். காலன்விடும் தூதையும் நம்பலாம். சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திகைப்பார்தாமே, என்ற போதே செல்லப்பா தழுதழுத்த குரலில் தாத்தா, தாத்தா என்ரார்ன். “யாரது செல்லப்பாவா” ஆமாம் தாத்தா,

“நீ கான்வெண்டுக்கு படிக்க போறியாமே வேலாயி நேத்து மாட்டு சாணி பொருக்கும்போது எம் மககிட்ட சொல்லிக்கிட்டு இருந்தத என்காதால கேட்டேன், “ஆமாம் தாத்தா”, என்றான் செல்லப்பா. திரைகடல் ஒடியும் திரவியம்தேடு திரும்பி இந்த ஊருக்கு வராதே என்றார் தாத்தா. “சரி தாத்தா” என்று கூறிக்கொண்டே “ ஏன் தாத்தா இப்படி ஆச்சு உங்களுக்கு!

என்ன ஆச்சு எனக்கு?
"இந்த மாதிரி இடத்துல கெடக்குறீங்களே”,

உனக்கு கண்ணுதெரிஞ்சதுனால கேட்குர நல்லவேளை என்னய படைச்சவன் என் உயிரை எடுக்கிறதுக்கு முன்னாடி என் கண்ணையும் காலையும் பறிச்சுக்கிட்டான். அதனாலே எனக்கு எல்லாமே கருப்பாத்தான் தெரியுது, நான் போற வெளியதெருவுகூட இங்கதான் என்ன (வெளிய தெருவு என்பது மலம் ஜலம் கழித்தல்), ஒரு நாளைக்கு மூணுதடவை குளிச்சவன் மூணுநாளைக்கு ஒருவாட்டி குளிப்பாட்டுறாங்க. எனக்கு கண்னுதெரியாமப்போனப்ப ஒரே கஷ்டமா இருந்துச்சு, இப்ப அதுவே நல்லதா போச்சு, இல்லன்னா இந்த கண்ட்றாவி எல்லாம் பாக்கனுமே... காலு உடைஞ்ப்ப வலிதாங்கல, இப்ப வலியெடுக்கிறதுனாலதான் என்உடம்பு இருக்குறதே எனக்கு தெரியுது, இதுல என்னோட நாத்தத்தவிட மாட்டுக்கழிவோட நாத்தம்தான் அதிகமாயிருக்கு, இன்னக்கி என்னப்பாத்து வருத்தபடுரமாதிரி நீ நாளக்கி உங்கொப்பன பாத்து வருத்தபட வச்சுடாதே, எனக்கு ஒன்னுசெய்வியா?

சொல்லுங்க தாத்தா,
நா சீக்ரம்செத்துப்போகனும்! அதுக்கு ஏதாவதுவழி பண்ணேன் என்று கூறிவிட்டு, காயமே இதுபொய்யடா,,, வெரும் காற்றடைத்த பையடா,,, என்றார். அங்கேநிற்க்க மணமில்லாமல் செல்லப்பா, அவனுக்கு உலகத்த சொல்லிக்கொடுத்த குரு இப்படி உதாசீனப்படுத்தபட்டு கெடக்ராரே, தேவாரம், திருவாசகம், திருக்குரல், ஆயக்கலைகள் அறுபத்து நான்கு, சித்தர்பாடல்கள், சாஸ்திரங்கள் அறிந்து ஊருக்கு சேதிசொல்பவர் இன்னைக்கு அவரிறக்க நம்மகிட்ட தேதிகேட்கிறாரே? என்று மண்டியிட்டு சூரியனைபார்த்து கைகூப்பீ கண்களை மூடி, நான்வெரும் கற்களை நம்புவதை விட, இந்த உலகத்துக்கு ஒளிகொடுக்கும் உன்னைநம்புரேன் அவருக்கு விடைகொடு, கண்களை திறந்து தாத்தாவை திரும்பிபார்க்க, அவருக்கு வலிபொருக்கமுடியாமல் வலியைமறக்க அவர் குரளை வலிமையாக்கி பெரும்சத்தத்துடன் காயமே இதுபொய்யடா, டா , டா..,!வெரும் காற்றுடைத்தபையடா, டா, டா,,,!

அவன் அவர்அருகில் சென்று
” நான் வர்ரேன் தாத்தா”,
வர்ரேன்னு சொல்லாத போரேன்னு சொல்லு என்றார்.
அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். தாத்தா பழையபடி ஆலகாலவிஷத்தை நம்பலாம் கோலமாமத யாணையை நம்பலாம் கொல்லவரும் வேங்கைபுலியை நம்பலாம் காலன்விடும்தூதையும் நம்பலாம் சேலை கட்டிய மாதரை நம்பினாள்? தெருவில் நின்று திகைப்பார்தாமே. ...

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.