வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 22

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மா ஆட்சியும் பல மாதங்களில் முடிந்து ஜெயலலிதா அவர்கள் விஸ்வரூபம் எடுத்து அவர்களையும் வீழ்த்தி அதிக காலம் ஆண்ட வரலாற்று பெருமை சேர்க்க வந்துவிட்டது கலைஞர் ஆட்சி.

டாக்டர், கலெக்டர், ஆடிட்டர், வக்கீல், இன்ஸ்பெக்டர் என்று தன் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் கணாக்களை உடைத்து பொறியாளர், ஊரில் ஒரு பொறியாளர் என்பது அறிதான காலம் போய் ஊருக்கு நூரூ பேராகி மாதம் ஐயாயிரம் சம்பாதிப்பது பெரிதாக இருந்த வேளையில் 50 ஆயிரத்தில் இருந்து, 3 லட்சம் எனவும், வெளிநாட்டுக்கு நாம் வேலை தேடும் காலம்போய் வெளிநாட்டினர் நம்ம ஊருக்கு வேலைக்குவந்து கொண்டும் அத்துடன் நாகரீகம் என்ற போர்வையில் கலாச்சார சீர்கேடுகளால் கன்னிகா தாணம் நடக்கும் முன்புவரை கன்னித்தன்மை இழக்காத தமிழ்நாட்டில், கரு கலைப்பை ஒருசில ஆரம்பபள்ளிகளில் படிப்புடன் சேர்ந்து ஒருசில கேளிக்கை விடுதிகளில் கார் சாவியை மாற்றும் தோரனையில் கனவன் மனைவியை மாற்றிக்கொண்டு இருக்கும் வேலையில் இனிவரும் காலக்கூட்டு குடும்பம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒன்றாக படுத்திருந்த ஒருபொழுது மட்டுமே என்ற வரலாறு பதிக்க போகும் காலத்தில் செல்லப்பாவும் இன்ஜீனியர் முடித்து படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வீயுவில் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக நடத்தும் கம்பெனியில் வேலையில் சேர்ந்து முதல் முறையாக முதல்வகுப்பு-இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக சென்னையைவிட்டு நியூயார்க் செல்லும் விமானத்தில் அவன் சென்னையை கடந்து சென்று கொண்டு இருக்கும்போது வீட்டின் முற்றத்தில் இட்ட கோலத்தை கோழி களைத்தது போல் தெரியும் இரவு நேர சென்னையை ரசித்துக்கொண்டே போகிற வேளையில் எஸ்கியூஸ்மீ என்று பணிப்பெண் அழைக்க, அவன் அவளை திரும்பி பார்த்த போது அவன் முன் பழரச பாணங்களுடன் மதுவயையும் சேர்த்து ஏந்திக்கொண்டு ரெடிமேட் கடை விரிப்புபோல் நகைத்து கொண்டு அவனை பார்த்தாள்.

எதை எடுக்கலாம் என்று அவன் எண்ணம் அலை பாய்ந்தபோது பணிப்பெண் எனிதிங் யுவர் சாய்ஸ் என்றால் அவன் ஒயின் கிளாசை மட்டும் எடுத்த போது கைதவறி மாதுவின் ஆடையில் சிதறியது மது. அவன், சாரி... சொல்லி முடிப்பதற்குள் its ok one minit, என்று கூறி கனநேரத்தில் ஆடை மாற்றி அதே ரெடிமேட் சிரிப்புடன் ஒயின் கிளாசை அவனுக்கு தந்தாள். அதை பெற்றுக்கொண்ட அவண் பெண்கள் தன் வாழ்நாட்களில் குறைந்த காலத்தை ஆடை மாற்றுவதிலே போக்கும் காலம் போய் ஜெட் வேகத்தில் ஆடை மாற்றி வந்து நின்றாளே என்று நினைவு ததும்பிய போது தான் நண்பன் ஜோசப் கூறியது நினைவுக்கு வர அமெரிக்காவில் ஒரு துணி வாஷிங்க்கு செய்யும் செலவில் ஒரு துணி விலைக்கே வாங்கிவிடலாம் என்று கூறியதால் பழைய பேண்ட் சட்டையுடன் ஒரு சில அழுக்கு துணியையும் அவனையும் சேர்த்து சுமக்கும் அந்த விமானத்தில் வைரமுத்துவின் பார்க்கடல் புத்தகத்தை புரட்டினான்.

அதில்: “நீ நின்ற இடத்திலேயே நிலைக்க வேண்டுமானால் ஒடிக்கொண்டே இரு” என்பதை பலமுறை படித்துவிட்டு வேறொரு பக்கத்தை புரட்டியபோது அங்கனம் அவன் அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவிடம் இருந்து மடல் வந்து நாலு நாளாச்சே படிக்கவே இல்லையே என்று தன் மணிப்பர்சில் மடித்தும் சுருக்கியும் வண்ணம் குறைந்து எண்ணமும் கலைந்த வயோதி கலந்த அந்த தாயிடமிருந்து எதிர்பார்பின்றி வந்த தபாலை மடல் கையில் கிடைத்தும் படிக்க நேரமின்மையால் புதைத்துவைத்துருந்த அந்த பொக்கிஷத்தை பிரித்தான்.

அதில் அன்புள்ள மகனுக்கு...
கோயிலுக்குள் உள்ளவர் பெயர் கொண்டவரோட மனைவியுமான உன் அம்மா எழுதிக்கொண்டது. இங்கு நான், உன் அய்யா, மற்றும், இந்தகடுதாசியை நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டு இருக்கும், அய்யாவு மக, அனைவரும் நலம். மற்றும் அங்கு உன் நலம் அறிய அவா? அப்புறம் புதுசா வாங்கிட்டு வந்த வெள்ளப் பசுமாடு கன்னுக்குட்டி போட்டு இருக்கு. அய்யாவு பொண்ணு வயசுக்கு வந்துட்டா, வேலாயி கெளவி செத்துப்போச்சு. ஆத்துல தண்ணிவரல, சோளக்கதிரு அடிச்சி காஞ்சுக்கிட்டு இருக்கு. நடேசன் பொண்டாட்டி வேலைக்காரன்கூட ஒடுனவ திரும்பிவரவே இல்லை. இங்கே அவ்வளவுதான் அங்க நீ எப்படி இருக்கே. நீ அமெரிக்கா போரியாமே ஊரெல்லாம் ஒன்ன பத்திதான் பேச்சு. நா ஒரு எலவு எனக்கு எதுவுமே புரியல, எனக்கு அமெரிக்காவெல்லாம் தெரியா.....து. பேரிக்கா.....தான் தெரியும்னு சொன்னே எல்லாரும் கொல்லுன்னு சிரிக்கிராலுவ. எது எப்படியோப்ப நீ வேலாவேளைக்கு சாப்பிடு. சனிக்கிழமை சனிக்கிழமை எண்ண தேச்சு குளி.... உடம்ப பாத்துக்க நல்லா தூங்கு. பீடி சிகரெட் குடிக்குறவன் கூட சேராதே.
இப்படிக்கு
உன் அம்மா...

என்று படித்து முடித்து போது அவன் கையில் இருந்த ஒயின் கிளாஸ் காலியாகி போதை மயக்கத்தில் பாற்கடலை புரட்டிய போது உறங்கிப்போனான். விமானம் அமெரிக்காவில் புகுந்து நியூயார்க்கை நெருங்கி கொண்டு இருக்கிறது......

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.