வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 25

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

நெடுந்தூர பயணத்தில் செல்லப்பா காரை விட்டு இறங்கிய போது களைப்புற்று இருந்தான். அவன் தேடி வந்த முகவரி முதல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளதாக அறியப்பட்டான். அதற்குள் அவனை பின் தொடர்ந்து வந்த போலீஸ் அதிகாரி this is your place என்று கூறி விடை பெற்றான். அவனை அழைத்து வந்த கார் ஒட்டுனர் அவன் அருகில் வந்து sorry for the trouble, 28 dollars என்று தன் காரின் மீட்டரை கை நீட்டி காண்பித்தான். அதை அறிந்த செல்லப்பா 30 dollars கொடுக்க அதை பெற்றுக்கொண்டே அவன் 2 dollar-யை திருப்பி கொடுத்துவிட்டு see u some time என்று அடுத்த சவாரியை எதிர் நோக்கி சென்று மறைந்தான்.

அவனை பற்றி செல்லப்பா நினைத்த போது நம்ம ஊரில் நன்றாக இருந்தும் பணப் போதையால் எண்ணங்களை ஊனமாக்கி பெண்களை மயக்கி அல்லது மடக்கி மதுவால் விலைமாதுவாகியும் குழந்தைகளை கடத்தி அழகான குழந்தைகளை அழுக்காக்கி கை கால்களை முறுக்கி திருத்தி முடமாக்கி துறுத்திக் கொண்டு சாலையில் வாகனம் மஞ்சல் வெளிச்சம் மறைந்து சிகப்பு வெளிச்சம் வெளிப்படுவதற்குள் கடந்து விட வேண்டும் என்ற தருவாயில் சைக்கிளில் செல்பவர்களில் இருந்து பலவித கார்கலிலும் வரும் அனைத்து வாகனங்களும் நீ நான் என்று முனைப்பாக செல்ல முயன்ற வாகனங்கள் நடுவில் ஜாம், ஜாம் என்று வந்த சவ ஊர்வலத்தை பார்த்து ட்ராபிக் போலீஸ் சிகப்பு வெளிச்சத்தை முடக்கிவிட அனைத்து வாகனங்களும் பட்டியில் அடைத்த செம்மரி ஆடுகளைப்போல் தவித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இது தான் சமயம் என்று பொணமாகிப்போன விலங்கினத்தை கொத்திக் கொண்டு இருக்கும் கழுகுகள் போல் முடமாக்கப்பட்டவர்கள் பச்சை வெளிச்சம் வருவதற்குள் நாலு காசு பார்த்துவிட வேண்டும் என்று சாலையில் நின்ற கார்களை தனது கைகளால் கொத்தி கொத்தி பிச்சை எடுப்பதாக கூறி மனித சமுதாயத்தின் எச்சங்களாக அலையும் அவர்களையும் நினைத்து இந்தியாவின் சோம்பலுக்கு அதுவும் ஒரு காரணம் என்றான்.

அமெரிக்காவின் வல்லமைக்கு இந்த கார் ஒட்டுனரும் ஒரு நன்மதிப்பு என்று எண்ணி அழைப்பு மணியை அழுத்தினான். கதவு திறக்காததை கண்டு மீண்டும் ஒரு முறை அழுத்தினான். அரை நிர்வாணமாக கலைத்துவிட்டானே தூக்கத்தை என்ற ஏக்கத்தில் கதவை திறந்தான் சலீம். ஹாய் செல்லா என்று ஹாலில் கிடந்த சோபாவில் ஒரு ஒரத்தில் சுருங்கிக் கொண்டே “ போய் ரூமுக்குள்ள படுத்துக்க காலையில பேசிக்குவோம் என்று சொல்லிக்கொண்டே அவன் சோபாவில் ஒரத்தில் சுருங்கிப் போனான். அசதியில் படுத்த செல்லப்பாவுக்கு அவனின் துர்நாற்றம் அவனைப் பாடாய்படுத்தியது அதை கழுவி துரத்த குளியல் அறைக்குச் சென்றான் ஆடைகளை கலைத்து பிறந்த மேனியாய் பிரவேசித்தான் குளியல் அறையில், குறுகிப்போன நீர்விழ்ச்சியில்(சவர்) குளித்துக் கொண்டே புளோரிடா போயி நாஸ்ட்ராம் மாதிரி பெரிய விஞ்ஞானியா ஆகிடனும். ஏதாவது புதுசா கண்டுபிடிச்சு அதுக்கு நம்ம பேர வைக்கணும். எப்படியோ அமெரிக்கா வந்தாச்சு இனிமே நாம ராஜா தான். இனிமே நம்ம ஊருல துபாய்க்கு போயிட்டு வந்தா துபாய்க்காரன், சிங்கபூர் போயிட்டு வந்தா சிங்கபூரான் என்பது போல நம்ல மட்டும் டேய் அமெரிக்கென்யா இல்ல இல்ல...டேய் வெள்ளக்கார துரை போறாரு என்பாங்கெ இங்க இருந்து ஊருக்கு போரப்போ ஊருல பாதிய வாங்கிடனும். பதினெட்டு பட்டி இல்ல,,,,? தஞ்சை மாவட்டத்துல உள்ள அத்தனை பேரும் நீ நான்னு பொண்ணு குடுக்க அலையுணும் .கொஞ்சம் பேராசைதான் பரவாயில்ல பெருசா ஆசைபட்டாதானே சிறுசாவது கெடைக்கும், அப்புறம் நடிகை குல்பிகுஷ்தாரா கூட ஒரு நாளாவது. அவங்கதான் கிரேட் ஸ்டார் கிதார்கென் கூட இருக்காங்கன்னு சொல்றாங்களே.

இப்ப நடிகைகள் எல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளைக்குதானே குறிவைக்கிறாங்க.. அத சாக்கா வைச்சு பணத்தை தூக்கி அவளுக்கு. கத்தை, கத்தையா எறிஞ்....சா....பணத்துக்கு பொணமும் வாயை பொளக்கும்னு. சொல்வாங்கெலே அதுபோல பொளப்பா.. பணத்துக்கு அவ, அந்த கேப்ல கெடா வெட்னா அப்ப நமக்கு கொலக் குத்துதான். மனிதனோட அழிவு ஆசையிலதான் ஆரம்பிக்குது. அடங்கு மவனே அடங்கு என்றான். மனிதனுக்குள் உள்ள மகா பாதகர்களின் ஒருவன்அவனுக்குள்ளே. பிறகு தனக்குத்தானே ஆசைபடு! அழியும் ஒன்றின் மீது அல்ல? அழியாப் புகழ்மீ....து, திருவள்ளுவன் இறந்தும் அவன் படைத்த திருக்குறல் நாம் படிக்கும் ஒவ்வொரு முறையும் பிறந்து கொண்டு இருக்கிறதே அதன் மீது! அல்லது தினம்தோரும் புதுமை படைத்துக் கொண்டு இருக்கும் எதன் மீதாவது. பிறகு இதுவரையில் அம்மா அப்பாவுக்கு ஒன்னுமே பண்ணல அவுங்கள மெட்ராஸ்க்கு கூப்பிட்டு வந்து ஒரு நல்ல வீட்டுல தங்க வைச்சு அவங்ககூட மச்சக்காளையும் சேர்த்துபாத்துக்கணும்னு, சோப்பும் நுரையுமாக குளித்துக் கொண்டு இருக்கும்போது குளியல் அறையின் கதவு டம்....டம்....டம்... என்று தட்டப்படுகிறது. செல்லப்பா ஒரு நிமிஷம் என்று முகத்தை கழுவிக்கொண்டு டவலை இடுப்பில் உடுத்திக் கொண்டு கதவை திறக்க போலீஸ்சும் அவனுக்கு பின்னால் சலீமும் நின்று கொண்டு இருக்க.....


தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.