வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 33

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அபியும் செல்லாவும் x-man2 படம் பார்த்த போது அபி எண்ணங்களை மறந்து கவலைகளை துறந்து கண்களையும், காதுகளையும் கூர்மையாக்கி திரை வெளிச்சத்தில் அரங்கத்தில் இவர்கள் இருவருடன் சேர்ந்து ஐந்து பேர்கள் காட்சியை கண்டு களித்துக்கொண்டு இருக்கும் வேலையில் செல்லா திரில்லர் திரையில் நடக்க சிரிப்பலைகள் செல்லாவின் முகத்தில் படற அவனின் ரத்த நாளங்கள் ஏதோ உணர்வை ஏற்படுத்தின.

திரையை இமை மூடின் விழி விழுந்தபோது அவனின் நினைவலைகள் அரிதாவை எண்ணி அவனை அரித்துக்கொண்டு இருந்தன. காட்சி முடிந்து இருவரும் வெளியேறிய போது அபி படம் பற்றி விவாதித்தான். செல்லா தன் காதலை சிலாகித்தான். அபி அவனை வெறுத்து உரைத்தான், “ஏங்க எப்ப பார்த்தாலும் அதே நினைவா இருக்கீங்க”.

“இல்லை அதுவும் ஒரு நினைவு அது கலையும்போது உங்கள் மீது படிந்து விடுகிறது அதான்...” “நீங்க இப்படியே நடந்துகிட்டா வீட்டை காலி பண்ண வேண்டி வரும், வேற வீடு பாத்துக்கிறேனே” அபி அவனுக்குள்ளே செல்லாவை திட்டி தீர்த்தான். அதை அரை குறையாக கேட்டு செல்லா, “அபி சத்தமா திட்டுங்க கோவம் வெத்துவேட்டா போயிடும், உங்களுக்குள்ளே வச்சுக்கிட்டு அதிகமாக்கிடாதீங்க. ஆனா... நன்றி அபி”.
“ஏன்”
“என் மேலே உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பயத்துக்கு”
“பயமா”
“ஆமாம்”
“ஒருவருக்கு பயம் அதிகமாகும் போதுதான் தன்னை காப்பாற்றிக்
கொள்ளவோ அல்லது அடுத்தவங்களுக்கு உதவவோ அது கோபமாகும்,
இப்ப உங்க கோபம் என்மீது காட்டும் கரிசனம்” என்றான்.

இருவரும் அமைதியாக சப்வே நோக்கி நடந்தனர்.
அபி “இப்பயெல்லாம் நல்ல படம் பார்த்தே ரொம்ப நாளாச்சு, சமீபத்துல
v.c.d.யில ஆட்டோகிராப் படம் பாத்தேன். சேரன் பிரமாதமா
பண்ணியிருந்தார்”. அதை கேட்ட செல்லா “ உங்களுக்கு ஏன் அந்த படம்
ரொம்ப புடிச்சு இருக்கு”
இரண்டு பேரை காதலிச்சு நட்புக்கும் காதலுக்கு இடையில் ஒருவர்கூட
நடந்து கடைசியில வேரொருத்தர கல்யாணம் பண்ணிக்கிறார் ஹீரோ,”
“அதனால...நம்மோட நிஜத்த சொன்னதனால. படத்தவிடுங்க நிஜவாழ்கையில ஒரு பொண்னு நாலுபேர காதலிச்சு ஒருத்தர கல்யாணம் பண்ணியிருந்தா நீங்க ஏத்துக்குவீங்களா?”
“அது எப்படி சாத்தியம்”
“பாருங்க ஆம்பள நாலுபேருகிட்ட படுத்து ஒருத்திய கல்யாணம் பண்ணுனா
பரவாயில்லைன்னு ஏத்துக்கற சமூகம் பொம்பள மட்டும் அதை செய்தா வேசி
என்ற பழியை சுமக்கிறாள். எந்த ஆண்களையாவது நாம் வேசி என்று
சொன்னதுண்டா”.
“அதுவும் சரிதான், நான் ஒங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றேன் ஆனா நீங்க
தப்பா எண்ணக் கூடாது, நாளைக்கு உங்களுக்கு தெரியவரும்
வருந்தக்கூடாது”
“என்ன விஷயம்”

“அரிதாவுக்கு ஏற்கனவே ஒருத்தன் கூட லவ் இருந்துச்சு இருவரும் ஒன்னா சுத்துனாங்க, கல்யாணம் பண்ணிக்க போறதா பேச்சு நடந்துச்சு. அரிதாவோட அப்பா, அம்மா இறந்த பிறகு அவெங்க பிசினெஸ் உடைஞ்சு கொஞ்ச நாள் அவளுக்கு ஆறுதலா இருந்தான், திடீர்ன்னு அவன் காணாம போயிட்டான். அவன் எங்கன்னு விசாரிச்சப்போ அவன் அவளைவிட்டுவிட்டு ஆஸ்திரேலியா போயிட்டான்னு தெரிஞ்சது.”

செல்லா அமைதியாக இருந்தான். அதை அறிந்த அபி “ரொம்ப ஷாக்கா இருக்கா”
“இல்லை, இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியும். உங்களுக்கு தெரியாத
இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். அவளோட தொலைந்து போன
காதலன் வேரொருத்திகூட டேட்டிங் போயிருக்கான் என்றும் தெரியும்,
அதனால அந்த பெண்ண பத்தி தப்பா பேசுறாங்க அதுவும் எனக்கு தெரியும்”
“இதுயெல்லாம் தெரிஞ்சுமா அவ பின்னால சுத்துறீங்க? அந்த பெண்ண
உங்களுக்கு தப்பா தெரியலயா?”
“அது என்ன, விரும்பி ஒருத்தன் கூட ஒருத்திப்போனா விபச்சாரம்
என்கின்றனர், விருப்பமில்லா ஒருவனுக்கு பலபேர் கூடி கொடுக்கின்றனர்.
அதற்கு பெயர் விவாகம் என்கின்றனர், எது எப்படியோ அது பத்தி எனக்கு கவலை இல்லை, என் அய்யனை இருளில் சுமந்தவளும் ஒரு பெண் தான்,
என்னை கருவறையில் சுமந்தவளும் ஒரு பெண் தான்,
என்னை சுமக்கப்போறவளும் ஒரு பெண் தான்,
அதே போல் நான் தோளில் சுமக்கப்போற மழலையும் ஒரு பெண்ணாக
இருந்தால் அதுவும் சந்தோஷம்தான்”.

“கற்பனையில் குழந்தையும் வளம் பெற்றுவிட்டதோ எது சொன்னாலும் புரியாத பையனா இருக்கீங்களே செல்லா!
“இல்லை, காதல் வயக்காட்டில் உழுது கலைத்த உழவன் நான், நானா
பையன்”
“அரிதா சுத்தமானவள் அல்ல”
“ஆனால் நல்லவள்”
“அவள் கன்னித்தன்மையோடு இருப்பாள்ன்னு நினைக்கிறீங்கலா?”
“பலதடவைகள் சைக்கிள் ஒட்டியிருப்பாள்”
அபி சிரித்துக்கொண்டே “ அவள் காதலனுடன் பல இடங்களில் சேர்ந்து
தங்கியும் இருப்பாள்”
“ வதந்தியும், வாழ்கையும் கூடவே ஒட்டிப்பிறந்தது”
“கண்டிப்பா கற்பு உள்ளவளா இருக்கமாட்டா”
“பெண்மையை அச்சம்(ஆள) ஆண்மையின் ஆதிக்கம்(ஆயுதம்) கற்பு”
“அப்ப கலங்கமானவளா இருந்தாலும் பரவாயில்ல?”
“அவள் என் அரவணைப்பில் இருக்கும் போது நிச்சயமாக கண்ணியமாக இருப்பாள்”
“காதல் படித்தவனை முட்டாளாக்குது”
“பாமரனை கவிஞனாக்குது”
“அவளால் உங்கள் சந்தோஷத்தை இழப்பீர்கள்”
“சந்தோஷம் என்பது ...?”
“பாத்தீங்களா இப்பவே உங்க சந்தோஷம் சந்தேகமாகி போச்சு”
“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?”
“கேளுங்க”

“ஆனா கோபப்படக்கூடாது”
“கோபம்தான் பயந்தாங்கொல்லின்னு சொல்லிட்டீங்களே”
“உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு”
“ஐந்து வருஷமாச்சு”
“உங்க மனைவி கூட நீங்க எத்தனை முறை படுத்து எந்திரிச்சிருப்பீங்க”
அபி மெளனமாக இருந்தான். அதை கவனித்த செல்லா
“அதான் அப்பவே சொன்னேன் கோபப்படுவீங்கன்னு”
“அது இல்லை, எத்தனை தடவையின்னு யோசிக்கிறேன் புலப்படமாட்டேங்குது”
“அதைவிடுங்க கலவிய பிறகு எவ்வளவு நேரம் உங்கள சுகப்படுத்தும்”
“இரு நிமிடம் அந்த சுகம் எல்லாருக்கும் ஏற்படுத்தப்போற ஒரு ரணம்”
“நாம எல்லாரும் விரும்பி ஏற்றுக்கொள்கிற சுகமான வலி?”
“உங்க நினைப்பு நடக்கப்போறதுயில்ல, ஒரு வேலை அப்படி நடந்தா
ஒங்கம்மா, அப்பா ஏத்துகுவாங்களா?”
“ஏன் ஏத்துக்க மாட்டாங்க இந்த அழகு ஐஸ்வர்யம்”
“வேரொருத்தர் கூட சுத்துன பொண்ணுன்னு தெரிஞ்சுமா?”
“இங்க பாருங்க அபி, பல முன்னனி ஹீரோக்களுடன், கிசுகிசுக்கப்
பட்டவங்கதான் வேறொரு நடிகர கல்யாணம் பண்ணி இருக்காங்க.

அவங்கள இன்னும் நாம உலக அழகின்னு கொண்டாடலயா?, அப்படித்தான் நானும்” என்றான். பதிமூணு வயசுல நான் குதிருக்குள்ள வர்ணம் தீட்டியது பக்கத்து வீட்டு நிலாவோட. 17 வயசுல ஒவிய டீச்சர் அவெங்க தொட முடியாத அவுங்க முதுகை என்னோட மார்பால தொட்டு படம் வரைஞ்சு சுகத்த அறிஞ்சாங்க. அவெங்களுக்கு எல்லை இல்லா ஆனந்தம், எனக்கு பயம் கலந்த மகிழ்வு. 24 வயசுல நானும் சேர்ந்து விலைமாதுவை விபச்சாரியாக்கிய போது அவள் என்னிடம் இது முதல் தடவை என்றாள். எனக்கு ஒரே ஆச்சரியம்! நீங்க என்கூடன்னா அவ, நான் சிரிச்சேன் உங்க காமப்பசியை போக்கி என் வயித்து பசியை அதிகமாக்கிட்டிங்கன்னு 500 ரூபாய அவ ஜாக்கட் போடுற இடத்துல வைக்க சொன்னா” “இவ்வளவு விஷயம் பண்ணியிருக்கிறயே நீயெல்லாம் ஒரு மனுஷனா”. “மனுஷன்றதாலத்தான் உண்மையை சொன்னேன்”.

“அப்ப நீங்க சரியான மொள்ளமாறின்னு சொல்லுங்க”.
“ஆனா நான் நல்லவனா இருக்க முயற்சி பண்ணுறேன்”.
அப்பொழுது அபி தன் மனதில் “நீ உண்மையை சொன்னதால நல்லவனாயிடமுடியாது , நான் என்னைப்பற்றி சொல்லாததால் கெட்டவனில்லைன்னும் சொல்ல முடியாது” என்று நினைத்தான். இருவரும் கதைத்துக்கொண்டே படிகளை துரத்தி பாதங்கள் சுரங்க நடைபாதையை நோக்கின. அதே சுரங்கப்பாதையின் எதிர் திசையில் இவர்கள் இருவரையும் தவறவிட்ட செவ்விந்தியர்கள் இவர்களை எதிர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்........

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.