வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 38

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அப்.....பா..! நல்லவேளை, நான்செத்துப்போயி நீங்க சாட்சியா இருந்திருப்பீங்க அந்த கார் போன வேகத்துல நான் தடுமாறி விழுந்தப்போ நீங்கமட்டும் கை கொடுத்து காப்பாத்தலேன்னா. என்றபோது அவள் அந்த இடத்துலயே நின்று கொண்டு இருந்தாள். அதைக்கண்ட அவன், “மீண்டும் வேதாளம் முறுங்க மரம் ஏறுன கதையா.... பழையயபடி உங்க இடத்துல போயி நின்னுக்கிட்டீங்க. சரிங்க நீங்க சாகப்போறத பத்தி ஒன்னுமில்லேங்க. ஆனா ஒன்னு, அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன், குருடு, செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிதுன்னு முன்னோர் மொழி போல் எந்தவொரு பங்கமும் பாதகமில்லாமல் சிலைக்கு உயிர் உள்ள ஒவியம் போல், பகலைவிட நிறத்தால் கண் கூசும் ஒளிபோல் காட்சி தரும் நீங்களா உயிரைவிடப் போகிறீர்.
“ஆமா”
“ஏங்க”
“எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்ல நான் மட்டும் ஏன் இருக்கணும்.”
அவன் அவனுக்குள்ளே “நான் இருக்கேனே. ஏய் செல்லா அவளே மாட்டிக்கிட்டா,,,வே உன் வலையில... வலை அறுவாம பாத்துக்க என்றது அவன் மனசாட்சி” அவன் வாய்விட்டு கெக் கக் கே....ன்...னு சிரித்தான். அதைகேட்ட அவள்
“ஏன் என்னப்பாத்தா அவ்வளவு நக்கலா இருக்கா?”
இல்ல ரொம்ப காமெடியா இருக்கு.”
அவள் “எதுக்கு”
“பின்ன என்னங்க கடலோட ஆழமும் தெரியல, தூரமும் அறியல, ஆகாயத்தோட எல்லையும் தெரியல, ஆதவன் எங்கே அடங்குதுன்னு புரியல, இப்படி பறந்து விரிந்த மாய உலகத்துல வாழ பிடிக்கலைன்னு சொல்லுறீங்களே. நீங்க மட்டும் சினிமாவுல புகுந்துகிட்டீங்கன்னா ரவுண்டுகட்டி அடிக்கலாம்ங்க.”
அவல் லேசாக சிரித்துக்கொண்டே “நான் டெய்லி என் மூஞ்சிய கண்ணாடியில பாத்துக்கிட்டுதான் இருக்கேன்.”
“நாளையில இருந்து பாக்க முடியாதே.”
“ஏன்”
“அதான் இன்னைக்கே செத்துடப்போறீங்களே”
அவள் தண்ணீரில் தூண்டில் மிதவையாக சிரித்தாள்.
“அப்ப நீங்க உங்க முடிவ மாத்திக்கிட்டீங்க”
“இல்ல, நான் எடுத்த முடிவு இன்னைக்கு எடுத்தது இல்ல, நீங்க என்ன சொன்னாலும் நான் தற்கொலை பண்ணிக்கத்தான் போறேன்.”
“சரி உங்க முடிவ மாத்த வேண்டாம், என்னகாரணம்னு சொல்லுங்களேன்”
“அதை உங்ககிட்ட நான் ஏன் சொல்லானும்? நீங்கள் யாரு?
“நான் யாருங்கறது முக்கியமில்லைங்க நீங்க செத்த பிறகு நான் தான் சாட்சியா இருக்கப்போறேன்.”
“உங்கள யாரு இங்க வரச்சொன்னது”
“விதியா மதியான்னு தெரியலைங்க ஆனா ஏதோ ஒன்னு என்ன இங்க வரவச்சுருச்சு”
“ஏ...ங்க” என்றான், அவள் இடைமறித்தாள். “ஒரே கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டு கழுத்த அறுக்காதீங்க. எனக்கு வாழப்பிடிக்கல. என்னோட அம்மா, அப்பா இறந்த பிறகு நான் தனிமையில ஒவ்வொரு நாளும் செத்துக்கிட்டு இருக்கேன். எனக்கு சொந்தம் பந்தமின்னு யாருமே இல்ல.....”
“சரிங்க இனிமே நான் உங்கள தடுக்கப்போறது இல்ல... ஆனா எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் உங்க அதான் பாலாப்போன தற்கொலைய தள்ளிப்போடமுடியுமா?”
அவள் அமைதியானாள்.அதைக்கண்ட அவன் “என்னங்க ஊம்னாமூஞ்சியா இருக்கீங்க”....
“சரி சொல்லுங்க ” என்றாள்.

அவன் தொடர்ந்தான் “ நாம என்னைக்கு பொறந்தோமோ அன்றிலிருந்தே இறக்கும் நாட்கள் நம்மளை தொரத்துகின்றன, அதையும் மீறி சாகும்வரை போராடுறோம். எதுக்குன்னு எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அப்பா, அம்மா உறவு இல்லாத உலகத்துல எப்படிங்கறீங்க. ஏங்க நீங்க ஒங்க அம்மா வயித்துல இருந்து வெளியே வரும்போது தொப்புள் கொடியை மட்டும் அறுத்து எடுக்கலைங்க, உங்க அம்மா உறவை சேர்த்துதான் அறுத்து எடுக்குறாங்க. அதன்பிறகு உறவு என்பது ஏதுங்க”
அவன் பேசும்போதே மெதுவாக பாலத்தின் கடைசிப்பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடம் நோக்கி நடந்தான். அவளும் அவளை அறியாமல் அவன்பக்கம் தானாகவே திரும்பினாள்.... அவ்வேளையில் அவன் 5அடி2அங்குலம் உயரம்“ பக்கின்னு ஒருத்தர்ங்க, அவுங்க அப்பா அவனுக்கு பனிரெண்டு வயசு ஆகும்போதே இறந்துட்டாரு. அதன் பிறகு படிக்க நெனச்சாலும் படிப்பு ஏறமாட்டேங்குது, வேலையும் கிடைக்கல 32 வயசுவரை அவருக்கு வாழ்க்கை போராட்டமா போச்சு. ஒரு நா.. இதோ நாம நிக்கிறோமே, இந்த இடத்துக்கு வந்தாரு ஏன்னு தெரியுமா?”

அவள் அமைதியாக இருந்தாள்.அதைக்கண்ட அவன் “ஏன்னு கேளுங்களே... அவள்,ஏன்,உங்களப்போல தற்கொலை பண்ணிக்கத்தான். அவள் ஆர்வமாக அவனைப் பார்த்தாள். தற்போது அவளும் பாதுகாப்பான இடத்துக்கு வந்து கொண்டு இருந்தாள். அதைக்கண்ட அவன் சந்தோஷப்பெருக்குடன் மேற்கொண்டு தொடர்ந்தான். “அவர் பாலத்தின் கடைசிப்பகுதியில் நின்றுகொண்டு கீழே பார்த்தாராம். இந்த நதியில் பனிப்பொழிவால் ஒரே மிஸ்டியாக இருந்ததாம். அதை கண்ட அவர் நம் வாழ்வும் அப்படித்தானே விடை தெரியாத கேள்வியாகிப்போனதே,? என்று பாலத்தில் இருந்து கீழே பனிபடர்ந்து ஆழமும் அறியாத நதியில் குதிப்பதற்கு முன் கண்களை இருக்க மூடினாராம். மூடிய பிறகு ஒருமுறை வானத்தை நோக்கி தலையை நிமிர்த்தினாராம். குதிக்கப்போகும் சில வினாடிகளே இருந்தும் அவர் குதிக்க தயாரானார். மனதை ஒருநிலை படுத்தும் போது அவருக்கு கடசியாக ஆசை தோன்றியது. கண்களை ஒருமுறை திறக்க வேண்டும் என லேசாக கண்களை திறந்தார். வானம் பல வர்ணங்களால் ஜொளித்தது அதே வேகத்தில் கீழே நதியை பார்த்தார். நதியின் படிந்த பனிப்பொழிவு மறைந்து தண்ணீர் ஜாலம்புரிந்து கடந்துபோகும் ஒடும் தண்ணீரை ஒரு முறை பார்த்த போது அவர் பார்வையிலேயே மறைந்து போனதாம். அதைக்கண்ட அவருக்கு ஆச்சரியம். மீண்டும் வானத்தை பார்த்தாராம்.

அப்போது வர்ணங்கள் மறைந்து மேகம் சூழ்ந்து மழை வரவை ஏற்படுத்திக்கொண்டு இருந்ததாம். அவருக்கு மீண்டும் ஆச்சரியம், ஒருசில நிமிடங்களிலே எத்தனை மாற்றங்கள் என்று நாம் இதுவே கடைசிதடைவையாக இன்னொரு முறை வாழ்கையோடு மோதிப்பாக்கலாமேன்னு தற்கொலையை தள்ளிப்போட்டாராம். இன்னொருத்தரபத்தியும் சொல்றேன். 13 வயசுல சென்னைக்கு ஒடி வந்தவரு மூன்று முறை தற்கொலை முயற்சி பண்ணினவரு இன்னைக்கி சினிமாவுல தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருத்தரா இருக்கார். அவள், இடைமறித்து பக்கி தற்கொலை பண்ணிக்கிட்டாரா? இல்லையா? அவன் சிரித்துக் கொண்டே,அவரை பற்றி வேரொரு சந்தர்ப்பத்துல சொல்லுரேன, என்று இருவரும் பாலத்தில் உள்ள நடைபாதையை கடந்து கொண்டே பக்கிமட்டும் அன்னைக்கு தற்கொலை பண்ணியிருந்தா என்னைப்போன்ற பல இளைஞர்களின் கனவு பொய்த்து இருக்கும், சாதாரன மனிதனின் ஒளிவட்டம் எரித்து இருக்கும். இன்னைக்கு இந்த சிக்காகோ நகரத்தோட பல சிறப்பு அம்சமே இல்லாமலே போயி இருக்கும்...அவள் ஓ அப்படியா...!

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.