வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 42

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

யாழி மீது வழக்குகள் பெரிதாக பதிவாகவில்லை என்றாலும் தேவையில்லாத விசாரணை. மன உளச்சல், பணவிரயம் சம்பந்தம் இல்லாத வழக்குகளை உருவாக்கும் நம்முள் யாழியும் ஒன்றாகிப்போனதால் சிறையில் இருந்து வெளியே செல்ல காத்திருந்த போது மதிய உணவு நேரம் வந்தது. ஜெயில் கைதிகள் அனைவரும் உணவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்று கொண்டு இருந்த வேளையில் உணவு வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் வரிசை நகர்வதாக இல்லையே என்று எட்டிப்பார்த்தாள். ஒருவளே பலமுறை உணவு பெற்றுக்கொண்டு இருந்தாள். அதைக்கண்ட அவள் அவளுக்கு முன்வரிசையில் நின்றவளிடம் “ஒருத்தியே பலமுறை சாப்பாடு வாங்கிட்டு இருக்காளே” என்று கேட்க, அவள் அருகில் உள்ளவள் மிகவும் ரகசியமாக யாழியிடம் “இங்க சாராய பாப்பான்னு ஒரு பொம்பள இருக்கா அவ பெரிய ரவுடியாம் நாலுபேர கொலை பண்ணி இருக்காளாம். ஆனா கொலைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்ல போலீஸ்காரங்களுக்கு தெரியும் அவதான் கொலைகாரின்னு அதனால சந்தேகத்தின் பேர்ல பிடிச்சு கொண்டாந்து ஜெயில்ல வச்சிருக்காங்க. அதோ பார் என்று கைகாட்டிய திசையில் சாராய பாப்பா இருந்தாள்.

அவளை பார்த்தபடியே அவதான் என்றாள். ஆறடி உயரம் கொண்டு 90 கிலோ எடையும் கொண்டவளாக சிறையில் செல்போனில் சிரித்துக்கொண்டே சிலாகித்து போனாள். அதைப்பார்த்த யாழிக்கு ஆச்சரியம் எதிரில் பேசியப் பெண்ணிடம் “என்னங்க கொலைகார கைதின்னு சொல்லுறீங்க ஆனா செல்போன்ல ஜாலியா பேசிட்டு இருக்காங்க. இங்க நிக்கிற போலீஸ்சும் கண்டுக்கல. அடப்போங்க ஜெயில்ல மட்டும்தாங்க எல்லா போதை வஷ்துகளும் ஒரே இடத்துல கிடைக்கும். ஜெயிலுங்குறது மனிதன் திருந்த உருவாக்கப்பட்டது, ஜெயில் கொடுமையானது அப்படிங்குறது எல்லாம் பொய்ங்க. ஜெயில் தண்டன அனுபவுச்சுகிட்டும் தப்புபண்றதுல பெரும்பாலானவங்க ஜெயில்லதாங்க வெளியே நடக்கும் அட்டூழியத்துக்கு வடிவம்பண்ணி கூட்டணி சேர்த்துகிட்டுபோறாங்க. இந்த மாதிரி இருந்தா எப்படிங்க?
“ஒ... அதனாலதான் அக்கிரமங்கள் அதிகமா நடக்குதோ”
“எது எப்படியோங்க வரிசை நகருது வாங்க”
அப்போது யாழிக்கு, ஒருத்தி பலதடவை உணவு வாங்குவதை பார்த்து அவள் நினைவு பின்னோக்கியது....
பெரும்பாலும் அகதிகள் முகாமில் நானூறுபேர் வரிசையில் நின்றால் அதில் இருனூறு பேருக்கு மட்டுமே உணவு இருக்கிறது என்றால். அதைக்கண்ட அகதிகள் இருனூறு பேர் பெற்றுக்கொண்ட பிறகு மீதமுள்ள இருனூறுபேர் அமைதியாக திரும்பிவிடுகிறார்கள். அடுத்த உணவுமுறை வரும்போது முதலில் பெற்ற இருனூறுபேர் தாங்கள் கடைசியாக நின்று கொண்டு பெறாதவர்களை முன்னிருத்தி வாங்க வைத்தனர். அதிலும் குழந்தைகளைத்தான் முதலில் வரிசையில் நிறுத்தினர். தங்களுக்கு வயோதிகம்தட்டி தவறும்போது இந்த இளைஞர்களாவது போராடட்டுமே என்றுதான். எம்மக்கள் உணவை உயிர்வாழ்வதற்கு பயன்படுத்தினர். ஆனால் இங்கே உண்பதையே வாழ்க்கையாக்கி கொண்டுள்ளனர் என்றாள். அவள் முறை கடைசியாக வந்தபோது பாத்திரத்தில் பண்டமின்றி பிண்டமாகிப்போன யாழியை பார்த்து “சாரி” என்று கூறிவிட்டு காலியான பாத்திரத்தை எடுத்துச்செல்ல
அவள் அதை பொருட்படுத்தாமல் இன்னைக்குதான் வெளியே போறோமே வெளியவே சாப்பிட்டுக்கலாம் என்று நினைத்தாள்.

சிக்காகோவில் ஒரு இரவு உணவு விடுதியில் யாழியும் அரிதாவும் பேசியபடியே உணவருந்திக்கொண்டு இருந்தனர்.
“காசிக்கு போனது இவ்வளவு பெரிய கதையா?”
“கதையில்லடி உண்மை”.
“உண்மைதான் காலம்கடந்தா கதையாகிரும், நீ கடந்து வந்த பாதையில இவ்வளவு சந்திச்சிருக்கயா?
“இவ்வளவு மட்டுமில்ல இதையும் சந்திச்சிருக்கேன்”
“இது எல்லாம் கேட்கும்போது வாழணுமாங்கற எண்ணம்? தோணுதுடி”
“ஏன் அப்படி சொல்லுற”
“பின்ன என்ன காசி விஸ்வநாதேஷ்வரர்கிட்ட தான் நிம்மதியாவும் நீண்ட ஆயுளோட வாழணும்னு வேண்டிக்கிட்டு கோயிலுக்குள்ள வர்ற மக்கள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்பேர். அந்த கோயிலுக்கு போற வழியில நூற்றுக்கணக்கா வயோதிகர்கள் சாவின் வருகைக்காக காத்திருக்கும்போது வெளியே வந்தா அரிச்சந்திரா மயானகண்டத்தில் ரேசனுக்கு கியூவுல நிற்கிறமாதிரி பிணங்களை எரிக்க கியூவேற, எரிஞ்ச பொணத்த திங்குறதுக்கு மனிதர்கள் (அகோரிகள்) ஒருபக்கம், நாய்கள் மறுபக்கம். இதை எல்லாம் நீ பார்த்தேன்னு சொன்ன பிறகு எனக்கு எப்படி வாழ்கை வெறுக்காம போகும்னு நினைக்குற”..................

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.