வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 43

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அரிச்சந்திரா மயான கண்டத்தில் ரேசனுக்கு கியூவுல நிற்கிற மாதிரி பிணங்களை எரிக்க கியூவேற, எரிஞ்ச பொணத்த திங்குறதுக்கு மனிதர்கள்(அகோரிகள்) ஒருபக்கம், நாய்கள் மறுபக்கம் இதை எல்லாம் நீ பார்த்தேன்னு சொன்ன பிறகு எனக்கு எப்படி வாழ்க்கை வெறுக்காம போகும்னு நினைக்குற”
“இல்லடி அது,அது, அவங்க அவங்க கர்மா, இங்க நீயும் நானும் பேசிட்டு இருக்குறது, நம்மளோட கர்மா” என்று சொல்லும்போது அங்குள்ள சர்வரை பார்த்து “எக்ஸ்கியூஷ்மி” “டூ மோர் கிளாஸ் ஒயின்” என்றாள். அரிதா விரக்தியாக “நிம்மதிதேடி எங்கையும் போக முடியாது”
யாழி “ஏன் போகணும்?”
“என்ன சொல்லுற?”
“நிம்மதிங்கறது உனக்குள்தாண்டி இருக்கு. அது ஒரு நிமிஷம் நாம இருக்குற தனிமையில கூட கிடைக்கலாம். அதே நேரத்துல பல வருஷமா சூழ்நிலை கைதியாகிபோன நமக்கு அந்த நிம்மதி வராமகூட போகலாம். ஒரு விசயம் எனக்கு நடந்த கொடுமைகளுக்கு நான் மற்றவங்களுக்கு அடையாளமா இருந்துட்டு போறேனே” என்றாள். அப்போது அரிதாவின் செல்போன் சிணுங்கியது.
யாழி “யாருடி இந்த அர்த்த ராத்திரியில் போன் பண்ணுறது”
“புது நம்பரா இருக்கு” என்று கூறியபடி செல்போனை கையில் எடுத்தாள். செல்போனின் குரல் வரவு பட்டனை அழுத்தி who is this? என்றாள்.
“நான் தாங்க செல்லா”
அரிதா சிரித்தபடி “ஹலோ நீங்களா?”
“நானேதான்”
“என்ன விசயம் இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க”
“விசயம் ஒன்னுமில்லைங்க உங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு”
“நாளைக்கு பகல்ல பேசிக்கலாம் இப்ப தூங்குங்க”
“நான் தேடிக்கிட்டு இருக்கேன்”
“என்னத்த”
“அதாங்க அந்த தூக்கத்த”
“ஏன் தூக்கம் வரமாட்டேங்குதா?
“நல்லாயிருக்கே கதை, முயல கிளப்பிவிட்டுட்டு நாய் பேலப்போன கதையா இருக்குங்க?
“எனக்கு ஒண்ணும் புரியலைங்க”
“அதாங்க எனக்கும் எதுவுமே புரியலைங்க”
“சரி நாளைக்கு மீட் பண்ணலாம்”
“போன வச்சுற சொல்லுறீங்களா?
“இல்ல நான் அவசர வேலையா இருக்கேன்” என்று அவளே செல்போன் தொடர்பை துண்டித்தாள்.
யாழி “யாரு உன்னைய சுற்றிய பித்தனா?"
“ஆமாம்டி காதல்ங்கிறான்.. கத்திரிக்காய் என்கிறான்... என்னையே சுற்றி வருகிறான். தற்கொலை செஞ்சுக்கிட்டு சாகப்போன என்னையவேற காப்பாத்திட்டான். எனக்கும் என்னைய அறியாம சில நேரங்கள்ல அவன் ஞாபகம் இருக்கு. என்னடி இந்த காதல்.. நான் எத்தன பேர காதலிக்குறது. என்னைய எத்தனபேர் காதலிக்குறது. காதல் முறிவு ஏற்படும்போது சலிச்சு போகுது. வேற ஒருத்தன் புதுசா சொல்லும்போது புத்துணர்ச்சி பெறுது.”
அதாண்டி காதலித்துப்பார் உன் எதிர்காலம் இளமையாகவே இருக்கும். அதை நீ புரிந்துகொண்டால் நீ தினந்தோறும் பிறந்து கொண்டே இருப்பாய். பல வரலாறுகள் போர்களத்தில் தோல்விகளை சந்திக்கும்போது புதையுண்டு போகிறது. காதல் மட்டுமே தோல்வியுற்று வரலாறு ஆகிறது.”
அரிதா “அடேங்கப்பா இவ்வளவு வியாக்யானமா?
“வியாக்யானமில்ல இதுவும் மெய்ஞானம்”
“எது எப்படியோ இனிமே எனக்கு இந்த காதல் கல்யாணம் எல்லாம் தேவையா?
“கண்டிப்பா”
“அப்ப நீ யாரையும் கலயாணம்பண்ணிக்கலையே”
“நான் கற்பழிக்கப்பட்டவள்ன்னு என் பக்கம் யாரும் ஒதுங்குறது கூட கிடையாது”
“நானும் அப்படித்தாண்டி உன்ன கற்பழிச்சாங்க, நான் என் கற்ப அழிச்சுகிட்டேன்”
“ஆமா நீ நான்கு சுவற்றுக்குள்ளே நடத்தின. என்ன நான்கு தெரு சந்திக்கும் முச்சந்தியில வச்சு. பண்ணிணாங்க. கடந்தவைகளை பேசி நம்ம நேரத்தப் போக்க வேண்டாம் இதுவும் கடந்துபோகும். ஒடுற தண்ணிய ஒருமுறை தொட்டோம்னா மறுமுறை நினைத்துகூட பார்க்க முடியாது. தண்ணீர்போலதான் வாழ்கையும். மலைகள்ல மழையாகவும், காடுகள்ல ஏற்படும் குகைக்குள் நீர் வீழ்ச்சியாவும், பள்ளத்தாக்குகளில் நதிகளாகவும் சமநிலையில் நமக்கு மேல் உயரே வசித்துக்கொண்டு இருக்கும் கடலாகவும் வாழ்ந்துட்டு போவோமே.”
அரிதா “என்னடி சொல்லுற”
“பெண்களாகிப்போன நமக்கு 50 வயசுக்கு மேல நிச்சயமா ஒரு துணை தேவைப்படும், இல்ல வேற ஒருத்தருக்கு நாம துணையா இருக்கத் தோணும். ஒண்ணு நம்ம சந்தோஷங்களை பகிர்ந்துகொள்ள மற்றொன்று நம்ம கஷ்டங்களை சுமந்து செல்ல.”
அரிதா “அப்ப நீ சொல்லுறத பார்த்தா...”
“அவன் இப்ப நல்லவனா தோணுச்சுன்னா கல்யாணம் பண்ணிக்க அவன எப்பவும் நல்லவனா இருக்கனும்னு எதிர்பார்க்காத. ஏன்னா நீயும் நல்லவளாவே இருபபன்னு உன்னால சொல்ல முடியுமா? ஏன்னா நாம நம்மல மறந்து நடப்பவைகளை கடந்து எதிரே வருவதை கனவாக நினைத்தால் நாம இனிமையா இருந்துட்டு போளாம்... இதத்தான் என்னால சொல்ல முடியும் இதுக்கு மேல உன்னோட முடிவு......

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.