வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 49

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

செல்லா அவன் கிராமத்தின் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பே பஸ்சில் இருந்து இறங்கினான். அவனுக்கு அது பிடித்திருந்தது. இறங்கியவுடன் அவன் கிராமத்தை எட்டிப்பார்த்தான். பசுமை நிரம்பிய கிராமம் பசுமை பாலைவனமாக காட்சியளித்து. பச்சை பசேல் என்று தெரியும் வயக்காடும் கானல் நீரால் அவன் கண்கள் கூசியது.அவ்வேளையில் அவன் நடந்து செல்லும் சாலையில் எதிர்திசையில் ஒரு லாரியில் நிறைய மாடுகள் ஏற்றி வந்து கொண்டு இருந்தன. அவன் அருகே வரும்போது கைநீட்டி நிறுத்தினான். மாடுகள் ஏற்றி வந்த லாரியும் நின்றன. லாரியின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த ட்ரைவரிடம் செல்லா “இந்த மாடுகள் எல்லாம் எங்கே போவுது” என்றான்.
“கேரளாவுக்கு”
“ஏன்”
“பின்ன எதுக்கு அறுப்புக்குத்தான், இப்பெல்லாம் ஆட்டுக்கறி கோழிக்கறியைவிட மாட்டுக்கறிதான் அதிகமா சேல்ஸ் ஆவுது” என்று கூறிவிட்டு லாரி அவனை கடந்து போனது. அவன் லாரியில் ஏற்றிச்சென்ற மாடுகளை பார்த்தான். அவனின் மச்சக்காளை ஞாபகம் வந்தது. அவனின் கண்களில் இருந்து வெகுதொலைவில் லாரி சென்றவுடன் அவன் மீண்டும் கிராமம் நோக்கி நடக்கத்தொடங்கிய போது கால்கள் இடரியது. இடரிய கால்களை நோக்கினான். சாலையின் தார் துகள்களால் இடரப்பட்டு நெகம் சிதறி இருந்தது. “அழகான மண்சாலையை அழுக்கான தாரைபோட்டு அமுக்கிட்டாங்களே” என்ற நினைத்தபோது விரலில் ரத்தம்வழிந்த வலியைவிட, எண்ணவலி தொடங்கியது.அவன் சிறுவயதில் குளித்த தாமரை ஏரி அவன் அருகே பெரும் பாறைகளாக தண்ணீர் இன்றி இளித்துக்கொண்டு கடந்து. குரவைகளும், கெழுத்திகளும், விராள் மீன்களும், தாமரைகளும், விளைந்து விளம்பி இருந்த குளம். அவன் கண்டபோது குளங்கள் குட்டிசுவர்களாகவும் எஞ்சிய இடங்கள் இடரும் பாறைகளாக காட்சி கொடுத்தன. அழகு நிறைந்த தாமரை ஏரி! லோட்டஸ் அபார்ட்மெண்ட் என்ற பெயர் பலகையை தாங்கி நிற்க அதன் கரையில் இருந்த மரக்காடுகலால் ஆன இடுகாடு. இருந்தஇடத்தில்,மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு காடுகள் அழிந்த பொட்டல் காட்டில், சிமென்டால் ஆன கூரையை நான்கு சுவர்களுடன் சுடுகாடு என்ற பலகையை. அவன் கடந்து போனான். அவன் எதிரே இருசக்கர வாகனத்தில் இருவர் மதுமயக்கத்தில் நால்வராக வந்து கொண்டு இருந்தனர். செல்லாவை கண்டவுடன் “ஏம்ப்பா நீ சாமியைய்யா மவன் செல்லப்பாதானே. ஆமாம் உனக்காகத்தான் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் போ”ப்பா. என்ற போது அவன் ஒன்றும் அறியாமல் மீண்டும் நடந்தான்.

அவன் காதுகளில் சாவு மேளம் ரீங்காரமிட்டன. அதைகேட்ட அவனோ சிறிது வேகமாக ஊருக்குள் நடந்தான். அவன் காதுகளை சாவு மேளம் துளைத்து எடுத்தது. மீண்டும் வேகமாக நடந்தான். அந்த மேளச்சத்தத்தால் தலை சுற்றியது. அவன் தெருவுக்குள் சென்றான். தெரு முழுவதும் ஆண்களும், பெண்களுமாக கூட்டம் அலைமோதியதை அவன் அறிந்தான். அவன் வீட்டில் ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று வீட்டை நோக்கி ஒடினான். அவனை கண்டவுடன் கிராமமே அழுது புரண்டபோது.? அவனின் அம்மா மட்டும் சலனமின்றி பூக்களாளும். புதுபுடவையோடும். எலும்பை போர்த்தும் தோலை மறைத்தவையுடன் ஒட்டிக்கொண்டு உயிரற்ற சவமாக கிடத்தப்பட்டு இருந்தாள். அதை கண்ட செல்லா அம்மா... மா... மா... என்று அழுது புரண்டான். அதற்கு முன் அழுது கொண்டு இருந்த கிராம மக்கள் அடங்கிப்போனார்கள். அவன் மட்டும் அழுது புரண்டபோது ஊர்மக்கள் வாய்கட்டி நின்றனர். செல்லாவின் ஒலம் அடங்கியது. சாரதாவின் சரீரம் எரிந்து சாம்பலாகி காற்றோடு கரைந்து பறந்துகொண்டு இருந்தது. செல்லா அவன் வீட்டின் முற்றத்தில் குத்துக்காலிட்டு இருந்தான். சாமியைய்யா களைத்து, பசியால் காது அடைபட்டு மூச்சு அவனை முட்டி வெளியே வந்துகொண்டு இருந்தன. அனைவரும் சென்றவுடன் இருள் படர்ந்த வேலையில் சாரதாவின் புகைப்படம் அருகே விளக்கு எரிந்துகொண்டு இருந்த ஒளியில் இருவர் மட்டுமே அவளின் புகைப்படத்தை பார்த்து அமர்ந்துகொண்டு இருந்தபோது. ஒளி கருமையும், செம்மையுமாக எரிந்தும், மறைந்தும் கொண்டு இருந்தபோது செல்லா அழுது கொண்டே இருந்தான். அதை கண்ட சாமியைய்யா விளக்கொளியில் பளிச்சின்னு தெரிந்த சாரதா முகத்தை பார்த்துக்கொண்டே சாமியைய்யா “பாவி மவ சொல்லவே இல்ல. அப்பப்ப வயிறு வலிக்குதும்பா, கொஞ்சம் வயித்துல நல்லெண்ண தேச்சுவிடுங்கம்பா. நானும் அப்பப்ப தேச்சுவிடுவேன். வயித்துவலி சரியா போச்சும்பா. அப்புறம் அடிக்கடி வலியால துடிச்சுப்போவா. ஒரு நா நம்ம செல்லையா டாக்டருகிட்ட கூட்டிட்டு போனேன். அவரு செக்கப்பண்ணி பாத்துட்டு. வேளவேளைக்கு சாப்புடாம வயித்துல புண்ணு இருக்குன்னு. மருந்து எழுதி கொடுத்தாரு. அத சாப்பிட்ட பிறகும். அப்பப்ப வலிம்பா. ஒருநா செல்லையாவ தனியா பாத்து சாரதாவுக்கு என்னான்னு கேட்டன். ஒசம்சாரத்துக்கு குடல்ல கேன்சர்ன்னார். .அன்னைக்கே நாசெத்துப்பொயிட்டேன், ஒடனே ஒனக்கு தெரிவிக்கலாம்னு நெனச்சப்போ? நீயே ஒனக்கு கல்யாணம்னு சொன்னே! அந்தநேரத்துல எதுக்குன்னு நான் ஒங்கிட்ட சொல்லல. அதுக்குபொரவு அவளுக்கு அடிக்கடி வயித்துவலிவரும். அடுத்த நாழியில ஆஸ்பத்திரியில போய் சேர்ந்துடுவோம், அவளுக்கும் அப்ப வலிசரியாயிடும்ப மச்சக்காளை இருந்தவரையிலும்” என்றான். அவ்வேளையில் ஒரு பறை மேளத்தை ஒருவன் வந்து சாமியைய்யாவிடம் கொடுத்தான். அவ்வேளையில் செல்லா.. “மச்சக்காளை எங்கப்பா” என்றான். சாமியைய்யா கையில் உள்ள தப்புடன் செல்லாவை நோக்கி நடந்தான்..?

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.