வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 8

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

மச்சக்காளையை பார்க்கும் ஆவலுடன் செல்லப்பா அவனது நான்கு நண்பர்களுடன் அவன் கிராமத்தை நோக்கி வேகமாக நடக்க, அவனைக் கடந்து பிளசர்காரில் போலிஸ் சென்றுகொண்டிருக்கிறது. அந்த காரின் பின்னால் செல்லப்பாவும் அவன் நண்பர்களும் ஒடிக்கொண்டிருக்கும்போது ஊருக்குள் போலிஸைக் கண்டவுடன் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஊரின் கடக்கோடியிலுள்ள காட்டாற்றில் பதுங்கிக் கொள்கின்றனர். செல்லப்பா சாரதாவிடம் “என்னம்மா ஆச்சு தாத்தாவுக்கு? ஆஸ்பிட்டலுக்கு கொண்டுகிட்டுபோயி, டாக்டர் முடியாதுன்னு சொல்ல, கொண்டு வந்துவிட்டாங்களாமே... வாம்மா போயி தாத்தாவ பாத்துட்டு வரலாம்” என்று சொல்ல சாரதா கடுகடுத்த முகத்துடன், “கொளந்தசாமிக்கு முடிஞ்சிடுமாம்... பாடி ராத்திரிக்கு வந்துடும்ங்கிறாங்க... நரசிம்ம அண்ணண் இன்னும் கண்ணு முழிக்களயாம். ஊருக்குள்ள ஒரு ஆம்பளயவிடாம போலிஸ் தேடிக்கிட்டு இருக்கு... ம் நீ போயி வீட்டுக்குள்ள படுத்துக்க” என அவனை வீட்டுக்குள்ள தள்ளிவிடும்போது கார் வரும் சத்தம்கேட்டு திரும்புகிறாள். சாலையில் போலிஸ்கார் வந்துகொண்டு இருக்கிறது. அதைக்கண்ட அவள் வீட்டிற்க்குள் சென்று கதவை தாழ்போட்டு கொள்கிறாள். சிறிது நேரம் கழித்து அவள் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க...அவள் திறக்கவில்லை.

மீண்டும் மீண்டும் டம்.. டம்.. டம்.. என சத்தம் தொடர்ந்து கேட்க, பதட்டத்துடன் செல்லப்பாவை தூக்கி குருதுக்குள்போட்டு மூடி வைத்துவிட்டு திரும்ப, மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் பலமாக கேட்க பதட்டத்துடன் வேர்வைசொட்ட கதவை திறக்கிறாள். அங்கே வேலாயி கிழவி நின்றுக்கொண்டிருக்கிறாள்.

அதைப்பார்த்த சாரதா கோபத்துடன், “ஏன்டி மொட்ட கெழவி நாந்தான் வேலாயின்னு சத்தமா கத்தி கதவ தட்ட வேண்டியதுதானே?’ என கேட்க அதற்கு வேலாயி “போலிஸ் ஒரு பொம்பளயவிடாம எல்லாரையும் கொடஞ்சி எடுக்கறானுவ... நாந்தான் மொதல்ல பாத்தது... இது போலிசுக்கு தெரிஞ்சா என்னய போலிசு புடிச்சிக்கிட்டு போயிடும் . அதான் அரக்கப்பறக்க உங்கவூட்டுக்கு ஒடியாந்தேன். நல்லவேள நான் தப்புச்சேன் எம்.எல்.ஏ போலிசுகாரங்களுக்கு போன்போட்டு தப்புபண்ணுனவங்கள நான் டேஷனுக்கு கூட்டிகிட்டுவர்ரேன்னு சொன்னதால எல்லாரும் திரும்பி போயிட்டாங்க...” எனக்கூற சாரதா குருதுக்குள் இருந்த செல்லப்பாவை வெளியே எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ள, சாரதா வேலாயிடம் “அங்கு என்னதான் நடந்ததுன்னு சொல்லேன்...” என்று கேட்க அதற்கு வேலாயி கிழவியும் விளாவரியா சொல்ல ஆரம்பித்தாள். “அது ஒண்ணும் இல்லடி... காலணா பொறாது காகாசுக்கு சேராத விசயம் ...நான் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன். பாவம் பணிபூண்டார் வரம் வாங்கி தவமிருந்து பெத்தபுள்ள. பணிபூண்டாரும் அவர் பொண்டாட்டியும் உருண்டு புரண்டு அழறத நெனைச்சா வயித்தெரிச்சலா இருக்கு.

செந்தாழம்பூ உம்மவன இறக்கிவிட்டுபுட்டு ஜல்லிக்கட்டுக்கு போயிருக்கான், அங்க வேடிக்கை பார்த்துட்டுருந்தப்போ அலங்கார்நல்லூர் காளை ஒரே முட்டா முட்டுச்சாம் அப்புறம் என்ன எல்லாம் முடிஞ்சுபோச்சு, அவன் வாங்கி கொடுத்த கறிவேகறதுக்குள்ள அவன் கட்ட வெந்து போச்சு. அவன அடக்கம் பண்ணிட்டு வந்து எல்லாருமா தனுக்கொடி கடையில கொளந்தசாமி அவன் மச்சான் நரசிம்ம நம்ம கோவாலுகவுண்டர், நல்லு மொய்ந்தார் எல்லாருமா கடையில நடுசென்டர்ல உக்காந்து சீட்டாடிக்கிட்டு இருந்தாங்கெ.

தீபாவளியாச்சே எல்லாரு கையிலும் வெளாங்கொண்டார்கிட்ட கடனா வாங்குன காசுவேற இருந்திச்சி அதோட சாவுவேற அத தெரிஞ்சிக்கிட்ட அந்த காகாசு பொறாத களவாணிப்பய ஆரான் சாராயம் எரிச்சி சுடச்சுட கொண்டாந்தான்... எல்லாரும் குடிச்சாங்க நாந்தான் ரெண்டு கண்ணாடி கிளாசு கழுவி கொடுத்தேன்,அதவாங்கி அப்பகூட நரசிம்மன் அவன் மச்சான் கொளந்தசாமிக்கு ரெண்டு கிளாஸ் சாராயத்த ஊத்தி குடுத்துப்புட்டு அவனும் குடிச்சான். அதுக்குள்ள கொளந்தசாமி வீட்டில இருந்து ஆட்டு ஈரல் வருத்து வந்துச்சி... அத மச்சானும் மச்சானும் சாப்பிட்டுக்கிட்டே கோவாலுகவுண்டர், நல்லு மொய்ந்தார் எல்லாரையும் அவுட்டாக்கிட்டாங்க . மச்சானும் மச்சானும் கடைசி ரவுண்டு ரெண்டுபேரும் சமாதானமா சரிபாதியா பிரிக்க போனாங்க... அந்த நேரத்தில அந்த சாண்ட குடிக்கி சாராயம் காச்சி ஆரான் ஆளுக்கொரு கிளாஸ் குடுத்தான். அவெங்களுக்கு தலைக்குமேல போதை ஏறிப்போச்சி அந்த நேரம்பாத்து ஆரான் “என்னண்ணே கொளந்தசாமி மச்சாங்கிட்ட தோத்துப் போயிடுவோம்ங்ற பயமாண்ணே? “ம்... மச்சாந்தான்னு அதான் வுட்டுக்குடுத்துட்டேன்” ன்னு சொல்ல...நரசிம்மன் ஆரான் அதுக்கு உசுப்பேத்தறமாதிரி, “கொளந்தசாமி மாப்பள... மச்சாங்கறதால அண்ணே விடுது... ம்... உங்கள செயிக்கிறது எம்மாத்திரம்” அதுக்கு கொளந்தசாமி நரசிம்மன பாத்து “ நீ என்ன செயிச்சிடுவியா?” அப்ப ஆரான் இடைமறித்து “ஒப்பன் டிக்ல அடிப்பாரு” அதைக்கேட்ட நரசிம்மன் சிரிக்க, அப்ப கொளந்தசாமிக்கு கோவம் வந்திடிச்சி.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.