வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 14

சக்தி ஜோதி  

ஃப்யூஜியன் மாகாணம் பற்றிய திருமதி.சாரதா அவர்களின் அறிமுக உரையுடனும் வழக்கமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடனும் இரவு உணவு நடந்தது. இந்த நிகழ்வில் திரு. எஸ்.கே.அரோரா அவர்கள் விடைபெற்றுக் கொள்ள திரு.ஞானராஜசேகரன்.I.A.S. அவர்கள் எங்களது குழுவிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள ஃப்யூஜியன் மாகாணத்தின் தலைநகரான ஃப்யூஷோ நகரில் எங்களது அடுத்தப் பயணத்திட்டம் தொடங்கியது. திரு.ஞானராஜசேகரன் நல்ல இலக்கிய ஆர்வலர், மோகமுள், பெரியார் போன்ற படங்களின் இயக்குனர். இவர் ஒருவர் தான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த அதிகாரி. மேலும் எனக்கு டெல்லியிலேயே அறிமுகம் ஆகியிருந்தார். எனது படைப்புகள் பற்றியும் அவரிடம் பேசியிருந்தேன்.

தமிழகத்தைச் சேர்ந்த இவரது வருகையால் நான், அருள் கண்மணி மற்றும் பாண்டிச்சேரியின் கமலக்கண்ணன் மூவருமே உறவினரைக் கண்டது போல மகிழ்ந்தோம். ஏனெனில் திரு.கேவல்யா என்ற அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த எங்களிடம் சரிவர பேசவில்லை என்கிற ஆதங்கம் எங்களுக்கு இருந்தது. ஹிந்தி தெரியாத ஆந்திரா, கர்நாடகா மற்றும் மிஷோரம் சேர்ந்தவர்களுடனும் இவர் சற்று விலகியே இருந்தார். திருமதி.சாரதாவும், திரு.நேகியும் மட்டுமே மிகுந்த நட்புடன் அனைவருடனும் பழகினர். இவர்கள் இருவரும் நாங்கள் இருக்கும் இடத்திற்கே தேடி வந்து பேசக்கூடிய இயல்புடையவர்கள்.

பெய்ஜிங், கியூஷோ மாகாணங்களை விட ஃப்யூஜியன் மாகாணத்தில் சிறப்பாக பயிற்சி பெற்ற இளைஞர்கள் குழு எங்களை பூங்கொத்துகள் கொடுத்து தனித்தனியாக வரவேற்றனர். எங்களது வருகையால் மிகுந்த உற்சாகம் அடைந்ததாக கூறினர். சினிட்டி, ஃப்ளோரா என்ற இரண்டு பெண்கள் எங்களின் சிறப்பு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சீனாவின் நெடிய வரலாறைப் போல ஃப்யூஜியன் மாகாணமும் நீண்ட வரலாறு உடைய நகரம். மின் யூ அதாவது கொடூரமானவர்களின் இடம் என்று பொருள். இதுதான் பண்டைக் கால ஃப்யூஜியன் மாகாணம். அடிதடி, வெட்டு குத்து என்பதான வாழ்க்கை முறை அவர்களுடையது என்று இருந்த போது க்விங் வம்ச மன்னர்களால் ஃப்யூஜியன் மாகாணம் சீனாவுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் க்விங், வம்சத்தினரின் வீழ்ச்சிக்குப் பின்னால் இரண்டு குழுக்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஹான் வம்சம் உருவாகியது. ஹான் வம்சத்து அரசர்கள் மின் யூ மக்களின் அடிதடி சண்டையைப் பொருத்துக் கொள்ள முடியாமல் அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்து விட்டனர்.

மூன்று பக்கம் மலையும், ஒரு பக்கம் நீளமான கடல் பகுதியுமாக இருந்ததால் நான்காவது நூற்றாண்டு வரை வெளியிலிருந்து அதிகமாக யாரும் ஃப்யூஜியன் மாகாணத்திற்குள் வரவில்லை. கி.பி.618 முதல் கி.பி.915 வரை ஆட்சி செய்த டேங் வம்ச அரசர்களின் காலமே சீனாவின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒட்டு மொத்த சீனாவும் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. லிங், குவாங், செங், ஷெங் இந்த நான்கு பிரிவினர்கள் தான் அதிகமாகப் ஃப்யூஜியன் மாகாணத்தில் குடியேறியதால் இன்றும் கூட இந்த நான்கு பெயர்களும் இந்த மாகாணத்தைச் சேர்ந்த பலருக்குக் குடும்பப் பெயராக அமைந்திருக்கிறது.

ஒன்பதாவது நூற்றாண்டுக்கு பின்பு சீனாவில் ஐந்து மகப்பெரிய சாம்ராஜ்யங்கள் இருந்திருக்கிறது. பத்து மிகப்பெரிய யுத்தங்கள் நடந்திருக்கிறது. சீனாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களினாலும், யுத்தங்களினாலும் அலைக்கழிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வதற்கான இடமாக இந்த மாகாணத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

கிழக்கே 3,324 கி.மீ நீளக் கடற்கரையில் அமைந்துள்ள குயாங்ஷோ என்ற நகரம் சீனாவின் குறிப்பிடத்தக்க துறைமுகமாகும். கடல் வாணிபம் சிறப்பாக நடைபெற இந்த துறைமுகம் உதவியாயிருந்தது. இருப்பினும் மிங் வம்சத்தினர் காலத்தில் கடல் வாணிபத்தை தடை செய்து கடற்படை அமைக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் தடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் கடல் வாணிபம் தொடர்ந்தது. கி.பி.1950 வரையிலும் நல்ல சாலை வசதிகளோ, இரயில் போக்குவரத்தோ இந்த நகரத்தில் இல்லை. இந்த நகரை சிறப்பாக நிர்மாணிக்க சீனா எடுத்துக் கொண்ட முதல் நடவடிக்கை மிகச் சிறப்பான சாலை வசதிகளை உருவாக்கியது. பின்பு திடமான கல்விக் கொள்கையை உருவாக்கியது. 2,500 கி,மீ நீளத்தில் இரயில் பாதை அமைக்கும் திட்டமும் நிறைவேறியிருக்கிறது. நான்காவது நூற்றாண்டில் பதினாறு மாவட்டங்களே இருந்த இந்த மாகாணம் இப்பொழுது எண்பத்தைந்து மாவட்டங்களாக வளர்ந்திருக்கிறது. மேலும் ஒன்பது நகராட்சியும், 14 நகரங்களும், 72 மாவட்டங்களும், சுமார் 3 1/2 கோடி மக்கள் தொகையும் கொண்டது. இப்பொழுது சீனாவின் மிக முக்கியமான பொருளாதார மையமாக ஃப்யூஜியன் மாகாணம் இருக்கிறது. வர்த்தக ரீதியாக பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ள சீனாவின் 659 பெரிய நகரங்களில் ஃப்யூஜியன் மாகாணத்தின் ஷியாமென் நகரம் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

ஃப்யூஜியன் மாகாணத்தில் அறுபத்திரெண்டு சதவீதம் காடுகள் நிறைந்துள்ளது. வூயி என்ற மலைத்தொடர் மேற்கில் இருந்து கிழக்கு வரை அமைந்துள்ளது. மிகச்சிறந்த கிரானைட் கற்கள் கிடைக்கின்றது. இங்கு அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாக்கப்பட்ட பத்தொன்பது தேசிய வனப்பூங்காக்கள் உள்ளது. கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தைவான் தன்னுடைய தொழில் முதலீட்டை இந்த மாகாணத்தில் தான் செய்து வருகிறது. சீனாவின் அகன்ற பகுதியும், நிறைந்த மக்கள் தொகையும் வர்த்தக ரீதியாக தைவானை தனக்குள் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும் ஃப்யூஜியன் மாகாணத்தின் மிகப்பெரிய ஒரு சவால் ஒன்று உள்ளது.

“ நிலப்பரப்பெல்லாம் கட்டிடமானால்
கடல் விவசாயம் சாத்தியப்படுமா”

என்று கவிஞர் வைரமுத்துவின் கேள்வியை முன் நிறுத்தும் வகையில் ஃப்யூஜியன் மாகாணத்தின் விவசாய நிலங்களும், காடுகளும் அழிக்கப்பட்டு பலமாடிக் கட்டிடங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழல் மாசுபடாமல் பழமையையும் காப்பாற்ற வேண்டும், புதுமையையும் வளர்க்க வேண்டும் என்ற நிலையில் இந்த நகரம் இருக்கிறது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.