இதழ்: 22     புரட்டாசி (September 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
கென்லோச் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 3 - சாரு நிவேதிதா
--------------------------------
திரைமொழி - 11 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - 1 - அறந்தை மணியன்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - 3 - யுகேந்தர்
--------------------------------
திரையில் புதினம் - வருணன்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நிகழ்வுகள் - செப்டெம்பர் - தினேஷ் குமார்
--------------------------------
 
   


   

 

 

காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்

- தமிழில்: யுகேந்தர்


அத்தியாயம் 1 - பகுதி 4

அனைத்து மறு உருவாக்கங்களும் ஏறத்தாழ சிதைக்கவே செய்கிறது என ஒருவர் வாதிட கூடும். ஆகவே அசல் ஓவியம் ஒரு விதத்தில் இன்னும் தனித்துவம் மிக்கதேயாகும். லியானார்டோ டா வின்சியின் "விர்ஜின் ஆஃப் தி ராக்ஸின்" மறு உருவாக்கம் இங்கு உள்ளது.

இந்த மறு உருவாக்கத்தைப் பார்த்த பின்பு, அசல் ஓவியத்தைப் பார்க்க ஒருவர் லன்டன் நேஷனல் கேலரிக்கு செல்லலாம், மறு உருவாக்கத்தில் என்ன குறைபாடு உள்ளதென கண்டறியலாம். மாற்றாக, மறு உருவாக்கத்தின் தரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த ஓவியத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு உண்மையான அசல் ஓவியத்தைப் காண்பார் என்றால், புகழ்ப்பெற்ற இந்த ஓவியத்தின் மறு உருவாக்கத்தை எங்கோ ஒருவர் ஏற்கனவே பார்த்திருக்கிறார் என்று நினைக்க கூடும். இரண்டு வழக்கிலும், அசல் ஓவியத்தின் தனித்துவம் "மறு உருவாக்கத்தின் அசல்" என்பதை சார்ந்தே இருக்கிறது. அந்த ஓவியம் காட்டுவது தனித்துவமானது என இனி இருக்காது, அதன் முதல் அர்த்தம் என்னவென்று அது சொல்வதிலிருந்து தெரியாது, ஆனால் அது என்னவாக இருக்கிறது என்பதிலே தெரியும்.

அசல் ஓவியத்தின் இந்த புதிய நிலை, புதிய மறு உருவாக்க வழிகளின் விளைவே ஆகும். இந்த புள்ளியிலேயே, புதிராக்க செயல்முறை மீண்டும் நுழைகிறது. அசல் ஓவியத்தின் பொருள் தனித்துவமாக என்ன சொல்கிறது என்பதில் இனி இல்லை, எப்படி தனித்துவமாக இருக்கிறது என்பதை சார்ந்தே இருக்கும். நமது தற்போதைய கலாச்சாரத்தில், தனித்துவமாக இருக்கிறது என்பதை எப்படி வரையறுக்கப்பட்டு மதிப்பீடு செய்கிறார்கள்?. ஒரு பொருளாக அதை வரையறுக்கப்பட்டு, அதன் மதிப்பு எவ்வளவு அரிதாக அது கிடைக்கும் என்பதை பொறுத்தே இருக்கிறது. சந்தையில் என்ன விலை பெறுகிறதோ, அதை பொருத்தே மதிப்பு அளவிட்டு உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இது கலைப் படைப்பாக இருப்பதால், கலை என்பது வர்த்தகத்தை விட மேலானது என கருதப்படுவதால், அதன் சந்தை விலை அதன் ஆன்மீக மதிப்பின் பிரதிபலிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஒரு பொருளின் ஆன்மிக மதிப்பென்பது, ஒரு செய்தி அல்லது எடுத்துக்காட்டிலிருந்து வேறுபட்டு இருப்பது போல, அதை மாயம் அல்லது மதம் என்ற ரீதியில் மட்டுமே விளக்க முடியும். நவீன சமுகத்தில் இந்த இரண்டுமே வாழ்க்கை சக்தியாக இல்லாதிருப்பதால், கலைப் படைப்பு முற்றிலும் போலியான மத சூழலில் சிக்கியுள்ளது. கலைப் படைப்பை புனித சின்னம் என்பது போல் நினைத்து விவாதிக்கப்பட்டு வணங்குகிறார்கள்; அதன் நிலைத்தன்மை குறித்தான முதல் மற்றும் மிக முக்கியமானதான சின்னம். அதன் உண்மைத்தன்மையை நிருபிக்க அதன் கடந்த கால தோற்றத்தை ஆராய்வார்கள். அதன் பிறப்பு வழி உறுதி செய்து சான்றளிக்கப்பட்டால் அவற்றை கலைப்படைப்பு என பிரகடனம் செய்யப்படும்.

விர்ஜின் ஆஃப் தி ராக்ஸின் முன்பு, நேஷனல் கேலரியின் பார்வையாளர், ஓவியம் குறித்து கேட்டும் படித்தும் இருப்பார், கிட்டத்தட்ட அனைத்தைக் குறித்தும் உற்சாகமாக இருப்பார், அவர் இப்படி உணர கூடும்: "நான் அதன் முன்பு இருக்கிறேன், என்னால் அதை பார்க்க முடிகிறது. உலகில் வேறெங்கிலும் இல்லாத லியானார்டோ டா வின்சியின் ஓவியம் இது. நேஷனல் கேலரி அசலான ஓவியத்தை கொண்டுள்ளது. இந்த ஓவியத்தை நான் தொடர்ந்து பார்த்தால் போதும், ஏதோ ஒரு விதத்தில் அதன் நம்பகத்தன்மையை என்னால் உணர முடியும். லியானார்டோ டா வின்சியின் தி விர்ஜின் ஆஃப் ராக்ஸ் : அது உண்மையானது, அதனால் அழகாக இருக்கிறது"

இப்படியான உணர்வுகளை அப்பாவிதனமானது என ஒதுக்குவது மிக தவறாகும். அதிநவீன கலை நிபுணர்களின் இசைவு இப்படைப்புக்கு உண்டு, நேஷனல் கேலரியின் விபரம் அடங்கிய புத்தகமும் அதற்காகவே எழுதப்பட்டுள்ளது. விர்ஜின் ஆஃப் ராக்ஸ் குறித்த விபரமே மிக நீண்டதாகும். பதினான்கு பக்க புத்தகம் அது. ஓவியத்தின் பொருளை குறித்து அவர்கள் அதில் பேசவில்லை. இந்த ஓவியத்தை வரைய நியமித்தவர் யார், சட்ட பிரச்சனைகள், இதன் உரிமையாளர் யார், வரையப்பட்டது எந்த வருடமாக இருக்கும், அதன் உரிமையாளர்களின் குடும்பங்கள் ஆகியவற்றைக் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பல வருட ஆராய்ச்சி இருக்கிறது. எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி இந்த ஓவியம் லியானார்டோவின் அசலான ஓவியம் என்பதை நிருபிக்கவே இந்த ஆராய்ச்சி நடந்தது. பிரான்சின் லோவ்ரில் இருக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஓவியம் லன்டன் நேஷனல் கேலரியின் பிரதியே என நிருப்பிபதே இந்த ஆராய்ச்சியின் இரண்டாவது நோக்கம்.

பிரஞ்சு கலை வரலாற்று ஆய்வாளர்கள் இதன் எதிர்மறையை நிருபிக்க முயல்கிறார்கள்.

நேஷனல் கேலரி, லியானார்டோவின் "தி விர்ஜின் அன்ட் சைல்டு வித் செயின்ட் யேன் & ஜான் தி பேப்டிஸ்ட்" என்ற படத்தை அவர்களிடம் இருக்கும் வேறு எந்த படத்தைவிடவும் மிக அதிகமாக விற்பனை செய்கிறார்கள். சில ஆண்டுகள் முன்பு வரை இந்த ஓவியம் அறிஞர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அமெரிக்கர் ஒருவர் இந்த ஓவியத்தை இரண்டரை மில்லியன் பவுன்டுகளுக்கு வாங்குவதற்கு கேட்டதால் இந்த ஓவியம் பிரபலமானது.

இப்போது அந்த ஓவியம் தனி அறையில் தொங்குகிறது. தேவாலயம் போல் அந்த இடம் காட்சியளிக்கிறது. குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின் ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. புதிய வகையான உணர்ச்சியை அது பெற்றுள்ளது, அது என்ன காட்டுகிறது என்பதற்காக அல்ல, அந்த ஓவியத்தின் பொருளுக்காகவும் அல்ல, அதன் சந்தை மதிப்பினால் அதன் மதிப்பு கூடியுள்ளது.

கலைப்படைப்பை சுற்றியிருக்கும் போலி மத சூழல், சந்தை மதிப்பை பொறுத்தே பிரதானமாக இருக்கிறது. கேமராவின் மறு உருவாக்கத்தினால் ஓவியங்கள் இழந்ததை இது ஈடுகொடுக்கிறது. அதன் செயல்பாடு பழமையான நினைவை தருகிறது. ஆட்சி மற்றும் ஜனநாயகமற்ற கலாச்சாரத்தின் தொடர்ச்சியான மதிப்புகளுக்கு இது இறுதி வெற்று கோரிக்கையாகும். ஒர் ஓவியம்/படிமம் தனித்துவமிக்க மற்றும் பிரத்தியேகமானதாக இல்லாதிருந்தால், அந்த கலைப்படைப்பு, அந்த பொருள் புதிராக்கவே படும்.

தொடரும்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </