ஒளி எனும் மொழி - விஜய் ஆரம்ஸ்ட்ராங், 250/-

 


பேசாமொழி பதிப்பக நூல்களை இணையத்தில் பெற: http://cms.vidhaiorganicstore.com/onlineshop/index.php?cPath=72

ஒளிப்பதிவுக் கலையை நோக்கி நடந்து வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுக நூலாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவு சார்ந்த சில முக்கியமான கடினமான விதிகளை மிக அழகாகவும், எளிமையாகவும் திரு. ஆம்ஸ்டாராங் விளக்குகிறார். இந்த விதிகள் மரத்தின் வேர்களைப் போன்றது. இந்த அடிப்படை விதிகளின் அறிவை நாம் உள் வாங்கிக் கொள்ளும் பொழுது நாம் செய்யும் திரைப்படங்கள் அழகாகவும், எளிமையாகவும் அமையும்.

ஒரு பெரிய அறிஞன் கூறுகிறான், “Learn the Basic Rules till they become your second nature”

நான் ஒவ்வொரு திரைப்படத்தை உருவாக்கும் பொழுதும், தயாரிக்கும் பொழுதும், தொழில் ரீதியாகவும், அறிவுரீதியாகவும் குழப்பங்கள் பல தடைக்கற்களாக வந்து கொண்டே இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் உதவிக்கு வருபவை இந்த அடிப்படை சினிமா விதிகளே.

ஒரு காட்சியை படம் பிடிக்கும் பொழுது அதிலுள்ள கதாப்பாத்திரங்களையும், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், அவர்கள் வெளிப்படுத்தாத உணர்வுகளையும் எப்படி கேமராவைக் கொண்டு அணுகுவது என்ற கேள்வி ஒவ்வொரு இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் அவசியம்.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் உண்மையிலிருந்தும், எதார்த்தத்திலிருந்தும், கருணையிலிருந்தும், அறிவிலிருந்தும், மனவலிமையிலிருந்தும் தோன்றுகின்றன. கடைசியில் சொல்லப்பட்ட மனவலிமை அதாவது Confidence உங்கள் வேர்களான அடிப்படை விதிகளிலிருந்தே வருகிறது.

ஒரு கவிதைக்கு இலக்கணம் அவசியமில்லைதான். ஆனால் மொழி அவசியம். மொழிக்குள் இலக்கணக் கட்டுமானம் ஒளிந்திருக்கின்றது. ஒவ்வொரு நல்ல திரைப்படமும் ஒரு தெளிவான கட்டுமானத்திலிருந்து (Structure) உருவாக்கப்படுகிறது. நேர்மையான கதை, பொய்யில்லா நடிப்பு, அழகான படப்பிடிப்பு, அறிவான படக்கோர்வை, வருடும் இசை இவை அனைத்தும் சேர்த்தே ஒரு மேன்மையான திரைப்படம் உருவாக்கப்படுகிறது. ஒரு மேன்மையான திரைப்படத்தை உருவாக்க விரும்பும் இளைஞனுக்கு, ஒவ்வொரு துறையைப்பற்றிய வேர்கள் பற்றிய அதாவது அடிப்படை விதிகள் பற்றிய அறிவு மிக அவசியம்.

திரு. ஆம்ஸ்ட்ராங் எழுதிய இந்தப் புத்தகம் திரைப்படத்தை நோக்கிப் போகும் உங்கள் பயணத்தில் விளக்காக இருக்கும் என நம்புகிறேன். பயணிகளே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
மிஷ்கின்.


பேசாமொழி பதிப்பக நூல்களை இணையத்தில் பெற: http://cms.vidhaiorganicstore.com/onlineshop/index.php?cPath=72

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </