"பாலு மகேந்திரா - வீடு" - விருது

வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழின் மாற்று திரைப்பட இயக்கமான தமிழ் ஸ்டுடியோ "பாலு மகேந்திரா - வீடு" விருதினை அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும், தமிழில் வெளிவரும் சிறந்த திரைப்படத்திற்கு (மாற்று திரைப்பட முயற்சியாக) இந்த விருது வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பாலு மகேந்திராவின் பிறந்த நாளான மே 19 ஆம் தேதி இந்த விருது சென்னையில் வழங்கப்படவிருகிறது. விருதாக வெள்ளியினால் செய்யப்பட்ட வீடு ஒன்றும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படவிருக்கிறது.

  வீடு திரைப்படத்தை இணையத்தில் பார்க்க

தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’ - வெங்கட் சாமிநாதன்

புரிய வைக்க எனக்கு உதவி செய்யக் கூடிய ஒரு படைப்பு முதன் முதலாக எனக்குக் கிடைத்துள்ளது 1988-ல் பாலு மகேந்திரா தந்துள்ள வீடு தான். அது தான் அவரது முதல் படமா என்பது எனக்குத் தெரியாது. நான் பார்த்த அவரது முதல் படம் அது தான். அதற்குப் பின் அவரது சமீபத்திய படம் ஒன்று, “அது ஒரு கனாக் காலம்” பார்த்திருக்கிறேன். பின் ”கதா நேரம்” என்று ஒரு தொடர், சமீப காலத் தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொடராக தொலைக்காட்சிக்குத் தயாரித்துத் தந்துள்ளவை, ஒரு சிலவற்றைத் தவறவிட்டிருப்பேனோ என்னவோ, பார்த்திருக்கிறேன்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி விழா காணும் வீடு - அம்ஷன் குமார்

வீடு சற்றும் எதிர்பாராத தருணத்தில் வெளிவந்து தமிழ் ரசிகர்களை பிரமிக்க வைத்த படம். பெரிய நடிக, நடிகையர்களோ மற்றும் வழக்கமான தமிழ் சினிமா அம்சங்களோ அதிலில்லை. கீழ்மத்திய தர வர்க்கத்தின் வாழ்வினை வலுவான திரைக்கதை மூலம் எளிமையாக சொல்லிய அப்படம் கலைப்படம் வரிசையில் சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னால் வந்த தமிழ்க் கலைப்படங்களிலிருந்தும் அது வேறுபட்டு நின்றது. திரைக்கதை நன்றாக இருந்தாலும் படம் எடுக்கப்படுவதில் டெக்னாலஜி குறைகள் கலைப் படங்களில் தென்படும். இதற்கு ஒரு முக்கிய காரணம் அப்படங்களுக்கு கிடைக்கும் குறைந்த முதலீடு , குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய குறைகள் ஏதுமின்றி வீடு படம் வெளிவந்தது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
'வீடு' - பாலு மகேந்திரா 1988 - எஸ். தியடோர் பாஸ்கரன் (தமிழில் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்)

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவரது "வீடு" (1988) ல் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இந்தப் படத்தில் நடித்த அர்ச்சனா பெற்றார். 2005 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா கூறினார் " நான் 18 திரைப்படங்கள் இயக்கியுள்ளேன். அதில் இரண்டு மட்டும் எனக்குத் திருப்தி அளித்தன. வீடு , சந்தியாராகம். இந்தப் படங்களில்தான் நான் குறைந்த அளவு தவறுகள் புரிந்துள்ளேன். இவற்றில் எந்த வியாபார நோக்கங்களுமடனும் இவை எடுக்கப்படவில்லை. " இந்தப் படங்களை இயக்கும் போதுதான் அவரது கலை நேர்மையுடன் எந்த சமரசமும் அவர் செய்து கொள்ளவில்லை.


  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
வீடும் விடுதலையும்: பாலு மகேந்திராவின் திரைப்படைப்பின் அர்த்த தளங்கள் - ராஜன் குறை

தமிழ் சினிமா விமர்சனத்தின் அடுத்த பிரச்சினை யதார்த்தம். பொதுவாக இது எப்படி புரிந்துகொள்ளப்படுகிறது என்றால் வழக்கமாக வெகுஜன/வணிக படங்களில் உள்ள சண்டை, காமெடி, பாடல், மிகை உணர்ச்சிக்காட்சிகள் இல்லாமலிருப்பது என்றுதான். அதாவது “மசாலா” எனப்படும் கதையாடல் சூத்திரங்களுக்கு கட்டுப்படாமல் இருப்பது யதார்த்தம் என்று சுட்டப்படும் வாய்ப்பு அதிகம். சுருக்கமாக வெகுஜன ரசனை...

  மேலும் படிக்க
 
 
வீடும் சில நினைவுகளும் - மு.புஷ்பராஜன்

சமீபத்தில், பாலு மகேந்திராவின் ‘வீடு’ திரைப்படத்தினைப் பார்க்க முடிந்தது. மெல்லிய பெருமூச்சு ஒன்று எழுந்தது. மதிப்பிற்குரியதான, இழந்துபோன ஒன்று நம் நினைவில் மீள்கையில் எழும் பெருமூச்சு அது. வளமாய், உறுதியாக ஆரம்பித்த மரபை, நாம் இழந்துகொண்டு போகின்றோம். இது பாலு மகேந்திரா பற்றிய உணர்வு அல்ல. பாலு மகேந்திரா என்ற கலைஞன், தமிழ் சினிமாவிற்கு அளிக்க முனைந்த, வழமான மரபின் இழப்புப் பற்றிய பெருமூச்சு.

  மேலும் படிக்க
       
 
 
'வீடு' சொல்வது யாதெனில்... - எம்.ரிஷான் ஷெரீப்

இயக்குனர் பாலுமகேந்திராவின் 'வீடு' மூன்று தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வீட்டில் வாழும் மனிதர்கள் எல்லாக் காலத்து மனிதர்களையும் மிகவும் கூர்மையாகப் பிரதிபலிக்கிறார்கள். எல்லா மனிதர்களுக்குள்ளும் குடியிருக்கும் உள்மன ஆசைகளிலொன்று 'சொந்தமாக தனக்கென ஒரு வீடு' என்பதுதான். அவ்வாறான ஒரு வீட்டைத் தனக்கென சொந்தமாக்கிக் கொள்வதில் எழும் நடைமுறைப்...

  மேலும் படிக்க
 
 
பாலு மஹேந்திராவின் வீடு - ராஜேஷ்

படத்தைப் பற்றிப் பார்க்குமுன், ’வீடு’ திரைப்படத்தைப் பற்றிய பொதுவான கருத்து என்ன என்பதைப்பற்றி ஓரிவு வரிகள் எழுத நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் இந்தப்படத்தைப் பற்றிச் சொன்னாலே கடுக்காய் சாப்பிட்டதைப்போல் ஒரு முகபாவத்தைத் கொடுத்துவிட்டு பிற மசாலாப்படங்களைப் பற்றிப் பேசத் துவங்கிவிடுகின்றனர். குறைந்தபட்சம் எனது வட்டத்தில் பலரும் இப்படி இருப்பதைக்..

  மேலும் படிக்க
   
           
       
 
 
வீடு - மத்திய வர்க்கத்தின் மாபெரும் கனவு - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

பொதுவாக நான் மதிக்கும் பெரும் எழுத்தாளுமைகள் பலரும் கூட, மத்திய வர்க்கத்தை சுற்றிச் சுழலும் எழுத்தை, அவர்களின் அன்றாட வாழ்வின் துயரங்களை " குமாஸ்தா இலக்கியம் " என்று எள்ளளோடு விளிப்பதை கவனித்திருக்கிறேன். என்னைப் பொருத்த வரையில் இந்தியாவே ஒரு குமாஸ்தா நாடுதான். அடிமைப்பட்ட காலத்திலிருந்து அப்படியே பழகிவிட்டது நமக்கு. பெரும் போராட்டங்களற்ற குமாஸ்தா வாழ்வில் ஊறிப்போன ஒரு எழுத்தாளன் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி...

  மேலும் படிக்க
 
 
வீடு - வெள்ளி விழா!!! - அருண் மோகன்


திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம். இங்கே வார்த்தைகளுக்கு அதிகம் வேலை இல்லை. மேலும், ஒரு படைப்பு உலக அளவில் சென்று சேர மொழி ஒரு தடையாக இருக்க கூடாது. என்னதான் Sub-Title போட்டு உலகம் முழுக்க படங்கள் அனுப்ப நினைத்தாலும், தாய் மொழியில் உருவாகும் அதிர்வு இன்னொரு மொழியில் அப்படியே உருவாக வாய்ப்பில்லை. உலக அளவில் போற்றப்படும் அனைத்து படங்களையும் பாருங்கள். அது மிக அதிகமாக காட்சிகளால்...

  மேலும் படிக்க
   
 
 
 
வீடு - வெள்ளி விழா
 
   
 
---------------------------------  
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome