கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
 
  (குறும்பட / ஆவணப்பட போட்டிகளுக்கும், தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதேனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)  
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  போட்டிகள் போட்டிகள் வாயில்

நாத்விக் மீடியா - குறும் படப் போட்டி - இறுதி நாள் ஜனவரி 30 ,2011 .

   

நாத்விக் மீடியா வளரும் இயகுனர்களுக்கான குறும் படப் போட்டியொன்றை அறிவித்துள்ளது. திறன் மிக்க மலரும் திறமைசாலிகளை அடையாளம் காண்பதற்காக முனைந்துள்ளது. இதன் மூலம் கனவுத் தொழிற்சாலையின் துளிர் விடும் கலைஞர்களை அடையாளம் கண்டு, செல்லுலாய்ட் உலகின் தேவைகளை நிறைவு செய்ய தொடக்கமாக அமையும். மிகப் பெரிய இறுதிக்கட்டப் போட்டி திரைத்துறை வல்லுனர்களை நடுவர்களாகக் கொண்டு 2010 டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

குறும்படப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10,000/- முதற் பரிசாகவும், ரூ 5,000 இரண்டாம் பரிசாகவும் வழங்கப்படும். மேலும் அவர்கள் திரைத் துறையில் நுழையவும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

விதிமுறைகள்:

1. பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் விதிமுறைகளை கவனமாக படியுங்கள் .விதிமுறைகளை பின்பற்றாத எந்தவொரு படைப்பும் நிராகரிக்கப்படும் .
2.2009 மற்றும் 2010 ஆண்டில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களே போட்டிக்கு தகுதியுடையவை .
3.குறும்படங்கள் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.குறும்படங்கள் CD/DVD,windows media player(சமர்பிக்க மட்டும் ) பதிவுகளாக இருக்க வேண்டும்.
5.பெயர், முகவரி, தொலைபேசி எண், குறும்பட தலைப்பு, நீளம் போன்றவற்றை தெளிவாக CD/DVD மீது எழுதி அனுப்ப வேண்டும்.
6 சமர்பிக்கப்படும் குறும்படங்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
7. நாத்விக் மீடியா தேர்வு செய்த 5 சிறந்த குறும்படங்கள் மட்டுமே சென்னையில் பிப்ரவரி மாதம் 2011 அன்று நடைபெறும் இறுதிப் போட்டி அன்று ஒளிபரப்பபடும்.
8. நாத்விக் மீடியாவுக்கு தகாதவைகளாக அல்லது வெறுப்புணர்வை வளர்ப்பவையாக அல்லது பிரச்சனைக்குரிய தலைப்புக்களில் சமர்பிக்கபடும் படைப்புகளை நிராகரிக்க முழு உரிமை உள்ளது.
9. உங்கள் குறும்படங்கள் திருப்பி அனுப்ப பட மாட்டது. மூலப் பிரதிகளை (originals/masters) அனுப்ப வேண்டாம்.
10. சமர்பிக்க படும் எந்த ஒரு குறும்படமும் வேறு ஒரு இணையதளத்தின் பார்வைக்கு வைக்கப் பட்டு இருக்கக் கூடாது.
11. நாத்விக் மீடியா இணையதளத்தில் சமர்பிக்கப் பட்ட குறும்படங்கள் இறுதிப் போட்டி வரை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.
12.சமர்பிக்கப் பட்ட குறும்படங்களின் காப்புரிமை படைப்பாளியையே சாரும். நாத்விக் மீடியா எந்த ஒரு படைப்புக்கும் உரிமை கோராது.
13 .சமர்பிக்கப் பட்ட படைப்புக்கள் பிறரின் படைப்புக்கள் என உரிமை கோரப்பட்டால் சமர்பித்தவரே முழு பொறுப்பாகும். நாத்விக் மீடியா எவ்விதத்திலும் மத்தியஸ்தம் செய்யவும் தலையிடாது.
14.இறுதி முடிவுகள் நடுவர்களையே சார்ந்தது. தீர்ப்புகள் மீது மறு மதிப்பீடு வழங்கப்பட மாட்டது.
15.ஆன் லைன் படிவம் பூர்த்தி செய்த பின், நாங்கள் தங்களை தொடர்புகொண்ட பின்பு நுழைவுக்கட்டணம் ரூ 300 /- செலுத்தவும்.
16.குறும்படங்கள் சமர்பிப்பதற்கான இறுதி நாள் ஜனவரி 30, 2011.
17.போட்டியை பற்றிய சந்தேகங்களுக்கு info@nathvig.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</