கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
 
  (குறும்பட / ஆவணப்பட போட்டிகளுக்கும், தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதேனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)  
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  போட்டிகள் போட்டிகள் வாயில்

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்தும் குறும்படப் போட்டி ( ஜூன் 4-ம் தேதி )

   

நெய்வேலி, ஏப். 20: தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டிக்கான சிறந்த குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்

முதல் பரிசு ரூ.15 ஆயிரம்
2-ம் பரிசு ரூ.10 ஆயிரம்
3-ம் பரிசு ரூ.5 ஆயிரம்
இதுதவிர சிறப்புப் பரிசுகள் (இயக்கம், நடிப்பு,ஒளிப்பதிவு, கதைக்கரு) தலா ரூ.1,000
படத்தொகுப்புக்கான பீம்சிங்கின் பரிசு ரூ.5 ஆயிரம்.


போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்தப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

என்.எல்.சி. நிறுவனத்தின் ஆதரவுடன் 14-வது ஆண்டாக நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் நடக்கவுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியையொட்டி இளம் திரைப்படக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சி குழுவும் ஆண்டுதோறும் குறும்படப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது.

இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கவிருக்கும் திரைப்படக் கலைஞர்களிடமிருந்து சில நிபந்தனைகளுக்குட்பட்ட குறும்படங்களை கண்காட்சிக் குழு வரவேற்கின்றன.

படைப்புக்கள் பின்வரும் விதிகளுக்கமைய சமர்ப்பிக்கப்படவேண்டும்

* குறும்படங்கள் தமிழின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிப்பவை ஆகவும், 30 நிமிடங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

* குறும்படங்கள் டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன.

* படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு ஒப்புதல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* குறும்படங்கள் 1-1-2009-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியின்போது திரையிடப்படும். தேர்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்படமாட்டாது. பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் போது வழங்கப்படும்.

* படைப்புக்கள் அனுப்பப்பட வேணடிய முகவரி

செயலாளர், நெய்வேலி புத்தகக் கண்காட்சி, முதன்மைப் பொதுமேலாளர் தொழிலக பொறியியல் பிரிவு, தலைமைச் செயலகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம் 1, நெய்வேலி 607801, கடலூர் மாவட்டம்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</