கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  போட்டிகள்  

நெய்வேலி புத்தகக் கண்காட்சி - குறும்படப் போட்டி

(இறுதித் தேதி: 31-05-2012)

   

நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் பதினைந்தாவது ஆண்டாக 29-06-2012 முதல்
08-07-2012 முடிய நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியை ஒட்டித் ‘தினமணி’ நாளிதழும், நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டிக்கான குறும்படங்கள் கீழ்க்காணும் விதிகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.

முதல் பரிசு: 15000
இரண்டாம் பரிசு: 10000
மூன்றாம் பரிசு: 5000
சிறப்புப் பரிசுகள் (இயக்கம், நடிப்பு - ஆண், பெண், ஒளிப்பதிவு, கதைக்கரு): 1000
படத்தொகுப்பிர்கான பீம்சிங் பரிசு: 5000

விதிமுறைகள்:

* குறும்படங்கள் (Short Films) தமிழின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள். சமூக உணர்வுகள் போன்றவற்றைப்பிரதிபலிப்பனவாக இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
* இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப் படுதல் வேண்டும்.
* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன.
* போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு
இணைக்கப்படுதல் வேண்டும்.
* தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 2012-இல் திரையிடப்படும்.
* குறும்படங்கள் 01.01.2010 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.
* போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட மாட்டா.
* போட்டி முடிவுகள் ஜுலை இரண்டாவது வாரம் வெளியிடப்படும்.
* ஆவணப்படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* பரிசுகள் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 2012-இல் வழங்கப்படும்.
* போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் உண்டு.
* போட்டிக்குக் குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 31, 2012

அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர் - நெய்வேலி புத்தகக் கண்காட்சி
முதன்மை பொது மேலாளர்
சுரங்கம் - 1A & சுரங்கத் திட்டமிடல், முதல் சுரங்க நிர்வாக அலுவலகம், நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம் - 26. நெய்வேலி - 607 803.

 

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com