கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - அபிலாஷா

ஆதவன்  

சென்னை பிரசாத் பிலிம் டெக்னாலஜி நிறுவனத்தில், இயக்குனருக்கான பட்டயப் படிப்பை முடித்திருக்கும் அபிலாஷா கோவையைச் சேர்ந்தவர். ஒரே ஒரு நாள் எனும் குறும்படம் குழந்தைகளின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. விபத்தில் தாயையும், தனது கால்களையும் இழந்த குழந்தை வேலைக்காரப் பெண்மணியின் அரவணைப்பில் வளர்கிறது. தந்தை வெளிநாட்டில் வசிக்கிறார். தற்செயலாக அந்தத் தெருவில் மட்டைப் பந்து விளையாடும், சிறுவனின் நட்பு கிடைக்கிறது.

அது வரை வீட்டிலேயே அடைபட்டுக்கிடந்த சிறுமி, நாள்முழுதும் ஆத்தங்கரையில் விளையாடி, தன் மனம் போக்கில் பொழுதை கழிக்கிறாள். பின்னர் சிறுவனின் வீட்டிற்கு சென்று அவன் பெற்றோர்களுடன் பொழுதைக் கழிக்கிறாள். மறுநாள் அங்கு சென்று பார்க்கும்போது சிறுவன் குடும்பம் ஊரை விட்டு வேறொரு ஊருக்கு செல்கிறார்கள். ஏக்கத்தோடு வீடு திரும்புகிறாள்.

இந்தக் குறும்படம் மிக நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொடக்கமே பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நகைச்சுவையும் இழையோடுகிறது. தொழில் நுட்பத்தை மிகச் சரியாக பயன்படுத்தியதோடு மட்டுமின்றி சிறுவர்களையும் நேர்த்தியாக நடிக்க வைத்ததற்காக இயக்குனர் அபிலாஷவிருக்கு ஒரு சபாஷ்.

இவர் மேலும் கண்மணி, எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார். பெண் சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருக்கும் இந்தப் படமும் இயக்குனர் அபிலாஷவின் திறமைக்கு சான்று. இவர் இயக்கி இருக்கும் (THE UNKNOWN HEROES) என்கிற ஆவணப்படம் திரைப்படத் துறையில் பாடுபட்டு உழைக்கும் லைட் மேன்களைப் பற்றியது. இதில் லைட் மேன்கள் படும் துயரங்களையும், அவலங்களையும், ஆவணப்படுத்தி இருக்கிறார். அபிலாஷா வருங்காலத்தில், வெள்ளித்திரையில் தவிர்க்கமுடியாத ஒரு நட்சத்திரமாக மிளிர்வார் என்பதில் ஐயமில்லை.

இனி அபிலாஷாவுடன் ஒரு நேர்முகம்.

முதலில் உங்கள் பூர்விகம் பற்றியும் குடும்பச் சூழல் பற்றியும் சொல்லுங்க?

எனது சொந்த ஊரு கோயம்புத்தூர். இங்கே நான் சின்மயா வித்யாலயா பள்ளி மற்றும், GRD கல்லூரியில் பிகாம் படித்தேன். பிறகு சென்னையில், எல். வி. பிரசாத் பிலிம் & டிவி இன்ஸ்டுட்டில், இரண்டு வருடத்துக்கான இயக்கத்துறையில் படித்தேன். எனது தந்தை மைக்ரோ பினான்ஸ் துறையில் உள்ளார். அம்மா பள்ளி ஆசிரியர் மற்றும் எனது தம்பி பொறியியல் துறையில் வேலை செய்கிறார்கள். எனது குடும்பத்தினர் எப்போதும் எனக்கு ஊக்கம் அளித்து எனது முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

ஒரே ஒருநாள் குறும்படத்தின் பின்னணி பற்றியும் அதற்கான வரவேற்பு பற்றியும் கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்?

எனது இரண்டாம் வருட இயக்கம் கோர்சின் முடிவில் செய்யும் டிப்ளோமா ப்ராஜெக்ட் தான் “ஒரே ஒரு நாள்”. இரண்டு சிறுவர்களின் நட்பை பற்றியது தான் இந்த குறும்படம். இந்த படத்தில் என்னுடன் வேலை செய்தவர்களின் முழு ஒத்துழைப்பு எனக்கு கிடைத்தது. நான் எப்பவும் எனது படத்தில் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கணும் என்று நினைப்பேன். இந்த 10 நிமிட படத்தில், இரண்டு நிமிடத்துக்கு ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது. இதை மூன்று நாட்கள், செங்கல்பெட் அருகில் உள்ள நெல்லிக்குப்பத்திலும், விருகம்பாக்கத்திலும் படம் பிடித்தோம். முதல் நாள் மழை காரணத்தினால் வேலை தடைபட்டது. படத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளார்கள். அவர்களது மனநிலை புரிந்து அதற்கேற்ப வேலை செய்வது எனக்கு ஒரு சவாலாக இருந்தது.

இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.

என் கல்லூரியில் எனக்கு “சிறந்த இயக்கத்துக்காக” தங்கப்பதக்கத்தை வாங்கிகொடுத்தது. மேலும், மகளிர்க்கான முதலாம் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப் பட்டது. Reelshowbiz.com இல், முதல் 10 படத்தில் ஒன்றாக இருந்தது. பிறகு, நெய்வேலி லிக்நைட் டெவலாப்மென்ட் கார்ப்பொரேசின் (இரண்டாம் பரிசு), ஆசான் மெமோரியலில் (முதல் பரிசு), தமிழ்நாடு குறும்படம் & ஆவணப்படம் அசொசியசின், திருப்பூர் (இரண்டாம் பரிசு) கிடைத்தது. மேலும், த தக்சின் பிலிம் பெஸ்டிவல் - “எக்ஸ்போசர்”, த மெட்ராஸ் யூனிவெர்சிட்டி, இந்த்ரபிரஸ்த மகளிர் கல்லூரி நியூ டெல்லி - “மிஸ் - என் - சென்” ஆகியவற்றில் திரைடப் பட்டது.

குறும்படத்தை திரைப்படத் துறையில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டாகக் கருதுகிறீர்களா?

ஆம். இரண்டு வகையான குறும்பட இயக்குனர்கள் இருப்பார்கள். குறும்படம் மட்டுமே எடுப்பவர்கள் ஒரு விதமாகவும், குறும்படம் எடுத்து அதன் மூலமாக முழுநீள படத்தை எடுப்பவர்கள் ஒருவிதமாகவும் இருப்பார்கள். நான் இரண்டவது வகையில் சேருவேன்.

குறும்படம், முழு நீள திரைப்படத்தில் இருந்து எவ்விதத்தில் வேறுபடுகிறது?

குறும்படத்தில் மையக்கருத்தை மிகவும் சுருக்கி குறுகிய நேரத்தில் சொல்லி முடிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் முழுநீள படத்தில், அதே மையக்கருத்தை (மெயின் தீம்) விவரிப்பதற்கு துணை கருத்துக்கள் நிறைய சேர்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் குறும்படம் / ஆவணப்படத்திர்க்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போது தமிழ்நாட்டில், நிறைய சங்கங்கள் உருவாகி வருகிறது. இதுவே ஒரு நல்ல முன்னேற்றம். இதன் மூலமாக வளரும் படைப்பாளிகளுக்கு ஒரு பிளாட்பார்ம் அமைந்துள்ளது.

ஆனால் குறும்படம் / ஆவணப்படம் தயாரிப்பதற்கு உரிய பொருளாதாரம் கிடைப்பது மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. என் இடம் கூட குறும்படம் / பப்ளிக் சர்வீஸ் விளம்பரம் போன்றவற்றிற்கு உரிய கதைகள் / கான்செப்ட் உள்ளது. இருந்தாலும் தயாரிப்பாளர்கள் கிடைப்பதற்கு மிகவும் அரிதாக உள்ளது.

புதிதாக நுழைய விரும்பும் கலைஞர்களுக்கு உங்கள் அனுபவத்தில் இருந்து ஒன்றை சொல்லுங்களேன்?

ஆர்வமும் படைப்பாற்றலும் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் குறும்படம் எடுக்க முடியும். எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும்.

இவரது குறும்படத்தைக் காண:

ஒரே ஒரு நாள்
http://thamizhstudio.com/shortfilms_oon.php

கண்மணி
http://thamizhstudio.com/shortfilms_kanmani.php

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)