கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - ராஜா

ஆதவன்  

கழுவேற்றம் குறும்படத்தின் மூலம் இலக்கியவாதிகள் மற்றும் குறும்பட ஆர்வலர்களிடையே அறிமுகம் ஆகியிருக்கும் திரு. ராஜா அவர்கள் உண்மையில் நல் வரவே. இக்குறும்படத்தை காணும்போது எமக்கும் ஏதோ ஓர் சொல்ல முடியா மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம் தமிழ் ஸ்டுடியோ.காம் தாரக மந்திரமான இலக்கியங்கள் குறும்படங்களாக எடுக்கப்பட வேண்டும் என்கிற கூற்றினை நினைவாகி இருக்கும் குறும்படம். எழுத்தாளர் தமயந்தியின் "அனல் மின் மனங்கள்" என்கிற சிறுகதையை "கழுவேற்றம்" என்கிற குறும்படமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் திரு. ராஜா அவர்கள்.

பெற்றத் தாயை மனைவியின் சொல்கேட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கும் பிள்ளைகள் பற்றிய படம்தான் இந்த கழுவேற்றம். இனியும் உங்கள் அம்மாவை என்னால் கவனித்துக் கொள்ள இயலாது.. அவங்கள உங்க அண்ணன் வீட்ல விட்டுட்டு வந்திடுங்க என்று மனைவியின் சொல்கேட்டு, அண்ணன் வீட்டுக்கு செல்லும் இளையவன் அங்கு அண்ணன் இல்லாததுக் கொண்டு அதிர்ச்சியடைகிறான். பின்னர் அண்ணனிடம் தொலைபேசி மூலம் பேசுகிறான். அண்ணன் தாயைக் கவனித்துக் கொள்ள மறுக்கவே தாயுடன் ஒரு பூங்காவிற்கு செல்கிறான். சிறிது நேரம் கழித்து உணவு வாங்கிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு தாயை அப்படியே பூங்காவில் விட்டு செல்லும் ஒரு பிள்ளையின் கதையை அப்பட்டமாக படம் பிடித்துள்ளார் இயக்குனர்.

இதில் தாயாக நடித்திருக்கும் அந்த அம்மையாரின் நடிப்பும் முகவெட்டும் ஒரு உண்மைக் கதையை பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. இயக்குனரின் மெனக்கெடல் நமக்கு ஒரு நல்ல படைப்பை கொடுத்திருக்கிறது. மேலும் இது போன்ற நல்ல படைப்புகளை வழங்க இயக்குனர் திரு. ராஜா அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

இனி இயக்குனர் திரு. ராஜா அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. பொதுவாக கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களே கலைத் தாகத்தோடு வருகிறார்கள். நீங்கள் எப்படி.. உங்கள் பூர்வீகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

நேற்றைய கிராமம்தான் இன்றைய நகரங்கள், இன்றைய கிராமங்கள்தான் நாளைய நகரங்கள். நகரவாசிகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் ஒளிந்து உள்ளான். எனவே திரைப்படமானாலும் வேறு எந்தத் துறையானாலும் ஒருவரை வழிநடத்தி அழைத்து செல்வது சூழ்நிலையும் அனுபவங்களும்தானே தவிர, கிராமமோ நகரமோ அல்ல.

2. குறும்படங்கள் மீதானக் காதலுக்கு காரணம் என்ன?

திரைப்படங்களோ, குறும்படங்களோ இரண்டின் மீதும் எனக்கு காதலில்லை. உண்மையான காதல் புத்தகங்களின் மீதுதான். ஏனெனில் புத்தகங்கள்தான் வாழக்கையை வாழ கற்றுக் கொடுத்தன. எனவே நானும் எழுதவே ஆசைப்பட்டேன். எழுதுவதை விட காட்சியாக பதிவு செய்வது சிறந்தது என தோன்றியதால் திரைப்படத்துறையை தெரிவு செய்தேன்.

3. உங்கள் முதல் குறும்படம் பற்றி?

குறும்படங்களில் கண்டிப்பாக ஒரு செய்தி இருக்கும். ஆனால்! என் குறும்பட முயற்சியில் நானே பல செய்திகளை கற்றுக்கொண்டேன்.

4. பொதுவாகவே ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய சொந்த கற்பனைத் திறன், கதையை பயன்படுத்துவதிலேயே ஆர்வம் இருக்கும். ஆனால் நீங்கள் வேறு ஒரு எழுத்தாளரின் சிறுகதையை குறும்படமாக்க முனைந்ததேன்?

திரைப்படமானாலும், குறும்படமானாலும் கதைக்காக யாரும் தனியாக அமர்ந்து யோசிப்பதில்லை. தான் பார்த்த சம்பவங்களையும், படித்த செய்திகளையும் கொஞ்சம் உருமாற்றி பதிவு செய்கிறார்கள். நான் படித்ததை பதிவு செய்தேன். எழுத்தாளரையும் பதிவு செய்தேன்.

5. புகழ்பெற்ற பல சிறுகதைகள் தமிழிலும், பிற மொழிகளிலும் இருக்கும்போது, இந்த குறிப்பிட்ட சிறுகதையின் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது ஏன்?

முதலில் இந்தக் கதையை கற்பனையில் உருவாக்கினேன். பிறகு நான் படித்த கதையோடு முடிச்சு போட்டேன். பிறகு இப்படியும் நடக்குமா? என தேடி சென்றபோது இதைவிட மோசமாக நடப்பதை கண்டதும் பதிவு செய்து விட்டேன்.

6. இந்தக் குறும்படத்திற்காக உங்களுடன் பணிபுரிந்த மற்ற கலைஞர்கள் பற்றி சில வரிகள்?

குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. ஆனால் என் முதல் முயற்சிக்கு வெளியே இருந்து உதவிய சில நண்பர்களுக்கு நன்றி.

7. தாயாக நடித்திருக்கும் அந்த அம்மையாரின் முக அமைப்பே உங்கள் குறும்படத்தின் பாதி வெற்றி... கதாப்பாத்திரங்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இந்தக் குறும்படத்திற்காக தேடி அலைந்த நாட்களில் அதிகம் எடுத்துக் கொண்டவை அம்மா கதாப்பாத்திரம்தான். அதனால்தான் தொண்ணூறு சதவீதம் அந்த கதாபாத்திரம் உயிர்ப்பாக இருந்தது. மற்ற கதாபத்திரங்களுக்கான தேடல் குறைவு என்பதனால் முழுமை அடையாவிட்டாலும் உயிர் கொடுத்தார்கள்.

8. உங்கள குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி? பொதுவாக தமிழ்நாட்டில் குறும்படங்களுக்கான தேவை இருப்பதாக உணர்கிறீர்களா?

நல்ல குறும்படத்திற்கான வரவேற்பே என் குறும்படத்திற்கும் கிடைத்தது. மேலும் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அது நிறைவு பெரும். குறும்படங்களுக்கான தேவை உலகம் முழுவதும் இருக்கிறது. காரணம் திரைப்படங்கள் இன்று 99.99 சதவீதம் வணிக சினிமாவாக மாறிவிட்டதால் நல்ல கருத்துகளை குறும்படங்களின் மூலம்தான் வெளிப்படுத்த முடியும்.

9. குறும்படங்கள் எதற்காக? வணிகத்திற்காகவா? மன நிறைவுக்காகவா? வெள்ளித்திரையில் நுழைவதற்க்காகவா? உங்கள் பார்வையில் இதில் எதற்காக?

கண்டிப்பாக வணிகத்திற்காக அல்ல. மன நிறைவுக்காகவும் சில நேரங்களில் சினிமா என்ற கனவுலகத்திற்கு துருப்பு சீட்டாகவும் பயன்படுகிறது.

10. குறும்படத்துறை மேலும் வளர இன்னும் என்னென்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தேவைப்படுன் உதவிகள் என்ன? அல்லது புதிதாக இந்தத் துறைக்கு வர விரும்பும் ஆர்வலர்களுக்கு உங்களால் என்னென்ன உதவிகள் செய்ய இயலும்?

ஒரு படைப்பாளியின் படைப்பை குறைகூற நாம் யார்? என்று ஒதுங்கிவிடாமல் தவறுகளை சுட்டி காட்டவும் தவறுகள் நிரம்பி இருந்தால் நிராகரிக்கவும் வேண்டும். மீன் கொடுப்பவனை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பவனே சிறந்தவன் என்பதுபோல் உதவிகள் இருக்க வேண்டும். இத்துறைக்கு வரும் மற்ற நண்பர்களுக்கும் என் உதவிகள் இப்படித்தான் இருக்கும். என் பதில்களை பொறுமையாக படித்த வாசகர்களுக்கு என் நன்றி.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)