கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - டென்சிங் ராஜன்

ஆதவன்  

காதல், கண்டு கேட்டு போன்ற காதல் படங்களை குறும்படங்களாக்கி, தனது குரும்பை வெளிப்படுத்தியிருக்கும் திரு. டென்சிங் ராஜன் அவர்கள், சென்னைப்பட்டினத்தில் மஹாத்மா, வந்தே மாதரம் போன்ற சமுதாய தாக்கமுள்ள குறும்படங்களையும் எடுத்து தனது சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி உள்ளார். குறும்படங்கள் குறும் அளவானதாகவே இருக்க வேண்டும் என்பது இவரது எண்ணம். சொல்ல வந்த கருத்தை ஒரு நிமிடத்தில் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கும் டென்சிங் ராஜன் குறும்பட துறைக்கு ஒரு நல்வரவே. ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தாலும்

குறும்படங்கள் மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து இந்த காலத்தில் இயங்கி வரும் திரு. டென்சிங் ராஜன் மேலும் பல நல்ல குறும்படங்களை படைக்க வேண்டுமென்று வாழ்த்தி வரவேற்போம்.

இனி இயக்குனர் திரு. டென்சிங் ராஜா அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. டென்சிங்.. உங்கள் பெயரே ஏதோ சொல்கிறதே? உங்கள் பூர்விகம் பற்றி கொஞ்சம்..

அண்ணன் பெயர் ஜெய்சிங் ராஜன் என்பதால் தம்பி பெயர் டென்சிங் ராஜன் என்று கோர்வையாக இருக்கட்டும் என்று தந்தையின் அவா. தந்தை காலமாகிவிட்டார். அம்மா, அண்ணன் குடும்பத்துடன் சொந்த ஊரான திருச்சி பக்கம் குளித்தலையில் வசிக்கிறார். நான் மற்றும் மனைவி ஆறு வயது ஓவியா சென்னை இராயப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மனைவி குடும்பத்தையும், பிள்ளையையும் பார்த்து வருகிறார். ஓவியா 1 ஆம் வகுப்பு படித்து வருகிறா.

2. நீங்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிகிறீர்கள்? குறும்படங்கள் எடுக்க நேரம் எப்படி கிடைக்கிறது?

நேரம் கிடைப்பது அரிதுதான் அந்த அரிது பெரியதாக தெரிந்தால் குறும்படம் எடுக்க முயன்றேன். எனக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி கொண்டே குறும்படம் எடுப்பதற்காக பல வழிகளை கையாண்டேன். நிறுவன சூழ்நிலைக்கேற்ப என் பாதைகளை மாற்றிக் கொள்வேன். பல சிரமங்களுக்கு மத்தியில்தான் என் படம் வெளிவரும் (புரிந்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்).

3. உங்கள் முதல் குறும்படம் பற்றி? இதுவரை எத்தனை குறும்படங்கள் எடுத்துள்ளீர்கள்?

முதல் குறும்படமான என் முதல் குழந்தையை 2003 ஆகஸ்ட் 15-ல் பிரசவித்தேன், வந்தே மாதரம் அதன் பிறகு காதல், செல்லாத காசு, சென்னை பட்டினத்தில் மகாத்மா, கண்டு கேட்டு, என ஐந்து படங்கள் முடித்துள்ளேன் என்பதில் பெருமைப்படுகிறேன். சாலையில் வரையப்பட்ட பாரத மாதாவிற்கு விழுந்த காசு எல்லாம் செல்லாத காசுகள். மீண்டும் அந்த ஓவியனின் பார்வையில் பசியும் வறுமையும் தெரிந்தது. செல்லாத காசு என்ற குறும்படம் என்னை தலை நிமிர செய்த படம்.

4. தொடர்ந்து காதல் படங்கள்? குறும்படங்கள் மீது உங்களுக்கு இருக்கும் காதலாலா? இல்லை நீங்கள் ஒரு காதல் விரும்பியா?

காதலை தேடி சென்ற போதெல்லாம் தோல்வியை தந்தது. காதலையும், காமத்தையும் கலந்து பார்த்தால் என்னவோ தெரியவில்லை? காதல் என்னை கதாலிக்க வில்லை. குறும்படங்களை காதல் செய்து திரைப்படங்களை முத்தம் இடுவதே என் இலட்சியம்.

5. உங்கள் குறும்படங்களில் பணியாற்றிய சகக் கலைஞர்கள் பற்றி?

குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒன்று, இரண்டு பெயர்கள் இல்லை ஒவ்வொரு படத்திலும் வேறு வேறு கலைஞர்களுடன் பணி புரிவதால் சொல்ல முடியவில்லை. கண்டு கேட்டு இந்த குறும்படத்தில் நண்பர் இராஜசேகர், ராமேஷ் இருவரும் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார்கள்.

6. நமது கலாச்சாரம், இனம், மொழி போன்றவற்றை உணர்த்தும் வரலாறு பற்றியோ, அல்லது நல்ல இலக்கியங்களையோ ஏன் குறும்படங்களாக எடுக்கவில்லை? இனி எடுக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா?

இலக்கியம் வரலாறு போன்ற பதிவுகள் எனக்கு பிடித்தமானது அவைகளை பற்றி படிக்காததால் குறும்படம் எடுக்க முடியவில்லை. எடுக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. என் எதிர் கால திட்டம் திரைப்படம் எடுப்பது.

7. தமிழ் நாட்டில் குறும்படங்களுக்கான களம் உள்ளதா? அதற்கான வரவேற்பு எப்படி உள்ளது?

தமிழ்நாட்டில் குறும்படங்களுக்ககான போட்டிகள் ஆங்காங்கே நடைப்பெறுகிறது, அதற்கான தகவல்கள் கிடைக்காமல் இருந்தது தற்போது தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட இயக்குநர்களுக்கு மேடையேற்றி கவுரவமும், ஊக்கமும் தருகிறது. அவர்கள் மூலம் பல தகவல்கள் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல.

8. நீங்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிவதால் இந்த கேள்வி.. தமிழ் நாட்டில் ஒரே ஒரு தொலைகாட்சி தவிர வேறு எந்த தனியார் தொலைக்காட்சிகளும் குறும்படங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லையே?

உண்மைதான் தனியார் தொலைக்காட்சிகள் இதற்காக முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் மக்களிடம் சென்று அடையவில்லை. இதற்கு காரணம் தனியார் தொலைக்காட்சிகளா? இல்லை, குறும்பட இயக்குனர்கள் அனுகவில்லையா? என்று தெரியவில்லை. இனிவரும் நாட்களில் மாறும் என்பது உண்மை.

9. தனியார் தொலைக்காட்சிகளில் குறும்படங்கள் ஒளிபரப்புவதற்கான வழிமுறைகள் என்ன?

தொலைக்காட்சியில் குறும்படங்கள் ஒளிபரப்ப வாய்ப்புள்ளது. அரை மணிநேரத்திற்கான பணத்தை தொலைக்காட்சி நிறுவனத்திடம் செலுத்தி விளம்பரங்களை நேரடியாக நாமே அனுகி, பெற்றுக்கொண்டு ஒளி பரப்பலாம். விளம்பர ரீதியாக நமக்கு சன்மானம் கிடைக்கும். நம் குறும்படங்களை அதிக விலை கொடுத்து வாங்க எந்த நிறுவனமும் முன் வராது. இலவசமாக ஒளி பரப்புவதற்கே நம்மை அலைய விடுவார்கள். நேரம் இல்லை என்பார்கள் (தொலைக்காட்சி) பல நிகழ்ச்சிகள் தொடராக ஒளி பரப்புவதால் முட்டுக்கட்டை.

10. இனி இந்தத் துறையில் புதிதாக வருபவர்களுக்கு உங்களால் என்னென்ன உதவிகள செய்ய இயலும்? அல்லது இந்த மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு எப்படிப்பட்ட உதவிகள் தேவைப்படுகிறது?

குறும்படத்திற்கு தேவை தொழில் நுட்பங்கள் நடிகர், நடிகைகள், லோகெஷன், சிபாரிசு, தாயரிப்பாளர்கள் இவைகளில் ஏதேனும் ஒன்று உதவியாக வந்தால் ஏற்றுக் கொள்வேன். புதிய ஆர்வர்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்ய தயார். நேரம், சூழ்நிலை அமைந்தால் நான் ரெடி.

முதல் முறையாக பேட்டி கண்டு என்னை கவுரப்படுத்தியதற்காக, தமிழ் ஸ்டுடியோ.காமிற்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)