கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - ப.நா. கணபதி

ஆதவன்  

"10-ம் வகுப்பு முடித்தவுடன், தையல் கல்வி கற்று தையல்காரனாக பணிப்புரிந்தேன் சில ஆண்டுகள், அப்படியே வேலை செய்து கொண்டு பி.ஏ. வரலாறு முடித்தேன். பிறகு இந்த திரைத்துறையை தேர்ந்தேடுத்து பிறகு எனது வீட்டில் எல்லோரின் சம்மதத்துடன், இத்துறைச் சார்ந்த கல்வியை ''சென்னை ஃபிலிம் இண்டஸ்டிரியல் ஸ்கூலில் ஒராண்டு காலம் பயின்றேன்" வார்த்தைகளை முடிக்கும் முன்னரே முகத்தில் புத்தொளி வீசுகிறது திரு. கணபதி அவர்களுக்கு.

தேர்தலின்போது நாட்டில் நடக்கும் பல அநியாயங்களை தனது குறும்படம் மூலம் பகடி செய்யும் கணபதி, தன்னிடம் உள்ள வசதிகளை வைத்தே படத்தை இன்னொரு தளத்திற்கு மாற்றியிருப்பது நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுப் போன்ற இளைஞர்கள் திரைத்துறையில் நுழையும்போது நிச்சயம் நல்லப் படைப்புகள் வெளிவரும் என்று நம்பலாம்.

இனி இயக்குனர் திரு. ப.நா. கணபதி அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1.திரைப்படத் துறையில் நுழைவதற்கு குடும்ப சூழல் எவ்விதத்தில் முக்கியப்படுத்தப்படுகிறது? உங்களைப் பற்றியும், குடும்ப சூழல் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்?

மற்ற துறையை போல் இல்லை நம் திரைத்துறை. எல்லா பெற்றோர்களும் எளிதில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் தான், நாம் அவர்களிடம் இருந்து போராடி சம்மதத்தை வாங்க வேண்டியிருக்கிறது.

இன்னும் சிலர் தனது குடும்பத்தை விட்டு விலகி, அவமானப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு திரைத்துறையில் நுழைகிறார்கள்.

இதில் சிலர் மட்டும் தான், தனது பெற்றோர் சம்மதத்துடன், நண்பர்கள் மூலமாகயோ, அல்லது திரைத்துறை உறவினர்கள் மூலமாகவோ மிக எளிதில் உள்ளே நுழைகிறார்கள்.
யார் எப்படி நுழைத்தாலும், திரைத்துறையை நேசிக்கத்தெரிந்த திறமையானவன் நிச்சியம் வெற்றி பெறுவான்.

எனது பெயர் ப.நா. கணபதி, நான் பிறப்பால் மதுரையை சேர்ந்தவன் என்றாலும், வளர்ந்தது முழுவதும் சென்னை தான். சென்னை தான் எனக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லி தந்தது. 10-ம் வகுப்பு முடித்தவுடன், தையல் கல்வி கற்று தையல்காரனாக பணிப்புரிந்தேன் சில ஆண்டுகள், அப்படியே வேலை செய்து கொண்டு பி.ஏ. வரலாறு முடித்தேன். பிறகு இந்த திரைத்துறையை தேர்ந்தேடுத்து பிறகு எனது வீட்டில் எல்லோரின் சம்மதத்துடன், இத்துறைச் சார்ந்த கல்வியை ''சென்னை ஃபிலிம் இண்டஸ்டிரியல் ஸ்கூலில் ஒராண்டு காலம் பயின்றேன். அங்கே தான் வாழநாளில் மறக்க முடியாத நபர் ராஜன் சர்மா ஐயாவை சந்தித்தேன், (எனது குருநாதர்) எனது படிப்பின் ஆண்டுயிறுதியில் ''வாழ்க ஜனநாயகம்' என்று குறும்படத்தை படைத்தேன்.

எனது தந்தையார் பெயர் ப.து. பரமசிவம், தாயார் பெயர் ப.நாகராணி எனக்கு ஒரு அக்கா, இரண்டு அண்ணன்கள் உள்ளனர். எனது சொந்த ஊர் மதுரையிலுள்ள திருப்புவனப்புதூர் எனது தந்தை கோயம்பேட்டில் கூலித்தொழிலாளியாக வேலைப் பார்க்கிறார். எனது தாயார் 2005 - ம் ஆண்டு இயற்கை எய்தினார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் குடும்பத்தை அண்ணன்கள் இருவரும் பார்த்து வருகிறார்கள். தற்போது சென்னையிலுள்ள முகப்பேரில் கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.

2. திரைப்படங்கள் எடுப்பதற்கு (குறும்படமாக இருந்தாலும்) அதற்கான கல்வி அவசியமா? அப்படியெனில் எந்த இடத்தில் திரைக் கல்வியின் தேவை உணரப்படுதிறது?

கல்வி என்பது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு துறைக்கும் கல்வி மிக முக்கியமானது. கல்வியின் மூலம் கற்றால் தான் எந்த துறையும் முழுமைபெறும்.

கதையில் வரும் ஒவ்வொரு திரைக்கதை மற்றும் ஒவ்வொரு காட்சிகளும் இயக்குநர் வெளிப்படுத்தும் போது, சரியான திரைக்கல்வியை கற்றிருக்கவில்லை எனில், திருப்தியான காட்சி அமைந்ததாக அந்த இயக்குநருக்கு இருக்காது. இந்த காலத்தில் கதைக்கு திரைக்கதை மிக முக்கியம், எந்த ஒரு சாதாரண கதையாக இருந்தாலும், சரியான திரைக் கதையிருந்தால் மிக அருமையான படமாக எடுத்து விடலாம். ''திரைக்கதை மூலம்''

3. உங்கள் முதல் குறும்பட அனுபவம் பற்றி?

நான் எடுத்த முதல் குறும்படம் ''நீராடபோகுமினோ''. இந்த குறும்படம் தொழில்நுட்ப ரீதியா சரியாக வராத காரணத்தினால் மிகவும் சோர்ந்து போனேன். பிறகு மற்ற நண்பர்கள் குறும்படம் எடுக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும், பணிபுரிந்தேன். இந்த நிலமை போய் கொண்டிருக்கையில், நானும் எனது குருநாதரும் ராஜன் சர்மா ஐயாவிடம் பேசிக் கொண்டியிருந்தோம். அரசியலைப் பற்றி அப்போது பிறந்தது நான் ''வாழ்க ஜனநாயகம்'' இந்த குறும்படம் எனது நண்பர்களை விட மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் கையிலோ அதற்க்கான நிதியே இல்லை என்ன பண்ணுவது என்று யோசித்தேன், அப்போது எனது குருநாதர் என்னிடம் வந்து கூறினார். உன்னைச் சுற்றி நிறைய விஷயங்கள் இருக்கு, அதை வைத்து பயன்படுத்த கற்று கொள் என்று, அப்போது அவர் சொன்ன யோசனையின் பெயரில் தான் ''வாழ்க ஜனநாயகம்'' தோற்றுவித்தது.

என் மனசுல ஒரு விஷயம் நல்ல பண்ணணும்னு எப்படி யோசிக்கும் போது தான், புதுமையான விஷயங்கள் வெளிவர ஆரம்பிக்குதுன்னு ஒத்துக்கிட்டேன். அந்த ஒன்று நான் மிக சந்தோஷமாக என் நண்பர்களுடன் பணியாற்றினேன்.

4. வாழ்க ஜனநாயகம் - உங்கள் முதல் குறும்படத்திற்கான களம் அமைந்த விதம் பற்றி?

அன்று சட்ட சபை தேர்தலுக்கான ஆயத்தப்பணி நடைபெற்றுக்கொண்டியிருந்து, எங்கே பார்த்தாலும் ஒரே ஊர்வலம். எங்கே பார்த்தாலும் மேடை பேச்சு, கணக்கில் அடங்காத வாக்குறுதிகள்.

அங்கங்கே கள்ள ஒட்டுக்களும் பதிவாகிக்கொண்டியிருந்தது. எந்த சேனலைத் திருப்பினாலும் அவரவர் கட்சிகளை அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற வாக்குறுதிகளும், இதை பார்த்து தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் மக்களும், அதை நான் பார்த்து நகைச்சுவையாக தோன்றியது எனக்கு, இது தான் ''வாழ்க ஜனநாயகம்'' என்ற கதை அமையக்காரணம்.

5. தொடர்ந்து சமூகப் பிரச்சனை சார்ந்த அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள் எடுக்கும் நோக்கம் இருக்கிறதா?

நிச்சியமாக விழிப்புணர்வு, சார்ந்த குறும்படங்களும் எடுப்பேன்.

6. வாழ்க ஜனநாயகம் குறும்படத்தில் நீங்கள் பயன்படுத்திய உத்தி பற்றி? குறைந்த செலவில் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயமா? அல்லது புதிய உத்தியை கொண்டு வரும் தேடலா?

ஒரு கதை ஒன்று கிடைத்துவிட்டது இதை நாம் எப்படி சொல்லப்போகிறோம், என்று யோசிக்கும் போது நான் அதற்கான தேடுதல் ஆரம்பிக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் கிடைத்தது தான், ஒரே அறையில் கதை சொல்லுதல், வண்ண வண்ண, கட்சிகள் முகமுடி அணிந்த அரசியல் வாதிகள், என்ற இப்படிப்பட்ட பல விஷயங்கள் அதில் கிடைக்கப்பெற்றது.

எப்போதும் தடை என்று ஒரு விஷயம் வந்தால் தான், அதற்க்கான மாற்று வழி ஒன்று தேடத் தோன்றுகிறது. அது நாம் நினைப்பதைவிட மிக அருமையாகவே வரும். குறைந்த செலவில் குறும் படம் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்ததால் நான் ஒரு புதிய தேடுதலுக்கு வழி வகுத்தது.

7. உங்களுடன் பணியாற்றிய சகக் கலைஞர்கள் பற்றி?

இந்த ''வாழ்க ஜனநாயகம்'' என்ற குறும்படத்தில் பணியாற்றி மொத்த நண்பர்கள் 20 பேர். இந்த குழு தான் படைப்பிற்கு முக்கிய காரணம். இவர்கள் தான் நேரமும், காலமும் வீணாக்காமல் சிறப்பாக பணியாற்றிய நண்பர்கள்.

வெள்ளைக் கட்சிக்காரன் பிரபு, தனியார் தொலைக்ககட்சியில் பணிபுரிகிறான். செய்தி படிக்கும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி சொந்தமாக படம் எடுக்கிறார். ''கிரிஸ்டல் கினோ'' என்ற நிறுவனத்தில் மூலமாக, பச்சை கட்சியாளர் பிரின்ஸ் 'இயக்குனர் வெங்கட் பிரபுவிடம்' உதவி இயக்குனராக பணிபுரிகிறார். மக்களாகவரும் ரவி, ''இயக்குனர் யார் கண்ணனிடம்'' உதவி இயக்குனராக பணிபுரிகிறார். கருப்பு கட்சிக்காரராக வரும் சபாபதி ''பிரமிடு சாய்மிராவில்'' புரொடக்ஷன் மேனஜராக பணிபுரிகிறார். நான் இயக்குனர் சேரன் ஐயா அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறேன். இந்த ''வாழ்க ஜனநாயகத்தில் நேரடி ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஒலிப்பதிவாளர் சரவணன் பரணி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக பணிபுரிகிறார். இந்த குறும்படத்தின் படத்தொகுப்பாளர் ''விஜய் தொலைக்காட்சியில்'' படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். ஒளிப்பதிவாளர் அஸ்வின் அம்பேத்கர் மும்பையில் ஒருதனியார் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். இந்த குறும்படத்தில் பணியாற்றிய சக கலைஞர்களும் நல்ல பணியாற்றியுள்ளனர்.

8. குறும்படத் துறையை மாற்று ஊடகமாக கருத வேண்டிய அவசியத்தை உணர்கிறீர்களா? அல்லது குறும்படங்கள் எடுப்பதே திரைப்படத் துறையில் நுழைவதற்கு தான் என்பதே தற்போதய விதி.. நீங்கள் எப்படி?

ஆம், மாற்று ஊடகமாகத்தான் கருதுகிறேன். ஏன் என்றால் நமது தமிழ் சினிமாவில் குறும்படத்திற்கு சரியான அங்கீகாரம் இல்லை. குறும்படங்களை அங்கிகரிப்பவர்கள் என்று பார்த்தால் வெறும் 30 சதவீதம் பேர் மட்டும் அங்கீகரிக்கிறார்கள். பின்பு எப்படி மற்றவர்கள் அங்கீகரிப்பார்கள்.

சிலர் குறும்படத்தைப் பற்றி பேட்டி கொடுக்கும் போது மிக பிரம்மாண்டமாக பேட்டி கொடுக்கிறார்கள். உண்மையில் பார்த்தால் வேறும் பேச்சு மட்டும்தான். என் கண்ணேதிரே சிலர் குறும்பட டிவிடிக்களை பின்பு தூக்கி எறிந்து விடுகிறார்கள். இப்படி இருக்கும் திரைத்துறை மனிதர்கள் முதலில் இவர்களுக்கு குறும்படத்தைப் பற்றி விழிப்புணர்வு தேவை. படத்திற்கும் குறும்படத்திற்குமுள்ள வித்தியாசம் பணம் மட்டும் தான். வேறு ஒன்றும் இல்லை.

திரைத்துறையில் நுழைய அரசியல் வாதியோ அல்லது தயாரிப்பாளரோ, உறவினர்களோ, நண்பர்களோ, பரிந்துரை இருந்தாலே போதும் எளிதில் நுழைந்து விடலாம். இதற்கு திறமையோ, குறும்படமோ தேவையில்லை.

9. குறும்படத் துறை வளர உடனடியாக செய்ய வேண்டியவை என நீங்கள் கருதுபவை?

குறும்படத்திற்கான விழிப்புணர்வு தேவை, குறும்படங்களை வைத்து பணம் பண்ண முடியாது என்று நினைக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். இந்த குறும்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும். இதற்காக நல்ல நல்ல நிறுவனங்கள் விளம்பரம் தர முன்வர வேண்டும். இவை அனைத்தும் சரியாக நடந்து மக்களிடையே கொண்டு சேர்த்தால், குறும்படங்கள் உலகளவில் சென்று போட்டியிடும்.

10. உங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து? அல்லது இந்தத் துறையில் புதிதாக வருபவர்களுக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகள் பற்றி?

குறும்படங்களை வியாபார ரீதியாக பார்க்காத, குறும்படங்களை நேசிக்கிற தயாரிப்பாளர்கள் வந்தால் நல்லது.

இத்தகைய நேசிக்கிற தொழில் நுட்ப கலைஞர்கள் முதலில் இதற்கான கல்வியை கற்றபிறகு, இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வேன்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)