கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - ஸ்ரீராம் பத்மநாபன்

ஆதவன்  

அரிசியின் விலை ஏறிக்கொண்டே போனாலும், தொடர்ந்து குறைந்துக் கொண்டே வரும் மின்னணுப் பொருட்களின் உதவியால் இன்று கையில் காமெரா எடுத்தவர்கள் எல்லாம் குறும்பட இயக்குனர், படைப்பாளி என்றாகிப் போய்விட்டது. வருடத்திற்கு சுமார் இருநூறு குறும்படங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வெளியாகிறது. அதில் சுமார் ஐந்து அல்லது ஆறு படங்கள் மட்டுமே தேறுகிறது. அதிர்ஷ்டம் ஐந்து கிலோ மீட்டரில் எனும் குறும்படம் மூலம் அந்த ஐந்து அல்லது ஆறு குறும்பட இயக்குனர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் ஸ்ரீராம் பத்மநாபன்.

சென்னை திரைப்படக் கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்துள்ள இவரின் இரண்டாவது குறும்படமான இதில் ஒரு உண்மையான கலைஞனுக்கு உண்டான பொறுமையும், நேர்த்தியும் தெரிகிறது. கதாப்பாதிரங்களின் நடிப்பும், குறும்படம் எடுத்துள்ள விதமும், நம்மை மேலும் கவர்கிறது. ஒரு காட்சியை உருவகப்படுத்தி அதன் மூலம் தான் சொல்ல வரும் கருத்தை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதில் ஸ்ரீராம் கவனிக்க வைக்கிறார். திறனாய்வாளர்கள், சாதரான பார்வையாளர்கள் என அனைத்து மட்டத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தக் குறும்படம்.

அடுத்தக் கட்டமாக பெரியத் திரையில் காலடிக்கப் பதிக்கக் காத்திருக்கும் ஸ்ரீராம் பத்மநாபன், அங்கேயும் வெற்றிக் கனியை சுவைக்க தமிழ்ஸ்டுடியோ.காம் அவரை வாழ்த்துகிறது.

இனி இயக்குனர் திரு. ஸ்ரீராம் பத்மநாபன் அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1. யார் இந்த ஸ்ரீராம்?

நான் சேலம் அருகில் உள்ள சங்ககிரி என்ற ஊரில் படித்து வளர்ந்தவன். BBA படிப்பு முடித்து சென்னை வந்து D.F.Tech இல் Direction Course படித்து பின் இயக்குனர் திருமுருகனிடம் எம் -மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படங்களில் உதவி, துணை இயக்குனராக வேலை செய்து பின் இப்போது பிரசன்னாவை வைத்து "டூ " என்ற படத்தை இயக்க தயாராக உள்ளவன்.

2. பணம் கொட்டிக்கொடுக்கும் பலப் படிப்புகள் இருந்தாலும், குறிப்பாக D.F.Tech  படிப்பில் சேர எண்ணக் காரணம்? மற்றப் படிப்பின் மீது ஆர்வமின்மையா? அல்லது கலையின் மீதுக் கொண்ட தாகமா?

கலையின் மீது உள்ள தாகம்தான். வெளியே சினிமாவில் அனைவரும் வேகமாக ஓடுகின்றனர். நின்று உதவி இயக்குனருக்கு சொல்லி தர ஆட்கள் இல்லை. அவர்கள் 5 படங்கள் வேலை செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்ளலாம். ஆனால் திரைப்பட கல்லூரியில் பாடம் சொல்லி தந்து
உங்களுக்கு காமெராவை பிலிமுடன் கையில் கொடுத்து ஷூட் செய்ய சொல்கிறார்கள். இதனால் நாங்கள் 2 படங்கள் வேலை செய்து படம் இயக்க தயார் ஆகி விடுகிறோம்.

3. பொதுவாக தமிழகத்தின் திரைப்படக் கல்வி நிறுவனத்தின் மீது பலக் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அடிப்படை வசதியின்மை, பேராசிரியர் பற்றாக்குறை, என நீண்டுக் கொண்டே போகிறது.. இன்னும் கூட சென்னை திரைப்படக் கல்லூரியிலிருந்து சொல்லிக் கொள்வது போல் உலக அளவிலான ஒரு இயக்குனரை நாம் பெற்றிடவில்லையே? மற்றப் படிப்புகள் படித்து (பொறியியல், மருத்துவம், கணினி) பின்னர் திரைப்படத் துறைக்கு வந்து சாதித்தவர்கள் இங்கே ஏராளம் (உதாரணம் மணிரத்னம்) அதே போல் உதவி இயக்குனர்களாக இருந்து பின்னர் உலக அளவில் புகழ் பெற்ற இயக்குனர்களும் இங்கே உண்டு..  ஏன் திரைப்படத்திர்கேன்றே படித்த மாணவர்களால் இதனை சாதிக்க முடியவில்லை? திரைப்படக் கல்லூரி மாணவர்களின் எண்ணம் முழுக்க பணம் ஈட்ட வேண்டும் என்பதா? அல்ல இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதா?

தவறான கேள்வி. பணம் அனைவருக்கும் முக்கியம். ஆனால் இது விருப்பமாக லட்சியத்துடன் செய்யும் தொழில். இதில் சாதனை மட்டுமே குறிக்கோள். திரைப்பட கல்லூரிக்கு இன்றும் தமிழக அரசு நிதி ஓதுக்கி நவீன தொழில் நுட்ப சாதனங்களை வாங்க வசதி செய்து தந்துள்ளது. அதனால் திரைப்பட கல்லூரி என்றும் புதியவர்களுக்கு ஒரு கோவில் .

உலக இயகுனர்க்ளை திரைப்பட கல்லூரி தரவில்லை என்று கேள்வி கேட்டுள்ளீர்கள். நாம் படம் எடுப்பது யாருக்கு? நம் மக்களுக்கு.

இங்கு மக்கள் மனதில் இடம்பிடித்த முக்கிய இயக்குனர்கள் பெயரை சொல்ல விரும்புகிறேன்.

ஆபாவாணன், RK செல்வமணி, RV உதயகுமார், தரணி, கேயார், பூபதி பாண்டியன், திருமுருகன்,
இப்டி List நிறய, திரைப்பட கல்லூரி மாணவர்கள் அதிகம். ஒரு விஷயம் Technical படித்து வந்தாலும் நவீன தொழில்நுட்பம் தெரிந்தாலும் கதை நன்றாக சொல்ல தெரிய வேண்டும். அவர்கள்தான் இங்கே வெற்றி பெறுவார்கள்.

4. சரி குறும்படத் துறைக்கு வருவோம்.. உங்கள் முதல் குறும்படம் என்ன? இதுவரை நீங்கள் எடுத்துள்ள குறும்படங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

இதுவரை எடுத்தது திரைப்படக் கல்லூரியில் எடுத்த குறும்படம் மணிலாகொட்சம், அதிர்ஷ்டம் 5kml, How Z Monday Morning (English Corporate).

5. அதிர்ஷ்டம் ஐந்து கிலோ மீட்டரில் குறும்படம் நீங்கள் எதிர்பார்த்த கோணத்தில்தான் வந்துள்ளதா? வைதீஸ்வரன் எனும் கதாப்பாத்திரம் எதிர்மறையானதாக உங்களுக்கு தோன்றவில்லையா?

இது நான் எதிர் பார்த்த வடிவத்தில் வந்துள்ளது. வைதீஸ்வரன் Character 8m வகுப்பில் இருந்தே அவனது அதிர்ஷ்டத்தை கூறி விட்டேன். இது ஒரு எதிர்மறையான கதாப்பாத்திரம் இல்லை.

6.  வைதீஸ்வரனுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் சில நொடிகள் முந்திப் போய் விடுகிறது. இதைக் குறிப்பிட அவன் சைக்கிளை இழுத்து இழுத்து மிதிக்க ஒரு பேருந்து முன்னேறிப் போய் விடுகிறது. இங்கு பேருந்து ஒரு உருவகம். இந்த உருவகம் நீங்கள் எடுத்துக் கொண்ட கருவிற்கு சற்றே பலவீனமாக தோன்றவில்லையா? இன்னும் கூட இந்தக் காட்சிக்காக இன்னும் கூட கொஞ்சம் மேனக்கெட்டிருக்கலாமே?

கண்டிப்பாக நன்றாக செய்திருக்கலாம் . நன்றாக வருவதை எல்லா இயக்குனர்களும் விரும்புவதுதான் . ஆனால் இப்படம் ஒரே நாளில் எழுதி மறு நாள் shooting முடித்து விட்டோம். பேருந்து வரும் போது அந்த shot எடுக்கப்பட்டது . நாம் பேருந்தை படப்பிடிற்க்காக வாடகைக்கு எடுக்கவில்லை.
இது குறும்படம் budjet படம். அதனால் நாம் காட்சிகளை தேடி சென்று படம் பிடிக்றோம். நேரம், பணம் இது நமக்கு பெரிய விஷயம். இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்றல் சரி ஆமாம் எடுத்திருக்கலாம் என்பேன்.

7. இந்தக் குறும்படத்தில் பணிபுரிந்தவர்கள் (மற்றக் கலைஞர்கள்) பற்றி?

Technicians அனைவரும் என்னுடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள்
producer cameraman- vasanth
editor, dubbing artiste, production manager, sound effects- g.murali
music- Ramesh
asst.cameraman- maravarman
actors- kg.venkatesh, sharmila, karthikeyan
director-sriram padmanabhan

8. குறும்படங்கள் மூலமாக ஏதோ ஒரு சமூகப் பிரச்சனையை இந்த உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டியது குறும்பட ஆர்வலர்களின் கடமை. குறைந்த பட்சம் ஒரே ஒரு குறும்படமாவது அப்படி எடுக்க வேண்டும் என்கிற விருப்பம் உங்களிடத்து உள்ளதா? அல்லது திரைப்படத் துறையில் நுழைவதர்காகதான் இந்தக் குறும்பட ஆர்வலர் வேடமா?


நான் திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது எடுத்த 15mts குறும்படம் மணிலாகொட்சம், இது முழுக்க ஒரு சமூக படம். இப்படத்தில் தூக்கு தண்டனை கைதிகல் நல்லவர்களாக
சாகிறார்கள் என்றும் அவர்களுக்கு வேறு தண்டனை கொடுக்கலாம் மரணத்தை தவிர என்ற கருததும் சொல்லப்பட்டுள்ளது.

குறும்பட வேடம் திரைப்படத் துறையில் நுழையவா? என கேட்டிருக்கிறீர்கள்.. வேடம் அல்ல.. இது படைப்பு . இது இல்லாவிட்டால் சிறுகதை எழுதுவேன், அதுவும் படைப்பு . படைப்பிற்கு முகங்கள் தேவை இல்லை.

9. இந்தியாவில் எந்த மாநிலத்தில் குறும்பட வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக நினைக்கிறீர்கள்? ஏன்? உங்கள் அடுத்தக் கட்ட முயற்சி என்ன?

தமிழ் நாட்டில் எனக்கு தெரிந்து இன்று குறும்படம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. மற்ற மாநிலங்கள் பற்றி எனக்குத் தெரியாது. என் அடுத்த முயற்சி திரைப்படம் இயக்குவது. பிரசன்னா நடிக்க " டூ " என்ற படத்தை PSSR Movies Produce செய்ய, நான் இயக்க உள்ளேன்.

10. குறும்படம் சார்ந்து பிறர் உங்களிடம் உதவி கேட்டு வந்தால் எத்தகைய உதவிகள் உங்களால் செய்ய இயலும்? அல்லது இதேக் குறும்படத் துறையில் சாதிக்க உங்களுக்கு பிறரிடமிருந்து தேவைப்படும் உதவிகள் என்னென்ன?

கண்டிப்பாக உதவி செய்வேன். திறமையுடன் வருபவர்களுக்கு என் இரண்டாவது படத்தில் உதவி இயக்குனராக சேர்த்து கொள்வேன். முதல் படத்திற்கு ஆட்கள் இருகிறார்கள். உதவி எனக்கு தேவைபட்டால் Thamizh Studio விடம் கேட்பேன் . நன்றி..

இவரது குறும்படத்தைக் காண:

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)