கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - கு.கி. பத்மநாபன்

ஆதவன்  

நாம் கனவுகளை துரத்துவதும், கனவுகள் நம்மை துரத்துவதும் அனைவரின் வாழ்விலும் இயல்பான ஒன்று. ஆனால் கனவுகளை துரத்தி அவற்றின் ஊடாக நிஜ உலகத்தைக் காண்பதும், துரத்திய கனவுகளை அதன் கோட்டையிலேயே சந்திப்பதற்கும், மனதில் ஒரு தில் வேண்டும். இதனை மறந்த எவரும், கனவுத் துரத்திகளாகவோ, படைப்பாளியாகவோ மலர்ந்துவிடுவது அவ்வளவு எளிதல்ல. அதனை மனதில் நிறுத்தி தன்னுடைய கலை வாழ்க்கையை தொடங்கி இருப்பவர் திரு. கு.கி. பத்மநாபன்.

வினா என்கிற இவரது குறும்படம், நையாண்டிக் கலந்த, ஆங்காங்கே நகைச்சுவை இழையோடு நம்மை கைப்பிடித்து படைப்பினூடே அழைத்து செல்கிறது. சிறுவர்களை, சிறுவர்களாகவே பார்க்கத் தவறும் பெற்றோர்கள், அவர்களின் உணர்வுகளுக்கு எங்கே மதிப்பளிப்பது? வினா அதற்கெல்லாம் பதில் சொல்கிறது. விரைவில் வெள்ளித்திரையில் கால் பதிக்கக் காத்திருக்கும் பத்மநாபனுக்கு தமிழ் ஸ்டுடியோவின் வாழ்த்துகள்.

இனி இயக்குனர் திரு. கு.கி. பத்மநாபன் அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1. கனவுகளோடு சென்னை நகரம் தேடிவந்தவர்கள் ....சென்னை வந்ததும் கனவுகள் வரப்பெற்றவர்கள் ....இதில் பத்மநாபன் எந்த வகையைச் சார்ந்தவர்?

நான் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள மண்டலக் கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தேன். என்னுடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். சகோதரிகள் மூன்று பேர். நான் சிறுவயது முதலே 'கலை' சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருந்தேன். எனவே நான் கனவுகளோடும், இலட்சியத்தோடும் சென்னை வந்தேன் என்பது சரிதான்.

2. கையில் கேமரா கிடைத்ததும் ஏதோ தானும் ஒரு படைப்பாளி என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வாரத்திற்கு மூன்று, நான்கு குறும்படங்கள் எடுத்துத் தள்ளும் வகையறாக்களுக்கு மத்தியில் உங்கள் நோக்கம் எப்படிப்பட்டது? குறும்படத்துறையின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

தரம் உயர்ந்த படங்களை இயக்கித் தயாரிக்கவே விருப்பம். எண்ணிக்கையை உயர்த்துவது என் நோக்கமல்ல.

சிறு வயது முதலே, கதை - கவிதை போன்றவற்றை படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். தவிர, 'சினிமா' கனவுகளே சென்னை வந்த பின்பு திரைப்பட கழகங்கள், குறும்பட இயக்கங்கள் போன்றவற்றால் உலகத் திரைப்படங்களும், உலகக் குறும்படங்களும் ஏற்படுத்திய தாக்கங்கள் முக்கியமான காரணமாகும். தவிர, குறும்படம் தரும் நிறைவு, அதன் வீச்சு நம்மை பரவசப் படுத்துபவையாக உள்ளன. இவ்விதமாகத்தான் குறும்படத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டது.

3. உங்கள் முதல் குறும்படம் 'வினா' எதைப்பற்றி பேசுகிறது? அதற்கான களம் அமைந்தது பற்றி... ?

'வினா' எனது முதல் குறும்படம் அல்ல, இரண்டாம் குறும்படம். முதல் படம் "நலம் நலமறிய ஆவல்". மக்கள் தொலைக்காட்சிக்காக எடுத்த "எய்ட்ஸ்" பற்றிய விழிப்புணர்வு படம்.

'வினா' எதைப்பற்றி பேசுகிறது என்றால், நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர், நம் சொல்லை பின்பற்றி நடப்பார்களா...? இல்லை, வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பார்களா...? என்பதை நுட்பமாக ஆராய்வதே 'வினா'.

சிறுவர்கள்தானே என நினைத்து அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு (அல்லது) புறக்கணித்துவிட்டு நாம் செய்யும் சிறு தவறு கூட அவர்கள் மனதை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உளவியல் ரீதியில் உணர்த்துவதே 'வினா' வின் நோக்கம்.

பொதுவாக, எந்தவொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் விருப்பமுடையவனாக நான் இருப்பதால், சிறுவர்களின் உலகை கவனித்தபோது தென்பட்ட கருத்துக்கள் 'வினா' விற்கான களமாக அமைந்தது.

4. உங்கள் முதல் குறும்படம் 'வினா'வில் சிறுவர்களின் உலகை படம் பிடித்திருப்பீர்கள். அதில் வரும் சிறுவனின் நடிப்பிற்கு பெரியவர்கள் ஈடுகொடுக்க முடியாமல் தவிப்பதேன்? இயக்குநர் குறைபாடா? குறும்படத்திற்கு உரிய நேரம் மற்றும் பணம் குறைபாடா?

(சிரித்தபடி) எனக்குத் தெரிந்த வரையில் சிறுவனின் கேள்விக்கு பதில் சொல்லத்தான் திணறுகிறார்கள் தவிர, நீங்கள் நினைப்பது போலில்லை. இன்னும் கூட அப்படத்தின் பல சிறப்புகள் உங்கள் கவனத்திற்காக காத்திருக்கின்றன என்றே கூறலாம்.

(சிறுவனின் கேள்வி நம்மை திணறடிக்கிறதென்பது தான் கதையின் அடி நாதமே...)

5. இன்னும் கூட 'வினா' படத்திற்கு மெனக்கெட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? அல்லது நீங்கள் நினைத்தது போன்றே குறும்படம் வெளிவந்ததாக நினைக்கிறீர்களா? படத்தின் உருவாக்கத்தில் (Making) இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் போலிருக்கிறதே?

'வினா' அடுத்தபடம் இதைவிட சிறப்பாக எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும், அனுபவத்தினையும் தந்திருக்கிறது. தவிர, குறும்படங்களில் பரவலாகக் காணப்படும சிறு சிறு தவறுகளை (அல்லது) குறைகளை கவனமுடன் தவிர்க்க வேண்டுமென நினைத்து உருவாக்கியுள்ளேன். அதில் பெருமளவு நிறைவுபெற்றதாகவே கருதுகிறேன்.

6.  வட இந்தியாவில் பல பிரச்சினைகளை அந்த மாநில இளைஞர்கள் ஆவணப்படமெடுத்து இந்த உலகிற்கு தெரியப்படுத்துவது போன்று, எந்தவொரு முயற்சியும் தென் மாநிலங்களில் நடைபெற்றதாகத் தெரியவில்லையே? கேரளத்தைத் தவிர... தமிழ்நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளை இதுவரை தொலைக்காட்சிகள்தான் அரைவேக்காட்டுத்தனமாக மக்களுக்கு கொண்டு செல்கிறதே தவிர, குறும்பட ஆவணப்பட இயக்குநர்கள் அதுபற்றி கவலைப்படாமல் இருப்பது, அவர்கள் நேசிக்கும் கலைத்துறைக்குச் செய்யும் துரோகம் இல்லையா? இல்லையெனில், அவர்கள் தங்களை ஒரு படைப்பாளி என்கிற நிலையில் மட்டுமே பார்ப்பது சரியெனக் கூறுகிறீர்களா?

குறும்படம் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் சமீபகாலமாகத்தான் தமிழகத்தில் பரவி வருகிறது. தவிர குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் தயாரிப்பதற்கு ஆகும் பொருளாதார சிரமங்களை விட அதை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆகும் பொருளாதார சிரமம் படைப்பாளிகளை மேலும் அழுத்துகிறது. காலப் போக்கில் இந்நிலை மாறினால் தரமான ஆவணப்படங்கள் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்புண்டு.

7. உங்கள் குறும்படம் மக்களை சென்றடைய என்னவிதமான நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? பொதுவாக என்னென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

திரைப்பட கழகங்கள், குறும்பட இயக்கங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தவிர நட்பு வட்டாரங்கள் மூலமாகச் சென்றடையச் செய்துள்ளேன். படைப்பாளிகளின் பொருளாதார சிரமங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு ஊடகங்கள் ஒத்துழைத்தால் சிறப்பாக இருக்குமென நினைக்கிறேன்.

8. தமிழ்நாட்டில் குறும்பட வளர்ச்சி எப்படி இருக்கிறது? தமிழ்நாடு அதற்கான சரியானக் களம் என்று நினைக்கிறீர்களா?

தமிழ்நாட்டில் குறும்பட வளர்ச்சி மிகமிக நன்றாகவே உள்ளது. ஆம், தமிழ்நாடு அதற்கு சரியான களம் என்றுதான் நினைக்கிறேன்.

9. உங்களின் அடுத்தகட்ட முயற்சி என்ன?

புதிய திரைப்படம் ஒன்றினை இயக்கித் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.

10. குறும்படம் சார்ந்து பிறர் உங்களிடம் உதவி கேட்டு வந்தால் எத்தகைய உதவிகள் உங்களால் செய்ய இயலும்? அல்லது இதேக் குறும்படத் துறையில் சாதிக்க உங்களுக்கு பிறரிடமிருந்து தேவைப்படும் உதவிகள் என்னென்ன?

குறும்பட ஆர்வலர்கள், குழு மனப்பான்மை, முன் தீர்மானம் ஏதும் இன்றி குறும்படங்களை அணுக வேண்டும். அப்படங்களின் நிறை - குறைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் திறந்த மனதுடன் பேச முன்வர வேண்டும்.

நான் அவர்களுக்கு, என்னால் இயன்ற வழிகாட்டல்களை செய்ய முடியும் என நம்புகிறேன்.

இவரது குறும்படத்தைக் காண : http://thamizhstudio.com/shortfilms_vinaa.php

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)