கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  வேல்மணி

யாழ்

 

நாம் அலுத்துப் போகும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கணிணித் தோப்புக்குள் நாம் அமர்ந்து ஸ்கீன்சேவரில் வரும் பட்டாம் பூச்சியை மனதால் ரசித்துக் கொண்டிருக்கிறோம். வார விடுமுறைகளில் உறங்கி சலிப்பதே வாழ்வின் உள்ளார்ந்த மெய் நோக்கமாய் வாழ்கிறோம். தகவல்தொழிற்நுட்ப துறையில் வேலை செய்பவர்கள் கூறும் வார்த்தைகளில் தவறாமல் இருப்பவை "எனக்குச் சவால் விடும் வேலைகளே வேண்டும்"(I want a challenging task). அவர்களுக்கு ஒன்று விளங்குவதில்லை, நாளைய சோற்றுக்கு இன்று போராடும் கீழ்நிலை மனிதனின் போராட்டத்திற்கு எந்த ஒரு சவாலும் இணையாகாது.

பேருந்தில் இரயிலில் பேசிக் கொண்டே பூக்கட்டிக் கொண்டுவரும் பூக்காரிகளை நம் அவசர கதியில் ஒரு கணமேனும் கவனித்திருப்போம். அவர்களின் பேச்சுக்கள் பெரும்பாலும் அவர்களின் நிதசரி வாழ்வைப் பற்றியதாகவே இருக்கும்.நம் பெண்கள் தான் எத்தனை அழகு!.அவர்கள் பூச்சூடும் போது, அவர்கள் அழகு கூடத் தான் செய்கிறது.இந்தியாவில் நம் திராவிட கல்லாச்சாரத்திற்குள்ளேதான் பூக்களைச் சூடும் பழக்கம் இன்றும் நம் பெண்களிடத்தில் தொடர்கிறது. வட இந்தியப் பெண்களிடம் கூந்தலுக்கு இயற்கையிலேயே மண‌ம் இருக்குமோ?என்னமோ?. கூந்தலுக்கு ம‌ணம் சேர்க்கும் பூக்களை சந்தை பொருளாக நம்பி வாழ்பவர்களின் வாழ்வு மணக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்புகின்ற குறும்படம் "நாளைக்கு மழை பெய்யும்".

இனி இயக்குனர் திரு. வேல்மணி அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1. இக் குறும்படத்தில் பூக்களை விளைபொருளாக‌ நம்பி வாழும் விவசாய‌ வாழ்வை அழ‌காக சித்தரித்துள்ளீர்கள். உங்கள் குடும்பம் விவசாயப் பின்னனியைக் கொண்டதா? உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.

எங்கள் குடும்பம் விவசாய குடும்பம் இல்லை. என்னுடைய அப்பா ஒரு அலுமினிய பட்டறை தொழிலாளி. என்னுடைய நெருங்கிய நண்பர் வட்டம் விவசாய பின்னணியைக் கொண்டது.

2. குறும்படத்தின் அழ‌கு அதன் குறுகிய வடிவம்.இப் படம் அரை மணி நேரம் கொண்டதாக இருக்கிறது. நீங்கள் திட்டமிட்டே தான் செய்தீர்களா ? அல்லது உங்கள் கதையின் நீளத்திற்கு அவ்வாறு தேவைப்பட்டதா?

திரைக்கதைக்கு அரை மணி நேரம் நீளம் தேவைப் பட்டது.

3. ஒரு சிறந்த படத்தின் இசை அது காட்சியுடன் ஒன்றும் போது நாம் எதையும் உணர்வதில்லை. அதன் காட்சியுடன் ஒன்றிப் போகிறோம்.இப் படத்தில் மொனமாய் வர வேண்டிய நிலக் காட்சிகளில் இசை தூக்களாகவெ இருக்கிறது. இதை கவனித்தீர்களா?. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?

இசை கதையுடன் ஒன்றி இருப்பதாகவே நான் உணர்கிறேன். இந்த படம் விழாக்களில் திரையிடுவதற்காக எடுக்கப்பட வில்லை. வெகுஜன மக்கள் (பூ விவசாயிகளுக்காக) எடுக்கப் பட்டது. இசை அவர்கள் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

4. .குறும்படத்தை மாற்று ஊடகமாக பார்க்கிறீர்களா?.இல்லை சினிமாவுக்கு செல்லும் பயிற்சியாக மட்டும் கருதுகிறீர்களா?

குறும்படத்தை ஒரு மாற்று ஊடகமாகவே நான் கருதுகிறேன். சமுதாய சிந்தனைகளை வியாபார நோக்கமின்றி, அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த மாற்று ஊடகமே குறும்படம்.

5. இப்படத்தில் வரும் பாடல் நன்றாக இருக்கிறது.ஆனால் கதையின் நகர்வுக்கும் அதற்கும் சிறிதும் தொடர்பில்லை.ஒரு சோகத்தின் குறியீடாகவே மட்டும் இருக்கிறது.இதனால் அதன் கலைத் தன்மையை இக்குறும்படம் இழ‌க்கிறது.இதைச் சார்ந்த விமர்சனம் உங்க‌ளுக்கு எவ்வாறு கிடைத்தது?

இதுவரை எனக்கு வந்த விமர்சனங்கள், அந்த பாட்டு மிகவும் அருமையாக கதையுடன் ஒன்றியே இருப்பதாகத் தான் வந்திருக்கிறது. குறும்படம் இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று யாரும் வரையிட முடியாது என்றே நான் கருதுகிறேன். சினிமா ஆர்வலர்களும், வெகுஜன மக்களும், என்னுடைய உதவி இயக்குனர்களும், நாளைய இயக்குனர்களும் நன்றாகவே விமர்சித்து இருக்கிறார்கள். இந்த குறும்படத்தின் விமர்சனங்கள் ஆனந்த விகடன், இந்திய டுடே, அமுதசுரபி, சினிமா எக்ஸ்பிரஸ், நிழல் மற்றும் வண்ணத் திரை பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. இயக்குனர்கள் திரு.பாலுமகேந்திரா, திரு. ஜனநாதன், திரு.கௌதமன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் இந்த குறும்படம் திரை இட்ட அன்று (31.102010.) நல்ல படியாகவே விமர்சித்து பாராட்டி பேசினார்கள்.

6. இப்ப‌டத்தில் ந‌டித்த‌வ‌ர்க‌ள் தொழில் முறை ந‌டிக‌ர்க‌ளாக‌ தெரிய‌வில்லை. நடிக‌ர்க‌ள் ப‌ற்றிச் சொல்லுங்க‌ள்.

நடித்தவர்கள் தொழில் முறை நடிகர்கள் அல்ல. யதார்த்த மனிதர்களே.

7. உங்கள குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி? பொதுவாக தமிழ்நாட்டில் குறும்படங்களுக்கான தேவை இருப்பதாக உணர்கிறீர்களா?

என்னுடைய குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நிறைய விருதுகளும் கிடைத்திருக்கிறது. குறும்படத்தின் தேவை நிறைய இருக்கிறது நம் நாட்டில். மக்களின் மாற்று ரசனைக்கு கண்டிப்பாகவே தேவை படுகிறது.

8. இன்றைய‌ குறும்ப‌ட‌ங்க‌ள் அறிவுரை அல்ல‌து வ‌றுமை இவ‌ற்றையே க‌ருப் பொருள்க‌ளாக‌க் கொண்டு வ‌ருகிற‌து. இவ்விர‌ண்டையும் தாண்டிய‌ சாத்திய‌ங்க‌ள் என்ன‌?

இன்றும் ஏழை விவசாயி தற்கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நமது எண்பது சதவீத மக்கள் விவசாய குடும்பங்கள் தான். வறுமையை தாண்டி குறும்படங்களுக்கு சாத்தியம் இருந்தாலும், இத்தகைய சிந்தனைகளை அதிகமாக நம் மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய கடமை நமக்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

9. உங்கள் அடுத்த திட்டங்கள் என்ன? குறும்படங்க‌ளா அல்ல‌து சினிமானவா?

சில நல்ல சிந்தனைகளை நாம் திரை படத்தில் காட்ட முடியாது. குறும்படங்கள் வாயிலாகத்தான் நாம் மக்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதனால் எனது அடுத்த திட்டங்கள் குறும்படங்கள் மற்றும் சினிமாவும் கூட.

10. நீங்க‌ள் புதிதாக‌ குறும்ப‌ட‌ம் எடுப்ப‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை என்ன‌வாக‌ இருக்கும்?.

"சிறந்த புத்தகங்களை வாசித்தால் அறிவு வளரும், அறிவு வளர்ந்தால் சிந்தனை பெருகும். சிந்தனை பெருகினால் சிறந்த படைப்புகளை உருவாக்கலாம்". இலக்கியங்களையும், சிறுகதைகளையும், குறும்படங்களாக நாம் எடுக்க வேண்டும். மக்களின் மாற்று ரசனையை அது வளர்ப்பதாகவே இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இவரது குறும்படத்திற்கான திறனாய்வை வாசிக்க


http://thamizhstudio.com/shortfilm_review_12.php


படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)