கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  முரளி G

கவிதா

 

குறும்படங்களில் அங்கதம் மிக அரிதாகவே இருக்கும். குறும்பட இயக்குநர்கள் தமக்கு கிடைக்கும்நேரங்களில் அறிவுரை மழைகள் அல்லது சோகம், இதைத் தாண்டிய எல்லைகளை குறுக்கிவிடுகிறார்கள். குண்டன் படம் கலை ரீதியில் மிகச் சிறந்ததென சொல்ல இயலாதெனினும் அதன் நகைச்சுவை நம்மைதொட்டுச் செல்லும். சில நேரங்களில் நம் அற்பத்தனமான‌ கற்பனைகளுக்கும் செயல்களுக்கும் காரணம் இராது. ஏதோ ஒன்றை மிகத் தெளிவாக புரிந்து கொண்டது போலவும், அந்த ஒன்றை இலக்காகக் கொண்டுஅடைவதற்கும் வழி கண்டடைந்தது போலவும் நம் செயல்களை அபத்தங்களால் நிறைத்து கொள்வோம்.இருத்தலியத்தை பற்றி சிந்திக்கும் போது அபத்தங்கள் மட்டுமே வாழ்வை சூழ்ந்து கொள்கின்றன.வாழ்வின் தரிசனங்கள் என்றும் மேன்னிலை என்றும் எத்தனை பெயரிட்டுக் கொண்டாலும் நம் முன் கரைகிற காலம்,நம்மை ஏளனம் செய்து கொண்டே இருக்கிறது.

நம் குண்டன் சதா காலமும் தொலைக்காட்சிப் பெட்டியும் நொறுக்குத் தீனிகளுமென பொழுதை போக்கிகொண்டு இருப்பவன். இவன் வீட்டிற்கு வரும் பெண் (குண்டன் காதல் கொண்டவள்), இவனுக்கு ஒரு டீசர்டை பரிசளிக்கிறாள். அதுவோ அளவில் மிகச் சிறியது. ஆடையை அணிய இயலாமல் போரடிப்பார்த்தவன் ஏக்கத்துடன் அதை அலமாரியில் மாட்டி வைத்திருக்கிறான். தன் நண்பனிடம் அவள்புகைப்படத்தைக் காட்ட அவன் இவன் பெரிய உருவத்தையும் அவளது மெலிய உருவத்தையும் காட்டிநகைக்கிறான். இருவருக்கும் பொருந்தாது என்பது போல் சாடை செய்கிறான். இதற்காக தன் உடலைக்குறைப்பத்தென முடிவு செய்கிறான். தீனிகளையும் குறைத்துக் கொள்ளத் தொடங்குகிறான். இவன்சோர்ந்து கொள்ளும் போதும், தீனிகளின் மேல் தாபம் கொள்ளும் பொழுதும் காதலியின் புகைப்படத்தைகாட்டி இவனை மறுத‌லிக்க வைக்கிறான். குண்டனுக்கு கனவுகளில் தீனிகளை உண்பது போலவே கனவு வருகிறது. அவன் உணவு விடுதிகளையும்,பலகாரக்கடைகளையும் ஏக்கத்துடனே பார்த்து அலைகிறான்.

ஆனால் அவன் எடை குறைவதாக மட்டும் தெரியவில்லை. ஒரு நாள் காதலிக்காக குண்டன் வாழ்த்து அட்டைகளை எழுதிக் கொண்டு இருக்கும் போது அவள் வீட்டிற்குள் வந்து விடுகிறாள். அவளிடம் அட்டையை தெரியாமல் மறைத்து விடுகிறான். அவன் வீட்டிற்கு அவள் தன் காதலனை அழைத்து வந்திருக்கிறாள். அவன் அதிர்ச்சியில் உறைகிறான்.அவன் அதிர்ச்சிக்கு காரணம் அவள் காதலன் அவனை விடவும் குண்டாக இருக்கிறான். வெறுத்துப் போனவன் தான் முன்னை இழந்த உணவுகளையும் சேர்த்து அவள் காதலனையும் மீறி குண்டாவதற்க்காக மீண்டும் நொறுக்குத் தீனிகளை கண்ணாடி முன் அமர்ந்து உண்ணத் தொடங்குகிறான்.

இனி குறும்பட இயக்குனர் திரு. முரளி G அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1. உங்கள் குறும்படத்தை நகைச்சுவைத் தொனியுடன் இருக்க வேண்டும் ஏன் முடிவு செய்தீர்கள்? உங்களுக்கும் நகைச்சுவைக்குமான விருப்பத்தைச் சொல்லுங்கள்?

குண்டன் குறும்படத்தின் கருவே நகைச்சுவையானதுதான். அதை வேறு விதமாக பார்க்க முடியாது. தவிர எனக்கு இயல்பாகவே நகைச்சுவையுனர்வுண்டு. நண்பர்களோடு பேசும்பொது பெரும்பாலும் சீரியஸாக உரையாடுவது குறைவுதான். எனது முதல் குறும்படம் ஒரு சீரியஸான கதையை கொண்டது. எனவே, அடுத்த குறும்படம் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

2. குண்டன் கதைக்கான கருவை எவ்வாறு உருவாக்கினீர்கள்? அதற்கான இன்ஸ்பிரேசனாக எதைச் சொல்வீர்கள்.?

நானும் எனது நண்பன் சூரஜ்-ம் (குண்டன் - ஒளிப்பதிவாளர்) அடிக்கடி எதாவது கதையை பற்றி பேசிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் பைக்கில் செல்லும்போது பின்னால் அமர்ந்து நான் அவனிடம் விளையாட்டாக சொன்ன கதைதான் இது. கேட்ட உடன் சிரித்தான். நன்றாக இருக்கிறது என்றான். இதை குறும்படமாக எடுக்கலாம் என்றான். எனக்கும் Start Camera, Action, Cut சொல்ல வேண்டும்போல் இருந்தது. சரி எடுக்கலாம் என்றேன்.

3. இக் குறும்படத்தில் இசை சரியாக பயன் படுத்தப் பட்டிருக்கிறது. உங்கள் இசை அமைப்பாளரை பற்றிச் சொல்லுங்கள்?

அனில்.N.C. குண்டன் படத்தின் இசையமைப்பாளர். இக்குறும்படத்தின் மிகச்சிறந்த விஷயம் அதன் பின்னனி இசை. முதலில் இதை மௌனப்படமாக செய்ய வேண்டும் என முடிவானதும் அதன் பின்னனி இசை எப்படி இருக்க வேண்டும் என நான் அவரிடம் பேசினேன். கார்த்தி உடற்பயிற்சி செய்யும்போது ஒரு Theme Music அதில் வர வேண்டும், பின் அவன் ஒரு பெண்ணை பார்த்து காதல் வயப்படும்போது ஒரு Romantic theme வர வேண்டும் என்றேன். நான் சொன்னதை உள்வாங்கி கொண்டு அவரும் தன் பங்கை சேர்த்து பிரமாதமாக இசையமத்தார். படத்தை இன்னொரு முறை இசைக்காக பாருங்கள் புரியும். நான் முழு நீள திரைப்படம் எடுக்கும் போதும் அனில் என்னுடன் இருப்பார்.

4. இப்படத்தை மௌனப்படமாக எடுப்பதற்கு ஒரு துணிவு வேண்டும். உங்கள் கதை மௌனப்படமாக நகர்வது வெற்றிகரமாக இருக்கும் என எண்ணக் காரணம் என்ன?

இப்படத்தின் கதை மிக இயல்பான எதார்த்தமான கதை. கதையின் எல்லா திருப்பங்களும் காட்சிகளாக புரியும்படியே உள்ளது. எனவே வசனம் அவசியம் இல்லை என நினைத்தேன்.

5. உங்கள் குறும்படத்தில் ந‌டித்த நடிகர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

குண்டனின் குண்டன் கார்த்தி. முதலில் இந்த கதையை யோசிக்கும்போதே அவன்தான் என் மனதில் வந்தான். அவனை தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய சொல்லி நிறைய சாப்பிட வைத்து நிறைய சிரமப்பட்டான். அதே போல் படம் பார்த்தவர்கள் அவன் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டினார்கள்.

6. நீங்க‌ள் சினிமா தொழில்நுட்ப‌ம் (DFT) ப‌டித்திருக்கிறீர‌க்ள். சினிமாவை ப‌ள்ளியில் க‌ற்ப‌து போல் க‌ற்பிக்க‌ முடியுமா?

முடியும். சினிமா பல கலைகளை உள்ளடக்கிய ஒரு கலை. சினிமா எடுக்க வருபவர்கள் அதன் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

7. உங்க‌ளோடு நிறைய‌ மாண‌வ‌ர்க‌ள் சினிமா தொழில்நுட்ப‌ம் ப‌டித்திருப்பார்க‌ள்.இன்றைகும் அவ‌ர்க‌ளின் நிலை ப‌ற்றிச் கூறுங்க‌ள்.அவ‌ர்க‌ள் எல்லோரும் க‌ன‌வுக‌ளைத் தொட‌ர்கிறார்க‌ளா?.

என்னுடன் படித்தவர்கள் தங்கள் கனவுகளில் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். அதில் சிலர் தனியாக படம் எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

8. ஒரு குறும்ப‌ட‌த்தின் இய‌க்கத்தை எவ்வாறு முன் வைப்பீர்க‌ள்.க‌தையை குறும்ப‌ட‌த்திற்கேற்ப‌ க‌ட்ட‌மைக்கும் சூட்சும‌ம் ப‌ற்றி ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ள்.

திரைப்படத்தின் இயக்கம் என்பது, ஒரு இயக்குநரின் தனிப்பட்ட திறன் சார்ந்தது. அவர் கையெழுத்து போல... எவ்வளவு படித்தாலும் எவ்வளவு படம் பார்த்தாலும் ஒருவர் அவரளவில் எப்படியோ, அப்படித்தான் அவர் இயக்கும் படமும் இருக்கும். குறும்படத்திற்கான கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. ஒரு கதையின் முழு சாராம்சம் எடுத்துக் கொண்ட நேரத்திற்குள் சொல்ல முடியும்படி அதன் திரைக்கதை அமைய வேண்டும்.

9. தமிழ்ச் சூழ‌லில் வணிக சினிமாவை விட குறும்ப‌ட‌த்தில் க‌லை நேர்த்திக்கான‌ சாத்திய‌ங்க‌ள் அதிக‌ம்.ஒரு க‌லைப் படைப்பை உருவாக்கும் எண்ண‌த்துட‌ன் இருக்கிறீர்க‌ளா?இருப்பின் கதைக்கான மாதிரி எதுவாக‌ இருக்கும்.

கலை நேர்த்தி என்பது, ஒருவரின் தனிப்பட்ட ரசனையை பொருத்தது. நல்ல இயக்குனர் தான் எடுக்கும் ஒரு வணிக படத்திலும் சிறந்த கலை நேர்த்தியை கொடுக்க கூடிய சாத்தியங்கள் உண்டு.

10. உங்க‌ள் குடும்ப‌ம் ப‌ற்றிச் சொல்லுங்க‌ள்.உங்க‌ள் சினிமா முடிவுக்கு வீட்டில் ஆத‌ர‌வு இருந்த‌தா?

அப்பா அம்மா நான் - அவ்வளவுதான் என் குடும்பம். என் சினிமா கனவை ஒரு பயத்துடன் இப்போதும் ஆதரிக்கிறார்கள்.

11. உங்க‌ள் எதிர்கால‌ போக்குக‌ள் என்ன?.மீண்டும் குறும்ப‌ட‌ங்க‌ள் எடுக்கும் எண்ன‌ங்க‌ள் இருக்கிற‌தா?

எதிர்கால நோக்கம் - நிச்சயம் திரைப்படம்தான். நான் எப்போது பார்த்தாலும் வெட்கப்படாமல் தைரியமாக ரசிக்கும்படியான திரைப்படம் எடுக்க வேண்டும். அதுதான் என் எண்ணம். குறும்படங்கள் நிச்சயம் எடுப்பேன். அதில்தான் Personal Diary எழுதுவது போன்ற சுகம் உள்ளது.

இவரது குறும்படத்தைக் காண:

http://thamizhstudio.com/shortfilms_kundan.php


படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)