கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  பிரசன்னா சுப்பிரமணியன்

முகில்

 

செத்தாழை குறும்படத்தின் இயக்குனர் பிரசன்னா. செத்தாழையில் தபால்காரன் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் பிரசன்னா. கிராமத்தில் நிகழும் சிறு பெண்ணுக்கும் பையனுக்குமான நட்பை கதையில் அழகாக விவரிக்கும் படம்.குடிகார தகப்பன் தன் சிறு பெண்ணிற்கு வ‌யதில் முதிர்ந்தவனை திருமணம் செய்து வைக்க அவள் இறந்து விடுகிறாள். பெண்ணின் குடிகார அப்பன், சிறு வயது திருமணம், மரணம் என்று கதை முடிவது அறிவுரை அல்லது சமூக கருத்து தொனியை படத்துக்கு கொண்டு வந்து விடுகிறது. பிரசன்னாவின் பேச்சுக்கிடையில் அவரின் தன் நம்பிக்கை வெளிப்ப‌டும். தீவிர வாசிப்பை மட்டும் அவர் மேற்கொண்டால் உச்சம் தொடுவது நிச்சயம்.

இதோ செத்தாழை இயக்குனர் பிரசன்னாவுடனான நேர்காணல்:

இனி குறும்பட இயக்குனர் பிரசன்னா சுப்பிரமணியன் அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1. கனவுத் தொழிற்சாலை எனப்படும் சினிமா, குறும்படங்கள் போன்றவற்றிற்கு ஆர்வம் மிக அவசியம். அதற்கான பொறி எப்போழுது உஙகளுக்குத் தோன்றியது?

நான் 11th படிக்கும்போது நானும் என் நண்பர் ஒருவரும் சினிமா பற்றி பெசிகொண்டிருப்போம், முக்கியமாக, ஏ. ஆர். ரகுமான் இசையை பற்றி..அப்படியே அது நாள் போக்கில் சினிமா இயக்கம் பற்றியும் விமர்சனங்கள் பற்றியும் போனது. இதற்கான பிள்ளையார் சுழி போட்டு, புது உலகத்தின் இருப்பையும் சொல்லி காண்பித்து அவர் தான். அது கல்லூரி காலத்திலும் தொடர்ந்தது. அதற்காக நான் என்றும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். சிறு வயதில், பள்ளிகூடங்களில், பார்க்காத படங்களை கூட பார்த்ததாக கூறி நண்பர்களிடம் நானாக கற்பனையில், அன்று தோன்றியதை கொண்டு கதைகளை சொல்வேன். வீட்டில் சின்ன சின்ன பொய்களும் சொன்னதுண்டு (அது யாரையும் பாதிக்காத விஷயமெனில்). இதுவும் கூட ஆர்வத்திற்கு காரணமாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை "A Writer/Creator Can be a Good Liar".

2. உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் ஆர்வத்தை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?..

நடுத்தர வர்க்கம். அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்ற அந்த காலத்து பள்ளிபடிப்பு வரை படித்த பெற்றோர். என்னை விட 10 வயது மூத்த ஒரு சகோதரி. படிப்பதானால் இருப்பதை எல்லாம் செலவளிக்க தயாரானவர்கள். இன்று வரை எனது சினிமா மற்றும் குறும்பட செயல்களுக்கு துணையாகவே நின்றிருக்கிறார்கள்.. எல்லா பெற்றோரை போலவும் தன் மகன் வாழ்கையில் வீழ்ந்து விட கூடாதென்கிற பயமும் கொண்டவர்களே.. ஆனால் அதை என் முன்னே வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக என் அப்பா. என் படங்களை பார்த்து நிறை குறைகளையும் சொல்லுவார்கள். செத்தாழை படத்தில், கடைசி நிமிடங்களில் (இறந்த செய்தியை கொண்டு) வரும் கதாபாத்திரம் என் தந்தையே.. அவரை என் படத்தில் நடிக்க வைப்பதும் என் லட்சியங்களில் ஒரு பகுதியாகும்.

3. இதுவரை எத்தனை குறும்படங்கள் எடுத்துள்ளீர்கள்?அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள்.

இதுவரை இரண்டு படங்கள். செத்தாழை இரண்டாவது. முதலாவதாக Y2K. நமக்கு என்ன தெரிந்திருக்கு என்பதை பார்ப்பதற்கும், கற்றுகொள்வதற்க்கும் எடுத்த படம் Y2K. நான் தங்கியிருந்த bachelor வீட்டை கொண்டு ஒரு கதை பின்னி என் நண்பர்களை கொண்டு எடுத்தேன். என் நண்பர்களின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கது. இதை நான் இயக்கினேன் என்று இது வரை நான் சொன்னதில்லை. இதை எடுத்தேன், அவ்வளவே. இது எனக்கு camera, editing, shot planning and music போன்ற அம்சங்களில் ஒரு idea கொடுத்தது. நிறைய குறைகளே தெரிந்தன.. ஆனாலும் அது ஒரு நல்ல experience.

"Knowing is not Doing, Doing is Doing,
If Knowing was Doing, then why people Marry"

Y2K ஒரு thriller. அடுத்து ஒரு உணர்ச்சிபூர்வமான படம் என்று தோன்றியது. இதுவே எனக்கு மிகவும் பிடித்த வகை. குழந்தைகள் வைத்து எடுக்க வேண்டும் என்பது எப்போதும் உள்ள ஒரு ஆர்வம். இவற்றை பிணைந்து கதை இருக்க வேண்டும் என்பது நோக்கம். அதுவே செத்தாழை.

பார்ப்பதற்கு நாடகம் போல் இல்லாமல் சினிமாவிற்கு இணையான காட்சி பதிய வேண்டும். அடுத்து technical குறைபாடுகள் குறைந்த படமாக அமைய வேண்டும் என்பதே குறிகோளாக இருந்தது. கூடுதல் கவனம் தேவை என்று அறிந்தோம். அதற்கேற்றாற்போல் கதையை simple ஆக பண்ணினோம். எனது ஒளிப்பதிவாளருக்கு (Y2K வின் போது) கொடுத்த வாக்கு படி outdoor shoot கொண்ட கதை எழுதப்பட்டது. அது அவருக்கும் ஒரு portfolio வாக அமைய வேண்டும் என்பது இன்னொரு குறி. Y2K வில் நடித்த நண்பர்களில் ஒருவர் வசந்த். அவரின் நடிப்பு மிகவும் பிடித்து போக அவரையே செத்தாழையின் தந்தையாக நடிக்கச்செய்தோம்.

4. நீங்கள் முதல் முறை குறும்படம் எடுக்க முனைந்தபோது சந்தித்த சவால்கள் தொழில்நுட்ப பிரச்சனைகள் பற்றிச் சொல்லுங்கள்.

இளம் கன்று பயம் அறியாது என்பதே... என்னவென்றே தெரியாத சூழலில் கஷ்டமும் தெரியல..எல்லாத்துக்கும் மேலாக நண்பர்களோடு செய்ததால் பெரிய கஷ்டம் தெரியல. ஆனால் அது எல்லாம் படப்பிடிப்பு வரை மட்டுமே.. எடிட் செய்வதற்கு ஏற்ப ஷாட் எடுக்கவில்லை. எடிட் பண்ணதை கொண்டு இசை அமைக்க உட்கார்ந்தா, இதை கொண்டு நான் என்ன செய்ய என்றார் இசை நண்பர். ஒரு வழியாக நினைத்ததை கடைசிவரை செய்து முடித்தோம்.

ஆழ ஆராய்ந்ததில் தெரிந்தது இதுவே.. என் ஒளிப்பதிவாளரின் guidance பெரும் பங்கு வகித்தது. திரைக்கதை வரை எழுத முடிந்த எனக்கு shot planning பண்ண முடியல.. எது எப்போ பண்ணனும், எப்படி பண்ணனும். நான் நினைத்தது எல்லாம் கேமரா கொண்டு ஆர்டிஸ்ட் முன்னாடி வைத்தால் ஒளிப்பதிவாளர் வேலை முடிந்தது. இருப்பதை வைத்து படமெடுக்க முனைந்ததால் பட்ஜெட் பிரச்சனை வரலை.

Lights ஓட importance தெரிஞ்சிது.. நம்ம மனசுக்குள் இருக்கிற frame வரவே இல்லை. நடிகர்கள் எல்லாம் புதியவர்கள். இயல்பான நடிப்பை கொண்டு வர கடினமாகத்தான் இருந்தது

5. நீங்கள் முதல் குறும்படத்தில் செய்த தவறுகள் எவை?அவை எவ்வாறு இரண்டாம் குறும்படத்தில் திருத்திக் கொள்ள உதவியது.

Planning. இதை செய்யாமல் போனது தான் முதல் தவறு.

Shots Planning ல் எடிட்டிங் இருப்பதை மறந்துவிட்டோம்.

Continuity இல்லாத shots .முடிந்த வரை ஒரு காட்சியை முடித்தபின் அடுத்த காட்சிக்கு போவதின் முக்கியத்துவம் தெரிந்தது.

Editing செய்யும் போதே இசையையும் ஓரளவு மனதில் கொள்ள வேண்டும் என்பது தெரிந்தது.
நடிகர்களிடம் எதை சொல்லவேண்டும், எதை சொல்ல கூடாது என்றும் தெரிந்தது.

இதை எல்லாம் ஓரளவு கவனித்து செத்தாழையில் வேலை செய்ய முடிந்தது.

செத்தாழை பார்த்த பின் என் அப்பா கூறியது, "நான் கூட படம் எடுக்கறேன்னு சொன்னவுடனே Y2K மாதிரி ஏதோ எடுக்க போறேன்னு நினைச்சேன். ஆனா இந்த அளவுக்கு இருக்கும்னு நினைக்கல."

இது எனக்கு கிடைத்த விமர்சனங்களில் முக்கியமானதாக எண்ணுகிறேன்.

6. செத்தாழை என்கிற பெயர் கவிநயமாக இருக்கிறது. அதன் பெயர் தேர்வை பற்றிச் சொல்லுங்கள்.

நிறைய பெயர்களை யோசித்தோம். எதுவும் மனசை தொடவில்லை. இந்த கதை ஒரு சிறுமியை சுற்றி நகர்வதால் அவள் பெயரையே வைக்க முடிவு செய்தேன். அந்த பெயர், எல்லோரும் அறிந்த தமிழ் பெயராக இருக்க கூடாது என்று நினைத்தேன். அது படத்தின் கருவையும் மறைமுகமாக தொட வேண்டும் என்பது இன்னொரு எண்ணம். என் நண்பர் ஒருவருடன் சேர்ந்து "சாவை வென்றவள்" என்ற அர்த்தம் கொண்ட பெயர்களை தேட முனைந்தோம். கடைசியில் அந்த நண்பரின் ஊரில் ஒரு பாட்டிக்கு இந்த பொருள் கொண்ட பெயர் இருந்தது. அதுவே செத்தாழை. கேட்டவுடன் பிடித்து போனது. (Thanks to Ravi.G)

7. சிறுவர்களுக்கு இடையில் தோன்றும் ஆண் பெண் நட்பை அழகாக படம் பிடித்துள்ளீர்கள். செத்தாழையின் கதை உருவாக்கம் பற்றிச் சொல்லுங்கள்.

முன்பே சொன்னது தான். சிறுவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது எப்போதும் உள்ள ஆர்வம். இந்த முறை எடுக்கும் படமே என் கடைசியாக கூட இருக்கலாம் என்று ஒரு புறம் என் மனசு சொல்லிகொண்டே இருந்தது. எல்லா கதையும் ஒரு image ல் இருந்தே உருவாகும். அப்படி நான் பார்த்த ஒரு குடிகாரன், அவன் நடை, மற்றும் அந்த நேரத்தில் சென்ற ரயில். இது எல்லாம் பின்னி எழுத தோன்றியது. ஆனால் இங்கு emotion எங்கு உள்ளது? மூன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் படித்தது, குழந்தை திருமணம். அது அன்றே என்னை பாதித்த விஷயம். அதன் இன்றைய நிலையை internet உதவியுடன் தேடினேன். இத்தனை வருடங்களுக்கு பிறகும் பெரிய முன்னேற்றம் இருந்ததாக தோன்றவில்லை. அதையும் இணைத்து திரைக்கதை அமைக்க முடிந்தது. ஒரு முழுமை தெரியும் வரை திருத்தம் செய்வது என் பழக்கம். 4 முறை திருத்தம் செய்தேன்.

எண்ணம்:

கதை படி அந்த சிறுமிக்கு நேரும் முடிவு நமக்கு சிறிதேனும் கவலையை கொடுக்க வேண்டும். ஒரு இழப்பில் தான் நமக்கு வலி தெரியும்.

ஆனால் எல்லா இழப்பும் கவலையை தராது. அதனுடன் நம் உறவு வலுவாக இருக்கவேண்டும். ஒரு நட்பின் இழப்பு பெரிது, தாங்ககூடியாத என்று எனக்கு தெரியாது. (கடவுள் புண்ணியத்தில் இன்று வரை அப்படி எதுவும் நிகழவில்லை. நிகழவும் வேண்டாம்.). ஒரு சிறுவன் - சிறுமி நட்பு பார்பதற்கும் கதையை நகர்த்துவதற்கும் எதுவாக இருக்கும், முக்கியமாக, Audience அந்த சிறுவன் வழியாக travel செய்ய வேண்டும், நாம் நினைக்கும் emotion வெளி வருவதற்கு. எல்லாவற்றிருக்கும் மேலாக, சிறுவன் - சிறுமி நட்பு அளவோடும் அழகாகவும் இருத்தல் முக்கியம்.

8. உங்கள் கதை நேரடியாக அறிவுரை சொல்லாமல் கதை அதன் போக்கில் நகர்ந்தது சிறப்பாக இருந்தது. ஆனால் இறுதியில் காட்சியின்றி வரும் வரிகள் படத்தில் கலைத்தன்மையை குழைத்து விடுகிற‌து. அதை தவறான தமிழ் சினிமாவின் பாதிப்பு என்றே சொல்ல வேண்டும். இந்த விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?

தவறான சினிமா என்பதை விட பழைய சினிமா வடிவில் என்று சொல்லலாமா? என்னை பொறுத்தவரை சரி-தவறு என்று எந்த படத்தையும் சொல்லி விட முடியாது.

பிடித்தது-பிடிக்காதது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

" There are no Rights and Wrongs, there are only Likes and Dislikes"

என் மனதில் தோன்றிய வடிவில் எடுத்துள்ளேன், முடிவின் சுமையை கூட்டும் என்று நினைத்து. நீங்கள் கூறிய இதே கருத்து வேறு சிலரும் கூறியிருக்கிறார்கள்.

இன்னொரு புறம், அது மிகவும் பொருத்தம் என்றும், எங்களால் அதை உணரமுடிந்தது என்றும் சொல்லிருக்கிறார்கள்.

தமிழ் ஸ்டுடியோவின் வின் 25 மாத விழாவில், இது திரையிட்ட போது, விருந்தினர் ஒருவர் பேசுகையில், இந்த வரிகள் அவருக்கு மிகவும் பிடித்தது என்று கூறினார்.

என்னை பொறுத்தவரை, எனக்கு கிடைத்தது, mixed reactions. ஆனால் நீங்கள் சொல்வதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. :)

9. தீவிர வாசிப்பின்றி குறும்படங்களையும் சினிமாவையும் எடுத்து விட முடியுமென நினைக்கிறீர்களா?. எந்த அளவு வாசிப்பு தேவை?

முடியும். ஆனால் நல்ல படம் எடுப்பது சந்தேகம் தான். முதல் இரண்டு அல்லது மூன்று படங்கள் ஒரு creator, தன கடந்த கால வாழ்கையை சுற்றியே செய்து விட முடியும், ஆனால் செம்மையாக செய்ய முடியாது.

வாசிப்பு மிக முக்கியம். என்னிடம் இருக்கும் knowledge crisis யை வைத்தே சொல்கிறேன்.

அது தான் input. இது இல்லாமல் no output. வாசிப்பு என்றவுடன் சிறுகதைகள், நாவல்கள் தான் என்றில்லை. ஏதாவது ஒன்று உள்ளே போய்கொண்டே இருக்கவேண்டும்.

10. வேறு குறும்படங்கள் எடுக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா. அதற்கான ஆயத்தங்கள் எவ்வாறு இருக்கிறது?

ஆம். அடுத்ததுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம் என் நெருங்கிய நண்பர்களிடம் கதையையும் விவரித்தேன். அவர்களுக்கு பிடித்து போனதும் எழுத்து வேளைகளில் இறங்கிவிட்டேன்.

தமிழ் ஸ்டுடியோவின் "படமெடுக்கலாம் வாங்க" பகுதிக்கு விரைவில் வருவோம்...

தமிழ் ஸ்டுடியோ இதுவரை எங்களுக்கு கொடுத்த ஊகத்துக்கு நன்றியை இதன் மூலமாகவும் தெரிவித்துகொள்கிறேன்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)