கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  ஆண்டனி மைக்கேல்

ஸ்ரீகணேஷ்

 

யுகங்கள் தோறும் மாறி வரும் மனித மனதில் மாறாத ஒரே விடயம், தான் வாழ்வதற்காக எதையும் செய்து விடும் துணிச்சல். இது மனித இனத்திற்கு மட்டுமல்ல. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இயற்கை வைத்திருக்கும் பேரறிவு இதுதான். நாம் வாழ என்னவேண்டுமானாலு செய்யலாம். "Fittest will survival" என்பது போல் இதில் வலுவுள்ளவன் பிழைத்துக் கொள்கிறான். ஆனால் மற்ற எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒன்று மனிதனுக்கு இருக்கும் குறுக்கு புத்தி. இந்த உலகமே தனக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்கிற கருத்தில் அசைக்க முடியாத நங்கூரம் பாய்ச்சிய நம்பிக்கையோடு இருக்கும் மனிதனின் அகந்தையை கலை வழியே மட்டும் தான் அசைத்துப் பார்க்க முடியும்.

கலையின் இன்னொரு வெளிப்பாடுதான், திரைப்படக் கலை. அதுவும் உண்மையை பொட்டில் அறைந்தார் போல் சொல்வதற்கு காட்சி ஊடகங்களில் ஆவணப்படத்துறை ஒரு படி மேல் போய் நிற்கிறது. புலிகளை பார்த்து பயந்த காலம் போய் இன்று அவைகளை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது. அந்த பரிதாபம் கூட உணர்வளவில் மட்டுமே வந்து விட்டுப் போய்விடுகிறது. ஆனால் புலியை பார்த்து பரிதாபப் பட நாம் யார்? அந்த பரிதாபத்தின் தொடக்கப் புள்ளியே நாம்தான். புலி யாருக்கு ஆவணப்படம் அதைத்தான் சொல்கிறது. புலிகள் பற்றி கள ஆய்வுகள் செய்து, ஆவணகளைத் திரட்டி அரும்பாடுபட்டு புலி யாருக்கு எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் ஆண்டோ. இனி அவரோடு கொஞ்சம் பேசலாம்.

1. உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

ஆண்டனி மைக்கேல் என்கிற ஆண்ட்டோ.
பிறந்த ஊர்- ஆத்தூர், சேலம் மாவட்டம்.
பிறந்த நாள்- 2 .10 .1960
படிப்பு- புகுமுக வகுப்பு

மூன்று பிள்ளைகளுக்கு (ஜெனி, சைமன், ரபேல்) தந்தை. மனைவி நோயல்மேரி, ஜீவனத்திற்காக ஒரு தொண்டு நிறுவனப் பணியாளர்.
- ஆத்மார்த்த ஈடுபாடு- மாற்று ஊடக முயற்சிகள்.
- மாற்று சினிமா திரையிடல்- ஆவணப் படம் எடுத்தல்.
- சிறந்த சினிமா சேகரிப்பு- வீதிப் புகைப்படங்கள்
- புகைப்படக் கண்காட்சி- திரைப்பட விழா நடத்துதல் போன்றவை.

2. தன் படைப்பை, தன் கற்பனைத் திறனை திரையில் பார்க்கும் ஆர்வத்துடன் நிறைய நண்பர்கள் இந்த துறைக்கு வருகிறார்கள். ஆனால் ஆவணப் படத் துறைக்கு பெரும்பாலானவர்கள் வரத் தயங்குவதேன்? அதையும் தாண்டி நீங்கள் இந்த துறைக்கு வருவதற்கான காரணம் என்ன?

படப்பிடிப்பு - படத்தொகுப்பு வேலைகள் எளிதாகியுள்ளன. திரைப்பட ஈடுபாடுள்ளவர்கள் முதலில் அனுபவங்களுக்காக இங்கே வருகிறார்கள். சினிமா வேறு குறும்படம் வேறு என்கிற தெளிவின்மை. எனினும் ஆங்காங்கே சில நல்ல முயற்சிகள் நடக்கின்றன.

யாருக்காக எடுப்பது? என்ன எடுப்பது? செலவு எவ்வளவு? பார்வையாளர்கள் யார்? எங்கே கொண்டு பொய் சேர்ப்பது? இந்த 5 கேள்விகளுக்கும் விடை தெளிவாகத் தெரிய வேண்டும்.


3. நீங்கள் இதுவரை எடுத்துள்ள ஆவணப்படங்கள் என்னென்ன? அதற்கான தளம் உங்களுக்கு எப்படி வாய்த்தது?

இது வரை எடுக்கப்பட்டுள்ள குறும்படங்கள்- 14

1 . சிறப்பாக ஒன்றுமில்லை- 2005
2 . தும்பலில் இன்று குடியரசு தினம்- 2006
3 . இரண்டு சுவிடன் பொடியர்கள் - 2005
4 . கனவுப் பாலம்- 2005
5 . நாங்க படிக்கிறோம்- 2006
6 . படையல்- 2007
7 . கொட்டான்குச்சியும், மூங்கிலும்- 2007
8 . காமராஜபுரம்- 2007
9 . உலகமயமாக்கல்- 2008
10 சந்ததி- 2008
11 கையும் எந்திரமும்- 2008
12 மூவிங் வித் ஸ்டில் கேமரா-
13 புலி யாருக்கு? - 2010
14 பேரா.ஆல்பர்ட் ஆளுமைப் பதிவு

விவசாயிகள் போராட்டம், சுனாமிக்குப் பிறகான கடற்கரை, இரண்டு நண்பர்கள், பாலத்தின் தேவை, குழந்தைகளின் கல்வி, தலைவர்களும் பிறந்தநாள்களும்,. தெருவோரக் கலைஞன், தாராளமயமாக்கல் விழிப்புணர்வு, ஏழ்மை, இயலாமை, எந்திரமயமாக்கல், புகைப்படக்கலை, சுற்றுசூழல் விழிப்புணர்வு போன்றவை கருக்களாகக் கொண்ட ஆவணப்படங்கள்.

இயல்பான எனது வாழ்க்கைப் போக்கில் பணிகளின் ஊடான எனது பயணத்தில் கருக்கள் என்னை படமெடுக்கத் தூண்டுகின்றன. பட்ஜெட் பற்றிக் கவலைப்படாமல், எதிர்விளைவுகள் பற்றி யோசிக்காமல், திரைக்கதை என்று எதுவும் முன்வரைவு செய்யாமல் காமெராவை கையில் எடுக்கிறேன். எனது மூளையின் வேலைத் திட்டப்படி பதிவு செய்கிறேன். கொஞ்சம் நிதானமாக தொகுக்கிறேன். அவ்வளவு தான். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, திரையிடல் பற்றி எனக்கு நடைமுறையில் தெரிந்திருப்பதால் பலருக்கு ஏற்படும் பிரச்சினைகள் எனக்கு ஏற்படுவதில்லை.

4. "புலி யாருக்கு"? படத்தின் தேவை என்ன?

நீலகிரி மாவட்டத்தில் 2006 ல் வனத்துறை மூலம் புலிவளர்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. மத்திய அரசு காடுகளில் 321 ச.கீ.மீ. யாரும் இருக்கக் கூடாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு காடுகளை நம்பி வாழும் ஆதிவாசிகளுக்கும், நீண்ட காலமாக வசிப்போருக்கும் வாழ்வுரிமை பிரச்சினையாக வெடித்தது.

மழைப் பகுதிகளில் செயல்படும் மனித உரிமைப் பணியாளர்களின் கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் வெளிப்படுத்தவே இந்த ஆவணப்படம் எடுத்தேன். மற்றபடி எனக்கு புலிகளின் மேல் காதலும் இல்லை, விரோதமும் இல்லை.

புலிகள் மட்டும்தான் கணக்கெடுக்கப்பட வேண்டுமா? பிற விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மனிதர்கள் பற்றி அரசு என்ன சொல்கிறது என்பதே கேள்வி.

சுற்றுசூழல், வனப்பாதுகாப்பு, விலங்குகள் சரணாலயம் இதெல்லாம் அரசாங்கத்தால் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதோடு அவை சிலரின் சுயநலக் கொள்கைக்காக சுரண்டப்படுவதே உண்மை.

5. ஆவணப்படம் எப்படியிருக்க வேண்டும்?

ஒரு ஆவணப்படத்தில்,
1 . உண்மை இருக்க வேண்டும்
2 . சமூக விசாரணை இருக்க வேண்டும்.
3 . கலாச்சார அம்சங்கள் இருக்க வேண்டும்.
4 . அது பன்முகத் தன்மையோடு இருக்க வேண்டும்
5 . வினா-எதிர்வினா, கேள்வி-பதில் போன்ற தன்மைகளும் இருக்க வேண்டும்.


6. யாருக்காக ஆவணப்படம் எடுக்கிறீர்கள்?

ஆதிக்கத்தால், சுரண்டலால், சுயநலத்தால் பாதிக்கபடுபவர்களுக்காக நான் படமெடுக்கிறேன்.

7. உங்களால் மாற்றம் ஏற்படுமா?

கண்டிப்பாக..... நடைமுறையில் ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமூக நல, பொருளாதார திட்ட வரையறையில் சில பரிந்துரைகளை செய்ய முடியும் என்று கருதுகிறேன்.

8. இந்த ஆவணப்படம் எங்கெங்கு திரையிடப்பட்டுள்ளது?

நண்பர்கள், செயல்பாட்டுக் குழுக்கள், கல்வி மையங்கள் மூலம் மதுரை, நெய்வேலி, சேலம், தஞ்சாவூர், தேவக்கோட்டை, நாகர்கோவில், சென்னை போன்ற இடங்களில் திரையிட்டோம். நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் திரையிடப்பட்டது.

9. ஆவணப்படங்கள் இங்கு யாரால் வரவேற்க்கபடுகின்றன? எப்படி?

திரைப்பட சங்கங்கள், அறிவாளிகள், மாற்றுக் கல்வி மையங்களில் கொஞ்சம் பார்க்கப்படுகிறது. படங்களின் கருப்பொருள்கள் பார்வையாளர்களுக்கு நெருக்கமானால் வரவேற்கப்படலாம். என்ன இருந்தாலும் ஒரு படைப்பாளி தான் படைப்பை கூவி விற்றுத்தான் ஆக வேண்டும்.

10. ஆவணப்படம் என்றால் என்ன என்பதற்கான சரியான புரிதல் இங்கே இருப்பதாக உணர்கிறீர்களா?

குறும்படம்-ஆவணப்படம் குறித்த குழப்பம் அதிகமுண்டு. வணிகமயமான சினிமாவின் புரையோடிய தாக்கம் தான் இது. சீரியல் சினிமா அல்லது அரைகுறைப் படங்கள் பார்க்கும் இவர்களை பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.

11. அதற்கு என்ன செய்யணும்?

மக்கள் நலன் கருதி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு நம்மாலான உதவி செய்வது, பிறமொழி ஆவணப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துதல்- தேடல் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஆவணப்படங்களை தொகுக்கலாம்.

12. காடுகளில் மக்கள் வசிக்கக் கூடாது என்கிற விதி தளர்த்தப்பட்டாலும் இப்போது அந்த சட்டம் எப்படி பின்பற்றப்படுகிறது?

பணமுள்ளவர்கள், அரசியல்வாதிகள் மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் (குறைந்த விலையில்) நிலங்களை வாங்க உதவியிருக்கிறது. வனத்துறையின் நெருக்கடிகள் முற்றி உலகமயமாதலால் உருவாகியுள்ள பொருளாதார சூழலின் காரணமாக ஆதிவாசிகள் நிலத்தை இழந்து சமநிலத்திற்கு விரட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.

13. இறுதியாக "புலி யாருக்கு"?

புலி எல்லோருக்கும் வேண்டும். இயற்கைச் சமநிலையை கருத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையே"புலி யாருக்கு"? ஆவணப்படம் சொல்கிறது. இன்னும் சொன்னால், புலி வேண்டும்- காடுகள் வேண்டும், பிற உயிர்கள் தாவரங்கள் வேண்டும்- அதோடு மனிதனின் வாழ்வுரிமை பறிக்கப்படாமல் இருக்கவேண்டும் . அவ்வளவு தான்.

காட்டுயிரின் வாழ்வியல் சுழற்சியில் புலிக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. பிற உயிரினங்கள் அதற்கும் கீழ். வெள்ளைக்கார மேலாதிக்க வன நிர்வாகப் பார்வையில் மனிதன் புறந்தள்ளப்படுகிறான். அதே காலனியாதிக்கப் பார்வை இங்கும் முன்வைக்கப்படுகிறது. காலங்காலமாக வனத்தில் வாழும் மனிதன் எங்கே போவான்?

இவரது ஆவணப்படத்தைக் காண:

http://thamizhstudio.com/shortfilms_puliyarukku.php

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)