கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - க. ராஜ்குமார்

ஆதவன்  

எனது நூலகத்தின் கதை எனும் குறும்படம் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கி இருக்கும் ராஜ்குமார் சென்னையை சேந்தவர். பாடப் புத்தகங்களை விட பொதுவான புத்தகங்களே தனக்கு அதிகம் கற்றுத் தருகின்றன என்கிற கருத்தில் இவரது இந்தப் படம் தொடங்குகிறது. பிரபல புத்தகக் கடைக்கு சென்று புத்தகம் வாங்குவது போல் நடித்து ஒவ்வொரு புத்தகமாக திருடிக் கொண்டுவந்து தனது வீட்டிலேயே நூலகம் அமைக்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் கடைக்காரிடம் பிடிபடுகிறான். பின்ன தான் திருட அந்த புத்தகம் எப்படியும் தனக்கு வேண்டும் என்கிற நோக்கில் மீண்டும் அந்த கடைக்கு படையெடுக்கிறான்.

ஆனால் இம்முறை திருடுவதற்கு அல்ல. அப்புத்தகத்தை வாங்குவதற்கு. ஆனால் வழக்கம் போல் தனது கை புத்தகத்தை சட்டைக்குள் ஒளித்துவைக்க நினைக்கிறது. அப்போது ஒரு கை அதனை தடுக்கிறது. அது வேறு யாருமல்ல. அதே இளைஞனின் மற்றொரு கை. இப்படியாக முடிகிறது கதை.

ஒரு கல்லூரி மாணவரின் இந்த முயற்சியை முதலில் நாம் பாராட்டியே தீரவேண்டும். புதுபுது கோணங்கள், நல்ல வண்ணம் என நம்மை திகைக்க வைக்கிறார். இக்குறும்படம் ஆங்காங்கே திகில் காட்சிகளுடன் நகர்வது இயக்குனரின் கை வண்ணம். கலை ரசனை மற்றும் முயற்சிக்கு நமது பாராட்டுகள். மேலும் இறுதியில் இளைஞன் திருந்துவது போன்றக் காட்சி வைத்தமைக்காக ராஜ்குமாருக்கு ஒரு சபாஷ். மேலும் பல நல்ல படைப்புகளை ராஜ்குமாரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

இனி ராஜ்குமாருடன் ஒரு நேர்காணல்:

குறும்படத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட எண்ணக் காரணம்?

6வது செமிஸ்டர் தேர்வு முடிவுகள் வந்தாகிவிட்டது, எனக்கு 19 அரியர்ஸ்.

காரணம் தானாகவே உங்களுக்கு விளங்கிருக்க வேண்டும். இன்னும் 2 செமிஸ்டர் வீணடிக்க வேண்டிருக்கிறது. நான் ஒரு கனவு துரத்தி. (Dream Chaser). உலகத் தரமான சினிமாக்களை தமிழ் மொழியில் இயக்க வேண்டுமென்பதே எனது கனவு. சினிமாத் துறையில் எனக்கு யாரையும் தெரியாது. உதவி இயக்குநராக சேர்ந்து சினிமா நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென்பது எனதெண்ணம். காத்திருக்கும் எல்லோருக்கும் கதவுகள் திறந்து விடுவதில்லை, சிபாரிசுகள் நிச்சயம் வேண்டும். சிபாரிசு செய்யும் அளவிற்கு எனக்கு சினிமா துறையில் யாருமில்லை. உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள நான் தகுதியுடையவன் என்பதை காட்டுவதற்குத் தான் இந்த குறும்படம்.

உங்கள் முதல் பட அனுபவம் எப்படி இருந்தது?

"எனது நூலகத்தின கதை" (The Story of My Library) எனது முதல் படம். இந்த படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரம் என்னுடைய பிரதிபலிப்பு. கதையில் வரும் சம்பவங்கள் 80 சதவிதம் உண்மை 20 சதவிதம் கற்பனை. அந்த 20 சதவிதம் வேறுயாரோ ஒருவரின் வாழ்க்கையில் நிச்சயமாக நடந்திருக்கும். இந்த குறும்படத்தை மொத்தம் ஏழு நாள் படப்பிடிப்பு செய்தோம். பெரும்பாலான இடங்களில் பணப்பற்றாக்குறையால் என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. படப்பிடிப்பு தொடங்கும் முன் படத்தில் வரும் ஒவ்வொரு புத்தகக் கடையிலும் அனுமதிக்காக குறைந்தது ஒரு மாத காலமாக அழைந்தோம். படத்தின் திரைக்கதை படி என்னால் இப்படத்தை இயக்க முடியாத சூழ்நிலை, காரணம் பணம்.எனது இசையமைப்பாளருக்கு இன்னும் நான்காயிரம் ருபாய் நான் தர வேண்டும். INDIAN GANGSTERS என்னும் எனது அடுத்த குறும்படத்தை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். யாரேனும் தயாரிப்புச் செலவுகளை ஒற்றுக் கொள்ள முன்வந்தால் திரைக்கதை எழுத ஆரம்பிப்பேன்.

தமிழ்நாட்டில் உங்களுக்கு நல்ல களம் அமைந்து இருப்பதாக உணர்கிறீர்களா?

தமிழக மக்கள் நல்லத் திரைப்படங்களையும் , வழக்கமான சினிமாத்தனம் கொண்ட திரைப்படங்களையும் பிரித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். தரமான சினிமாக்களை ரசிக்கின்றன.நான் இயக்குனராகிய என்னுடைய முதல் வெளிவர இன்னும் சில வருடங்களாகலாம், இந்தக் கால இடைவேளையில் உலகத்தரமான சினிமாக்களையும் , எதார்த்தமான சினிமாக்களையும் தரமறிந்து விமர்சிக்குமளவிற்கு வளர்ந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

ஆகையால் நிச்சயமாக என்னுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்த தமிழ்நாட்டில் நல்ல களம் அமைந்திருப்பதாகவே உணர்கிறேன்.

குறும்படத் துறையை எப்படி பார்க்கிறீர்கள்? மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காரனியாகவா? அல்லது மக்களின் பொழுது போக்கிற்கான களமாகவா?

பொதுவாகவே ஊடகங்கள் இவை இரண்டிக்குமே சாத்தியமானவை. விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியான குறும்படங்கள் உண்மையிலேயே எந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன என்பது தெரியவில்லை. உண்மையில் குறும்படத்துறையை குறும்படத்துறையாக மட்டுமே பார்க்கிறேன், இத்துறையில் யார் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம், வரைமுறைகள் ஏதுமில்லை என்று நம்புகிறேன்..

உங்களுக்கு பிடித்த குறும்பட / ஆவணப்பட இயக்குனர் யார்? ஏன்?

உலக சினிமாக்கள் நிறைய பார்ப்பது வழக்கம். மிக குறைவான குறும்படங்கள், ஆவணப்படங்களே பார்த்துள்ளேன். பிறமொழி குறும்படங்களும் பார்த்ததுண்டு.

பிடித்தமான குறும்பட இயக்குனர் என்று குறிப்பிட்டு யாருமில்லை. உண்மையைச் சொல்லப் போனால் எந்த இயக்குனர் பெயரும் நினைவிலில்லை.கிடைக்கும் குறும்படங்களையெல்லாம் பார்ப்பேன்.

இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பேர் குறும்பட / ஆவணப்படத்துறையில் நுழைகிறார்கள்? இது வரவேற்கத்தக்கதா?

நிச்சயமாக வரவேற்கத்தக்கதே. சமூக பிரச்சனைகளையும் , தனி மனித கருத்தையும், அனுபவங்களையும், கற்பனையையும் எந்தவித சினிமாத்தனமுமில்லாமல் பார்வையாளகர்களுக்கு கொண்டு செல்லும்படியான

குறும்பட / ஆவணப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் எக்காலத்திற்கும் வரவேற்க்கத்தக்கவர்களே.

உங்கள் எதிகால திட்டங்கள் பற்றி சொல்லுங்களேன்?

முன்பு சொன்னதுபோல் “ உலக தரமான சினிமாக்களை தமிழ் மொழியில் இயக்க வேண்டும், ஒரு தரமான இயக்குனரென்று, உலகத்தினரால் அறியப்பட வேண்டும். “ இதைத் திட்டமென்று சொல்வதை விட, இதற்காகத் தான் நான் பிறந்துள்ளேன் என்பேன்

உங்கள் நல்ல திட்டங்களுக்கு மக்களிடம் இருந்து எப்படிப் பட்ட உதவியை எதிர்பார்க்கிறீர்கள் ?

சிறந்த குறும்படங்களை, திரைப்பட இடைவேளையில் திரையிட திரையரங்குகள் முன்வர வேண்டும். மக்கள் நல்ல படங்களையும் இயக்குனரையும் ஊக்கப்படுத்தினாலே போதும்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)