கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - எம். பாலாஜி

ஆதவன்  

புதையல், கனவு கீர்த்தனை எனும் குறும்படங்கள் மூலம் நமது கவனம் ஈர்க்கும் பாலாஜி இதுவரை நான்கிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் எடுத்துள்ளார். தலைமுறை இடைவெளிகளை பற்றி மிக அழகாக விவரிக்கும் இவரது "கனவு கீர்த்தனை" குறும்படம் விட்டுக் கொடுத்து போவதன் அருமையையும் அழகாக விவரிக்கிறது. மேலும் இவர் இயக்கிய "புதையல்" எனும் குறும்படம் 2007 ஆம் ஆண்டு நெய்வேலி புத்தகக் காட்சியில் நடைபெற்ற குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது. படிப்பில் திறமை மிக்க இவர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு திரைப்படத் துறைக்கு வந்துள்ளார்.
திரைப்படத்தை கற்க வேண்டுமானால் அதிக அளவிலான திரைப்படங்கள் எடுத்துதான் கற்க வேண்டும் என்ற நிலைப்பாடு இவருடையது.

இனி பாலாஜியுடன் ஒரு நேர்காணல்

முதலில் உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

நான் திருச்சிக்காரன். காம்பின் பள்ளியில் படித்து பின்னர் எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியில் பொறியியல் சேர்தேன். நன்றாகப் படித்து மெரிட்டில் தான் பொறியியல் சேர்ந்தேன். ஆனால் திரைப்படம் மீது இருந்த ஈர்ப்பால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு யாருடைய உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். எனது குறும்படங்கள் திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றது. பின்னர் எல்.வி. பிரசாத் பிலிம் அகாடமி இல் படத்தொகுப்பு மற்றும் ஒலி வடிவமைப்பு துறையில் தேர்ச்சிப் பெற்றேன். பின்னர் நான்கு மாத காலம் அனிதா உதீப் அவர்களிடம், ;குளிர் 100 டிகிரி படத்தின் ப்ரீ ப்ரடக்சின் வேளையில் பணிபுரிந்தேன்.

பின்னர், தொடர்ந்து எனது குறும்படங்களை இயக்கிக் கொண்டிருந்தேன். எனது "புதையல்" எனும் குறும்படம் சோனி நிறுவனம் நடத்திய "கேட்வே டு ஹாலிவூட்" போட்டியில் இந்திய முழுவதும் வந்திருந்த பதினெட்டு போட்டியாளர்களுள் ஒருவனாக இரண்டாவது கடைசி சுற்று வரை சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடைசி ஆறு போட்டியாளர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், எனது குறும்படங்களான "புதையல்" , :கனவுக் கீர்த்தனை" போன்றவற்றை பார்த்த திரைப்பட இயக்குனர் திரு. பாலாஜி சக்திவேல் அவர்கள் என்னை நேரில் அழைத்து பாராட்டிய விதம் எனக்கு மேலும் புத்துணர்ச்சியை கொடுத்தது.

தற்போது சுதா கொங்காரா இயக்கி வரும் "துரோகி" எனும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இப்படம் முடிந்ததும் நானே புதிய படம் ஒன்றை இயக்கம் முடிவில் இருக்கிறேன். அதற்கான தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறேன்.

குறும்படத்துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

நான் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் படித்துக் கொடிருக்கும்போது எனது பெற்றோர் எனக்கு ஹாண்டி கேமரா ஒன்றை வாங்கி கொடுத்தனர். அப்போதுதான் நான் முதன் முறையாக ஒரு வீடியோ காமிராவை கையால் தொடுகிறேன். அதே நாள் இரவில் எனது காமிராவை சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டேன். பின்னர் என் ஒரு குறும்படம் எடுத்துப் பார்க்கக் கூடாது எனத் தோன்றியது. பின்னர் ஒரு சிறு கான்செப்டை உருவாக்கி அதே இரவில் ஒரு குறும்படம் ஒன்றை நடித்து, இயக்கி, நானே படத்தொகுப்பும் செய்தேன். அதுதான் எனது முதல் குறும்படம் "வெளிச்சம்"

என்னைப் போன்ற திரைப்படம் சாராத குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு திரைப்படத்த் துறையில் servadhu அவ்வளவு yelidhalla. குறும்படங்கள் எடுத்து நம்மை நாமே தயார்ப் படுத்திக் கொள்வதே சிறந்த வழி.

திரைப்படங்கள் பற்றி படிக்க அதிக அளவிலான குறும்படங்கள் எடுப்பதே சிறந்த வழி என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நீங்கள் எடுத்தக் குறும்படங்கள் பற்றி கொஞ்சம் விளக்குங்கள்?

எனது முதல் குறும்படம் "வெளிச்சம்" தற்கொலை என்பது தோல்வி அடைந்தவர்களின் கடைசி ஆயுதம் அல்ல என்பதை விளக்கும் குறும்படம். மன அழுத்தத்தை போக்கும் ஒரு ஆலோசகின் கதை இது.

"த ம்யுட் போயட்" இந்தக் குறும்படம் ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடியது. காது கேளாத வாய்ப் பேச முடியாத ஒருவன் படைக்கும் பாடல் / கவிதை பற்றிய கதை.

"டால் இன் த டார்க்நெஸ்" குழந்தைகளுக்கு பெற்றோரால் ஏற்படும் மன அழுத்தத்தை பற்றிய குறும்படம்.

"வா வாத்தியாரே" சென்னையின் வட்டார மொழியை பற்றிய குறும்படம்.

"புதையல்" முதியோர்கள் முதியோர் இல்லத்தை விரும்புவது இல்லை மாறாக தங்கள் பிள்ளைகளுடன் வாழவே விரும்புகிறார்கள் என்பது பற்றிய பதிவு.

"கனவு கீர்த்தனை" தலைமுறை இடைவெளியை பற்றி நான் செய்திருக்கும் பதிவு.

குறும்படங்களுக்கான களம் தமிழ்நாட்டில் உள்ளதாக உணர்கிறீர்களா?

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு சில தொலைகாட்சி ஊடகங்கள் மட்டுமே குறும்படத் துறையை அறிந்து விட்டிருந்தன. ஆனால் தற்போது இணைய வருகை மற்றும் பல்வெர் திரைப்பட விழாக்கள் குறும்படங்களுக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

உங்கள் குறும்படங்கள் மக்களை சென்றடைய எத்தகைய வழிமுறைகளை கையாண்டீர்கள்?

திரைப்பட விழாக்கள் மற்றும் குறும்படப் போட்டிகள் மூலமே யானது குறும்படங்கள் அறியப்பட்டன. மேலும், இணையதளத்தில் காணப்படும் சர்வதேச போட்டிகள் மூலமும் எனது குறும்படங்கள் அறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி எனது குறும்படங்கள் "மக்கள்" தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதால் பரவலான மக்களை சென்று அடைந்தது.

குறும்படங்கள் காசுக்காகவா? மக்களுக்கு ஏதேனும் கருத்து சொல்லவா? அல்லது உங்கள் ஆர்வத்திற்கு வடிகாலா?

குறும்படங்கள் மூலம் வருவாய் அவ்வளவாக வருவது கிடையாது. மேலும் கதையில்லாமல் வெறும் கருத்து மட்டுமே சொல்ல வரும் படங்களும் வெற்றி பெறுவது கிடையாது. குறும்படங்கள் அவரவர் தன்னிறைவுக்காகவே என்பது என் கருது. நான் வருங்காலத்தில் திரைப்படங்கள் எடுத்தாலும், குறும்படங்கள் எடுப்பதை விடமாட்டேன். குறும்படங்கள் என்னை மகிழ்விப்பவை.

பொருளாதார ரீதியில் குறும்படங்கள் உங்களுக்கு நிறைவை தந்தனவா?

எனது குறும்படங்கள் பெற்ற வருவாய் என்பது போட்டிகளின் மூலம் கிடைத்த பரிசுத்தொகை மட்டுமே. பணத்தை தாண்டி குறும்படங்கள் தனிப்பட்ட தன்னிறைவை தரக்கூடியது.

கையில் கேமரா கிடைத்தவர்கள் எல்லாம் குறும்பட இயக்குனர்களாகும் இந்த சூழ்நிலை வரவேற்கத்தக்கதா?

உறுதியாக. இது வரவேற்க கூடிய ஆரோக்கியமான வழியே.

நீங்கள் பார்த்த வியந்த குறும்படம் அல்லது குறும்பட இயக்குனர்கள் யாரேனும் உள்ளனரா? இருந்தால் அவர் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

சமீபத்தில் நான் பார்த்து வியப்படைந்த குறும்படம் "கர்ண மோட்சம்".

குறும்படத்துறைக்காக மக்கள் அல்லது அரசு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

தொலைகாட்சி ஊடகங்கள் குறும்படங்களுக்காக நிறைய செய்யலாம். நெடுந்தொடர்களுக்கு ஒதுக்கும் நேரத்தில் ஒரு குறுப்பிட்ட நேரத்தை குரும்படகளுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும். மேலும் நல்லக் குறுமபடங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி செய்யலாம்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)