கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - கார்த்திக் சோமசுந்தரம்

ஆதவன்  

"நானும் என் விக்கியும்" என்கிற குறும்படம் மூலம் நமது கவனத்தை ஈர்த்துள்ளார் திரு. கார்த்திக் சோமசுந்தரம்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து சிறுவன் காத்திருந்து பெரும் மிதிவண்டியை தனது அஜாக்கிரதையால் இழக்க நேரிடுகிறது. அந்த மிதிவண்டி மூன்று வெவ்வேறு மனிதர்களின் கை மாறுகிறது. ஆனால் அந்த மிதிவண்டியை சிறுவனைத் தவிர வேறு யாரும் நேசிக்கவில்லை. அது ஒரு ஜடப் பொருளாகவே பார்க்கப்படுகிறது. தனது இந்த நிலையை அந்த மிதிவண்டியே விளக்குகிறது. இறுதியில் சிறுவன் அந்த மிதிவண்டியை மீண்டும் பெற்றானா என்பதே கதை.

இந்த உலகில் உயிருள்ள மனிதனையே உதாசீனப்படுத்தும் சமூகத்திற்கு மத்தியில் ஒரு உயிரற்ற ஜடப்பொருளான மிதிவண்டியை மையப்படுத்தி கதை அமைந்து இருப்பது சிறப்பு. மேலும் கதாபாத்திரங்களை பேச விடாமல் மிதிவண்டியே பேசுமாறு, பின்னியில் அதன் இயக்குனர் பேசியிருப்பது அருமை. வாய்ஸ் ஓவர் முறையை அருமையாக பயன்படுத்தி இருக்கும் முறை பாராட்டுக்குரியது. கதை களம் மட்டுமின்றி, தொழில்நுட்ப ரீதியிலும் இக்குறும்படம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. அருமையான கோணங்கள், அழகான காட்சியமைப்புகள், தேர்ந்த கதாபாத்திரங்கள் என இயக்குனரின் ஆளுமை இக்குறும்படம் முழுவதும் வியாபித்துள்ளது.

இனி இயக்குனர் திரு. கார்த்திக் சோமசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. உங்கள் கண்ணோட்டத்தில் குறும்படத்துறை வளர்ச்சி இந்த கால சூழலில் தமிழகத்தில் எப்படி உள்ளது?

நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாம் சற்று பின்தங்கித்தான் இருக்கிறோம். அதாவது நம் மக்களிடம் போதுமான அளவு குறும்படத்துறையைப் பற்றி அறிமுகம் இன்னும் தெளிவாக அமையவில்லை என்பது என் கருத்து.

2. குறும்படம் எடுக்கும் ஆர்வம் உங்களிடம் ஏற்பட்டது எப்போது? என்ன காரணம்?

வாய்ப்புத்தேடி அலைவதை விட, நாமே அந்த வாய்பை உருவாக்கி கொள்வதுதான் புத்திசாலிதனம் என்பதை 4 வருடங்களாக சினிமா வாய்ப்பு தேடி அலைந்த பின்னர்தான் உணர்ந்தேன். சினிமா துறையில் நாம் ஒருவரிடம் வாய்ப்பு தேடிச் செல்கின்றோம் என்றால் அவர் நம்முடைய திறமையை ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் தெரிந்து கொள்ள விரும்புவார். அதை நாம் வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் கூறிக் கொண்டிருக்காமல் ஒரு குறும்படமாக எடுத்து அவர்களிடம் சமர்ப்பிக்கும் போது கணடிப்பாக அதற்கு நல்ல பலன் கிடைக்கும். அவ்வாறாக நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள எடுக்கப்பட்டதுதான் “நானும் என் விக்கியும்”.

3. குறும்படம் எடுக்க அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு தேவை என கருதுகிறீர்களா?

தேவை இல்லை! நல்ல திரைக்கதையைக் கொண்ட கதைதான் ஓர் நல்ல படத்திற்கு மிக முக்கியம். முற்றபடி தொழில் நுட்ப அறிவு இரண்டாம் பட்சம்தான். சரியோ தவறோ, முதலில் உங்களுக்கு எப்படி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படியே ஒரு குறும்படத்தை எடுங்கள். பின்னர் அதன் Final Output பார்த்து குறையைத் திருத்திக் கொள்ளுங்கள். நிறையை வளர்த்துக் கொள்ளுங்கள! சொல்லப் போனால் தொழில் நுட்ப அறிவுடன் ஒரு படத்தை எடுப்பதைக்காட்டிலும் இது போன்ற practical work ல் நாம் அதிகம் கற்றுக் கொள்ளலாம்.

4. நீங்கள் எடுத்த குறும்படத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

ஒரு பேரூந்து பயணத்தின் போது ஜன்னல் வழியே நான் கண்ட ஒரு காட்சி…பழைய சைக்கிள் ஒன்றை ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு மிதித்து மிதித்து ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தான். இவனிடம் இப்படி கஷ்டப்படும் இந்த சைக்கிள் இதற்கு முன் யார் யாரிடம் எப்படியெல்லாம் இருந்ததோ என்னவோ ..அதை அந்த சைக்கிளே கூறினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. பின்னர் இந்தக் கற்பனை கருவையே என் குறும்படத்திற்கான திரைக்கதையாய் உருவாக்கினேன். இதுவரைக்கும் வந்த குறும்படங்களிலிருந்து சற்று வித்தியாசமான களமாகவும், ஒரு அசல் படம் பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற தெளிவுடன் இக்குறும்படத்தை எடுத்து முடித்தேன்.

5. உங்கள் குறும்படத்திற்கு உள்ள வரவேற்பு எப்படி?

நன்றாக உள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள், இயக்குநர் மாமல்லன் அவர்கள், எழுத்தாளர் விஸ்வாமித்ரன் அவர்கள் போன்ற திரையுலக மூத்த கலைஞர்களிடம் பெற்ற வாழ்த்துக்களும், அறிவுரைகளும், பாராட்டுகளும் என்னால் மறக்கவே முடியாது. மேலும் நண்பர்களிடமும், சக கலைஞர்களிடமும் பெற்ற பாராட்டுகள் மகிழ்ச்சியைத் தந்தாலும், என் அடுத்த படைப்பை இதைவிட நன்றாக கொடுக்க வேண்டும் என்கிற பயம் இப்போதே என்னை துரத்திக் கொண்டிருக்கிறது.

6. உங்கள் குறும்படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

சரியாக ஒத்துழைக்காத நடிகர்களிடம் கொஞ்சம் போராட வேண்டியிருந்தாலும், இறுதியில் அவர்களின் வேலை திருப்திகரமாக இருந்தது. மேலும் பணப்பற்றாக்குறையினால் Post Production னில் தொழில் நுட்ப கலைஞர்களிடம் குறைந்த சம்பளத்திற்கு வேலை வாங்குவதில் சிரமமாய் இருந்தது. எல்லா சமயங்களிலும் உடன் பணிபுரிந்த திரு.சத்யா அவர்கள் பக்கபலமாய் இருந்தார். மேலும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான சம்பள விஷயத்தில் போடப்பட்ட பட்ஜெட் தொகையை விட கொஞ்சம் மேல் பணத்தை எப்போதும் கையில் வைத்திருக்கவேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்ந்தேன்.

7. ஒரு குறும் படத்தை எடுக்க எவ்வளவு செலவாகும்?

அது கதையைப் பொருத்தது. குறிப்பிட்ட தொகையை நாமாகவே தீர்மானிக்க முடியாது. எது எப்படியிருந்தாலும் சூட்டிங் போவதற்கு முன்னால் சரியாக திட்டமிட்டு விட்டால் செலவுகள் கணிசமாக குறைந்துவிடலாம்.

8. தன்னிறைவு, விற்பனைக்கு, மக்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இதில் உங்கள் குறும்படம் எந்த வகையைச் சார்ந்தது?

சுயபரிசோதனைக்காக! ஆம்! சினிமா ஆசையிருந்தால் மட்டும் போதுமா? ஒரு கற்பனையை காட்சியாக சரியான முறையில் என்னால் உருவாக்க முடிகிறதா, அவ்வாறாக எடுக்கும் முயற்சியில் என்ன என்ன தவறுகள் செய்கிறேன், அவற்றிலிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பவற்றை தெரிந்து கொள்ள ஒரு சின்ன Experimental முயற்சி தான். இதில் தன்னிறைவு அடைந்தேன் என சொல்லலாம்.

9. உங்கள் அடுத்த கட்ட முயற்சிகள் என்னென்ன?

அடுத்ததாக ‘ஒவ்வொரு சொட்டும்’ என்கிற ஆவணப்படத்தின் எடிட்டிங் வேலையை முடித்து விட்டு, தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவியாளார் திரு. P. கின்ஸ்லின் அவர்கள் இயக்கும் சிவப்பு என்கிற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிகிறேன்.

திரைப்படத் துறையில் பல 'Variety’ களில் ரசிக்கும் படியான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கமாகும். மேலும் குறும்படம்! ஆவணப்படத்துறையிலும் என் பணி தொடரும்.

10. அரசாங்கம் அல்லது மக்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?

இது அவசர உலகம் நண்பா!, யாரிடமும் நாம் உதவிகளை எதிர்பார்த்து நிற்பது புத்திசாலித்தனம் அல்ல. நாம் நம் முயற்சிகளையும் வேலைகளையும் சரியாக செய்து கொண்டே இருப்போம். மக்களின் ரசனை மாறிக்கொண்டே வருகிறது. எப்படி ஒரு கிரிக்கெட் போட்டி என்பது 90 ஓவர் மேட்சுகளாக இருந்து,50 ஓவர் மேட்சுகளாக மாறி இப்பொது 20-20 என்னும் உடனடி பொழுது போக்கு அம்சமாக மாறி உள்ளதோ, அதேபோல திரைப்படத்துறையிலும், குறும்படங்களின் ஆதிக்கம் கட்டாயம் தலைத்தூக்கும். அதற்கு பத்திரிகை. தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் போன்ற ஊடகங்கள் நமக்கு சாதகமாக இருந்தாலே அந்த நாள் மிக விரைவிலேயே வந்துவிடும் என்பது என் கணிப்பு. பார்ப்போம்!.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)