|
எல்லா புனைவுகளையும் விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே பருகி வாழ்ந்த அவரது வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதை, தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.
Crime and Punishment 1866 ஆண்டு வெளியானது. துயருற்ற ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனின் வாழ்க்கை நெருக்கடியின் ஊடாக, அவமானமும் குற்றவுணர்ச்சியும் மனிதனை எப்படி வதைக்கின்றன என்பதைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. மனசாட்சிதான் மனிதனின் ஒரே தண்டனைக்கூடம். அது எந்தக் குற்றத்தையும் மன்னிப்பதுமில்லை மறப்பதுமில்லை என்ற குரல் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’
|