தெலுங்கில் சலபதிராவ் இசை அமைப்பில் வெளிவந்த படங்களில் பாடல்கள் வெற்றிப் பாடல்களாக அமைந்து அவரது கலைவாழ்வில் சரிவை காணாத வண்ணம் நிலை நிறுத்தின.
உதாரணத்துக்கு சில படங்களின் பாடல்களைக் குறிப்பிடவேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன்.1968-இல் வெளிவந்த ஒரு தெலுங்குத் திரைப்படம் 'பங்காரு காஜலு" (தங்கக் கொலுசு).
நேற்று லைப் ஆப் பை(3D) படம் பார்த்தேன். படத்தின் கதையை போஸ்டர் பார்த்து ஓர் அளவு யூகிக்க முடிந்தது என்றாலும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்ற ஆவல் இருந்தது.
ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய கதை.
கப்பல் கவிழ, படகில் ஒரு பையன், புலி, வரிக்குதிரை, கழுதைப்புலி, குரங்கு(ஒரங்குட்டான்) உயிர் தப்புகிறார்கள். ஒன்றை ஒன்று அடித்துக் கொல்ல, இறுதியில் எஞ்சி இருப்பது புலியும் அந்த 'பை'யன் மட்டும் தான்.
கதாநாயகியாக நாட்டியப் பேரொளி பத்மினி, கதாநாயகனாக ஜெமினி கணேசன் - தனது வழக்கமான முக்கோணக் காதல் கதையை நடனக் கலையோடு இணைத்து அற்புதமாக உருவாக்கினார் ஸ்ரீதர். பாடல்கள் - கவியரசு கண்ணதாசன். இசை அமைப்பு? சலபதிராவின் மகத்தான இசையால் ஏற்கெனவே கவரப் பட்டிருந்த ஸ்ரீதர் அவரையே இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். அமர காவியப் படமாக "மீண்ட சொர்க்கம்" ஆரம்பமாகி விட்டது.
காரில் ஊர் விட்டு ஊர் போகும் போது வழியெங்கும் ராட்சதக் கற்றாழை செடிகள் வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கற்றாழைச் செடிகளில் பல வகைகள் உள்ளது; சில வருடங்களுக்கு முன்பு சுஹாசினி 'அலோ விரா' பானம் ஒன்றை விளம்பரம் செய்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, பத்மினி, எம்.என். நம்பியார், வி. நாகையா, கே. ஏ. தங்கவேலு, ஈ. வி. சரோஜா - ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் இது. படம் வெளிவந்த ஆண்டு - 1956. தங்கக் கூண்டில் அடைபட்ட கிளியான பிரபல தொழிலதிபரின் மகள் அருணா, வேலையில்லாத பட்டதாரி வாலிபன் அசோக்கை சந்திக்க நேரிடுகிறது. சந்திப்பு காதலாக மாறுகிறது. அருணாவை ஒருதலையாக நேசிக்கும் அவளது முறைப் பையன் சுகுமார்.
சிறிது நேரம் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கே கிளி இரண்டு விளையாடிக்கொண்டு இருந்ததையும் கவனிக்க முடிந்தது. பச்சைக் கிளிகளையே பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு வானவில் நிறத்தில் அந்தக் கிளிகளைப் பார்க்கும்போது அத்தை பெண்ணுக்குப் பதில் ஆண்ட்ரியாவைப் பார்த்த மாதிரி இருந்தது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு சிட்னி துறைமுகப் பாலத்தில் நடக்க ஆரம்பித்தேன். பாலத்தின் தடுப்புச் சுவற்றிலும் ஒரு கிளிக்குஞ்சு.
பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான். அந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்பதில் அவனுடைய உறுதி தெரியும்.
ஆனால். என்ன காரணத்தினாலோ .. அந்தப் படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களை இன்னும் இருவர் இசை அமைத்துக் கொடுத்தனர். "நாடோடிக் கூட்டம் நாங்க" என்ற பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்களும், "எங்கு மறைந்தனையோ" என்ற உச்ச கட்ட காட்சிக்கான பாடலை பிரபல கர்நாடக இசை இளவரசர் திரு. ஜி.என். பாலசுபரமனியம் அவர்களும் அமைத்துக் கொடுத்தனர்.
ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள்.
இனச் சேர்க்கைக்குப் பிறகு ஆண் குளவிகள் இறந்துவிடுகிறது, மகரந்தத்தை சுமந்து வரும் பெண் குளவிகள் அந்த சின்ன துவாரத்தின் உள்ளே நுழைகிறது. மகரந்தச் சேர்க்கை நிகழும் போது அவைகள் உள்ளே முட்டைகளை இட்டுவிட்டு இறந்துவிடுகிறது. முட்டைகளிலிருந்து புழுக்கள் தோன்றி பிறகு அவை குளவிகளாகத் தோன்றுகிறது. இவை வளரும் போது அத்தி விதையை உண்டு வளர்கின்றன. அத்திப் பழம், ஆலம் பழங்களை அடுத்த முறை உடைத்துப் பார்க்கும் போது உள்ளே பூச்சிகள் இருப்பதே இதனால் தான். அடுத்த ஒற்றுமை இதன் இலைகளைப் பறித்தால் பால் சொட்டுவது.
சற்றுக் கூடத் தடுமாறாமல் சலபதிராவ் சொல்லிக்கொடுத்ததை அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு காகிதப் பிரதி எதுவும் வைத்துக்கொள்ளாமல் அந்த இரண்டு பாடல்களையும் - சோக ரசம் ததும்ப அட்சர சுத்தமான தமிழில் -இடை இடையே விம்மல்கள் - விசும்பல்கள் வரவேண்டிய இடங்களில் அவற்றையும் கொடுத்து ஒரே டேக்கில் இரண்டு பாடல்களையும் பாடி முடித்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள் அந்தப் பெண்.
காபியை உறிஞ்சினேன். என்னால் உருஞ்சிய கப்பை சாஸரில் சரியாக வைக்க முடியும். நீங்கள் அடுத்த மேஜையில் உட்கார்ந்திருந்தால், நான் ஒரு குருடன் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எவ்வளவு நேரம் உங்களை ஏமாற்ற முடிகிறது என்பது தான் என்னுடைய சவால். குருடன் என்று தெரிந்தவுடன்... தள்ளிப் போய்விடுவார்கள்; சிலர் கிசுகிசுப்பார்கள்; சிலர் கவனமாக இருப்பார்கள்; ஒரு சிலர் தர்மசங்கடத்தில் பேச மாட்டார்கள். ஆமாம், இவை எல்லாவற்றையும் என்னால் உணர முடியும்.
கதைகேட்பது என்பது அனைவருக்கும் அலாதியானதுதான். அதுவும் பாரதி மணி போன்ற அனுபவமுள்ள மனிதர்கள் கதை சொல்லும் போது நம்மையும் மறந்துவிடுவோம்.இன்றைய தலைமுறையினருக்கு கதைக்கேட்டு வளரும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.காரணம் இன்றைய அவசர உலகத்தில் பொருள் தேடி அலைந்து தன் குழந்தைகளைக்கூட கவனிக்க நேரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
ஏற்கெனவே அவரது சகோதரர் திரை உலகில் இருந்த காரணத்தால் அவரது பிரவேசம் எளிதாக அமைந்திருக்க கூடும். இயக்குனர் பிரகாஷ் ராவ் சலபதியின் இசைத் திறமையை நன்கு அறிந்திருந்த காரணத்தால் அவருக்கு முதல் வாய்ப்பை கொடுத்திருக்க கூடும்.ஆனால் அதன் பிறகு அவரது முன்னேற்றத்துக்கு காரணம் அவரது கடும் உழைப்பும். திறமையுமே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.எது எப்படியோ.. சலபதிராவ் என்ற உன்னதமான இசை அமைப்பாளர் திரை உலகுக்கு கிடைத்து விட்டார்.
இருப்பு, தத்துவம், பார்வை, செயல், சாதனை ஏதுமற்ற ஒரு ஜீவனுக்கு எந்த மனிதனுடனும் பேசுவதற்கு என்ன இருக்கிறது.வரலாறு முழுவதையும் சாட்டைக்காரர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தின் சாட்டைக்காரர்களில் ஒருவனாக இருப்பதற்கான தகுதி எதுவும் எனக்கு கிஞ்சித்தும் இல்லை.
கடந்த வாரம் ஒருநாள் நான் வழக்கம்போல கீழ் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். மனைவி மேலே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று மேலேயிருந்து சத்தம் வந்தது. அப்படிக் கத்தினால் இரண்டு காரணம்தான் இருக்கும். ஒன்று, சுடுதண்ணீர் பானையை காலிலே போட்டுவிட்டார். இரண்டு, 649 லொத்தரில் 10 மில்லியன் டொலர் விழுந்துவிட்டது. இரண்டையும் சமாளிக்கும் தைரியத்தை மனதில் உண்டாக்கிக்கொண்டே மேலே ஓடினேன். தொலைக்காட்சியில் பிரபல எழுத்தாளர் திரு வெங்கட் சாமிநாதனின் உருவம் தெரிந்தது.
அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தலைவராகப் பார்க்கப்படும் ஓர் அவலநிலைக்குக் காரணம். மற்றெல்லோரும், ஏதோ உயர்த்தப்பட்டவர்களாகத் தம்மைக் கருதுவதும், அம்பேத்கரின் பிம்பம் தமக்கு தேவையில்லை என்று பார்ப்பதும் தான். ஆனால், அம்பேத்கர் எல்லோருக்குமே தனிமனித அளவிலும், சமூக அளவிலும் சமூகச் சிக்கல்கள் மீது வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர். அம்பேத்கர், இம்மண்ணில் மனிதனைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை அடிப்படையான தரவுகளுடன் ஆராய்வதுடன், அவற்றை வெல்லும் கருவிகளையும் நமக்குத் தருகிறார்.
எது கவிதை என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத புதிர்த்தன்மையைத் தன் வசீகரமாகவும் சவாலாகவும் கொண்டு தன் இருப்பைப் புதுப்பித்துக் கொள்கிறது கவிதை. நிர்ணயிக்க முயலும் கோட்பாடுகளையும் வரையறுக்க முனையும் சூத்திரங் கடந்து ஒரு தப்படி முன்னே சென்று கொண்டேயிருக்கிறது. களையும் கவிதை செத்துவிட்டது. என்பது போன்ற மகா வாக்கியங்களையும் சட்டை செய்யாமல் நகர்கிறது.