வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கதை சொல்லி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

எஸ். ராமகிருஷ்ணன்

அன்று கதை தெரியாத சிறுவர்களே இல்லை. அது போலவே சிறுவர்களுக்கு விருப்பமாக கதை சொல்லும் பெரியவர்களும் இருந்தார்கள். ஊர் கிணற்றடியின் ஒரு பக்கம் தான் கதை சொல்லும் களம். இரவிலும் யாராவது ஒரு பெண் தண்ணீர் இறைக்க வந்து கொண்டேயிருப்பாள். கிணற்றில் வாளி விழும் சப்தம் கேட்பது ஆனந்தமாகயிருக்கும். கிணற்றை சுற்றிலும் சிமெண்டால் கட்டியிருப்பார்கள். அத்துடன் கிணற்றடியில் எப்போதும் குளிர்ச்சியிருக்கும்.

அங்கே நாலைந்து பேராக துவங்கும் கதை சொல்லும் நிகழ்ச்சியின் முடிவில் பத்துபேருக்கு மேலாக ஆகிவிடும். நாவிதர், மாட்டு தரகர் , சமையற்காரர், சலவை தொழிலாளி இவர்களே ஊரில் அதிகம் கதை அறிந்தவர்கள். பள்ளி ஆசிரியர்கள் எவருக்கும் தெரியாத கதைகள் இவர்களிடமிருந்தன. பெண்கள் இரவில் கதை சொல்வதில்லை. பலரும் பகலில் வேலை செய்தபடியே கதை சொல்லக்கூடியவர்கள். அதிலும் திருகை திரித்தபடியோ, நெல்அவித்தபடியோ, தென்னை ஒலையை பின்னியபடியே கதையை வளர்த்து சொல்வார்கள்.

அப்படி எண்ணிக்கையற்ற கதைகளை கேட்டிருக்கிறேன். கதை கேட்கும் ஒவ்வொரு சிறுவனும் தானே ஒரு கதையை சொல்ல துவங்கிவிடுவான். இதில் சுப்பையா என்ற சிறுவன் தினமும் கதை சொல்வான். அவன் எந்தக் கதையை துவக்கினாலும் நடுராத்திரி பனிரெண்டுயிருக்கும். ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று தான் ஆரம்பிப்பான். அவனுக்கு நடுராத்திரி பனிரெண்டு மணி என்பது அச்சமூட்டும் ஒரு நேரம். அதை விலக்கி அவனால் ஒரு போதும் கதை சொல்ல முடியாது.

 
  ---------------------------------  
  கதை சொல்பவர்களின் உடல் மொழி மற்றும் பாவனைகளை அறிந்து கொள்ள இந்த வீடியோ இணைப்புகள் உதவக்கூடும்.

 
 

Ki. Rajanarayanan Telling a Story
http://www.youtube.com/watch?v=bBkSEVzn46I

Traditional African Story Telling.
http://www.youtube.com/watch?v=WP_LTtFYt3A

Native American Indian Story Teller
http://www.youtube.com/watch?v=gAk5auElCDo

arab story teller
http://www.youtube.com/watch?v=izSfwz2Ewh4

Marrakesh Storyteller
http://www.youtube.com/watch?v=zYrOii-zHZo\

Chinese Storyteller Eric Shepherd
http://www.youtube.com/watch?v=ephWySu6lQk&feature=related

Rakugo Japanese Storyteller
http://www.youtube.com/watch?v=Vaf0esKLMZg

நன்றி: எஸ். ராமகிருஷ்ணன்

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

கதை சொல்லி

கதை சொல்லி.. இலக்கிய உலகில் இந்த வார்த்தை மிகவும் பிரசித்திப் பெற்றதுப் போலவே திரையுலகிலும், அதன் தன்மை மாறாமல் அதே முக்கியத்துவத்துடன் இருப்பது கவனத்திற்குரியது.

நம்முடைய எல்லா வயதிலும் நமக்கு கதை சொல்லி தேவைப்படுகிறார். பாட்டி, அம்மா, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் என எல்லா நிலைகளிலும் கதை சொல்லியாக இருப்பவர்கள் நமது மனதில் நீங்கா இடத்தைப் பெற்று விடுகின்றனர். நமது மனம் எப்போதும் ஏதோ விதத்தில், ஏதோ உருவத்தில் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது. கதைகள் நம்முடைய வாழ்வோடு கலந்தவை. நமது வாழ்க்கையை சில நேரங்களில் வழி நடத்துவதும் கதைகளே.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழில்நுட்பம் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளையும் பயன்படுத்தி கூடு இணைய வாசகர்களுக்காக புதிதாக கொண்டுவரப்பட்டதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. இந்த கதை சொல்லிப் பகுதியில் நமக்கு பிடித்த எழுத்தாளர்கள், கிராமங்களில் வாழும் உண்மையான கதைசொல்லிகள், பல தலைமுறைகள் கடந்து வாழும் பாட்டிகள், திரைப்படக் கலைஞர்கள், குழந்தைகள் என் எல்லோரும் கதை சொல்லியாக உங்களை சந்திக்க அல்லது உங்களுடன் உரையாட வருகிறார்கள்.

இந்தக் கதை சொல்லிப் பகுதி முழுக்க முழுக்க ஒலி வடிவத்தில் மட்டுமே கிடைக்கும். இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து (Download) அலைபேசி, இசைக் குறுந்தகடுகள், ஐ பாட், போன்றவற்றில் இணைத்து உங்கள் பயணங்களில், உங்கள் ஓய்வு நேரங்களில் அவைகளை கேட்டு மகிழலாம். உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் உங்களோடு பேசிக் கொண்டே வருவது போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கப் போவதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. உங்கள் தனிமையை நீங்கள் நேசிக்கும் கதைசொல்லி, எழுத்தாளர், திரைக் கலைஞர்களோடு பகிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணங்கள், ஓய்வு நேரங்கள் சுகமாக....... கேளுங்கள்.. கேளுங்கள்.. இது கூடு இணையதளத்தின் கதை சொல்லிப் பகுதி.

கதை சொல்லி வாயில்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

10 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

excellent sir. rockking.

அனுப்பியவர் Ravi on Monday, 23.11.09 @ 22:11pm

karisal kattu vaasam veesugiradhu. en manadhukul irukum pala ninaivugalai kilari vidugiradhu ungal katturai.

அனுப்பியவர் Sethu on Saturday, 28.11.09 @ 00:05am

padikka padikka miga piramaandamai virigiradhu en ninaivugal. ungalaip ponra tharamaana eluthaalarin katturai padikka mudiyaamal ponadhu engal thurpaakkiyam. idhudhaan naan padikkum ungal mudhal katturai. ungalin adutha katturaikkaaga kathirukirn.

அனுப்பியவர் Sadhiya on Saturday, 28.11.09 @ 21:13pm

miga arumaiyan katurai. idhup ponra ezhuthaalargal enge olindhullargal enre theriyavillai. samayavel sir thodarndhu eluthungal. valthugal.

அனுப்பியவர் Pandiyan on Tuesday, 1.12.09 @ 02:25am

anubavangal arumai. sila patthigal ennai mei silirkka vaikkiradhu. ezhuthil vegamum, thelivum oru sera payanikkiradhu. ungal thodarai migavum edhirpaarkkiren. nanri.

அனுப்பியவர் Ravi on Wednesday, 2.12.09 @ 23:27pm

iayalbaga irukkiradhu. hats off to you sir.

அனுப்பியவர் Rajesh on Thursday, 3.12.09 @ 00:49am

Padikka padikka manadhai kollai kolgiradhu ungal ezhuthu. arumaiyana nigalvugalin thoguppu. i become a fan of your writing sir. excellent.

அனுப்பியவர் Sridharan on Thursday, 3.12.09 @ 23:29pm

இதுதான் அனுபவம் என்பது.. நானும் எனது அனுபவங்களை எழுதி பார்த்தேன். சுய புலம்பல் போல் இருந்தது. ஆனால் சமயவேல் மிக சிறந்த எழுத்து நடையில் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார். எதிர்காலத்தில் உங்கள் எழுது பலராலும் விரும்பிப் படிக்கப்படும் சார். தொடர்ந்து எழுதுங்கள்.

அனுப்பியவர் Sivva on Friday, 4.12.09 @ 07:50am

அருமை

அனுப்பியவர் ஈரோடு கதிர் on Friday, 14.05.10 @ 21:27pm

நல்ல முயற்சி

அனுப்பியவர் சபரிநாதன் on Saturday, 15.05.10 @ 16:23pm

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</