"என் உடலை விதைத்திருக்கிறார்கள்
என் மார்புக் காம்புகள் நீரூற்ற
பூச்செடிகளும் மரங்களும்
துளிர் வி ட்டு வளர்ந்து
விருட்சமாயிருந்தன.
விளையாட
சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
போட்டியிட்டன.
உழுதார்கள் விதைத்தார்கள்
அறுவடை செய்தார்கள்.
காலாதீதத்தில்
என் உடல்
நல்ல விளைநிலமாயிருந்தது.
வண்ணத்துப் பூச்சிகளும்
தேடி வரும் ஆவலில்
பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
அதிக தேவையிருந்ததால்
என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.
என் பால் வாசம் நுகர்ந்து
வேலி வரை வந்து
உள் நுழைய முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
தட்டான்களுக்காகவும்
என் உடலை சுருட்டிக் கொண்டு
தொட்டிச் செடி பூவாக்கி
காத்திருக்கிறேன்.
சூரியனுக்கு வெகு கீழே."
- அ.வெண்ணிலா.
கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். 'ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்'என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நானற்ற நிலையில் சிந்திப்பதற்கும் காட்சி வெளி தேவையாக இருக்கிறது
சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.
வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.
தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.
அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். 'மலம்' கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது 'அவ்வளவு பட்டாம்பூச்சி' என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.
"காக்கா கதை
குட்டி இளவரசி கதை
தேவதை கதை என
சொல்லி மகிழ்ந்த
பேச்சுக்களைப் பரிமாறிய
இரவொன்றில்
நம்மால்
குழந்தைகளைப் போல்
கட்டியணைத்து
உறங்க முடிந்தது"
- அ.வெண்ணிலா
அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் கற்பனையும் அதன் உன்னத நிலையில் செயல்படும் தருணங்கள் அது. நிறைய கதைகளைத் தமக்குள் வைத்துக்கொண்டிருந்தார்கள். முல்லாக் கதைகள் தொடங்கி அவர்களுள் நிறைந்திருந்த கதைகள் ஏராளம். கதைகள் சொல்ல அவர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை. கதைகளை ஆரம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்கள்.
கதை சொல்லி முடித்து வெளியே வந்தேன் . இருட்டிய வானில் அரை நிலவோடு வெள்ளிகள் மிகப்பிரகாசமாக் மின்னிக் கொண்டிருந்தன. குதுகாலிக்கும் மனநிலையை என்னுள் கிளறி விட்டது. 'கப்பல் பார்க்க விட்ட சேவகன் என்ன செய்திருப்பான்' என சிறுவயது முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த சேவகன் கதைகளோடு கதைகளின் வாசனையோடு தன்னை இழந்து திரும்புகிறான்.
அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சில முக்கியக் குறிப்புகள்:
* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.
* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.
* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.
* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.
* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள். thamizhstudio@gmail.com
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------- |
கதைகள் அனைத்தும் அருமை. 15 கதைகள் இரண்டு வாரத்திற்கும் சேர்த்து கொடுத்தது போல் இருக்கிறது. வெண்ணிலாவின் குழந்தைகள் புகைப்படம் அருமை. சுற்றிப் போடுங்கள்.
அனுப்பியவர் சசிகுமார் on Sunday, 20.03.11 @ 10:43am
ஐயா ஏன் இப்படி செய்கிறீர்கள். இந்தப் பகுதிக்காகவே நாள்தோறும் ப்ரொவ்சிங் செனட்டர் சென்று வருகிறேன். இன்று இரவு நண்பரின் வீட்டில் கதைகளை விட்டு பதிவிடுகிறேன். வெண்ணிலாவின் கதைகள் அனைத்தும் அருமை. குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அற்புதம்.
அனுப்பியவர் செந்தில்நாதன் on Sunday, 20.03.11 @ 10:46am
அன்புபாரதி, கவின்மொழி, நிலாபாரதில்யின் கதைகளை மிக அருமை. கட்டுரையாளரின் வார்த்தை பிரயோகம் அருமையாக இருக்கிறது. மிக நல்ல கதைகளை கேட்ட திருப்தி. நன்றி.
அனுப்பியவர் புதியவன் on Sunday, 20.03.11 @ 10:49am
அடடா பதினைந்து கதைகளா? இப்போதுதான் இரண்டு கேட்டு முடித்திருக்கிறேன். ஆனால் மிக இன்பமான சூழ்நிலையில் அனைத்தையும் கேட்டு முடித்துவிட வேண்டும்.
அனுப்பியவர் சுரேஷ் on Sunday, 20.03.11 @ 11:13am
கதைகளோடு பயணிப்பது மிக அருமையான தருணம். வெண்ணிலாவின் கதைகளும், அவரது குரலும், கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்க சொல்கிறது. அவரது குரலில் ஒரு வித காந்த சக்தி போல் இருக்கிறது.
அனுப்பியவர் பாண்டியன் on Sunday, 20.03.11 @ 11:20am
குட்டிப் பசங்கள் கதைகள் அருமை. மிக அருமையான குடும்பமாக இருக்கிறது. கொடுத்து வைத்தவர்கள். அருமையான அனுபவம்
அனுப்பியவர் சதீஷ் on Sunday, 20.03.11 @ 11:33am
குழந்தைகளோடு முருகேசும், வெண்ணிலாவும் கொண்டிருக்கும் அன்பு எங்களை கொஞ்சம் கூச்சமடைய செய்கிறது. காலையில் எழுந்து குழந்தைகளுடன் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அவரச அவரசமாக அலுவலகம் ஓடுகின்ற இந்த காலத்தில் இந்த கவிக் குடும்பம் அழகு. அந்த குழந்தைகளின் கதைகளும் கேட்க அருமையாக இருக்கிறது. மிகவும் பரவசப் பட்டேன். வெண்ணிலாவின் குரலும், மிக நேர்த்தியான கதைகளும் வெகு சிறப்பு. ரசித்துக் கேட்டேன். வாழ்த்துகள்.
அனுப்பியவர் மணிகண்டன் on Sunday, 20.03.11 @ 22:18pm
எனக்கு இதில் ஐந்து கதைகள் உலகத் தரத்தில் இருப்பதாக தெரிகிறது. குழந்தைகள் மிக நேர்த்தியாக கதை சொல்லிய விதம் அருமை. என் குழந்தைகள் கேட்டுவிட்டு அதே கதையை மீண்டும் சொல்லிப் பார்த்து தோற்றுப் போனார்கள். இது ஒரு நல்ல பயிற்சியும் கூட. இந்த தலைமுறைக்கு இலக்கியத்தின் மீதிருக்கும் வெறுப்பு நீங்கி அவர்கள் இலக்கியம் படிக்க இந்த கதைசொல்லிகள் உதவக் கூடும். இன்று காலை என் பெண்ணே கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையை படிக்க ஆரம்பித்துவிட்டாள். வச்சக் கண் வாங்காமல் பார்த்தேன். உங்கள் வெற்றி இதுதான் அருண். கலக்குங்கள்.
அனுப்பியவர் சுரேஷ் பாபு on Sunday, 20.03.11 @ 22:22pm
kadhaigal miga arumai. father patriya kadhai unmai sudum enbadhu pol irukkiradhu. niraivaana kadhai. mikka nanri.
அனுப்பியவர் Suresh Kumar on Sunday, 20.03.11 @ 22:43pm
நேற்று இரவே கேட்டு விட்ட இந்த கதைகளை இன்று எனது பள்ளி மாணவர்களுக்கு காட்ட எடுத்து எனது மணிக் கணினியை எடுத்து வந்தேன். இதோ எனது 45 மாணவர்களும் கதைகளை கேட்டுவிட்டு என்னிடம் சூப்பரா இருக்கு சார் என்றனர். இன்றுதான் அவர்களுக்கு எனது பாடவேளை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு அரசு பள்ளி கணக்கு ஆசிரியர். அன்புபாரதி, கவின்மொழி, நிலாபாரதி கதைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அருண் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இதே போன்ற கதைசொல்லியை பள்ளி மாணவர்களுக்காக ஒரு முறை செய்ய இயலுமா? மாணவர்களை கதை சொல்ல வைத்தல், அல்லது அவர்களுக்காக இதுப் போன்ற எழுத்தாளர்களை அழைத்து வந்து கதை சொல்ல வைத்தால் குழந்தைகளுக்கு இலக்கியம் பற்றிய ஒரு பெரிய புரிதலே ஏற்படும். இதை நீங்கள்தான் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். நான் நாங்கள் கையாலாகதவர்கள். என் பள்ளியிலேயே என்னால் அனுமதி வாங்கித் தர இயலவில்லை. பிறகு உங்களிடம் எப்படி பேசுவது. ஆனால் உங்களால் முடியும் என்று நினைக்கிறேன். தென் மாவட்ட பள்ளிகளில் தொடங்கவிருப்பதாக சேரன் ஜனவரி மாதமே சொல்லி இருந்தீர்கள். என்ன ஆனது. உங்களின் அந்த முயற்சி தொடங்குமே ஆனால் அது தொடும் உச்சம் யாரும் அறியாதது. வெண்ணிலா உங்கள் குரல் அவ்வளவு அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. குழந்தைகள் சிரிப்பும், குதூகலமும் அழகு. அவர்களுக்குக் ஒரு முறை சுத்தி போடுங்கள். ஊர் கண் பட்டுவிடும். நன்றி.
அனுப்பியவர் மருதுப் பாண்டி on Sunday, 20.03.11 @ 23:02pm
கதை சொல்லத் தொடங்கி முடிக்கும் வரை நகரவிடாமல் இருக்கிறது. வெண்ணிலாவின் கதைகள். அருபுதம். ஆனால் வாரம் ஒரு முறை பதிவேற்றினால் நன்றாக இருக்கும்.
அனுப்பியவர் சுதா on Sunday, 20.03.11 @ 23:09pm
தாகத்துடன் காத்திருந்தவர்களுக்கு, ஒரு பெரியே ஏரியாக குடிக்க கிடைத்தது போன்று பதினைந்து கதைகள் திகட்டாமல் கேட்டு முடித்தேன். புலிக்கு பிறந்தது பூனையாக முடியுமா? குழந்தைகள் கதை சொல்ல அம்மாவை விட அருமை.
அனுப்பியவர் சுகுமார் on Sunday, 20.03.11 @ 23:16pm
முல்லாவின் கதைகளை குழந்தைகள் சொல்வதை கேட்க இனிமையாக இருக்கிறது. இன்னும் கூட கதைகளை பதிவு செய்திருக்கலாம் என்று சொல்ல முடியாத வண்ணம் பதினைந்து கதைகளை போட்டு அசத்தி விட்டீர்கள்.
அனுப்பியவர் ராஜேஷ் on Sunday, 20.03.11 @ 23:26pm
கதைகள் இனிக்கிறது. மிகவும் அருமையாக குரல், நல்ல நடை நேர்த்தியான ஒலிப்பதிவு என அனைத்தும் அருமை.
அனுப்பியவர் மதுமிதா on Sunday, 20.03.11 @ 23:49pm
வெண்ணிலாவின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். இன்று அவரது குரலைக் கேட்பது இனிமையாக இருக்கிறது. இப்போது அவரது கவிதைகள் படிக்கும்போது அவரது குரலை நன்கு உணரமுடியும். இது மிக பெரிய வரம். நன்றி தமிழ் ஸ்டுடியோ.
அனுப்பியவர் நரேன் on Sunday, 20.03.11 @ 23:57pm
மேற்கோள் கட்டப்பட்டுள்ள உங்கள் கவிதை அருமை. மிக அருமையான தொகுப்பு. தமிழ் ஸ்டுடியோ அருண் கவிஞர்களை கொண்டாடுகிறார். என்ன ஒரு புகைப்படங்கள், அவர்கள் பற்றிய விபரங்கள், கதைகள் என ஒரு முழுமையான தொகுப்பு இது. கட்டுரை எழுதிய நண்பர் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். அவருக்கும் வாழ்த்துகள்.
அனுப்பியவர் சந்திரசேகர் on Monday, 21.03.11 @ 00:13am
எத்தனை குழந்தைகளுக்கு இது போன்ற பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் யாருக்கு பிறக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையைக் கொடுத்தால் பலருக்கும் அந்த வாய்ப்பே இல்லாமல் போகும். இதுப் போன்ற கவிஞர்களுக்குத்தான் அத்தனை வாய்ப்பும். பெண் குழந்தையை பாரமாக நினைக்கும் இந்த சமூகத்தில் இதுப் போன்ற பெற்றோர் அவசியம். உங்கள் குடும்பப் புகைப்படம் அருமை. கதைகள் இன்னும் நான்கு கேட்க வேண்டும். கேட்டவரி அருமையாக இருக்கிறது.
அனுப்பியவர் பூபதி on Monday, 21.03.11 @ 00:25am
இந்த கதை கூடாரத்தில் மிக்க மகிழ்ச்சியாய்வாழலாலம் போல் இருக்கிறது. கதைகள் அனைத்து திகட்டாதவை.
அனுப்பியவர் பசுபதி on Monday, 21.03.11 @ 00:59am
கிறங்க வைக்கிறது கதைகள். செவ்வாய்யன்று வரை காத்திருக்க வைக்காமல் திங்கள் காலையே கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இன்று இரவு கதைகளுடன் உறங்க செல்வேன். இனிமையான தருணம் அது.
அனுப்பியவர் ஜீவா on Monday, 21.03.11 @ 01:04am
கொஞ்சம் பின்னணி இசை சேர்த்து இதனை குறுந்தட்டில் விற்பனை செய்தால், மிக நல்ல varaverpu kidaikkum என்று ninaikkiren. ungal இணையத்தளம் செய்த சாதனை என்று மாறாது. முயற்சித்து பாருங்கள்.
அனுப்பியவர் ரமேஷ் குமார் on Monday, 21.03.11 @ 01:07am
கடந்து போன வாழ்க்கையின் சுவட்டில் இதுப் போன்ற ஒரு சில கணங்களே மனதில் எஞ்சி நிற்கும். அந்த வகையில் இவர்களின் கதைகளும், உற்சாகமும் என்னையும் தொற்றிக் கொண்டது. மிக அதிக நேரம் ஒதுக்கி முழுக்க முழுக்க அனைத்து கதைகளையும் கேட்டு விட்டுதான் அடுத்த வேலை பார்க்க சென்றேன்.
அனுப்பியவர் மணிபாரதி on Monday, 21.03.11 @ 02:08am
உங்களது மூன்று கவிதை தொகுதிகளை படித்திருக்கிறேன். அதில் எனக்கு இரண்டு தொகுதி மிக பிடிக்கும். ஆனால் இந்த கதையில் அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. மிகுந்த சந்தோசம். உங்கள குரலை இப்போதுதான் கேட்கிறேன். அருமையாக உள்ளது.
அனுப்பியவர் சங்கீதா on Monday, 21.03.11 @ 02:09am
வலதுபுறம் கதைசொல்லிப் பற்றிய குறிப்புகள், இடதுபுறம் கதைசொல்லிகள் பற்றிய பெருமைகள், ஒரு கட்டுரை, கதைகள் என இவ்வடிவம் மிக பொருத்தமாக உள்ளது. இளைய சமூகம் அடுத்த தலைமுறையை நன்றாகவே வழிநடத்தும் என்பது அருண் போன்ற இளைஞர்களின் போக்கில் தெரிகிறது. எத்துனை பெரிய இலக்கிய மேதைகள், தொழில் ஜாம்பாவான்கள், அறிவு ஜீவிகள் என இருந்தும், அருண் போன்ற ஒரு இளைஞன் தான் இதுப் போன்ற புது முயற்சியை சிந்தித்து, அதனை சிறப்பாக வெற்றிகரமாக செய்தும் முடிக்க முடிகிறது. எத்துனை பெரிய ஆச்சரியம். இபோது இங்கே கதை சொல்ல எல்லோருக்கும் ஒரு ஏக்கம் வந்துவிடுகிறது. அதற்காகவே VIP ஆகா வேண்டும் என தோன்றுகிறது. எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களிடமும் கதைகள் கேட்பீர்களா?
இங்கே குழந்தைகளின் கதை நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும். வெண்ணிலா சில கவிதைகளையும் சேர்த்தே கூறி இருக்கலாம். கதைகள் நச் வகை.
அனுப்பியவர் செந்தமிழ் செல்வன் on Monday, 21.03.11 @ 02:14am
கவின்மொழி கதைகள் எனக்கும், அன்பு பாரதி, நிலாபாரதி கதைகள் என் குழந்தைகளுக்கும் பிடித்திருக்கிறது. அவர்கள் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அனுப்பியவர் ராஜதுரை on Monday, 21.03.11 @ 03:23am
kadhaigal super. kural miga inimaiyaaga irukkiradhu. nanri.
அனுப்பியவர் Sedhu on Monday, 21.03.11 @ 03:40am
pugaippadangal azhagu. kadhaigalai adhai vida azhagu.
அனுப்பியவர் Yogeswaran on Monday, 21.03.11 @ 04:00am
kadhai kepadhe sugam. adhilum padhinaindhu kadhaigal enraal. arpudham. mikka nanri.
அனுப்பியவர் சுதிர் on Monday, 21.03.11 @ 04:36am
migavum negizhvaaga irukkiradhu indha kadhaigalai ketkumbodhu. niraivaana kadhaigal. nanri.
அனுப்பியவர் Sumathi on Monday, 21.03.11 @ 05:25am
idhaiyellaam oor ooraaga poi pottuk kaatungal. nichayam ilakkia marumalarchi yerpadum.
அனுப்பியவர் Sundar on Monday, 21.03.11 @ 05:28am
super. i like all stories.
அனுப்பியவர் Nijam on Monday, 21.03.11 @ 05:31am
kulandhaigalum inge vandhu kadhai ketpadharku indha paguthi migavum udhavum enru ninaikkiren. miga nalla muyarchi.
அனுப்பியவர் Prabha on Monday, 21.03.11 @ 07:23am
naan migavum virumbi padikkum inayam thamizh studio. adhil indha paguthi enadhu mudhal viruppam. vennilaavin kadhaigal miga arumai. adhuvum aval kuralil avaradhu kanavar murugesin kadhai ketpadhu arumaiyaana anubavam.
அனுப்பியவர் Selvam on Monday, 21.03.11 @ 22:46pm
vennilaavin kuralil irukkum kaandha sakthi anaivariayum kadhaigalai eerkkiradhu. arumaiyaana kural.
அனுப்பியவர் Joseph on Monday, 21.03.11 @ 22:57pm
கதை சொல்லியில் வெண்ணிலா ஒரு கலக்கி கலக்கி இருக்கிறார். குழந்தைகளும் sertthu attaakaasap padutthi irukkiraargal. anaivarukkum வாழ்த்துகள்.
அனுப்பியவர் பிரபு on Monday, 21.03.11 @ 23:25pm
முள்ளாக் கதைகள்,முருகேசுக் கதை என அனைத்து வேறொரு கோணத்தில் கேட்பது சுவையாக இருக்கிறது. நிறைவான கதைகள். நன்றி.
அனுப்பியவர் பர்வீன் on Tuesday, 22.03.11 @ 00:17am
kadhaigala anaithum arumai. father kadhaiyum, murugesu kadhaiyum arumaiyaaga solli irukkireergal.
அனுப்பியவர் Kandhan on Tuesday, 22.03.11 @ 00:23am
கதைகளை ஒன்று விடாமல் கேட்டேன். மிக அருமை. எனக்கு குழந்தைகள் சொன்ன கதைகள்தான் அதிகம் பிடித்திருகிறது.
அனுப்பியவர் கருப்புசாமி on Tuesday, 22.03.11 @ 00:35am
maanudam sezhikka kadhaigal venum. inge anaithuk adhaigalum arumaiyaaga irukkiradhu. nanri.
அனுப்பியவர் Bhuvana on Tuesday, 22.03.11 @ 04:10am
kattrai miga sirappaga irukkiradhu. remiyadasum liviyum onraa? eluthu ore maadhiri irukkiradhu. naangal ellaam yaaru? he he..
அனுப்பியவர் Sathyan on Tuesday, 22.03.11 @ 04:54am
kadhaigal anaithum arumai. murugesin kadhai enakku migavum pidithadhu. katturaiyaalar thanadhu anubavangalai miga nerthiyaaga eluthiyullar. rasithup padithen.
அனுப்பியவர் Vijay Kannan on Tuesday, 22.03.11 @ 22:44pm
எல்லா விளக்கும் விளக்கல்ல.. ஆனால் இங்கே எல்லா கதைகளும் கதைகளாகவே இருக்கிறது. அதுவும் மிக அருமையாக இருக்கிறது.
அனுப்பியவர் மதி சுந்தர் on Tuesday, 22.03.11 @ 22:56pm
excellent stories. i like 3rd one very much. superb story.
அனுப்பியவர் Pradeep on Wednesday, 23.03.11 @ 03:05am
நான் தங்கள் கவிதைகளை படித்திருக்கிறேன். ஒவ்வொரு கவிதையையும் படித்து முடிக்கும் போதும் ஏற்படும் அற்புத உணர்வுகளை, தங்களது கதை சொல்லும் தன்மையிலும் உணர முடிந்தது. மிக அருமை.
கதை சொல்லும் வேகத்தில் "வந்து" என்ற வார்த்தையை அதிகமாக உபயோகித்திருக்கிறீர்கள். அதை குறைத்துக் கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி.
அனுப்பியவர் நீலண் on Saturday, 26.03.11 @ 06:25am
தமயந்தியின் சிறுகதை மிக உருகமாக இருந்தது. தாய் மகள் உறவுக்குள் இருக்கும் அன்யோன்யம் வெளிப்படும்
அழகிய தருனம் மனதை உலுக்குகிறது.
வெண்ணிலாவின் கதை பெண்களின் அகச்சிக்கலை,உடல் மற்றும் மணப்போரட்டத்தை வெளிப்படுதுகிறது.....
வெண்ணிலாவின் கதை சொல்லும் வாக்கும் அழகு!
இனிய அனுபவம்! நன்றி!
அனுப்பியவர் இனியா on Thursday, 7.04.11 @ 13:12pm
Thanks God!! Finally I am able to reach hear the voice of my old friend, Ms. Vennila almost after a gap of 12 years. Can this website help me in getting the contact number of her so that I can talk to her/meet her in person.
அனுப்பியவர் Kannan K on Tuesday, 11.10.11 @ 03:38am