வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கதை சொல்லி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி  

கதைசொல்லி - அ.முத்துலிங்கம்

தமிழ்மகன்  

தமிழின் முத்து!

தமிழ்ச் சிறுகதைகளில் முதன்முதலாக பாகிஸ்தானியரும் யூதப் பெண்மணியும் ஆப்ரிக்க மக்களும் இன்னபிற உலக மக்களும் இடம்பெற்றது அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகளில்தான். பல நாடுகள், பல சிக்கல்கள், பல மொழிகள், பல இனங்கள் தமிழுக்கு அறிமுகமாகின.

அவருடைய பரந்துபட்ட பட்டறிவும் ஆய்வு மனப்பான்மையும் மொழி லாகவமும் பிரமிப்பானவை. அவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 100 மணி நேரமோ என்று வியக்கும் அளவுக்கு படித்துக் கொண்டே இருக்கிறார். அனுபவங்களின் சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டியில் நமக்குப் புகட்டுகிறார். அவர் நமக்குத்
தருவதை நாமாகத் தேடி கண்டெடுக்க வேண்டுமாயின் நிச்சயமாக நமக்கு இரட்டை ஆயுள் தேவைப்படும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவுக்கோ, அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கோ பயணிக்கும் போது ஓரிடத்தில் ஒரு முழுநாள் நமக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது. இது கிரீன்வீச் நேரக் கணக்கீடுகள் பற்றி அறிந்த் எல்லோரும் புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். அதை அவர் எப்படி மனதை
உலுக்கும் சிறுகதையாக ஆக்குகிறார் என்பதுதான் சூட்சுமம்.

இவருடைய காரை இடித்துவிட்டு அதைப் பழுது பார்ப்பதற்கான பணத்தை அனுப்பிவைக்கிறேன் என்று ஏமாற்றிவிட்ட பெண்ணைப் பற்றி எழுதியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்து இவர் எழுதியதைப் படிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். இந்தமாதிரி இவர் எழுதி அதைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை அவரைத் தூண்டியிருக்கும்.. அவர் மீண்டும் அவர் காரை இடித்திருப்பார்.

அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி தன் பிஞ்சுக்காலில் நிற்க முடியாமல் தவித்ததுபோல காரை இடித்துவிட்டவர் துடித்தார் என்று எழுதுகிறார்.

ஒரு கதையில் அம்மாவும் பெண்ணும் பேசிக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு. முகம் கொடுத்து பேச மறுக்கிறாள் மகள். வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசுகிறாள். சாணை பிடிப்பவன், கத்தியைத் தீட்டும்போது முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பிக் கொள்வது போல என்று
எழுதுகிறார். உலகில் வேறு யாருமே பயன்படுத்தாத உவமைகள் இவருடைய கதைகளில் கொட்டிக் கிடக்கின்றன.

கட்டுரைகள், நாட்குறிப்புகள் என்று எதை எழுதினாலுமே எனக்கு அது சிறுகதை போலவே இருக்கிறது. அது அவருடைய சிறப்பா, என்னுடைய குறையா என்று தெரியவில்லை.

அறிவியலும் புவியியலும் புள்ளிவிவரங்களும் இவர் எழுதினால் இலக்கியமாகிவிடுகின்றன. இத்தனை இளமையாகவும் அதே நேரத்தில் ஆங்கிலக் கலப்பில்லாமலும் எழுத முடிவது சவாலான விஷயம்தான்.

இலங்கையில் பிறந்து, பாகிஸ்தான், ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அ.முத்துலிங்கம் இப்போது கனடாவில் வசிக்கிறார்.

அ.முத்துலிங்கம் சிறுகதைகள் என்ற அவருடைய சிறுகதை தொகுப்பை தமிழினி வெளியிட்டிருக்கிறது. உண்மை கலந்த நாட்குறிப்பு, இப்ப அங்க என்ன நேரம், வியத்தலும் இலமே, அமெரிக்ககாரி, மகாராஜவின் ரயில்வண்டி என்ற நூல்களை உயிர்மை, காலச்சுவடு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. அனைத்தும்
தமிழின் பொக்கிஷங்கள்.

அந்தப் பொக்கிஷங்களை அவருடைய குரலாலேயே கேட்க முடிவது கொடுப்பினை.

http://amuttu.net/

------------------------------------------------------------------------------------------------------

கதைசொல்லி பகுதி முத்துலிங்கம் அவர்களிடம் பேசிய சில நாட்களில் தானே இருபது கதைகளை பதிவு செய்து அனுப்பி இருந்தார். எப்போது நேரில் சென்று எழுத்தாளர்களை சந்தித்து அவர்களை கதை சொல்ல வைத்து பதிவு செய்து வருவதே வழக்கம். ஆனால் முத்துலிங்கம் அவர்கள் கனடாவில் வசிப்பதால் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவரது குரலில் கதைகளை கேட்பது புதியதொரு அனுபவத்தை வாசகர்களுக்கு தருமென்று நினைக்கிறேன். கதைசொல்லியை இப்படியும் இசையோடு சேர்த்து கொடுக்கலாம் என்று எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்திருக்க்றார் முத்துலிங்கம். அவர்களுக்கு எனது விசேச நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைகளில் ஆங்காங்கே மிக சிறப்பாக தன்னுடைய குரலில் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி, தேவையான இடங்களில் இன்னொருவரையும் கதையில் இணைத்து கதை சொல்ல வைத்த பாங்கு சிறப்பு. இப்படியான அர்ப்பணிப்பு உணர்வே முத்துலிங்கம் அவர்களின் வளர்ச்சிக்கும், அவரது சிறந்த எழுத்துக்கும் காரணம் என்று நினைக்கிறேன். இன்னமும் கூட அவரது கதைகளில் இருந்தா என்னால் விடுபட முடியவில்லை. இந்த அறிய சந்தர்ப்பத்தை வாசகர்களாகிய உங்களுக்கு அளிப்பதில் தமிழ் ஸ்டுடியோ பெருமை கொள்கிறது.

இருபது கதைகளில் மற்ற பத்துக் கதைகளும் விரைவில் பதிவேற்றப்படும்.

அருண் மோ. 


------------------------------------------------------------------------------------------------------

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
-------------------------------------------------------------------------------------

சில முக்கியக் குறிப்புகள்:

* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.

* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.

* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.

* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.

* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள்.  thamizhstudio@gmail.com

கதைகளை கேட்க Adobe Flash Player (SWF) தேவை. உங்கள் கணினியில் இந்த மென்பொருள் இல்லையென்றால் கீழ்க்கண்ட இணைப்பில் பதிவிறக்கம் செய்துக் கொண்டு கதைகளை கேட்கலாம்.

http://www.adobe.com/support/flashplayer/downloads.html

கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 1

நிமிடம்: 14 --  நொடி: 39



கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 2
நிமிடம்: 14 --  நொடி: 13

 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 3
நிமிடம்: 14 --  நொடி: 18
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 4
நிமிடம்: 17 --  நொடி: 09
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 5
நிமிடம்: 12 --  நொடி: 40
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 6
நிமிடம்: 13 --  நொடி: 58
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 7
நிமிடம்: 12 --  நொடி: 45
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 8
நிமிடம்: 15 --  நொடி: 31
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 9
நிமிடம்: 18 --  நொடி: 02
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 10
நிமிடம்: 20 --  நொடி: 36
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 11
நிமிடம்: 12 --  நொடி: 36
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 12
நிமிடம்: 35 --  நொடி: 38
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 13
நிமிடம்: 14 --  நொடி: 42
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 14
நிமிடம்: 32 --  நொடி: 38
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 15
நிமிடம்: 11 --  நொடி: 47
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 16
நிமிடம்: 13 --  நொடி: 50
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 17
நிமிடம்: 17 --  நொடி: 33
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 18
நிமிடம்: 14 --  நொடி: 53
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 19
நிமிடம்: 12 --  நொடி: 36
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 20
நிமிடம்: 13 --  நொடி: 45
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 21 - அமெரிக்ககாரி
நிமிடம்: 38--  நொடி: 26
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 22
நிமிடம்: 19 --  நொடி: 43
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 23
நிமிடம்: 18 --  நொடி: 59
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 24
நிமிடம்: 19 --  நொடி: 55
 
 
கதைசொல்லி - அ. முத்துலிங்கம் - 25
நிமிடம்: 18 --  நொடி: 04
 
 

36 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

இந்தக் காலத்தில் டவுன்லோட் சுட்டி தராதது ஆச்சரியம். அராஜகமும் கூட

அனுப்பியவர் Bala on Monday, 6.02.12 @ 11:38am

ஐயா நேற்று நள்ளிரவிலிருந்து உங்கள் கதைகளில் தான் மூழ்கி கிடக்கிறேன். சொல்லவொண்ணா துயரை அனுபவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்த கதைகள் கொஞ்சமாவது ஒரு புத்துணர்வை அளிக்கும் என்று நினைக்கிறேன். எப்போதும் உங்கள் எழுத்தில் மூழ்கிக் கிடக்கும் நாங்கள் இப்போது கதைசொல்லியில்.. தமிழ் ஸ்டுடியோவின் இந்த அறிய முயற்சி இப்போது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. ஆறுதலாகவும் இருக்கிறது. நன்றி.

அனுப்பியவர் சேரன் on Monday, 6.02.12 @ 23:24pm

இன்னும் உங்கள் குரல் மனதை விட்டு அகலவில்லை. உங்கள் புகைப்படத்தையும் கதைகளையும் சேர்த்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னமும் விட்டு செல்ல மனமில்லை. எத்துனை அறிய முயற்சி இது. ஒவ்வொரு கதைகளும் அற்புதம். பாவாடை கதை என்னை இன்னமும் அழைக்கழிக்கிறது. வினோத்.

அனுப்பியவர் வினோத் on Monday, 6.02.12 @ 23:25pm

பத்துக் கதைகளும் போதவில்லை. மீதி கதைகளையும் விரைவில் கொடுங்கள் அருண். முத்துலிங்கம் குரலை கேட்க வைத்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள். உடல் சிலிர்த்துப் போகிறது கதைகளை கேட்கும்போது. நிச்சயம் கதைசொல்லி பகுதி தமிழ் ஸ்டுடியோவின் சாதனைதான். முத்துலிங்கம் ஐயா உங்கள் இணையத்தை தினசரி வாசிப்பேன். இப்போது உங்களுடன் பேசுவது போல் உள்ளது, கதைசொல்லியின் மூலம். மிக்க நன்றி.

அனுப்பியவர் சிவக்குமார் on Monday, 6.02.12 @ 23:30pm

எதை விட எதை கேட்க.. இப்படியா எங்களை திக்கு முக்காட செய்வீர்கள். முதல் மூன்று கதைகளை மட்டுமே இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அனுப்பியவர் தவச்செல்வன் on Monday, 6.02.12 @ 23:37pm

தமிழ் ஸ்டுடியோவில் வெளிவந்த மற்றக் கதைகளை போல் இல்லாமல் முத்துலிங்கம் அவர்களின் கதையில் கொஞ்சம் செயற்கைத் தன்மை இருப்பதாக உணர்கிறேன். ஆனால் என்னால் உறுதியாக கூற முடியவில்லை. இந்த கதைகளை ஒதுக்க முடியாமல், அதே நேரத்தில் யதார்த்தமாகவும் இல்லாமல் இருக்கிறது. என்ன காரணம்?

அனுப்பியவர் விமல் on Monday, 6.02.12 @ 23:40pm

உங்கள் எழுத்தைப் போல் அல்லாமல் கதை சொல்லிய விதம் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. எவ்வித இசையுமில்லாமல் உங்களுடன் அந்தரங்கமாக உங்கள் கதைகள் உறவாட வேண்டும், அதுவே சிறந்த கதை சொல்லியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த சமூகமே இப்படி செயற்கையாக தானே இருக்கிறது.

அனுப்பியவர் மணிகண்டன் on Tuesday, 7.02.12 @ 00:02am

கதைசொல்லியில் இதுதான் உச்சம் என்று நினைக்கிறேன். மிக அருமையான கதைகள். இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு கூட இலக்கியத்தின் மீது ஆர்வத்தை வரவழைக்க கூடிய கதைகள். ஐயா அபாரம்.

அனுப்பியவர் செந்தமிழன் on Tuesday, 7.02.12 @ 00:15am

தொடங்கும்போதே தட தடக்கிறது இதயம். அருமையான கதைகள். சில நேரங்களில் நீங்கள் கதையாகவே மாறிவிட்டீர்கள். கலக்கி விட்டீர்கள் சார்.

அனுப்பியவர் முத்துக்குமார் on Tuesday, 7.02.12 @ 03:08am

மிகவும் பிடித்த எழுத்தாளரின் குரலை இங்கே கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் குரலில் அவ்வளவு இளமை இருக்கிறது.

அனுப்பியவர் ரேணு on Tuesday, 7.02.12 @ 03:33am

தங்களின் குரல் கேட்டு இன்புற்றேன். இன்னும் கூட அப்படியே இளமை மாறாத குரல். கதைகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

அனுப்பியவர் கிருஷ்ணன் on Tuesday, 7.02.12 @ 04:12am

ஒவ்வொரு கதையின் தலைப்பையும் சொல்லி, அடுத்த நொடியே கதைக்குள் நகர்ந்து விடும் உங்களின் கதைசொல்லல் முறை அபாரமான ஒன்று. மிகவும் ரசித்தேக் கேட்டேன்.

அனுப்பியவர் செல்வம் on Tuesday, 7.02.12 @ 04:22am

மிகவும் நன்றாக இருக்கிறது.

அனுப்பியவர் இளைய அப்துல்லாஹ் on Tuesday, 7.02.12 @ 12:04pm

மிக சிறப்பான கதைகள். எல்லாக் கதைகளும் நன்றாகவே இருக்கிறது.

அனுப்பியவர் அமுதன் on Tuesday, 7.02.12 @ 23:27pm

இடையில் கதையில் இணையும் அந்த பெண்ணும் அருமையாக கதையோடு பயணம் செய்கிறார். அனைத்து கதைகளையும் ரசித்துக் கேட்டேன்.

அனுப்பியவர் சந்துரு on Tuesday, 7.02.12 @ 23:34pm

மிக பிரம்மாண்டமாக இருக்கிறது ஐயா.. மனதுக்கு நெருக்கமான கதைகள். இன்னும் கூட கேட்கத் தூண்டுகிறது.

அனுப்பியவர் ரவிகுமார் on Tuesday, 7.02.12 @ 23:45pm

சிறப்பான ஒலிப்பதிவு. கதைகளை மிக துல்லியமாக கேட்க முடிந்தது. எனது குழந்தைகள் கூட கதைகளை கேட்டு ரசித்தனர். அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அப்படியே கதையோடு ஒட்டி இருந்தது. இப்படி அவர்கள் கதை கேட்டு நான் பார்த்ததில்லை. இரண்டு நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். முத்துலிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றி.

அனுப்பியவர் சந்திரசேகரன் on Wednesday, 8.02.12 @ 00:06am

இசையெல்லாம் சேர்த்து கதைசொல்லியை தன்மையையே மாற்றி விட்டீர்கள். புதிதாக இருக்கிறது. முத்துலிங்கத்தின் எழுத்தை போல அல்லாமல் இங்கே கொஞ்சம் நகைச்சுவை மட்டும் இல்லாமல் இருக்கிறது. மற்றபடி கதைகள் அருமை.

அனுப்பியவர் சுரேஷ் on Wednesday, 8.02.12 @ 00:21am

சில கதைகளில் விரைவில் முடிந்தாலும், அவை பிரமாதமான கரத்தை கொண்டுள்ளது. முத்துலிங்கம் உண்மையாகவே ஈழ தமிழர்களின் நம்பிக்கையான எழுத்தாளர்தான். அவரது எழுத்துகள் ஈழத்தமிழர்களுக்கு சோகத்தை மறைக்கும் ஒரு வடிகாலாகவே இருக்கும். இப்போது இந்த கதைகளும்..

அனுப்பியவர் ரேகா சுப்பிரமணியம் on Wednesday, 8.02.12 @ 00:27am

உங்கள் இணையதளமும் சென்று பார்த்தேன். அருமையான எழுத்துக்கள்.உங்கள் இணையத்தை அறிமுகம் செய்த தமிழ் ஸ்டுடியோவுக்கும் நன்றிகள்.

அனுப்பியவர் சுதா on Wednesday, 8.02.12 @ 00:30am

முதல் கதையையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இசையோடு சேர்ந்த உங்களின் குரல் அபாரம்.

அனுப்பியவர் தேவன் on Wednesday, 8.02.12 @ 02:33am

அருமையான குரல் உங்களுடையது. கதைகள் அருமை.

அனுப்பியவர் சுந்தர் on Wednesday, 8.02.12 @ 03:35am

சூப்பர் கதைகள். மனம் முழுக்க கதைகளாகவே இருக்கிறது.

அனுப்பியவர் விஜய் on Wednesday, 8.02.12 @ 04:30am

அடுத்த பத்து கதைகளுக்கு காத்திருக்கிறோம். நன்றி.

அனுப்பியவர் சந்திரன் on Wednesday, 8.02.12 @ 04:33am

முத்துலிங்கம் அவர்களின் எழுத்தை இப்போதுதான் வாசிக்கிறேன். மிகுந்த நகைச்சுவையுடன் எழுதுகிறார். கதைகளும் அற்புதம்.

அனுப்பியவர் மணிபாரதி on Wednesday, 8.02.12 @ 04:59am

உங்கள் குரல் நன்றாக இருந்தாலும், கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. ஒருவேளை இப்படி கதைகளை கேட்டு பழகாதது கூட காரணமாக இருக்கலாம்.

அனுப்பியவர் அய்யனார் on Wednesday, 8.02.12 @ 05:04am

மொழியின் ஆளுமையை உங்களின் குரல் கூட மிக அருமையாக வெளிப்படுத்துகிறது. ரசனையின் உச்சமாக இருக்கிறது. நன்றி ஐயா.

அனுப்பியவர் விஷ்ணு on Wednesday, 8.02.12 @ 21:25pm

எங்கேயோ பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் அப்பால் உங்கள் குரலை கேட்க வைத்தமைக்கு தமிழ் ஸ்டுடியோவிற்கு பல கோடா நன்றிகள். உங்கள் குரலை இப்படி கேட்க நீண்ட நாள் ஆசைப்பட்டேன். நடந்துவிட்டது. கதைகள் அத்தனையும் பொக்கிஷம்.

அனுப்பியவர் ராஜா on Wednesday, 8.02.12 @ 22:49pm

ரியல் ஹீரோ சார் நீங்க.. கதைகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கிறது. இரவு முழுக்க இனி கதை கேட்பத்தான் என் வேலை.

அனுப்பியவர் பாண்டியன் on Wednesday, 8.02.12 @ 23:01pm

நான்காவது, ஐதாவது கதைகளின் சாரம் அருமை. இப்படி இதுவரை கதைகள் கேட்டதில்லை.புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. முதல் கதையான பாவாடை எனக்கு மிகவும் பிடித்திருகிறது. உங்கள் குரல் அதற்கு ஒரு காரணம் கூட.

அனுப்பியவர் செல்வி on Wednesday, 8.02.12 @ 23:14pm

கிரேட்.. உங்கள் கதைகள் இதோவரையிலான கதைசொல்லிகள் நான் மிக ரசித்தது.

அனுப்பியவர் அபர்ணா on Thursday, 9.02.12 @ 02:58am

உங்கள் பிரமாண்ட உழைப்பே கதைகளை அழகுபடுத்தியுள்ளது. நான் மிக ரசித்தேன். எனது குடும்பமே அமர்ந்து இரவு முழுவதும் கதைகளை கேட்டோம். அந்த இரவின் அழகு அருமை.

அனுப்பியவர் பரிதிராஜ் on Thursday, 9.02.12 @ 03:14am

தமிழ் நாட்டில் இலக்கிய தத்தளிக்கும்போது உங்கள் கதைகளை கேட்பதே இப்போதைக்கு மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

அனுப்பியவர் விதுஷன் on Thursday, 9.02.12 @ 03:16am

கதைகளை வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்று இருக்கிறீர்கள். அருண் அடுத்தது பள்ளிக்கூடங்களில் கதைசொல்லிகளை அழைத்து கதை சொல்ல வைக்கலாமே? நல்ல மாணவர்களை உருவாக்க இது நிச்சயம் உதவும்.

அனுப்பியவர் அமுதன் அ on Thursday, 9.02.12 @ 23:59pm

அம்மாவின் பாவாடையை மூன்று முறை கேட்டிருப்பேன். கதையின் இறுதியில் அம்மா போராடி பாவாடையினைக் காப்பாற்றி பாவாடை கிழிந்தபிறகும்
அம்மாவின் அழுகை சிரிப்பாக மாறுவதன்விந்தை
ஒரு தலைமுறையின் இருத்தலின் ஏக்கமாக வாழ்தலின் ஏக்கமாக வெளிப்படுகிறது.

செங்கல் கதை வாழ்வின் அர்த்தமுள்ள கனவுகளின் வெளிப்பாடு/ஆனாலும் அது தீர்மானிக்கப்படுவது குடும்ப அமைப்பில் யாரால் என்பதை உணர்த்தும் உத்தி கவனத்திற்குரியது. எல்லாக் கனவுகளிலும் இடையூறாக இருப்பது யார்? இக்குடும்ப அமைப்பில் ஒருசிறிய மாறுதல் கூட தீர்மானிப்பதை யார் என்பதுதான் உச்சம்!

வசீகரமான தங்களது குரல் எஸ்.இராமகிருஷ்ணனைப் போலவே காந்தமாக ஈர்க்கிறது.

அனுப்பியவர் தனுஷ் on Sunday, 18.03.12 @ 00:48am

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

அனுப்பியவர் சஞ்சயன் on Thursday, 22.03.12 @ 05:25am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
           
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome

Concept, design, development & maintenance by thamizhstudio.com