வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கதை சொல்லி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி  

கதைசொல்லி - பாரதி மணி

சந்திப்பு : ச.சு.அருள். உதவி: சிலம்பரசன்

கதைகேட்பது என்பது அனைவருக்கும் அலாதியானதுதான். அதுவும் பாரதி மணி போன்ற அனுபவமுள்ள மனிதர்கள் கதை சொல்லும் போது நம்மையும் மறந்துவிடுவோம்.இன்றைய தலைமுறையினருக்கு கதைக்கேட்டு வளரும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.காரணம் இன்றைய அவசர உலகத்தில் பொருள் தேடி அலைந்து தன் குழந்தைகளைக்கூட கவனிக்க நேரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.குழந்தைகளும் சுட்டி டிவி போன்ற இருபத்தி நான்கு மணிநேர கார்டூன் சேனல்களிடம் தன்னை புதைத்துக் கொண்டுவிட்டனர். இப்படியான ஒருகாலக்கட்டத்தில் கதைசொல்லும் தாத்தா,பாட்டிகளும் குறைவு. சிறுவயதில் என் அம்மாவிடம் கதை சொல்ல சொல்லி நச்சரித்ததுண்டு.என் அம்மாவுக்கும் இரண்டு கதைகளுக்கு மேல் தெரியாது.இருந்தாலும் இரண்டு கதையையே மீண்டும் மீண்டும் சொல்லச்சொல்லி கேட்டதுண்டு.கதைக்கேட்டு வளராத இன்றைய குழந்தைகளையும்,கதை சொல்லாத இன்றைய பெற்றோர்களையும் நினைக்கும் பொழுது தமிழிழலனின் இந்த கவிதை என் மனதில் ஏனோ வந்து போகின்றன.

*கடைசியாக யாருக்குக்
கதை சொன்னீர்கள்
என்கே?எப்பொழுது?

*கதைக் கேட்காமல்
வலித்துக் கிடக்கின்றன
மழலைச் செவிகள்
உங்கள் தலையணைக்கருகில்

*பொம்மைகள் வைத்து
கதை சொன்னால்
உண்மைகள் விளங்கும்
மழலை உள்ளங்களுக்கு.

வடபழனியிலிருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஒரு நண்பருடன் இணைந்து கொண்டு பயணமானேன்.பொதுவாகவே சென்னையில் எத்தனைமுறை பேருந்தில் பயணம் செய்திருந்தாலும் வேடிக்கைப் பார்க்க இன்னும் இருக்கவே செய்கின்றன.மதியம் 12.30மணிக்கு அவர் வீட்டை அடைந்ததும் அழைப்பு மணி அழுத்தி அவரை அழைத்தோம்.ஓரே உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார். அன்று அவர் ஒரு குழைந்தைக்கு உண்டான மனநிலையிலேயே இருந்தார்.மதிய வேலை என்பதால் எங்களிடம் கொஞ்சம் சோர்வுத்தட்டுப்பட்டது.அவரைப்பார்த்ததும் எங்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.அவருடைய அறைக்கு அழைத்துச்சென்று நம்மை உட்காரவைத்துவிட்டு குளிர்ந்த நீரை குடிக்கச் சொல்லிக் கொடுத்தார்.உங்களுக்கு சிரமம் வேண்டாம் நாங்களே எடுதுக்கொள்கிறோம் என்றதும் எனக்கு ஒரு சிரமமும் இல்லையென்றுச் சொல்லி எங்களை அவருடைய சொந்த விருந்தினரைப் போலவே நடத்தினார்.

போன சிறிது நேரத்திற்குள்ளேயே கதைசொல்ல ஆரம்பித்து விடலாமா என்று சொல்லிக்கொண்டே தயாரானார்.அவர் பெரும்பாலும் குளிர்சாதனம்(ஏ.சி)இல்லாமல் இருக்கமாட்டார் என்பது நமக்குத் தெரியும்.இருந்தாலும் கதை பதிவு செய்யும்போது மட்டும் மின் விசிறி,குளிர்சாதனம் பயன்படுத்த வேண்டாம் என்று தயங்கிய படியே கூறினேன்.ஓ!எஸ், என்று சொல்லிக்கொண்டு உடனே அணைத்து விட்டார்.ஒரு கதை முடிந்து அடுத்த கதைக்கு சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன்.எனக்கு ஒன்றும் சிரமமில்லை என்றார்.நமக்குத்தான் ஒரு கதைக்கேட்டு அடுத்த கதைகேட்க ஓய்வு தேவைப் பட்டது.அந்தளவிற்கு ஒவ்வொருகதையிலும் மூழ்கி விட்டோம்.இடையிடையே சிறிது நேரம் உரையாடிக் கொண்டேதான் பதிவு செய்தோம்.இடையிடையே பழுப்பு(புகையிலை)ஊதிக்கொண்டே இருந்தார்.இவர் பழுப்பு பிடிக்கும் ஸ்டைலே தனிதான்.அவரிடம் உங்களின் குரல் நல்ல கனீரென்று இருக்கிறது என்றேன்,அதற்கு அந்த காலத்தில் London School of Drama வில் Voice culture certficate course முடித்த ஒரே ஆள் நான் தான் என்றார்.

அவருடைய மாமனாரான க.நா.சு வைப்பற்றி யாரும் அறிந்திடாத பல தகவல்களை கட்டுரையாக வாசித்தார்.

கதை சொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவரையும் அறியாமல் அவர் தன் இளமை காலத்திற்கே சென்று விட்டதை என்னால் உணர முடிந்தது.முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.நம்மையும் அறியாமல் அவர் கதையில் நாமும் பயணமானோம்.

அடுத்த கதையாக சுஜாதா அவர்களின் ’நகரம்’ என்ற கதையை சொல்ல ஆரம்பித்தார். இக் கதையில் வரும் பாத்திரங்கள் பேசுவதை இவர் பேசும் போது இக்கதைக்கு இன்னும் அழகு கூடின.அதட்டலும் கெஞ்சலும் கோபமும் அழுகையுமாக இக் கதையை சொல்லி முடித்தார்.இக் கதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் கதை முடியும் போது என் மனதில் ஒரு கணம் ஏற்பட்ட உணர்வு.

வாசகர்களால் பெரிதும் வாசிக்கப்பட்ட நாஞ்சில் நாடனின் ’இடலக்குடி ராசா’ கதையை சொன்னார்.எத்தனை முறை வாசிக்கும் பொழுதும் நம் மனம் கனக்கவே செய்கின்றன.பாரதி மணி அவர்கள் சொல்லும் பொழுது நம் கண்களில் நீர் வழிந்தன.

இப்படியாக ஒவ்வொரு கதையிலும் நாம் கரைந்துப்போனோம்.

இவரிடம் பேச நிறையவே இருக்கின்றன.டெல்லியில்50வருட பணிஅனுபவம்,இலக்கியம்,நாடகம்,திரைப்படம்,ரஜினி,சத்யராஜ்,இந்திய அரசியல்,உலக அரசியல்,இப்பொழுது நடிக்கும் மணிரத்தினத்தின் கடல் வரை அனைத்தையும் பேசினோம்.

உயிர்மையில் வந்த அவருடைய கட்டுரைகள் குறித்தும்,அதன் தொகுப்பாக வந்துள்ள ’பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகம் குறித்தும் பேசினேன்.இதே போல் தொடர்ந்து எழுதுங்கள் என்றதும் அனைவரும் இதைத்தான் கூறுகிறார்கள் ஆனால் எழுதுவது என் தொழில் அல்ல, நான் எழுத்தாளனும் அல்ல என்றும் நான் எழுதியதற்கான நோக்கம் நிறைவேறிவ்ட்டது என்றும் கூறினார்.

முன்னால் பிரதமர்களான நேரு மற்றும் இந்திராகாந்தி இவர்களிடம் ஏற்பட்ட பழக்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பாரதி படத்தில் நடித்ததால் பாரதி மணி என்ற பெயர் வந்ததா என்றேன்.1982 ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டு முடிந்து 200 ஆம் நூற்றாண்டின் தொடக்க விழா ஒன்று டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தேன்.அந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.சங்கர் தயாள் சர்மாவை(முன்னாள் குடியரசுத்தலைவர்,ஆனால் அப்பொழுது அவர் குடியரசுத்தலைவராக இல்லை) அழைத்திருந்தேன்.அதற்காக அவர் அலுவலகத்திற்கு அட்டிக்கடி செல்வேன் அப்பொழுது அவருஅடைய P.A மணி வந்திருக்கிறார் என்பார்.எந்த மணி அந்த பாரதி மணியா என்பார்.ஆகையால் எனக்கு அப்பொழுதே பாரதி மணி என்னும் பெயர் வந்துவிட்டது என்ற சுவாரசியமான தகவலை கூறினார்.

அன்னை தெராசா அவர்களுடனான எதிர்பாராத பயணம்,ஆங் சான் சூ கி யைச் சந்தித்தது என அவருடைய அனுபவங்கள் நீண்டது.

இவரிடமுள்ள ஒரு முக்கியமான பழக்கத்தை நாம் சொல்லியே ஆக வேண்டும்.இவரிடம் ஒரு முறை பழகிவிட்டாலே போதும் இவருக்கு நாம் நண்பணாகிவிடுவோம்.நம்மை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ளவே மாட்டார்.நம்முடைய பின்புலம் எதுவும் இவருக்குத் தேவையில்லை. இவருக்குத் தேவையானது நம்முடைய நட்பு மட்டுமே.

இவருடைய ஒரு மகள் ஜெனிவாவில் உள்ள U.N அலுவலகத்தில் தூதராக வேலை செய்கிறார்.இன்னொரு மகள் டெல்லியில் பணிபுரிகிறார்.ஏன் நீங்கள் ஜெனிவாவில் உள்ள உங்கள் மகள் வீட்டிற்கு செல்லவில்லை என்றதற்கு அங்கு சென்றாலும் இதே போல ஒரு அறையில் இருக்கப் போகிறேன்.அது மட்டுமல்ல நான் சுற்றாதா நாடுகள் கிடையாது.பல நாடுகளின் தெருப்பெயர் முதற் கொண்டு எனக்குத் தெரியும் என்றும் அதைவிட முக்கியம் சென்னையில் வசிப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.

புத்தகங்கள் படிப்பது,தொலைக்காட்சி பார்ப்பது பொழுதுபோக்கு என்றார்.ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் எதையும் இவர் அதிகம் பார்ப்பதில்லை. மது,புகை உயிருக்கு கேடு என்பது போல் தமிழ் சேனல் பார்ப்பது வாழ்க்கைக்கு கேடு என்று ஒரே வரியில் கூறிவிட்டார்.எங்களுக்காக தேனீர் வைத்துக் கொடுத்தார்.தனியாக இருந்தாலும் தனிமை தன்னை தின்றுவிடாதபடி பார்த்துக்கொள்கிறார்.

சந்திப்பு : ச.சு.அருள். உதவி: சிலம்பரசன்

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
-------------------------------------------------------------------------------------

சில முக்கியக் குறிப்புகள்:

* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.

* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.

* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.

* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.

* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள்.  thamizhstudio@gmail.com

கதைகளை கேட்க Adobe Flash Player (SWF) தேவை. உங்கள் கணினியில் இந்த மென்பொருள் இல்லையென்றால் கீழ்க்கண்ட இணைப்பில் பதிவிறக்கம் செய்துக் கொண்டு கதைகளை கேட்கலாம்.

http://www.adobe.com/support/flashplayer/downloads.html

கதைசொல்லி 1- அறம் - ஜெயமோகன்

நிமிடம்: 43 --  நொடி: 19



கதைசொல்லி 2 - ஒரு கோப்பை காப்பி - இந்திரா பார்த்தசாரதி
நிமிடம்: 29 --  நொடி: 38

 
கதைசொல்லி 3 - இடாலக்குடி ராசா - நாஞ்சில் நாடன்
நிமிடம்: 15 --  நொடி: 17
 
கதைசொல்லி 4 - நகரம் - சுஜாதா
நிமிடம்: 20 --  நொடி: 37
 
 
அன்னை தெரசா கட்டுரை - பாரதி மணி
நிமிடம்: 08 --  நொடி: 53
 
 
க.ந.சு. கட்டுரை - பாரதி மணி 
நிமிடம்: 27 --  நொடி: 44
---------------------------------------------------------------------------------------------------------

17 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

மிக சிறப்பாக இருக்கிறது. கதைசொல்லி பகுதியை நீண்ட நாட்களாக வராமல் இருந்தது. ஆனால் அதற்கு மிக சிறந்த விருந்தாக அமைந்துள்ளது பாரதி மணி அவர்களின் இந்த கதைசொல்லி. அருமையான கதைகள். அறம் கதையை படிக்க இயலவில்லை. ஆனால் இப்போது கேட்டுவிட்டேன். எத்துனை அருமையான கதை. மிக்க நன்றி தமிழ் ஸ்டுடியோ.

அனுப்பியவர் சீனிவாசன் on Friday, 22.06.12 @ 23:44pm

மிக அருமையானதொரு பதிவு

நன்றி

அனுப்பியவர் ஈரோடு கதிர் on Saturday, 23.06.12 @ 04:33am

அருமையோ அருமை. இப்படி ஒரு முயற்சியை இதுநாள் வரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். மன்னிக்கவும். அறம் கதை மிக அருமை.

அனுப்பியவர் செல்வகுமார் on Sunday, 24.06.12 @ 23:26pm

எல்லா கதைகளும் அருமை. இடாலக்குடி ராசா வுக்கு மணி சார் அவர்களின் குரல் ஏற்ற இறக்கங்கள் மிக அருமை.

அனுப்பியவர் அபர்ணா on Sunday, 24.06.12 @ 23:34pm

இ.பாவின் கதை அருமை. எல்லா கதைகளும் கேட்க மிக அருமையாக இருக்கிறது. நன்றி தமிழ் ஸ்டுடியோ பாரதி மணி.

அனுப்பியவர் சந்திரசேகர் on Sunday, 24.06.12 @ 23:42pm

நல்ல முயற்சி. இப்படி கதைகளை கதையாக சொல்லும் பழக்கம் நிச்சயம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும். வாழ்த்துகள் அருண். நன்றி மணி சார்.

அனுப்பியவர் சுரேஷ் குமார் on Monday, 25.06.12 @ 00:07am

எல்லா கதைகளையும் இரண்டு முறை கேட்டுவிட்டேன். சூப்பர் சார்.

அனுப்பியவர் ரேகா சுப்பிரமணியம் on Monday, 25.06.12 @ 00:29am

உங்கள் பணி மிகவும் பாராட்டிற்குரியது. இது போன்ற சிறந்த கதைகளை இப்படி கேட்பது அலாதியான சுகம்தான். நன்றி நண்பர்களே.

அனுப்பியவர் சசிதரன் on Monday, 25.06.12 @ 05:00am

தமிழ் ஸ்டுடியோவின் இந்த முயற்சி பாராட்டிற்குரியது. இதுவொரு பொக்கிசமாக இருக்கிறது. பாரதி மணி அவர்கள் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது. அவரது குரலில் அனைத்து கதைகளும் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. ஐயா உங்கள் பாதம் பணிகிறேன்.

அனுப்பியவர் சுரேந்தர் on Monday, 25.06.12 @ 05:03am

உங்களின் இருமலைக் கூட பொருட்படுத்தாமல் நீங்க கதைகள் சொல்லியிருக்கும் பாங்கு அருமை. இப்படி அருமையான கதைகளை தேர்ந்தெடுத்து சொன்னமைக்கு உங்களுக்கு எனது நன்றிகள். இன்னும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

அனுப்பியவர் பரிதிராஜ் on Monday, 25.06.12 @ 05:04am

சிறப்பான ஒலிப்பதிவு. பாரதி மணி அவர்களின் குரல் மிக அருமை. கதைகள் தேர்வு சூப்பர்..

அனுப்பியவர் கண்ணன் on Monday, 25.06.12 @ 05:44am

பாரதி மணி அவர்களின் குரல் வளம் அருமை. கதைகளை படிப்பதில் புதிய உக்தியை அவர் கண்டுபிடித்துள்ளார். என்ன அருமையான பணி.வாழ்த்துக்கள்.

அனுப்பியவர் சரோஜ் குமார் on Thursday, 28.06.12 @ 00:38am

நான் ஜெயமோகனின் தீவிர வாசகன். அறம் வரிசையின் முக்கியக் கதை அதுவும் அய்யா அவர்களின் குரலில் கேட்டது வித்தியாசமாக இருந்தது. எனக்கு படித்தபொழுது கிடைத்த அனுபவத்தைவிட கதைசொல்லி மூலம் கேட்டது நானும், எழுத்தாளரும், சாமிநாதுவும் மற்றும் ஜெயமோகனும் அமர்ந்து உரையாடியது போல் இருந்தது.
இத்தனை வருடத்தில் முதன் முதலாக ஜெயமோகனின் கதை அதுவும் திரு.பாரதிமணி அவர்களின் மூலமாக அனைவரையும் கேட்கவைத்த கூடுவிற்கு நன்றிகல் பல!!
‍... சுரேஷ்பாபு தாழ்மையுடன்.

அனுப்பியவர் சுரேஷ்பாபு பாலன் on Saturday, 30.06.12 @ 14:00pm

மிக மிக அருமையாக உள்ளது..

அருள் அவர்களின் முயற்சி

பாராட்டுக்குரியது

வாழ்த்துகள்

தமிழ் இயலன்

அனுப்பியவர் தமிழ் இயலன் on Wednesday, 4.07.12 @ 08:34am

பாரதி மணியின் குரல் வளமும் அவரது முதிர்ச்சி பெற்ற திறமையும் இங்கு பளிச்சிடுகின்றன. பாரதி மணி தேர்ந்தெடுத்த ஐந்து கதை/கட்டுரைகளும் மிகவும் சிறப்பானவை.

அனுப்பியவர் BP on Thursday, 5.07.12 @ 15:23pm

பாரதி மணி ஐயா அவர்களுடைய மனதை படம் பிடித்து காட்டியிருக்கும் அருமையான பதிவு....

அனுப்பியவர் திருமுருகன் on Saturday, 14.07.12 @ 22:41pm

நாஞ்சில் நாடானின் இடாலக்குடி ராசா சிறுகதையை பாரதி மணியின் குரலில் கேட்கும் போது எழும் உணர்வெழுச்சி கதையை ஒரு முழுமையைக்கு வெகு அருகில் கொண்டு சேர்க்கிறது..

அனுப்பியவர் ராமசுப்பிரமணியன் on Friday, 24.08.12 @ 04:14am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
           
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome

Concept, design, development & maintenance by thamizhstudio.com


</