வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கதை சொல்லி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா (Charu Niveditha) என்ற புனைபெயரில் எழுதும் K.அறிவழகன் தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர்.

தமிழில் பல எழுத்தாளுமைகளின் திருஉருவினை (halo) கட்டுடைத்ததில் மிகப்பெரிய பங்கு சாரு நிவேதிதாவிற்கு உண்டு. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன.

"ஜீரோ டிகிரி" இவருடைய சிறந்த படைப்பு. "கலகம் காதல் இசை" இசை பற்றிய சிறந்த அறிமுக நூல்.

படைப்புகள்

1. எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் (புதினம்)
2. கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
3. கலகம் காதல் இசை (கட்டுரை)
4. கோணல் பக்கங்கள் - (பாகங்கள் 1,2,3) (பத்திகள்)
5. சீரோ டிகிரி (புதினம்)
6. தப்புத் தாளங்கள் (பத்திகள்)
7. நேநோ (சிறுகதை)
8. ராஸ லீலா (புதினம்)
................... இன்னும்...

நன்றி: விக்கிபீடியா

 

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - சாரு நிவேதிதா (Charu Nivedita)

 

 

லிவி

 

 

செவ்வாய்க்கிழமை பின்னேரம் 5.00 மணிக்கு கடிகார முள்ளோடு இதயமும் சேர்ந்து துடித்தது.மூச்சை சில நிமிடங்கள் சிறிது இழுத்து விட்டுக்கொண்டேன். கதை சொல்லிக்காக சாரு அன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ராயப்பேட்டையில் உள்ள அமிதிஸ்ட் கஃபே (Amithist) யில் இரவு சந்திப்பதென முடிவாகியிருந்தது. அடர் நீலமாய் வானம் மாறும்போது தொடங்கிய பயணம் சரியாக இருள் கவிந்ததும் கஃபே க்கு சென்றடைந்திருந்தோம். தகவல் தெரிவித்ததும் சாருவும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கைக் குலுக்கல்களுடன் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். மரங்களில் தொங்கும் லாந்தர் விளக்குகளைப் போன்ற உருளை பல்புகளும் பூவின் அமைப்பையொத்த ஸ்டாண்டில் (stand) இதழ்களையொத்த மங்கிய வெளிச்சம் தரும் மின்சார விளக்குகளுமென சூழ்ந்து நின்ற விருட்சங்களுக்கு கீழ் உள்ள ஒரு மேஜையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்.

முன்னர் ஒருமுறை சென்னை கே.கே நகரில் உள்ள "டிஸ்கவரி புக் பாலஸில்"(Discovery book palace) புத்தக வெளியீட்டு விழாவுக்கு சாரு வந்திருந்தார். அங்கு பள்ளி நாட்களின் வகுப்பறைத் தோழனை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்."பரத்தை கூற்று" புத்தகத்தை வெளியிட்டு சாரு பேசத் தொடங்கினார். அது வரையில் என்னிடம் கதைத்துக் கொண்டு இருந்தவன், திடீரென முழு கவனமும் சாரு பக்கம் திரும்பியது. சாரு பேச்சைக் கேட்க தொடங்கியதும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்.சாருவின் ஒவ்வொரு அசைவையும் அவன் ரசிப்பவனாக இருந்தான். சாரு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சமர்பணம் என்பதில் தொடங்கி அவர் நடையில் விமர்சித்துக் கொண்டே போனார் (அவர் பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடிமக்களா?). என்னைப் புறந்தள்ளியவனாக அவரின் பேச்சிலே அத்தனை ஆனந்தத்தைக் கண்டான். அவன் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசகன் அல்ல.ஆனால் அவனுக்கு சாருவை பிடித்தருக்கிறது.அவரைத் தொடர்ந்து இணையத்தில் வாசிக்கிறான்.

போலியாக க‌ட்ட‌மைக்க‌ப்பட்ட‌ அமைப்பை மீறுத‌லே சாருவின் எழுத்தின் அர‌சியல். மிக‌த் துல்லிய‌மாய் தேர்ந்தெடுகப்பட்ட ஆணாதிக்க‌ மற்றும் ச‌மூக‌ இறுக்க‌ங்க‌ள் கொண்ட நம் ச‌மூக‌ம் அவ‌ரை ஏற்றுக் கொண்ட‌தே மிக‌ வினோத‌மான‌து. த‌மிழ்ச் ச‌மூக‌ம் சில‌ அற்புத‌ங்க‌ளை செய்து கொண்டே இருக்கும். பெரியாரை எவ்வாறு உயிரோடு விட்டார்க‌ள் என்ற‌ ச‌ந்தேக‌ம் அவ்வ‌ப்போது எழாம‌ல் இல்லை. சாருவையும் இச்சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிற‌து என்றால் அவ‌ரே ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவார்.லாண்ட்மார்க் (land mark) புத்தகக் க‌டையில் ஒருமுறை புத்த‌க‌ங்க‌ளை தேர்வு செய்து கொண்டிருந்தார் ஒருவர்.கையில் சில‌ சாருவின் புத்த‌க‌ங்க‌ளை வைத்திருந்தார். தீவிர‌ வாசிப்பாள‌ர் என‌ எண்ணி அவ‌ரிட‌ம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் சொன்னாவைகள் தான் மிக‌ ஆச்சிரிய‌மானது "எல்லாப் புத்தக‌ங்க‌ளும் ப‌டிக்க‌ மாட்டேன் சாரு நிவேதித்தாவையும் சுஜாதாவையும் ம‌ட்டும் நேரம் கிடைக்கையில் வாசிப்பேன்'. சாதார‌ண‌ வாச‌க‌னையும் த‌ன் பால் ஈர்த்திழுக்க‌ச் செய்திருக்கிறார்.

சாருவிட‌ம் உரையாடுவ‌து ச‌க‌ வ‌ய‌து ந‌ண்ப‌னிட‌ம் சாக‌வாச‌மாக‌ பேசுகிற‌மாதிரி.கொஞ்ச‌ம் பெண்க‌ளைப் ப‌ற்றி,கொஞ்ச‌ம் குடியைப் ப‌ற்றி கொஞ்ச‌ம் இல‌க்கிய‌ம் ப‌ற்றியென‌ சகல‌மும் இருக்கும்.‌ந‌ம்மிட‌ம் அவ‌ர் பேசத்தொட‌ங்கிய‌தும் ஒருவித‌ நெருக்க‌த்தை கொண்டுவ‌ந்து விடுகிறார்.நாம் பேசும்பொழுது 'ம்..ம்' என்று கேட்ப‌தும் த‌லையை ஆட்டி ஆமோதிப்ப‌துபோல் பாவிப்ப‌தும் ஒரு குழ‌ந்தையை அருகில் வைத்து பேசிக் கொண்டிருப்ப‌து போல் இருந்த‌து.எங்கள் பேச்சுக்கிடையில் வெங்கட் சாமிநாதனின் விமர்சனத் தன்மை பற்றிய‌ பேச்சு எழுந்தது. சாரு "வெங்கட் சுவாமிநாதன் எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவர்,யாருக்கும் அவர் கிரிடிபிலிலிட்டி (credibility) தருவதில்லை.

அவர் எழுதிய காலத்தில் மற்ற எழுத்தாளர்களை விமர்சித்திருந்தாலும் சாமிநாதன், தர்மு சிவராம் ஆகியார் மிகச் சிறந்த எழுத்தாள‌ர்கள். அவர்களைப் பற்றி அவர் பேசியதில்லை.எந்திரன் போன்ற ப‌டங்களை விமர்சித்தாலும், பருத்திவீரன் போன்ற படங்களைப் அவ‌ர் பாராட்டலாம்" என்றார். "எனக்கு ஜெயமோகனைப் பிடிக்காது, என்றாலும் ஆனந்த விகடன் பேட்டியில் தமிழில் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களில் அவர் பெயரையும் குறிப்பிட்டேன். வாசிப்பதும் பின் நிராகரிப்பதும் அந்த வாசகனைப் பொறுத்தது" என்றார். சுஜாதா என் நாவலை ஷிட் (shit) என்றார், பாவம் அவருக்கு புரிந்து கொள்ளத் தெரியவில்லை என நினைத்துக் கொண்டேன், இருந்தாலும் அவரை ஜீனியஸ் என சொல்ல எனக்கு பக்குவம் இருக்கிறது" என்று முடித்தார்.

தான் இதுவரை கதைகளே கேட்டதில்லை தனக்கு யாரும் கதைகளே சொன்னதில்லை என தயங்கியவர், கதையை சொல்லத் தொடங்கியதும் சரளமாக சொல்லிக் கொண்டே சென்றார். அவரைச் சுற்றி, சுற்றும் என்ன நடக்கிறது என கவனியாதவர் போல் கதைகளை எங்கும் நிறுத்தாமல் இடைவெளியின்றி சொல்லிச் சென்றார்.அ ந்த சம்பவம் நடக்காமல் இருக்கும் வரை!. வானில் கடந்து செல்லும் மேகம் ஒன்று சிறு தூரலை வீசிச் சென்றது.சாரு அதையெல்லாம் பொருட்படுத்துபவர் போல் தெரியவில்லை.சிறிது நேரத்தில் தூரல் பெருக்கத் தொடங்கியது,ஒலிப்பதிவுக் கருவியை கையில் பிடித்துக் கொண்டே கதைகளை சொல்லிச் சென்றபடி மழையில்லாத ஒரு இடத்தில் கதை தொடர்ந்து கொண்டு இருந்தது. என்ன நடந்தாலும் கதை மட்டும் நிற்பதாக தெரியவில்லை. அப்பொழுதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது!.

ஒரு பெண் சாருவை அங்கே ச‌ற்றும் எதிர்பாராத‌வளாக‌ அங்கு ச‌ந்தித்த‌வ‌ளாய் மிக‌வும் பூரிப்ப‌டைந்து "ஹாய் சாரு.. ஹ‌வ் ஆர் யு" (Hi charu..how are youuuuu?). சாரு சிறு புன்ன‌கையை ம‌ட்டும் உதிர்த்தார்."ஐ ய‌ம் (I am) ...அன்னைக்கு ர‌மேஷ் போய்ட்டானா..டூ யு ரிமெம்பர் மீ? (Do you remeber me)". ம‌றுமொழியாக‌ அத‌ற்கும் சிறு புன்னைகை மட்டும் செய்தார்."சாரி சாரு.. ஐ லாஸ்ட் யுவ‌ர் காண்டாக்ட் ந‌ம்ப‌ர்(sorry charu.. i lost ur contact number)"என்றாள்.அப்ப‌டியொரு வேக‌த்தை யாரிலும் பார்த்திருக்க‌ முடியாது. இமை மூடி க‌ண் திற‌ப்ப‌த‌ற்குள் த‌ன் விசிட்டிங் கார்டை (visiting card) அந்த பெண்ணிடம் நீட்டினார். சிறிது நேர‌த்தில் அப்பெண் சென்று விட்டாள். தூர‌ல் விட‌வும் ம‌ர‌த்தின் கீழ் உள்ள‌ மேஜையில் மீண்டும் அம‌ர்ந்து கொண்டோம்.சாரு சிறிது யோச‌னையில் ஆழ்ந்த‌வ‌ராக‌ இருந்தார் பின்ன‌ர், "ப‌ர‌வாயில்லை இத்த‌னை நாள் விசிட்டிங் கார்ட் (visiting card) வச்சு இருந்ததுக்கு ஒரு பலன் கிடைச்சது" எனறு தன் அக்மார்க் சிரிப்போடு சொன்னார். பிற‌கு க‌தை தொட‌ர்ந்து முற்றுப் பெற்ற‌து.

சாருவின் வாசிப்பு உல‌க‌ம் மிக‌ப் ப‌ர‌ந்தது. ல‌த்தீன் அமெரிக்க‌ இல‌க்கிய‌ங்க‌ள் அர‌பி இல‌க்கிய‌ங்க‌ள் என‌ விரிந்து கொண்டே செல்ப‌வை.அவ‌ரின் வாசிப்புக்கான‌ தொட‌க்க‌ப் புள்ளி எங்கிருந்து ஆர‌ம்பிக்கும். "சுஜாதா நாவல் ஒன்றை வாசிக்கும் பொழுது அதில் வ‌ச‌ந்த் க‌ணேஷிடம் நீட்ஷே எல்லாம் ப‌டிக்கிறேன் பாஸ் என்று ஒரு வ‌ரி வ‌ரும், அத‌ன் பிற‌கு தான் நீட்ஷேவை தேடிப் ப‌டித்தேன். சேகுவேரா ப‌ற்றி ஒரு இட‌த்தில் ப‌டித்தேன் அத‌ன் தொட‌ர்ச்சியாக‌த் தான் ல‌த்தீன் அமெரிக்க‌ இலக்கிய‌ம்.அர‌பி இல‌க்கிய‌ங்க‌ளை ப‌ற்றி ஆங்கில‌ ப‌த்திரிகை ஒன்றில் அரைப் ப‌க்க‌த்திற்கு ஒரு க‌ட்டுரை வ‌ந்த‌து. அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ அர‌பி இல‌க்கிய‌ங்க‌ளை ப‌டிக்க‌த் தொட‌ங்கினேன்" என்றார். இவ‌ர் விம‌ர்ச‌னங்க‌ளை எங்கிருந்து க‌ற்றுக் கொண்டார். சாரு "நீண்ட‌ ஒரு வாசிப்பின் தொட‌ர்ச்சியாக‌ அது நிக‌ழுமென்றார்"‌.

சாரு த‌ன் படைப்புகளை விடுத்து அவ‌ரின் ச‌றுக்க‌ல்க‌ளும் தோல்விக‌ளும் அவ‌ரின் ஆன்மிக‌ தேடலில் இருக்கிற‌து (ச‌த்தியமா நான் நித்தியான‌ந்த‌ர‌ பத்தி சொல்ல‌லீங்க‌). சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சாய்பாபா ப‌ற்றி அவ‌ர் எழுதிய‌து தான் அது. சாருவும் அவர் ந‌ண்ப‌ரும் சாய்பாபாவை பார்க்க‌ சென்றிருக்கிறார்க‌ள். சாய்பாபா எப்பொழுதும் ப‌க்‌த‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ மோதிர‌ம் வர‌வழைத்து த‌ருவார். உல‌க‌ச் ச‌ந்தையில் த‌ங்க‌ம் விலை ஏறாம‌ல் என்ன‌ செய்யும்?. சாரு நண்பர் அருகில் வ‌ந்த‌ சாய்பாபா மோதிர‌த்திற்கு ப‌திலாக‌ ச‌ங்கிலி வ‌ர‌வ‌ழைத்துக் கொடுத்திருக்கிறார். ந‌ண்ப‌ர் எப்பொழுதும் மோதிர‌ம் தானா? என மனதுள் நினைத்தது சாய்பாபாவுக்கு கேட்டு விட்ட‌து. இதை சிலாகித்து எழுதுகிறார். அமைச்ச‌ர் துரை முருக‌னுக்கும் சாருவுக்கும் என்ன‌ வித்தியாச‌ம். சேகுவேரா ச‌ங்க‌ராச்சாரியாரைப் பார்த்து மெய் சிலிர்த்து அவ‌ரின் தெய்வீக‌த் த‌ன்மையில் (அப்படி ஒன்று இருந்தால்) ஆழ்ந்து கண்ணீர் மல்க நிற்பது போல் இருக்கிறது.

சாருவின் இரண்டாம் பகுதி க‌தை சொல்லிக்காக மழை குறுக்கிட்டதால் சற்றே தாமதமாக‌ செல்ல‌ நேர்ந்த‌து. அதை புரிந்து கொண்ட‌வ‌ராக‌ ப‌ராவாயில்லை என்றார். அவர் நகைப்பான க‌தைக‌ளை சொல்ல‌த் தொட‌ங்கினால் அருகில் இருப்ப‌வ‌ரால் சிரிப்பை அட‌க்கிக் கொள்ள‌ இய‌லாது என்று அன்று புரிந்த‌து."என‌க்கு க‌தை சொல்ல‌ வேண்டும் என்றவுட‌ன் பாரிஸுக்கு சென்ற‌து தான் ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து. கொடுங் காற்று ம‌ழையுட‌ன் அந்த‌ நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தோம். வண்டியை ஓட்டிக் கொண்டு வருபவர் ஒரு ஆண்டுக்கு முன்பு ஒருமுறை விபத்தை சந்தித்ததற்கு பின் இப்பொழுது தான் வ‌ண்டி ஒட்டுவ‌தாக‌ சொன்னார். த‌ன‌க்கு தூக்க‌ம் வ‌ருவ‌தால் சாருவை செக்ஸ் க‌தை சொல்ல‌ச் சொன்னார். க‌தை முடிந்த‌ பிற‌கும் சாரு தூக்க‌ம் வ‌ருகிற‌து மற்றொரு க‌தை சொல்லுங்க‌ளென்றார். ஒரு க‌தை முடிந்த‌ பிற‌கு அடுத்த‌ க‌தை என‌ சொல்லிக் கொண்டே உயிரைக் கையில் பிடித்து வ‌ந்து சேர்ந்தோம்" என்றார் சாரு.கதைகளை அழ‌காக‌ ப‌திவு செய்து த‌ந்தார் சாரு.

பின் குறிப்பு:

1. சாரு தான் குடிப்பதை நிறுத்தியதைப் பற்றிச் சொன்ன செய்திகள் இக் கட்டுரையில் கத்திரி (censor) செய்யப்பட்டுள்ளது.

இதோ அவ‌ருடைய‌ க‌தைக‌ளை கேட்ப‌த‌ற்கு கீழே உள்ள‌ ப்ளே ஐகானை(play icon) த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)


சாரு நிவேதிதா கதைகள் - 1

 

நிமிடம்: 15 --  நொடி: 22

 சாரு நிவேதிதா கதைகள் - 2
நிமிடம்: 18 --  நொடி: 46

 
சாரு நிவேதிதா கதைகள் - 3
நிமிடம்: 08 --  நொடி: 30

 
40 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

தமிழின் மிக முக்கிய ஆளுமை சார் நீங்கள். கதைகள் அனைத்தும் அருமை. உங்களை விட இந்தக் கதைகளை இவ்வளவு துணிச்சலாகவும், நேர்த்தியாகவும் வேறு யாரும் சொல்லிவிட முடியாது. இரவில் இருந்து நான்கைந்து முறை கேட்டு விட்டேன். இன்னும் கேட்க ஆசைப்படுகிறேன். அதுதான் சாரு.

அனுப்பியவர் தனசேகர் on Monday, 6.12.10 @ 12:25pm

முதல் கதையில் இருந்தே தொடங்கும் சாருவின் வசீகரம் கடைசி வரை தொடர்கிறது. இருந்தாலும் கடைசி கதை அருமை. இன்று இரவு மீண்டும் கேட்க வேண்டும்.

அனுப்பியவர் கணேஷ் குமார் on Monday, 6.12.10 @ 12:44pm

marvellous charu. kadhai solla theriyaadhu enru koorivittu migavum naiyaandi kalandhu arumaiyaaga kadhai solli irukkireergal. super.

அனுப்பியவர் Sangavi on Monday, 6.12.10 @ 12:47pm

நல்ல முயற்சி.

வாழ்த்துகள் அருண்.

சில சமயங்களில் சாருவின் குரல் சரியாக கேட்கவில்லை. ஆடியோ பதிவின் போது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

அனுப்பியவர் சூர்யா on Monday, 6.12.10 @ 13:15pm

pazhamaigalaip pesi paazhaaip pona tamil samoogathil neengal oru sooraavali.. indha kadhaigal pala kattudaithalgalai seidhirukinrana. arumaiyaana kadhaigalai vazhangiyamaikku koodu vukku valthugal.

அனுப்பியவர் Santhosh on Monday, 6.12.10 @ 21:57pm

Dear charu, ungalil kuralil kadhaigalai ketpadhu alapparkariya santhosathai kodukkiradhu. idaiyil kuyilosai, sala salakkum kaatru ena pinnaniyum rammiyamaaga irukkiradhu. edho oru iyarakiyudan inainthu vaazhvadhu ponra oru unarvai indhak kadhaigalum, pinnaniyum kodukkiradhu.

அனுப்பியவர் Mahesh on Monday, 6.12.10 @ 22:01pm

சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சில அருமையான தகுதிகள் இந்த தளத்தின் நிறுவனர் அருணுக்கும் உண்டு. மாபெரும் ஒரு விசயத்தை மிக அனாயசமாக செய்துவிட்டு, அதுப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலைக்கு சென்று விடுவதுதான் அது. இந்த தளத்தின் ஒவ்வொரு பகுதியும் அவ்வளவு அருமையானவை. குறும்படம், இலக்கியம் என தனது பயணத்தை நீட்டிக் கொண்டே போனாலும், இரண்டையும் சரியாக செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் இந்த கதை சொல்லி பகுதியின் அருமை பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ, எதிர்கால சமூதாயம் உங்களை நிச்சயம் போற்றும். அதுவும் தமிழின் முன்னணி எழுதாழர்களின் குரல்களை இதுப் போல் கதை சொல்லியாக கேட்பதில் ஏற்படும் ஆனந்ந்தம் சொல்லி தீராது. சாருவின் இந்த மூன்று கதைகளும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் குரலின் வசீகரம் என்னை அடுத்த வேலைக்கு செல்ல விட மாட்டேன் என்கிறது. சாரு யு ஆர் கிரேட்...

அனுப்பியவர் சுப்புராஜ் on Monday, 6.12.10 @ 22:14pm

kadhai solli paguthi miga arumaiyaaga irukiradhu. idhe ponru innum pala eluthaalargalin kadhaigalai ketka aarvam. chaaruvin kadhaigal anaithum arumai. irundhaalum moonraavadhu kadhaiyin kambeeram ennai konjam kiranga seigiradhu.

அனுப்பியவர் Velan G on Monday, 6.12.10 @ 22:27pm

த‌ன‌க்கு தூக்க‌ம் வ‌ருவ‌தால் சாருவை செக்ஸ் க‌தை சொல்ல‌ச் சொன்னார். க‌தை முடிந்த‌ பிற‌கும் சாரு தூக்க‌ம் வ‌ருகிற‌து மற்றொரு க‌தை சொல்லுங்க‌ளென்றார். ஒரு க‌தை முடிந்த‌ பிற‌கு அடுத்த‌ க‌தை என‌ சொல்லிக் கொண்டே உயிரைக் கையில் பிடித்து வ‌ந்து சேர்ந்தோம்" என்றார் சாரு.கதைகளை அழ‌காக‌ ப‌திவு செய்து த‌ந்தார் சாரு.// ha..ha..ha.. manam vittu sirithup padithen. charu ponra aalumaigalin kuralaik ketpadhil magizhchi. indha vaipai yerpaduthik koodu inayathirku nanri.

அனுப்பியவர் Sundar on Monday, 6.12.10 @ 22:29pm

:) eppadi ippadi kadhaigalai thedik kandupidikkireergal charu. unmaiyil arumaiyaana kadhaigal. kadhaigalil kaamaum, kaadhalum orusera payanikkinrana.

அனுப்பியவர் Ravi Ganesh on Monday, 6.12.10 @ 22:39pm

moonraavadhu kadhaiyin thatthuvaviyal miga arumai. idhuthaan vazhkai enbadhu. andhak kadhaiyai ungal kuralil ketpadhu innumamum peranandham.

அனுப்பியவர் Charan on Monday, 6.12.10 @ 23:00pm

Kadhaigalil kooda kaamathai azhagaaga sedhukki suvaipada kooriyirukkiraar charu.

அனுப்பியவர் Janavi on Monday, 6.12.10 @ 23:48pm

kadhaiyil konjamaaga sapthangal ketkiradhu. adhu mattum illaiyenraal innum arupudhamaaga irundhirukkum. irundhaalum charuvin kural vaseegarathil sapthangal onnum seidhu vidaadhu.

அனுப்பியவர் Kanagaraj on Tuesday, 7.12.10 @ 00:33am

nice work.. hats off you guys.

அனுப்பியவர் Thilaga on Tuesday, 7.12.10 @ 04:49am

kadhaigal anaitthum arumai. paliyal kadhai enbadhai vida vazhviyal kadhaigal enalaam.arupudham charu.

அனுப்பியவர் Balakrishnan on Tuesday, 7.12.10 @ 05:14am

அருமை.
தல குரல் அருமை

அனுப்பியவர் ரமேஷ் on Tuesday, 7.12.10 @ 07:09am

அருமையான கதை.சாரு அழகாய் சொல்லி இருக்கிரார்.அருமையிலும் அருமை....

அனுப்பியவர் அபு பக்கர் on Tuesday, 7.12.10 @ 07:37am

அருண் ..மிக அருமை..மனம் திறந்து பாராட்டுகிறேன்..சாரு....சூப்பர்.சாரு..13 ஆம் தேதி சந்திக்கலாம்...

அனுப்பியவர் மணிஜி(தண்டோரா) on Tuesday, 7.12.10 @ 08:54am

கதைகளோடு சேர்ந்தே பயணம் செய்தது போன்ற ஒரு உணர்வு. கட்டுரையைப் படித்துவிட்டு கதைகளைப் படிக்கும்போது அதன் சுவை இன்னும் கூடுகிறது. கட்டுரையும் சாருவின் கதைக்கு ஈடு கொடுகிறது. ஆனால் சாருவின் மூன்றாவது கதியில் இயல்பாக ஒரு நேர்த்தி தெரிகிறது.

அனுப்பியவர் பாபு on Tuesday, 7.12.10 @ 11:22am

moonrume paaliyal kadhaigalaaga irukkiradhu.. veru sila kadhaigalaik kooda muyarchi seidhu paartthirukkalaame charu. aanal indhak kadhaigal anaithum ketkumbodhu edho oru paravasa nilai yerpadugiradhu. hats off you charu.

அனுப்பியவர் Karthik on Tuesday, 7.12.10 @ 11:44am

eluthalargalin kuralil kadhaigalai ketpadhu alapparkariya magichiyai tharugiradhu. ungal pani thodarattum.

அனுப்பியவர் Vadivelan on Tuesday, 7.12.10 @ 12:04pm

tamilil ki.ra kooda niraya paliyal kadhai solliyirukiraar charu. adhil onrai solli irukkalaame. indha kadhaigalum arumaiyaaga ullana.

அனுப்பியவர் Nandhan on Tuesday, 7.12.10 @ 12:23pm

nalla arumaiyaana indha mazhai kalathil indha kadhaigalai ketkumbodhu edho oruvidha kilukiluppai undu pannugiradhu.

அனுப்பியவர் Sundhareswaran on Tuesday, 7.12.10 @ 12:36pm

இது செக்ஸி வாய்ஸா? ஆண்டவா...

அனுப்பியவர் பெயரில்லா on Tuesday, 7.12.10 @ 12:40pm

சாரு, கதைகள் மிக அருமை. உஙகள் குரல் நன்றாக உள்ளது. தொடர்ந்து கதை சொல்லவும்.

அனுப்பியவர் சந்துரு on Tuesday, 7.12.10 @ 20:56pm

ungalin zero degree paaniyil oru kadhaiyai solli irukkalaam charu. innum kooduthal kavanam petru irukum. indhak kadhaigalil moonraavadhu kadhaiyin modernisam superb one.

அனுப்பியவர் Thangavel on Tuesday, 7.12.10 @ 22:01pm

kadhaigal ellam konjam kilu kiluppaaga irukkiradhu. veru yaaravadhu indha kadhaigalai solli irundhaal naaraasama irundhirukkum. charuvin kural adhaiyellam maraithu kadhaigalukku azhagu koottugiradhu.

அனுப்பியவர் Ganesh kumar on Tuesday, 7.12.10 @ 22:10pm

kural nanraagave ketkiradhu. pinnaniyil kooda kuyilum kaagangalum kadhaiyin thanmaiyai niyaayap padutthugiradhu. chenniayil idhup ponra paravaigalin osaiyaik ketpadhe sugamthaan.

அனுப்பியவர் Chezhiyan on Wednesday, 8.12.10 @ 02:42am

kadhaisolli thodangumbodhu idhellam enna muyarchiyo enru aluthuk konden. aanal ippodhu adhan theevirathai unarndhullen. idhu unmaiyil miga arumaiyana muyarchi. eppadi ippadi ellam ukkaandhu yosikkiraangalo? nice concept. also charu kadhaigalum arumai.

அனுப்பியவர் Viswanathan on Wednesday, 8.12.10 @ 04:55am

ஷாருவின் குரல் மிகவும் சந்தோஷம் தருகிரது..

அனுப்பியவர் சுஷில் குமார் on Wednesday, 8.12.10 @ 06:41am

unmaiyil ungal kural sexiyanadhu thaan. kadhaigalum arumai.

அனுப்பியவர் Devaraj on Wednesday, 8.12.10 @ 21:36pm

kadhaigalai idhuvarai pathu murai kettuvitten. salippoottadha kadhaigal. hats off charu and koodu team.

அனுப்பியவர் Madhi on Thursday, 9.12.10 @ 22:01pm

ungal kurale kadhaigalukku azhagu serkkiradhu.

அனுப்பியவர் Vinodh on Thursday, 9.12.10 @ 22:03pm

கதைகள் ‍ 2 & கதைகள் 3_மொக்க கதைகள்....

அனுப்பியவர் சர‌ண் on Friday, 10.12.10 @ 12:27pm

அய்யோ குரல் என்ன்வோ பண்ணூது.......

அனுப்பியவர் குமரி on Saturday, 11.12.10 @ 08:06am

மிக சமீப காலமாக மட்டுமே படித்து வரும் நான் சாரு வின் எழுத்துக்களால் கவர பட்டவன் என்றால் அது எனக்கு பெருமை யான ஒன்று, ப்ளாக் எழுதவும், படிக்கவும் இபொழுது தான் தொடங்கி உள்ளேன், தமிழன் ப்ளாக் எழுதுவதிலும் வல்லவன் என்பதை உங்கள் ப்ளாக் மற்றும் அதில் உலா கதை சொல்லி நிருபிகிறது. வாழ்த்துக்கள் இப்படிக்கு செந்தில்குமார்.தி, இயன்முறை மருத்துவர், ராசிபுரம்

அனுப்பியவர் செந்தில்குமார். on Saturday, 11.12.10 @ 11:25am

இரெண்டாவது கதையப்பற்றி எதாவது பகிர்வுகள் உண்டா? சாரு சொல்லும் பொது எனக்கு தெரிந்த கதை ஒன்றுதான் ஞாபகம் வந்தது அது எல்லாருக்கும் தெரிந்த கதைதான், மேலும் காசு, பாவம், தியாகம் என்று பல எண்ணங்கள். அந்த venuzula கதை கண்டுபிடிகபுடியவில்லை. சொல்ற கதையள கூட post modernism மா. எம்மாடி. சூப்பர்

அனுப்பியவர் நிர்மல் on Sunday, 19.12.10 @ 00:12am

வணக்கம்!
எவரும் கதைச் சொல்லி இதுவரை நான் கேட்டது இல்லையே என்ற குறையை இந்த பதிவு சரி செய்துவிட்டது... மிக்க நன்றி....
அடுத்த திங்கட்கிழமை எப்போது வரும் என்று காத்து இருக்கின்றேன்.

அனுப்பியவர் இனியா on Friday, 31.12.10 @ 08:33am

ஒரு வாசகனை கதைகள் மூலமாக எழுத்தாளர்களுடன் பயணம் செய்யவைக்கும் அற்புதமான முயற்சி...நன்றி என்பதை தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை..

சாருவுடனான கதைப்பயணம் அருமை...

அனுப்பியவர் செபா on Tuesday, 28.06.11 @ 07:40am

தல கலக்கிட்டின்க‌

அனுப்பியவர் றாஜாமோகண் on Monday, 12.09.11 @ 00:38am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</