வாயில் தொடர்புக்கு  
அறிவிப்பு
கூடு மூன்றாம் இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. அடுத்த இதழ் 11-01-10 அன்று பதிவேற்றப்படும்
 
     
  தலையங்கம்  
  கட்டுரைகள்  
  ஊஞ்சல்
- கலாப்ரியா
  'தமிலி'ல் பேசினால் தப்பா?
- தமிழ்மகன்
  கறுப்புப் பாலைவனம்
- சமயவேல்
  என் பேனாவின் கால் தடங்கள்
- பூபதி
  பொது  
  பா - ஒரு பார்வை
- அபிலாஷ் சந்திரன்
  திரைக்கதை  
  கடந்து வந்த பாதை  
  கழுகுப்பார்வை  
  ஒரே ஒரு நாள்  
  ஒளிப்படங்கள்  
  ஓவியக் குறும்பு  
     
     
     
   
 
1
சீனிவாசன் சிறப்பிதழ்
  சிறப்புக் கட்டுரை - 1  
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள
  வகைகள்
  கூடு சிறப்பு இணைப்புகள்
  கடந்த இதழ்கள்
   
 

     
     
     
     
   

கடந்து வந்தப் பாதை - நந்தினி ஜே.எஸ் - 1

கண்களில் கனிவு, வார்த்தையில் தெளிவு, பழகுவதில் பணிவு என பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் நந்தினி, தமிழ் திரையுலகுக்கு புதிய நல் வரவு.

"திரு திரு துறு துறு" என்கிறத் தன முதல் திரைப்படம் மூலம் பரவலான பாராட்டையும் பெற்றவர். பொதுவாக ஆண் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் அதுவும் தமிழ்த் திரையுலகில் பெண்களால் கோலோச்ச முடியாது என்கிறப் பகட்டை உடைத்தெறிந்த பெண்களில் இவரும் ஒருவர். மிக நேர்த்தியாக ஒரு நகைச்சுவைப்படம், அதுவும் எடுத்துக் கொண்ட கருவை சிதைக்காத, யார் மனமும் புண்படாத பக்குவமான ஒருத் திரைப்படம் கொடுத்ததற்காக நந்தினி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாதை முழுவதும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து திரையுலகம் யாரையும் அழைப்பதில்லை. திரையுலகிற்கு வந்து தங்களுக்கான சிவப்பு கம்பளத்தை ஏற்படுத்திக் கொள்வதே அவர்கள் சமர்த்து. நந்தினி தனக்கான சிவப்பு கமபளத்தை அடையாளம் கண்டு விட்டார்.

இனித் தான் கடந்து வந்தப் பாதையை பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறார் திருமதி. நந்தினி. ஜே.எஸ்.

பொதுவாகவே எல்லா இயக்குனர்களுக்கும் அவங்க முதல் பட அனுபவம் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். நம்ம முதல் படம்தான் ‘நாம யாரு’ங்கறதை ஆடியன்ஸ்கிட்ட முதல் முறையா காட்டுது. நமக்கு மட்டும் தோன்றிய எண்ணங்களையும், சம்பவங்களையும், கதாப்பாத்திரங்களையும் பெரிய திரையில் ஆயிரக்கணக்கான மக்களோட சேந்து பாக்கற முதல் அனுபவம் ரொம்ப பிரம்மிப்பானது. நாம எடுத்தது அவங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு பரிதவிப்போட கவனிக்கிற முதல் அனுபவமும் ரொம்ப உணர்ச்சிபூர்வமானது. ஏன்னா நம்ம திறமையின் அளவு நமக்கே சரியா தெரியாத நிலையிலதான் அந்த படைப்பையே உருவாக்கறோம். “திருதிரு துறுதுறு” எடுக்கும்போது நிறைய நெருக்கடிகளும், கஷ்டங்களும், காயங்களும் ஏற்பட்டது... அதே நேரத்தில் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்களும், சந்தோஷங்களும், திருப்தியும் கலந்து வந்ததை மறுக்க முடியாது. அந்த அனுபவங்கள் சிலவற்றை உங்களோட இப்போது கடந்து வந்தப் பாதையில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் (Film and TV Institute of Tamilnadu) சேர்ந்ததுதான் சினிமாத்துறையில் நான் வைத்த முதல் அடின்னு சொல்லலாம். எங்க குடும்பத்தில யாரும் சினிமாத்துறையில் இல்லாததாலும், எங்களுக்கு அங்கே யாரையும் சரியாகத் தெரியாதுங்கறதாலும், திரைப்படக் கல்லூரியில சேருவது தான் சரின்னு நான் முடிவு பண்ணினேன்.

அதனால Graduation முடிச்சதும் மூணு வருட DFT (Diploma in Film Technology) course’ல சேந்து Directrion and Screenplay writing படிச்சேன். அதே நேரத்துல பகுதி நேரமா MBA’வும் முடிச்சேன். DFT’யில எனக்கு தங்கப்பதக்கம் கிடைச்சுது. நான் எடுத்த “ஓட்டம்” குறும்படத்துக்கு தமிழக அரசு இரண்டு மாநில விருது கிடைச்சுது. அதுக்கப்புறம் தான் திரைப்படத்துறையில உதவி இயக்குனரா வேலை தேட ஆரம்பிச்சேன். ஒரு சின்னக் குளத்துல வாழ்ந்துட்டு இருந்த குட்டி மீனை எடுத்து திடீர்ன்னு பெரிய கடலுக்குள்ள தூக்கிப்போட்டா எப்படியிருக்கும்? எனக்கு அப்படித்தான் இருந்தது.

ஒரு வருடம் அலைந்தபின் இயக்குனர் ப்ரியாவிடம் உதவி இயக்குனரா சேர்ந்தேன். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜின் ‘டூயட் மூவீஸ்’ தயாரித்த ‘கண்ட நாள் முதல்’ படத்தை அவங்க இயக்கும் போது, திரைக்கதை, லொகேஷன், இசையமைப்பு, படத்தொகுப்பு, பாடல்கள், உடையமைப்பு, டப்பிங், விளம்பர வேலைகள்னு எல்லா வேலைகளையும் கூட இருந்து கவனித்து, சுதந்திரமா கத்துக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க.

என் சொந்த படத்துக்கு எந்த அளவு தீவிரமா வேலை செய்வேனோ அந்த அளவுக்கு முழுமனதோட சந்தோஷமா நான் ‘கண்ட நாள் முதல்’ படத்துல வேலை செஞ்சேன். அந்தப் படத்தோட பாடல் வெளியீட்டு விழாவுல, என்னோட முதல் படத்தை தயாரிக்கிற எண்ணம் இருப்பதாக சொல்லி, பிரகாஷ்ராஜ்

அவர்கள் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். என் திறமையின் மீது பூரண நம்பிக்கை இருப்பதாகவும், கண்ட நாள் பட வேலைகள் முடிந்ததும் என் சொந்த script’டை எழுத ஆரம்பிக்கும்படி ஊக்கப்படுத்தினார். இப்படி ஒரு வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று நான் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தது... கூடவே ரொம்ப பயமும், தயக்கமும் வந்தது. ஒரு படம் இயக்கும் அளவிற்கு என்னை இன்னும் தயார் படுத்திக்கொள்ளவில்லையே என்று அப்போது தோன்றியது.

‘கண்ட நாள் முதல்’ வெளியாகி, நல்லபடியாக ஓடிய பிறகு என்னோட முதல் படத்துக்கான் கதையை எழுத ஆரம்பிச்சேன். அதற்கு சில மாதங்கள் எடுத்தது. அதற்குள் சில விளம்பரப் படங்களையும், கார்ப்பரேட் படங்களையும் இயக்க ஆரம்பித்தேன். என்னிடம் இருந்த சில கதை கருக்களுக்கு ‘trailers’சும் shoot செய்து வைத்தேன். எனக்குள் இருக்கும் திறமையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளவும், practical’லான சிரமங்களை சமாளிக்கக் கற்றுக்கொள்ளவும் அந்த அனுபவங்கள் உதவி செய்தன. ஒரே வருடத்தில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை நேராக அணுகி, அவர்கள் திருப்திக்கு நல்லபடியாக படம் எடுத்து குடுக்கும் அளவிற்கு வளர்ந்தேன். அதன் பிறகு பிரகாஷ்ராஜ் அவர்களை சந்திக்க கதையுடன் சென்றேன். ஆனால் நான் போன நேரம் சரியில்லை. அவர் ஏற்கனவே மூன்று நான்கு படங்களை தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு வேறெந்த கதைகளையும் எடுக்க முடியாத நிலையில் இருந்தார். எனக்கு அது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது... ஆனால் அதிலிருந்து விரைவில் மீண்டு வந்தேன். என் முதல் படத்தை அவர் தயாரிக்காவிட்டாலும், என் திறமையை கண்டறிந்து முதன் முதலில் ஊக்குவித்தவர் அவர்தான் என்பதால்... அவருக்கு என் நன்றி.

‘திருதிரு துறுதுறு’ ஒரு ஜாலியான, மென்மையான, கலகலப்பான, இயல்பான காதல் காமெடி படம். பெண் இயக்குனர்களால் காமெடி படம் பண்ண முடியாது என்கிற பரவலான நம்பிக்கையை உடைத்த படம். ஆனால் இது நான் எழுதிய முதல் கதையல்ல. என்னிடம் சீரியஸான, ஆழமான, முதிர்ச்சியான, experimental’லான கதைகள் சில இருந்தது. அந்தக் கதைகளுடன் பல தயாரிப்பாளர்களை சந்தித்தபோது, அவற்றை எடுத்துக்கொள்ள தயங்கினார்கள். அக்கதைகளை பிரபல இயக்குனர்கள் இயக்கினாலோ, பிரபல பெரிய நடிகர்கள் நடித்தாலோ மக்களால் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று சொன்னார்கள். சிலர் அக்கதைகள் commercial’லாக இல்லை, அதனால் வெற்றி பெறாது என்று கைவிரித்தார்கள். சிலர் இப்படிப்பட்ட வித்தியாசமான கதைகளை ஒரு புதுமுக இயக்குனர் என்னால் சரியாக இயக்கித் தர இயலுமா என்று சந்தேகித்தனர். இப்படியாக எனக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் போனது.

தொடர்ந்து பல ஏமாற்றங்கள்... நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. தயாரிப்பு அலுவலகங்களின் வரவேற்பு அறைகளில் பல மணி நேரங்கள் காத்து, பல பேரிடம் கதைகள் சொல்லியும் பயனில்லை. அப்போதெல்லாம் “எப்போ படம் ஆரம்பிக்கிறே?... யாரு ப்ரொட்யூசர்?... யாரு ஹீரோ?...”

என்று கேட்பவர்கள் யார் கண்ணிலும் படாமல் எல்லாரையும் தவிர்க்க ஆரம்பித்தேன். முதல் பட வாய்ப்பு தேடுவதிலேயே எல்லா உழைப்பையும் போட்டு வந்ததால் விளம்பரப்படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. Bank Balance காலியாகி இருந்தது. தின வாழ்க்கையில் பண நெருக்கடிகள் ஏற்பட்டது. பெண்ணாக இருப்பதால், ‘வயதாகிக்கொண்டே போகிறதே, எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாய்?’ என்று கணவரும், பெற்றோர்களும், குடும்பத்தில் மற்றவர்களும் கேட்க ஆரம்பித்தனர். பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.

என்னைவிட திறமை வாய்ந்த, அனுபவமுள்ள எத்தனையோ உதவி இயக்குனர்கள் பல வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்தும், கிடைக்காமல் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அப்படி வரும் கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு, சோர்வடையாமல், விடாமுயற்சியுடன் போராடினால்தான் வெற்றி பெற முடியும் என்பதும் எனக்குத் தெரியும். இவையெல்லாம் கேள்வி ஞானத்தால் எனக்குத் தெரிந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஏற்படும் சொந்த அனுபவங்கள் என்னை சோர்வடைய செய்தன. எனக்கு துணிவும், தைரியமும் கூடப்பிறந்ததில்லை. அவற்றையும் காலப்போக்கில் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றங்களையும், தோல்விகளையும், துக்கங்களையும் புன்னகையுடன் கடந்து செல்ல பழகிக்கொண்டேன்.

தொடரும்...

------------------------------------------------------------------------------------------------------
 

தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. அப்படியான படைப்புகள் மட்டுமே கூடு இணைய இதழில் வெளியிடப்படும். படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும்.

5 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

nandhini ungal thiraippadam parthen. miga arumai. ungal katturaiyum ungalin valigalai miga azhagaaga padhivu seigiradhu. valthugal.

அனுப்பியவர் கதிர் on Wednesday, 30.12.09 @ 03:33am

nandhini madam ungal padam parthu viyandhen. ungal katturaiyum nanraaga ulladhu. ungalin adutha padathai edhirpaartthuk kaatthirukkirom.

அனுப்பியவர் Priya on Monday, 4.01.10 @ 10:58am

நந்தினி அவர்களுக்கு முதல் நன்றி ஒரு ரசிக்கும்படியான ஜோரான படம் தமிழில் கொடுத்த‌த‌ற்க்கு.

மேலே உள்ள கடைசி 2 பத்தியும், ச்ச என்னடா இது..கஷ்டம்னு தோனினாலும். Finally U got and U made It. நீங்க எடுத்துட்ட‌ படதொட concept and makking was brillient. Thanks to ur institute and ur guru director priya for introducing u.

Spl thanks for ThamizhStudio ppl for this good article. Expecting to read Next part. Mam we expecting more different theme films not same kind. then u may marked as perticular theme based director.

அனுப்பியவர் ரவி on Tuesday, 5.01.10 @ 11:06am

அருமயான பகிர்வு நந்தினி மேம்.

அனுப்பியவர் ரவி on Saturday, 9.01.10 @ 21:34pm

Thanks for the sharing. i hope the next episode will give more about you first project and next project.

thanx

அனுப்பியவர் லால் on Saturday, 9.01.10 @ 21:35pm

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.