கடந்து வந்தப் பாதை - இயக்குனர் பாண்டிராஜ்
சந்திப்பு: சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்
வாசல் வரை வந்து வரவேற்கும் மாண்பு, சாதித்த பின்னர் தோன்றும் எளிமை என பார்ப்பவர்களை முதல் பார்வையிலேயே கவரும் கனிவோடு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பசங்க திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் குழந்தைகளுக்கான இருத்தலை, தேவையை ஏற்படுத்தி இருப்பவர். தமிழ் திரைப்பட உலகை உலக அரங்கில் எடுத்து செல்லக் கூடியவர் என்று விமர்சகர்களால் மலர் தூவி திரைத்துறைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டவர். தான் கடந்து வந்தப் பாதையை இங்கு நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தேன். அவர்கள் தங்கள் முதல் படைப்பின் மூலம் (பாரதி கண்ணமா, அழகி, இம்சை அரசன் 23 புலிகேசி) அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர்கள். அவர்களிடமிருந்து வெளிவரும் நான் அவர்களின் பெயரை காப்பாற்றும் விதமாக வித்தியாசமான படம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
 |
“சில்ரன்ஸ் ஆப் ஹெவன்” “கலர் ஆப் பாரடைஸ்” போன்ற படங்களை பார்த்தபோது நாமும் குழந்தைகள் படம் செய்ய வேண்டும் என தோன்றியது. என்னமாதிரி செய்யலாம் என யோசித்த போது, என் நான்காம் வகுப்பில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. நான் சரியாக படிக்காத காரணத்தால் மீண்டும் நான்காம் வகுப்பிலேயே படிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. (ஆசிரியர்கள் என்னை ஐந்தாம் வகுப்பிற்கு அனுப்பி வைத்தும், என் தந்தையும், அண்ணனும் சரியாக படிக்காத இவன் நான்காம் வகுப்பிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்கள்) அப்போது நான்பட்ட அவமானங்கள், நண்பர்களின் கேலிகள் என அனைத்தையும் மறுபடியும் |
நினைத்து பார்த்தபோது, எனது பால்யகால நினைவுகள் எல்லாம் வந்து போனது. அதையே படமாக்கலாம் எனத்தோன்றியது.
ஓவ்வொரு முறை வீட்டுக்கு செல்லும் போதும் என் பள்ளியை பார்ப்பேன், பழைய நினைவுகள் எனக்குள் எழும் அந்த நினைவுகள் தான். 'பசங்க' படத்துக்கான ஆதராமாகும். அப்துல் கலாமின் "கனவு காணுங்கள்” என்ற வாசகத்தைக் கொண்டு அன்பு-வை கனவு காண வைத்தேன். அன்பு, ஜீவா, பக்கடா, மனோண்மணி என படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் என் பால்யகால நண்பர்கள்தான். பசங்க படத்தில் வரும் பள்ளிக்கூடம் நான் படித்த பள்ளி கூடம் தான்.
கதை சொல்வதை விட, திரைக்கதையாக எழுதினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். எங்க ஊர் பள்ளிக்கூடத்துக்கு சென்று அங்கிருக்கும் பசங்கள சந்திச்சி அவர்களின் பிரச்சனைகள், சந்தோசங்கள் என்ன என்பதை அவர்களோடு பேசி தெரிந்துக் கொண்டு ஊரிலேயே உட்காந்து முழு திரைக்கதையையும் எழுதினேன். முதலில், என் நண்பர்களிடம் சொன்னேன். பிறகு எங்க அண்ணன் பையன், அவனுடைய நண்பர்கள் அனைவரையும் உட்காரவச்சு கதையை சொன்னேன்.
குழந்தைகளை மூன்று மணி நேரம் ஒரே இடத்துல உட்கார வச்சு கத சொல்றது மிகவும் கஷ்டம். ஆனாலும் ஒரு மணி நேரம் கதைகேட்ட பிறகு பசங்க ஆர்வமா கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க. எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. இக்கதையை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர்களை சந்திக்க புறப்பட்டேன்.
இந்தக் கதையை எல்லா தயாரிப்பாளர்களாலும் புரிந்துக்கொள்ள முடியாது. ஆதனால் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளவங்கிட்ட முதலில் கதையை சொல்லத் தொடங்கினேன். எல்லோருக்கும் கதை பிடிச்சு இருந்தது. ஆனால் யாரும் தயாரிக்க முன்வரவில்லை. புது தயாரிப்பாளர்களால் கதையை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இயக்குனர்களாலேயே புரிஞ்சிக்க முடியாதபோது பாவம் இவங்க என்ன பண்ணுவாங்க, சுமார் 12, 13 பேர்கிட்ட கத சொல்லி தோற்ற பிறகு பிறகு அந்தக் கதையை சிறிது மாற்றங்களுடன் தயார் செய்தேன். அந்த சமயம் நண்பர் ஒளிப்பதிவாளர் S.R. கதிர்,வாசு இருவர் மூலம் சசிகுமார் சார் நட்பு கிடைத்தது. கதை கேட்ட உடனேயே தயாரிக்க முன் வந்தார்.
 |
பின்னர், நடிகர்களை தேர்வு செய்வதற்காக எங்க ஊருக்கே சென்றேன். யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சுற்றி அலைந்து 10 ஜீவா, 10 அன்பு, 10 புஜிம்மா, 10 மனோன்மணி என முதல் கட்டமாக தேர்வு செய்து பிறகு, 4, 2 என சுருக்கி, இறுதியாக ஒருவரை தேர்வு செய்தேன். ஷோப்பிக்கண்ணு, போதும்பொண்ணு, மனோன்மணி.மீனாட்சி சுந்தரம் என ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பேருக்காவும் சுமார் 100 பெயர்களை எழுதி அதிலிருந்து இறுதி செய்தோம். இதற்காக பல பள்ளிகளின் வருகை பதிவேட்டிலிருந்தும் பெயர்களை சேகரித்தோம். முதலில் பசங்களிடம் சினிமவுக்கு என்று சொல்லாமல் போட்டோ எடுத்து பார்த்தேன். |
அன்பு, ஜீவா கதாப்பாத்திரங்களுக்கு நடனம், கராத்தே தெரிந்திருக்க வேண்டும் என்பதால், எங்க ஊரிலிருந்து சென்னைக்கு குடிபெர்யந்து வாழும் குடும்பங்களிலிருந்து தேர்வு செய்தேன்.
நடிகர்கள் தேர்வாகி, இங்கிருந்து எல்லோரும் எங்க ஊருக்கு சென்று பூசை போட்டு, படப்பிடிப்பு தொடங்கும்போது பசங்களுக்கு பயம் வந்துடுச்சு. பசங்களுக்கு டிரெயினிங் எல்லாம் கொடுக்கல. முதல் மூன்று நாட்கள் என் உதவி இயக்குனர்கள் கேண்டி கேமரா வச்சுக்கிட்டு விளையாட்டு காட்டினாங்க அவ்வளவுதான், என்று தன் முதல் படத்தின் சிரமங்களை மிக நேசித்து, சிலாகித்து, அதனூடாகவே வாழ்ந்த அந்த அனுபவங்களை, நம்மோடு பகிர்ந்துக் கொள்ளும்போது இயக்குனரின் கண்களில் அத்தனை பரவசம்.
தன்னை அவமானப்படுத்திய, கேலிப் பேசிய அதே ஊர் மக்கள் முன்பு, இயக்குநராகி, தன்னுடைய முதல் படத்தின், முதல் காட்சியை படமாக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களை அவர் விவரிக்கும்போது, அந்த வார்த்தைகளில் தவழும் நம்பிக்கை, படிப்பவர்கள் மனத்திலும் தவழும் என்பது திண்ணம்.
இயக்குநராகி என்னுடைய முதல் படம். முதல் காட்சி. இடம் என் சொந்த ஊர். அதுவும் என்னை கேலிப் பேசியவர்கள், என்னால் திரைத்துறையில் சாதிக்க முடியாதுன்னு சொன்னவங்க, மத்தியில வேலைபார்க்கும் போது எப்படி இருக்கும்?. இருந்தாலும் சபைன்னு வந்துட்டாலே மனசுக்குள் பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஏழு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் எனக்கு அங்கக் கைகொடுத்திச்சி. அதனால முதல் நாள், படப்பிடிப்புல நானும் ஒரு இயக்குனர் என்கிற பெருமிதத்துடன்தான் வேலை பார்த்தேன்.
அன்பு கதவு தொறந்துகிட்டு நடந்து வரதுதான் முதல் ஷாட். அடுத்து ஜீவா கிரில்ல சுத்திவிட்டு நடந்து வர ஷாட். அப்புறம் பக்கடா நடந்து வரணும். ஆனா அவன காணும். சரி, குட்டிமணி சீன எடுக்கலாம்னா அவனையும் காணோம். வீட்டுக்கு ஓடிப் போய்ட்டாங்க.. தேடிக் கண்டு பிடிச்சு கொண்டு வந்தா, "பயமா இருக்கண்ணே” ணு சொல்றான். அவங்க பயத்த தெளியவச்சு சகஜ நிலைக்கு கொண்டுவர ஒரு மணி நேரம் ஆயிற்று. எதிர்பாராத விதமாக திடீர்னு மழை பெய்ய ஆரம்பித்ததால காட்சிகளை மாத்தி எடுக்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு கதாப்பத்திரமாக டியூன் பண்ணி, டியூன் பண்ணி தெளிய வச்சு வந்தா, புஜிம்மா கேரக்டர் உள்ள வந்தாச்சு. அவன் என்ன சொன்னாலும் கேள்வியா கேக்கறான். ஒவ்வொரு காட்சிக்கும் அவனுக்கு விளக்கம் தேவை. ஒட சொன்னா ஓட மாட்டான். நான் ஓடுனா என் பின்னாலேயே ஓடிவருவான். பெரியவங்கள "அடிடானு" சொன்னா அடிக்க மாட்டான். அம்மா சொல்லிருக்கு, "பெரியவங்கள அடிக்கக்கூடாது” அப்படின்னு சொல்வான். ஃபேன் முன்னால சட்டையில்லாம நில்லுடான்ணா, "முடியாது வேற சொல்லு"ன்னுவான். அவனுக்காக பல காட்சிகளை மாற்றினேன். புஜிம்மாவுக்கு திரைக்கதையில் நான் எழுதியதற்கும், படபிடிப்பில் நான் எடுத்த காட்சிகளுக்கும், நிறைய வித்தியாசம் இருக்கும். |
 |
புதிதாக அவனுக்கு ஏத்த காட்சிகளை உருவாக்கினேன். அவர்கள் முன், என்னை ஒரு இயக்குனராக நான் காட்டிக்கொள்ளவே இல்லை. ஒரு கோமாளியா, அவர்களின் சக நண்பனா நடந்துக்கிட்டுதான் அவங்கள வேல வாங்கினேன். அதனால பசங்கக்கிட்ட வேல வாங்குறது பிரச்சனையில்லாம சுலபமாக இருந்தது. பெரியவங்கிட்ட வேல வாங்குறது தான் கஷ்டமா இருந்தது. காரணம், அவங்க எல்லோருமே புதிதாக நடிக்க வந்தவர்கள். எல்லோரும் என் ஊர்க்காரர்கள். இப்போதுதான் படப்பிடிப்பையே பார்க்கிறவர்கள்.
குழந்தைகளோட நடிப்பு பற்றி இடையிடையே பாராட்டி பேசுவோம். ஒருத்தனை பாராட்டினால் இன்னொருத்தனுக்குப் போட்டி மனப்பான்மை உருவாகி அவனைவிட, நல்லா பண்ணுவான். குழந்தைங்க தவறு பண்ணினா அது காமெடியா போயிரும் பெரியவங்க தப்பு பண்ணும்போதுதான் கோபம் வரும். ஜீவா கோபமாக இருக்கனும். பக்கடா காமெடியா பேசனும். இந்தக் காட்சியில் பக்கடா பேசுனா, ஜீவா சிரிச்சுடுவான். இதுதான் எனக்கு மிகவும் சிக்கலா இருந்துச்சு. அவங்களுக்கு புரியவச்சு வேலை வாங்கும் போது சிக்கல் எல்லாம் சரியாப்போச்சு.
குழந்தைகளிடம் குழந்தையாகப் பழகி, தன்னுடைய கனவை, காவியத்தை படைத்திருக்கும் பாண்டிராஜ் பசங்க படத்தில் மிக சிரமப்பட்டு எடுத்த காட்சியை விவரிக்கும்போது அதன் சிரமத்தை நம்மால் எளிதாகப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
தொடரும்...
|
pandiraj sir ungal payanam miga inimaiyaaga amaiya valthugal. padippavar manathil thannambikkai yerpadutthugiradhu. attakasam.
அனுப்பியவர் Santhosh on Saturday, 28.11.09 @ 21:25pm
உங்களைப் போன்ற இயக்குனர்களை பார்க்கும்போதுதான் இங்கே படும் துயரங்கள் மறைந்துப் போகிறது. மிக அருமையான படம் பசங்க. உங்கள் கடந்து வந்தப் பாதை மிக அற்புதம். இன்னும் உயரங்கள் தொட வாழ்த்துகள்.
அனுப்பியவர் Sudhakar on Sunday, 29.11.09 @ 02:08am
ungal katturaip padikkubodhu miga iyalbaaga irukiradhu. neengal melum vetri pera valthugal.
அனுப்பியவர் Sulochana on Sunday, 29.11.09 @ 21:20pm
yadhartham maaradha katturai, ungal padam polave irukkiradhu. thodar vetrigal pera valtugal.
அனுப்பியவர் Selvam on Sunday, 29.11.09 @ 21:37pm
sir pasanga padam parthen. miga arumaiyana padam. ungal kadandhu vandhap padhai katturaiyum miga nerthiyaaga, yadharthamaga irukiradhu. uzhaipirku kidaith vetri.
அனுப்பியவர் Deva on Sunday, 29.11.09 @ 21:58pm
arupudhamana padam. arumaiyana kattrai. koodu sirappadaya valthugal.
அனுப்பியவர் Pari on Sunday, 29.11.09 @ 23:03pm
arumai padiraj sir. excellent article. keep it up
அனுப்பியவர் Sasi on Monday, 30.11.09 @ 02:24am
pasanga pol innum pala padangal neeengal eduka vendum. valthugal.
அனுப்பியவர் Poun on Monday, 30.11.09 @ 05:21am
miga arumaiyana paguthi. idhup ponra matra iykkunargal katturaigalum mukkiyam. miga nerthiyaaga irukkkiradhu. valthugal sir.
அனுப்பியவர் Selvaraj on Monday, 30.11.09 @ 22:04pm
pasanga padam pol innum oru padam varuvadhu avvalavu sulabam alla. ungal adutha padamum vetri pera valthugal.
அனுப்பியவர் Snehan on Monday, 30.11.09 @ 22:55pm
ungal padam parthen, piramithup ponen. aanaal neengal elimaiyaaga irukireergal. super sir.
அனுப்பியவர் Sekar Selvan on Monday, 30.11.09 @ 23:38pm
azhagana katurai. padika padika aarvamaga irukiradhu. adhutah varam kathirukkirom.
அனுப்பியவர் Kesav on Tuesday, 1.12.09 @ 02:24am
ungal elimaik kandu viyakkiren. neengal menmelum virudhugal pera valthugal.
அனுப்பியவர் Sumathi on Tuesday, 1.12.09 @ 21:26pm
pasanga padam kuzhandhaigalukkaanadhu enru yaarum solla mudiyaadhu. pasanga padam paartha pinnar naanum en manaiviyum sandai poduvadhaiye niruthi vittom. idhu ponra oru nerthiyaana migavum yadhaarthaman thiraipadam iyaka meendum yaaraalum mudiyaadhu. valthugal pandiraj sir.
அனுப்பியவர் Suresh Kumar on Wednesday, 2.12.09 @ 06:46am
அட போட வைக்கும் படம் பசங்க.. உங்கள் நேர்காணலும் மிக சிறப்பு. கூடு நிர்வாகிகளே, இந்தப் பகுதி மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. என்னைப் போன்ற உதவி இயக்குனர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் போன்றது. நன்றி.
அனுப்பியவர் Kamal on Wednesday, 2.12.09 @ 06:54am
iyabaana padam padaitthavar pettiyum iyalbaagave irukkiradhu. valthugal sir.
அனுப்பியவர் Harshath on Wednesday, 2.12.09 @ 23:14pm
Its really excellent film. and your interview also is so nice. keep it up sir.
அனுப்பியவர் Venkatesh on Thursday, 3.12.09 @ 22:54pm