Facebook         தொடர்புக்கு வாயில்  
  மறக்கப்பட்ட ஆளுமைகள் TS தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் TS திரைப்பட இதழ்கள் TS திரையிடல் திரைப்படச் சங்கங்கள்
 
 

 

 

 

 
 

ஆசிரியர் குழு

மா. பாலசுப்ரமணியம்
பால் நிலவன்
இரா. குமரகுருபரன்
விஜய் ஆனந்த்
சோமித்ரன்
தமிழ் ஸ்டுடியோ அருண்
தா. மரிய ரீகன்
எம். ராஜ்குமார்

ஆலோனைக் குழு

வீ. அரசு
கோ. ரவீந்திரன்
ட்ராட்ஸ்கி மருது
சொர்ணவேல்
யமுனா ராஜேந்திரன்
ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவாளர் செழியன்
இசை விமர்சகர் ஷாஜி
தம்பி மில்லர்
மாமல்லன் கார்த்தி

நிர்வாக ஆசிரியர் :

சிவ செந்தில்நாதன்

முகவரி :

பரிசல் புத்தக நிலையம்
96, ஜே.ப்ளாக்,
நல்வரவு தெரு,
எம்.எம்.டி. ஏ. காலனி
அரும்பாக்கம்,
சென்னை - 600106


மின்னஞ்சல் : padapetti@gmail.com

 
     
     
   
 
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS படப்பெட்டி TS படப்பெட்டி 4 திரைப்பட இதழ்கள் வாயில்

The Other Side - தந்தையர் சென்ற திசையைத் தேடி..


மெக்சிகோ திரைப்படம்

பால்நிலவன்

 

இடையறாத முயற்சியும் தொடர்ந்த தேடலும் தான் ‘இருத்தலின்’ அர்த்தத்தை ஈட்டித் தர முடியும் என்று கூறுகிறது அண்மையில் வெளிவந்துள்ள The Other Side எனும் மெக்ஸிக நாட்டுத் திரைப்படம். பிழைப்பு தேடி தூரதேசம் சென்று விட்டதாகக் கூறப்படும் தங்கள் தந்தையர்களைத் தேடி தவித்தலையும் குழந்தைகளைப் பற்றிய கதைகளின் தொகுப்பு இது. எந்த ஒரு குழந்தையையும், குழந்தைகளின் நிலையிலிருந்து அவர்களது வலியை உணர்ந்துவிட இயலுகிற பெரியவர்களையும் கூட இழுத்து நிறுத்தி விடக்கூடிய மிகமிகஎ ளிமையான கதையம்சத்தைக் கொண்டது. யதார்த்த வாழ்வியலின் அடர்ந்த பிரச்சனைகளின் சரடு சிக்கலானதாகவே இருந்தாலும் அதை நேரடியான மொழியில் இக்கதைகளை இயக்குநர் பேசியுள்ளார். இனி, அத்தகைய கதைகளின் பாட்டையில் சென்றுதான் இந்த சினிமாவின் அனுபவத்தை நாம் பெறமுடியும் என்று தோன்றுகிறது.

மெக்ஸிகோ கிராமம் ஒன்றில் பனிமூட்டம் மண்டிய இருளான ஏரியன்றில் காட்சி தொடங்குகிறது. தன் சக நண்பனொடு நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் பிரிசிலோனா எனும் சிறுவனை அவனுடைய தந்தை வந்து, “இனிமேல் நீ வந்து குளிக்கக்கூடாது” என்று திட்டி அழைத்துச் சென்று விடுகிறார். இந்த சின்ன ஏரியிலிருந்து தான் குழந்தைகளை எரிந்திரா எனும் தேவதை உள்ளே இருந்து வந்து,தூக்கிக்கொண்டு போய் விடுறாள் எனும் விஷயத்தை அவனுக்குச் சொல்கிறார். அவர் சொல்வதற்கேற்ப அந்த ஏரியின் பனி மண்டிய இருட்டு ஏதோ ஒரு கெட்ட குறியைக்காட்டுவதுபோல (அது உண்மையில்லை என்ற போதிலும் குழந்தைகளின் பார்வைக்குத்) தெரிகிறது. அதனால் மிகப் பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறுகிறார். பிரிசிலோனாவும் இனிமேல் அங்கு போகமாட்டேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தந்தையுடன் சோகமாகத் திரும்புகிறான்.அடுத்ததாகவே,இச்சிறுவனின் தந்தை வேலைதேடும்பொருட்டு நாட்டின் எல்லையைக் கடந்து சென்றுவிட முற்படுகிறார். இச்சிறுவனிடம் அவர் கொண்டிருக்கும் அன்பு அளவிடற்கரியது. அன்று இரவே அவனைப் பிரிய இயலாமல் மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டுப் பிரிந்து விடுகிறார். இரவு அவர் புறப்படும்போது எழுந்து வந்து பார்க்கிறான் என்றாலும் அவருடைய பிரிவு சில மணிநேரங்கள் தான் என்று நினைத்து உறங்கி விடுகிறான். மறுநாள் எழுந்திருக்கும் மகன், அப்பா எங்கே அப்பா எங்கே என்கிறான். நிலைகொள்ளாமல் அலைகிறான்; அரற்றுகிறான்.

ஒரு முடிவு செய்கிறான். தன் நண்பனை அழைத்துக்கொண்டு ஏரிக்குப்போகிறான். எந்த ஏரியில் இறங்கினால் ஆபத்து என்று அப்பா சொன்னாரோ அதை அவன் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த ஏரிக்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு நாட்டுக்குத்தான் அப்பா போயிருக்கிறார் என்பதால் அவனும் ஏரியின் வழியாக அந்த பனி இருட்டுக்குள் செல்வதென ஓரமாக ஒதுங்கியிருந்த படகு ஒன்றை, இழுத்து அதில் அமர்கிறான். நண்பனும் அமர எப்படி ஓட்டுவது என நண்பனைக் கேட்க நண்பன் துடுப்பை வலிக்க, ஆளுக்கொரு பக்கம் துடுப்பைப் போட படகு நகர்கிறது. எடையற்ற சிறுவர்களின் தேவையான அழுத்தம் இன்றி படகு ஆடுகிறது. பாதியிலேயே கவிழ நண்பன் மட்டும் நீந்திக்கரையேறி விடுகிறான். பிரிசிலோனாவோ நீந்திப் போய்க் கொண்டே இருக்கிறான். இருண்ட பனியில் தொடர்ந்து நீந்தத் தெரியாமல் திக்கு முக்காடி மூழ்குகிறான். அப்போது தான் அந்த தேவதை எரிந்திரா வந்து காப்பாற்றி கரைசேர்த்து விட்டு மறைந்து விட நண்பன் வீட்டுப் பெரியவர்களை அழைத்து வருகிறான்.

*அடுத்த கதை, கியூபாவில்இருக்கும் ஏஞ்சல் எனும்சிறுவனைப் பற்றியது. மிகவும் சிக்கலானது. அவன் எப்பொழுதுமே தன் தந்தையை அறிந்திருக்கவில்லை. மற்றவர்களுக்கு தந்தை இருக்கிறார்களே தனக்கு தந்தையில்லையே என்ற வருத்தம் ஏற்படுமளவிற்கு பள்ளியில் சில சம்பவங்கள் நிகழ்கிறது. வீட்டிலிருந்த ஒரு படத்தைப் பார்த்துவிட்டு இவர்தான் தந்தையாக இருக்கும் என ஊகிக்கிறான். அம்மா விதவிதமான உடைகள் அணிந்தபடியாக யாருடனோ தினம் தினமும் பைக்கில் கிளம்பி விடுகிறாள். தந்தையைப் பற்றிய ஏக்கம் வாட்டும் மகனைப் பற்றியும் கவலையில்லை. வீட்டுக்கு வெளியே தாயம் போன்ற ஒருஆட்டத்தில் கலந்துகொண்டு தன்சக முதிய வயது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் வயதானஅ ப்பாவையும் அந்தப் பெண் மதிப்பதில்லை.இந்நிலையில் தான் ஏஞ்சலுக்கு தன் தந்தையைத் தேடிக் கண்டடைந்தாக வேண்டுமென்ற தூண்டுதல் காற்றில் தீயெனப் பாய்கிறது. தன் நண்பனிடம் தன் மனதை அதன் வலியை எடுத்துக்கூற, நண்பன் உதவ முன்வருகிறான்.

*ஸ்பெயினில் இருக்கும்தந்தையின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பத்து வயதுப் பெண் பாத்திமா என்ன செய்கிறாள் என்பதுமூன்றாவது கதை. அப்பா ஒருநாள் வருவார் எனும்வாசகத்தை தொடர்ந்துசொல்லும் வார்த்தையின் நிறம்மங்கி வருவதை உணர்ந்து அவர் வருவார் எனும் நம்பிக்கையிழந்து, தானாக ஒரு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு (எவ்வளவுஆபத்து மிகுந்தது) அவளாகவே அம்மாவிடம் சொல்லாமல் புறப்பட்டு தேடிக் கண்டடைந்து விடுகிறாள். ஒருநாள் இரவு அம்மாவும் தங்கையும் தூங்கிக் கொண்டிருக்கும்போது மலாக்காவுக்குப் புறப்பட்டுவிடுகிறாள். வழியில் கப்பலில் அனுமதி மறுக்கப்பட்டவுடன் கடற்கரையில் காத்திருந்தவள் நிழலான காரியங்கள் செய்யும்-பெண்களைக் கடத்திச் சென்று விற்கும் இளைஞனிடம் சிக்கிக்கொள்கிறாள், தான்சிக்குகிறோம் என்று தெரியாமலேயே. இருளான இரவொன்றில் கடலைக் கடந்து ரகசியப் படகு செல்கிறது. நகரத்தின் விசாலமான கொட்டடி ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கும் இப்பெண்களை வாங்க வரும் விற்பனை ஏஜென்ஸியின் தலைவி இவள் சிறிய பெண்ணாக இருப்பதால் இவளைத் தவிர மற்றவர்களை விலைபேசி அழைத்துச்சென்றுவிடுகிறாள். பிறகு அவளே திரும்பி வந்து இவளைத் தன் காரில் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறாள்.அவளிடத்தில் இருக்கிற மனிதாபிமானம் ஒரு ஊதுவத்திப் புகையைப் போல மெல்ல மனம் வீச இச்சிறுமியின் தந்தை வாழும் நாடான மலாக்காநோக்கி அத்தலைவி காரோட்டஇவளது பயணம் எளிதாகிவிடுகிறது.

*உடைப்பெடுத்துப் பாயும்இளங்குருதியின் பாய்ச்சல்எவ்வளவு வேகமானது என்பதை வாழ்ந்து காட்டிய குழந்தைகளின் நடிப்பு, பார்ப்பவரின் கண்களைஜொலிக்க வைத்து விடுகிறது.* இரவே தந்தை வெளிநாடு சென்றுவிட மறுநாள் காலையில் எழுந்து அலைக்கழியும் சிறுவனின் கண்களில் நிற்கும்மிரட்சி கதை நெடுக வருகிறது. உள்ளூர் மதுக்கடை விடுதியில்இருக்கும் தன் தாத்தாவைத் தேடிவந்து கேட்கிறான். ‘அப்பாஎங்கே?’ என்று. பாரில் தண்ணி அடித்தபடியே “நான் அந்தக்காலத்தில் அமெரிக்காவுக்கு பிழைக்க போன கதை எப்படிப்பட்டது தெரியுமா?” என்று அவர் கூற மதுக்கடையில் குடித்துக்கொண்டிருக்கும் தாத்தாவின் பிற நண்பர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பிரிசிலோனாவோ மிரட்சிகுறையாமல் “அப்பா எங்கே” என்று திரும்பவும் கேட்கிறான் சின்னஞ்சிறு பிரிசிலோனாவாக பதைபதைக்கும் தருணங்களில்அட்ரெய்ன் அலோன்சாவின் நடிப்பு மனசைக் கரைத்துப்போடுகிறது. *அதேபோல, பொறுப்பற்ற அம்மாவை எதிர்பார்த்துக் கொண்டிராமல், அப்பா எனும்ஒரு நிஜத்தைத் தேடி (அதுபொய்யாகவும் இருக்கலாம்) நண்பன் உதவியோடு கடற்கரைக்கு வந்து கடலுக்கு அப்பால் செல்ல முயலும் சிறுவனின் நடிப்பு, ஏஞ்சலின் ஏக்கத்தை நிதர்சனமாய் கண்முன்நிறுத்துகிறது. வீட்டிலிருந்து தோள்பை ஒன்றோடு மட்டும் வருகிறான் ஏஞ்சல்.

சிறிதுநேரம் கூட காத்திருக்காமல் இருவரும் கடல் அலைகளுக்கு அருகே வருகிறார்கள். அங்கேவீசி எறியப்பட்ட பலகைகள் சில மிதந்து கொண்டிருகின்றன. அதை எடுத்து வந்து சில காலிபீப்பாய்களைக் கண்டுபிடித்து தோணியை உருவாக்கிறார்கள். தோள்பை, போட்டுக் கொண்டிருக்கும் ஆடைகளோடு மட்டும் கட்டுமரத்தோணி ஏறி புறப்படுகிறார்கள். கடும் அலைவீச்சையும் மீறி தூரதேசம் நோக்கி ஒரு இனிய பயணம்...... மோசமான அலைகள் வந்து கொண்டேயிருக்க படகு அலையாட்டத்தோடு இயைந்து செல்கிறது. கடுமை தணியாத மிரட்டும் புதிய அலைகள் பாய்ந்துவர படகு தூள்தூளாகிறது. பையன்கள் இருவரும் தண்ணீரில் வீசியெறியப்படுகிறார்கள்.கடைசியில் ஏஞ்சல் மட்டுமே பிழைத்துவிடுகிறான். நீர்ச்சொட்டச் சொட்ட வீட்டுக்கு வந்து விடுகிறான். வீட்டில்உள்ளவர்கள் “என்னாச்சு?” என்றுகேட்க, எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்கிறான்.பொழுது மங்கிய இரவில் நண்பனின் அம்மா தன் மகனைத்தேடி வந்து இவனிடம் விசாரிக்கிறாள். இவன் “தெரியாது” என்கிறான். அடுத்தடுத்தத் தருணங்களில் குற்ற உணர்ச்சி ஒன்று அவனை ஆட்டிப் படைக்கிறது.

அவன் கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து கரையைப் பார்த்து அழுகிறான். அவனைத்தேடி வந்த தாத்தாவும் அம்மாவும் அவனைப் புரிந்துகொண்டு அழைத்துச் செல்வது வரையிலுமே ஏஞ்சலாக நடித்த சிறுவனின் பங்கேற்பு இத்திரைப்படத்தில் படத்தின்வலிமைக்கு துணை நிற்கிறது. *மேலும் இத்திரைப்படத்தின் மூன்றாவது கதையில் வரும் பாத்திமா எனும் கதை மாந்தரின் சித்தரிப்புதான் ஒட்டுமொத்த திரைக்கதையின் நோக்கத்திற்கும் சொல்ல வந்த செய்திக்கும் நம்பிக்கை தருவதாகவும் உயிர்வாழ்வதன் பயனை எடுத்துப் பேசுவதாகவும் இருக்கிறது. பாத்திமாவை அவளது தந்தை உள்ள இடமான மலாக்காவுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கும் பெண் விற்பனைத் தலைவியின் மனசாட்சிதான் மேற்சொன்னந ம்பிக்கையின் அகக்காரணியாக அமைகிறது.எல்லை கடந்து கார்பயணிக்கிறது. வெகுதொலைவில் உள்ள அவளது தந்தையைத் தேடி காரைஓட்டுகிறாள். வழியில் சிலரிடம் போட்டோவைக் காட்டிவிசாரிக்கிறாள். மலாகா நகரில் ஒரு கட்டிடப்பணி நடக்கும் இடத்திற்குச் சென்று அங்கு எஞ்சினீயராக உள்ள அவளுடைய தந்தையிடம் விட்டுவிட்டு அவன் அவளின் தந்தைதான் எனத் தெரிந்த பிறகு வெகுதூரத்தில் இருந்துபார்த்துவிட்டு சொல்லாமல் போய்விடுகிறாள் அப்பெண்மணி.தன் மகள் எவ்வளவு சிரமங்களைக் கடந்து தேடிவந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறான் அவன். அந்த வீட்டில் வேறொருத்திஇருக்கிறாள்.

(பாத்திமாவின்அம்மாவைப் போலக்கூட அப்படியன்றும் பொறுப்பாகத் தோன்றவில்லை) அரைகுறை ஆடையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவள் வந்திருப்பவள் அவனுடைய மகள் என்றறிருந்ததும், “உனக்குஇன்னும் கல்யாணமேஆகலையேன்னு ஏன் பொய்சொன்னே” என்று கடுமையாக ஏசுகிறாள். கடைசியாக தன் மகளோடு ஊருக்குச் செல்வதாக அவளிடம் கூற அவன் அழுதுஆர்ப்பாட்டம் செய்து, பிறகு அமைதியோடு இவளை ஒருகணம் அரவணைப்போடுபார்க்கிறாள். அவளுடைய நிலையையும் எண்ணி வருந்தவேண்டியிருக்கிறது. மகளைக் காணாமல் எந்நேரமும் இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கும் எளிய அம்மா மகிழும்படியாக தந்தையோடு வீடு திரும்புகிறாள் பாத்திமா..பாத்திமா எனும் கதைமாந்தராக நம் முன் சிறுமிரட்சியுமின்றி காரியத்தில் உறுதிவேண்டும் என்கிற ரீதியில்தீமைகள் நெருங்கிய போதும் இளம்புன் சிரிப்போடு நடித்து அசத்திய ‘நூரியா படிக்’ எனும் சிறுமிக்கு வெனீஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான பார்வையாளர் சிறப்பு விருது கிடைத்தது.ரூயிஸ் க்வான்டனரின் இசை, பயணக்காட்சிகளின்போது நம்மை நெக்குருக வைக்கிறது. சிலந ல்லத் திரைப்படங்களில் பின்னணி இசை எவ்வளவு ஒரு அவசியம் என்பதை இத்தகையசிறந்த இசைக்கோர்வையின் வழியேதான் அறியமுடிகிறது. இப்படத்தின் மூன்று பிரிவுக் கதைகளுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்கள் முறையே ஜெர்மினோடெண்டி,பேட்ரிக் முர்கியா,செர்கை சால்டிலா, மெக்ஸிகோவின் அழகிய இயற்கை யெழில் மிக்க இடங்கள், கியூபா, ஸ்பெயின் மற்றும் மொராக்கா, மலாக்கா போன்ற இடங்களில் கதை நகரும்போது நாமும் அவ்வூருக்கே போய்விட்டது போனற உணர்வு மேலிடுகிறது. மூன்று கதைகளும் ஒரே மாதிரியான கதையம்சமும் ஒரேவிதமான உறவுகள் பற்றியும் பேசுகின்றன. மூன்றுகதைகளிலும் ஏரி, கடல் போன்ற நீர்நிலைகள் பிரிவுக்கான உருவகமாக பயன்பட்டிருக்கிறது. மூன்று கதைகளும் ஒன்று முடிந்த பிறகு இன்னொன்று தொடங்குவது என்றில்லாமல் மூன்றனது காட்சிகளும் கீற்றுத் தடுக்கு பின்னுவதுபோல ஒன்றுமாற்றி ஒன்று என்று மாறிமாறி பின்னப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் மனங்கவரும், வெவ்வேறு நிலவியல் காட்சிகளின்அழகியலோடு, அழுத்தமான, தனிப்பட்ட, தென் அமெரிக்கமக்களின் வாழ்வாதார பிரச்சனைப்பாடுகளை கலையம்சத்தோடு தந்திருக்கிறார் இயக்குனர் கஸ்டவா லோஸா. இப்படம் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம் என்ற பெருமை அடைந்துள்ளது. மற்றபடி விருது கிடைக்கவில்லை.அதனாலென்ன? வதைபடும் ஏதோ ஒரு உயிரின் பொருட்டு நம்மைப்போன்ற எங்கோ ஒரு இதயம் துடிப்பதும் சாதாரண விஷயமில்லையே.

படப்பெட்டி இதழ் 4 ஐ PDF வடிவில் படிக்க:

http://thamizhstudio.com/padapeti 8 11.pdf


முந்தையக் கட்டுரை அடுத்த கட்டுரை 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio