Facebook         தொடர்புக்கு வாயில்  
  மறக்கப்பட்ட ஆளுமைகள் TS தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் TS திரைப்பட இதழ்கள் TS திரையிடல் திரைப்படச் சங்கங்கள்
 
 

 

 

 

 
 

ஆசிரியர் குழு

மா. பாலசுப்ரமணியம்
பால் நிலவன்
இரா. குமரகுருபரன்
விஜய் ஆனந்த்
சோமித்ரன்
தமிழ் ஸ்டுடியோ அருண்
தா. மரிய ரீகன்
எம். ராஜ்குமார்

ஆலோனைக் குழு

வீ. அரசு
கோ. ரவீந்திரன்
ட்ராட்ஸ்கி மருது
சொர்ணவேல்
யமுனா ராஜேந்திரன்
ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவாளர் செழியன்
இசை விமர்சகர் ஷாஜி
தம்பி மில்லர்
மாமல்லன் கார்த்தி

நிர்வாக ஆசிரியர் :

சிவ செந்தில்நாதன்

முகவரி :

பரிசல் புத்தக நிலையம்
96, ஜே.ப்ளாக்,
நல்வரவு தெரு,
எம்.எம்.டி. ஏ. காலனி
அரும்பாக்கம்,
சென்னை - 600106


மின்னஞ்சல் : padapetti@gmail.com

 
     
     
   
படப்பெட்டி இதழ் 4 - ஆகஸ்ட் 2011
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS படப்பெட்டி TS படப்பெட்டி 4 திரைப்பட இதழ்கள் வாயில்

அண்ணா சாலையில் - உலக சினிமா

நேர்கண்டவர் : சேது

 

நீண்டகாலமாக சென்னையில் சிடி விற்பனையில் ஈடுபட்டுள்ள அப்சலுடன் ஒரு நேர்காணல்:

சிடி. விற்பனையில் எவ்வளவு நாட்களாக ஈடுபட்டு வருகிறீர்கள்?

ஏழு,எட்டு வருடமாக இந்தத் தொழிலை சென்னையில் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஹாலிவுட் படங்களையும்,ஹிந்திப் படங்களைதான் விற்றுவந்தேன். சில காலத்திற்கு பிறகு உலக திரைப்பட குறுந்தகடுகளை விற்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் உலகத் திரைப்படங்கள் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது.

உலகத் திரைப்படங்கள் என்பது உங்களுக்கு எப்போது அறிமுகமானது?

உலகத் திரைப்படங்கள் பற்றி தெரியவேண்டும் என்றால் அன்றைக்கு சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. சினிமாவில் இருக்கிறவர்களுக்கும், சில இலக்கியவாதிகளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகவும் இருந்தது.மற்றவர்களுக்கு எட்டாக்கனிதான். இலக்கியவாதிகள், சினிமாகாரர்கள், உலகத்திரைப்பட விழாவில் கலந்துகொள்பவர்கள் தொடர்பால் எனக்கு உலகத்திரைப்படத்தைப்பற்றி தெரியவந்தது. இவர்களின் தொடர்பால் நானும் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். மேலும் இவர்களின் நிர்ப்பந்தத்தால் உலகத் திரைப்பட குறுந்தகடுகளை விற்க ஆரம்பித்தேன்.

உலகத் திரைப்படங்களின் குறுந்தகடுகள் எப்படி கிடைக்க ஆரம்பித்தன?

ஆரம்பகாலத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் ஜப்பானிலிருந்து குரசோவா படங்களை வாங்கிக் கொண்டு வந்தார். அவர் ஒரு கப்பல் பயணி. இப்போது இங்கே மிகப்பெரிய சந்தை இருப்பதாலும், புதிய தொழில்நுட்பங்களு ம்வந்துவிட்டதாலும் நிலைமை மாறிவிட்டது. இன்றைக்கு சென்னை நகரத்திலும் மட்டும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குறுந்தகடுகள் விற்கும் கடைகள் உள்ளன. ஆரம்பத்தில் பத்து படங்கள் கிடைப்பது சிரமமாக இருந்த சூழல் மாறி, இப்போது சென்னை மட்டுமல்லாமல் எல்லா நகரங்களிலும் கிடைக்கிறது. உலகத் திரைப்பட குறுந்தகடுகளைப் பொதுவாக யார் வாங்குகிறார்கள் ?ஆரம்பத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உலகதிரைப்படம் பற்றி தெரிந்தது.அப்போது அந்த படங்களை என்னுடைய கடைக்கு வருகிறவர்களிடம் சொல்லி சொல்லி விற்றுக் கொண்டிருந்தேன். ஆனந்தவிகடனில் செழியன் எழுதியது வெகுஜன மக்களிடம் விரிவாக அறிமுகமாகியது. எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அறிமுகத்தினாலும் நிறையபேர் கேட்க ஆரம்பித்தார்கள். விசுவல் கம்யூனிகேஷன்ஸ் மாணவர்களுக்கு உலகதிரைப்படங்களே பாடமாக இருக்கிறது. இன்றைக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்திலே பல படங்கள் எடுத்திருந்தாலும் பழைய திரைப்படங்களே அவர்களுக்கு அரிச்சுவடியாக இருப்பதால் அதையும் வாங்குகிறார்கள். இதற்குப் பிறகு சினிமாவில் இருக்கும் துணை இயக்குனர்கள், அவர்களின் நண்பர்கள் என்று வட்டம் விரிந்து கொண்டே செல்கிறது.

இனி வருங்காலத்தில் திரையரங்குகளில் கூட உலகத்திரைப்படங்கள் திரையிடவாய்ப்புகள் உருவாகலாம்.இன்றைக்கு உலகத்திரைப்படத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் எப்படி உருவாகுகிறார்கள்?

பொதுவாக இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் சினிமா விரும்பிகளாகத்தான் இருக்கிறார்கள். பத்து வயது குழந்தைகளாக இருக்கும்போது அனிமேஷன் பார்க்கிறார்கள்.இதிலிருந்து சற்று வளர்ந்து தமிழ்சினிமா, ஹிந்தி சினிமா, ஹாலிவுட் சினிமா என்று பயணம் செய்து உலகசினிமாவுக்கு வந்து சேருகிறார்கள். அன்றைக்கு இருந்த தலைமுறைக்கு கிட்டத்தட்ட நாற்பதுவயதானவர்களுக்கு எல்லாத்திரைப்படமும் தெரியவாய்ப்பிருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு இருபத்தி ஐந்து வயதிற்குள் எல்லா சினிமாவும் தெரிகிறது.இவர்களுக்கு ஒரு தரமான உலகதிரைப்படத்தை பார்கும்போது இந்த பக்கம் திரும்பி விடுவார்கள். இன்றைக்கு அறுபது சதவிகிதத்தினருக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும்,சினிமாவுக்கு மொழி முக்கியமில்லை என்பதால் அதிகமான பார்வையாளர்கள் உருவாகிறார்கள்.நீங்கள் என்ன என்ன மொழிகளில் குறுந்தகடுகள் விற்பனை செய்கிறீர்கள்?ஜப்பான், பிரெஞ்ச்,கொரியன், சைனீஸ், ஈரான்,என்று விரிகிறது. அமெரிககாவில் எடுக்கப்பட்ட டி.வி. சீரியல்கள்,ஆவணப்படங்கள்,ஆகியவைகளை விற்பனை செய்கிறேன். இதை சினிமாவின் அடுத்த கட்டமாக பார்க்கலாம்.

தமிழில் எடுக்கப்பட்ட, ஆவணப்படங்களுக்கு, சந்தைப்படுத்துதலும், மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பிரச்சனையாக உள்ளதே?

எனக்கு இதைப்பற்றி தெரியாது. நான் தமிழ் ஆவணப்படங்களை விற்பது இல்லை.

உங்களிடம் படம் வாங்கிசென்ற ஒருவர், அந்தபடத்தைப்பற்றி பேசுவது உண்டா?

இல்லை.

குறுந்தகட்டின் விற்பனை எதிர்காலத்தில் என்னவாகஇருககும்?

எதிர்காலத்தில் திரைப்பட குறுந்தகடுகள் தேவைகுறைவதற்குத் தான் வாய்ப்புகள் அதிகம். இணையதளத்தில் உலகில் உள்ள எந்த மொழிதிரைப்படத்தையும் நீங்கள்பார்க்கலாம். டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதுஒரு வகைவளர்ச்சிதான். நான்குறுந்தகடுகள் விற்பதால் இதை ஆதரிக்காமல் இருக்க முடியாது.மாற்றங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

படப்பெட்டி இதழ் 4 ஐ PDF வடிவில் படிக்க:

http://thamizhstudio.com/padapeti 8 11.pdf


முந்தையக் கட்டுரை அடுத்த கட்டுரை 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio