Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
 
விக்னேஷ் சேரல்

 

பின்தொடரும் ஆசைகள்

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுதே சினிமாவின் மீதான ஆசை இருந்தது. சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை ஒரு ஓரத்தில் இருந்தது. ஆனால் சினிமா பற்றிய அடிப்படை புரிதல் அன்று கிடையாது. நண்பர்களிடம் சில கதைகள் சொல்வதுண்டு. அதை கேட்பதற்கும் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்ட் வரப்போகிறது என்று காத்துக்கொண்டிருந்த எனக்கு பெரிய இடியாக!! நான் தேர்வில் தவறிவிட்டேன் என்பதை பார்த்ததும் மனம் உடைந்து சோமசுந்தரம் (தி.நகர்) மைதானத்தில் போய் அமர்ந்தேன். சற்றும் எதிர் பார்க்காத வகையில் சேரனின் மாயக்கண்ணாடி பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. என் சினிமா ஆசை மீண்டும் மேல் எழ, அருகே சென்று சேரனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து அருகே சென்றேன், ஆனால் சேரன் மிக கோவமாக கத்திக்கொண்டிருப்பதை பார்த்து அப்படியே நின்று விட்டேன். சினிமா ஆசை எனக்குள்ளே சென்றுவிட்டது.

வேலைக்காக கிண்டி சென்றுப்போது அங்கு பெயின்ட் வேலை செய்யும் அண்ணன் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன், அவர் சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பதாகவும் நேரம் கிடைக்கும் போத பணத் தேவைக்காக இந்த வேலை செய்வதாகவும் சொன்னார். அவரிடம், என்னையும் உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்வர்களா? என்று கேட்டேன். சினிமாவில் அவ்ளோ ஈசியா சேர முடியாது தம்பி, ரொம்ப கஷ்டம் என்று சொன்னார். அவர் சொன்ன எதிர்மறையான கருத்தால் சினிமா ஆசையை சற்று தள்ளிப்போட்டேன்.

என் தெருவில் சிதம்பரம் என்பவர் புகைப்படக்காரராக இருந்தார். எங்களுடன் கிரிக்கெட் விளையாட வருவார். மாலையில் அவருடன் பேசுவது வழக்கம். அன்று அவருடைய நண்பர் செழியனை எனக்கு அறிமுகப்படுத்தினார். சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பதாகவும், ரூமுக்கு வாடகை கொடுக்கமுடியாமல் என்னுடன் தங்கியிள்ளார் என்றும் சினிமாவை விட்டுவிட்டு வீட்டுக்கே போகப்போவதாகவும் சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு? அதெல்லாம் நமக்கு செட் ஆகாது தம்பி! சினிமான ரொம்ப கஷ்டப்படனும் என்றார். எனக்குள் இருந்த சினிமா ஆசை, வெளி வராத அளவுக்கு என்னுள்ளே சென்றுவிட்டது. இயக்குனர் அக வேண்டும் என்பதை மறந்து போய் வேலைகளில் மூழ்கிபோனேன். சில மாதங்கள் பிறகு என் தெரு முக்கில், முகவரி படத்தின் இயக்குனர் V.Z.துரை, காரின் மீது சாய்ந்துக்கொண்டு போன் பேசிக்கொண்டுயிருந்தார், நான் பார்த்து விட்டு அமைதியாக சென்றேன். செழியன் அண்ணா சொன்னது தான் என் காதில் ஒலித்தது.

பின்பு, நான் ஒரு அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அதில் பணிபுரியும் வேலையில் சில படங்கள் திரையிடுவார்கள் அதைப் பார்ப்பது, திரையரங்கில் சில படங்கள் என்று வாழ்கை போனது, ஆனாலும் சினிமா மீதான ஆசை எதோ ஒரு ஓரத்தில் இருந்ததுக் கொண்டே தான் இருந்தது. அரசியல், இலக்கியம் சார்ந்த விசயங்களில் நாட்டம் அதிகமானதால் சினிமா கொஞ்சம் மறந்தே போனது. ஆனந்த விகடன் புத்தகத்தின் விகடன் வரவேற்பறை என்ற பகுதியில் “கருவேப்பிலை” என்ற புத்தகத்தை பற்றி படித்தேன், சினிமா இயக்குனராக வேண்டும் என்று கடைசியில் வெறும் கருவேப்பிலையாக ஆன உதவி இயக்குனரின் கட்டுரை அது. அதை வாசித்த பின்பு சினிமா ஆசையே சுத்தமாக மறந்தேன்.

அரசியல் சார்ந்தவைகளில் கவனம் ஆழ்ந்தது. அப்பொழுது தான் பேஸ்புக் எனக்கு அறிமுகமானது. அதில் நிறைய தகவல்களும் பல எழுத்தாளர்கள் நட்பு கிடைத்ததால் பேஸ்புக் ஒரு அறிவு வெளியாக அன்று தெரிந்தது. அதில் ஜெயச்சந்திர ஹாஷ்மி போன்ற தோழர்களின் பதிவுகளை பின் தொடர்வேன். அதன் மூலமாக தான் தமிழ் ஸ்டுடியோ அருண் அவர்களின் நட்பு வட்டத்தில் இணைந்தேன். பேஸ்புக்கில் அருண் அவர்கள் எழுதும் பதிவை பார்ப்பேன். சினிமாவை அதிகமாக விமர்சித்து எழுதும் பதிவு மற்றும் கமலை விமர்சித்து போடும் பதிவை பார்த்து கோவம் வரும் (அன்பே சிவம் போன்ற படங்களினால் அப்பொழுது கமலை பிடிக்கும்) என் இயக்கத்தை பற்றி எதோ விமர்சித்த பதிவை கண்டு கோவம் கொண்டு அவரின் பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பின் தொடர்ந்தேன்.

அருண் அவர்கள் போட்ட பதிவில் பேசாமொழி என்கிற மின்னிதழ் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதில் சென்று படித்த முதல் கட்டுரை சதத் ஹசன் மண்டோவின் கட்டுரை தான். த.மு.எ.க.ச வில் அறிமுகமான படைப்பாளி சதத் ஹசன் மண்டோ. இங்கு அவரை பற்றிய கட்டுரை பார்த்து பொழுது, இருக்கும் அணைத்து கட்டுரையும் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து படித்தேன். அந்த கட்டுரைகள் வெறும் சினிமா என்கிற சாரத்தை மட்டும் பேசாமல், இந்த சமுகத்தின் மீதான அக்கறை அதிகம் இருந்ததை உணர்ந்தேன். ஒரு அரசியல் இயக்கும் செய்யும் நினைக்கும் மாற்றத்தை சினிமாவின் மூலமாகவும் செய்ய முடியும் என்று தெரிந்துக்கொண்டேன்.

தமிழ் ஸ்டுடியோவின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வுக்கு சென்றேன். அதுவும் இயக்குனர் ராம் வருவார் என்பதால், நிகழ்வு சிறப்பாக இருந்தது. அருண் ரொம்ப கோவக்காரர் போல என்று நினைத்து இருந்த எனக்கு, ராம் தான் ரொம்ப கோவக்காரர் போல தோன்றியது. அன்று இரவே பேஸ்புக்கில் படிமை திரைப்பட பயிற்சியில் மாணவர்கள் சேர்ப்பதாக பதிவை பார்த்து அருண் அவர்களை தொடர்புக் கொண்டு படிமையில் சேர்ந்தேன். 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio