Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
ஜெயகாந்தன்

 

புத்தகம், கவிதை, காதலென காலம் கழித்திருந்த வெகு சாதாரமான கல்லூரி மாணவன் நான். அக்கறை ததும்பும் வார்த்தைகளை என்னிடம் பலர் இது போன்று சொல்லிருகிறார்கள், “ஒழுங்கா படி campus interview ல வேலை வாங்க பாரு இல்லேன்னா மேல படி அதுவும் இல்லேன்னா competitive exam எதுக்குனா தயார் பண்ணு” இப்படி பொறுப்பில்லாமல் கவிதை சினிமான்னு சுத்திக்கிட்டு இருக்காதே” என்று.

எல்லாம் கல்லூரி வரைக்கும்தண்டா இங்கிருந்து பிரிஞ்சுருட்டா எவனும் உன்னை கண்டுக்கமாட்டான். அவணவன் அவன் வாழ்கையை தேடி போய்டுவான். நீதான் உன்ன வளர்த்துக்கணும்னு நண்பனே ஒரு முறை சொன்னான் இறுதியாண்டில்..
இந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டால், ஒரு இரண்டு நாட்களுக்கு வருங்காலத்தை நினைத்து எனக்கு பயம் வந்துவிடும். வழக்கமாக கல்லூரி நூலகத்திற்கு சென்று தேடும் கவிதை புத்தகத்திற்கு கையில் aptitute புத்தகமும் ஆங்கிலம் வளர்க்கும் முயற்சிக்குமான புத்தகமும் இருக்கும்.

பிறகு வழக்கும் போல கவிதைகள், சிறுகதைகள் படிப்பதும், இரவுகாட்சி சினிமாவிற்கு செல்வதும் என்றுதான் நாட்கள் கழியும். ஒருநாள் இணையத்தில் எழுத்தாளர்களின் எழுத்துகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். ஏதோ ஒன்றை தேடி இணையத்தில் நுழைய, அதை அறிந்ததன் தொடர்ச்சியாக வேறு ஏதோ ஒன்றை படித்து கொண்டுடிருப்பேன். இந்தத் தேடல் ருசியில் புத்தக பிரியத்தை மறக்க ஆரம்பித்தேன். இப்படி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் மனநிலையில் எனது ஆர்வங்கள் மொத்தமும் சினிமாவில் விழுந்ததை எனது தினசரி தேடல்களிலேயே நான் அறிந்துகொண்டேன். அப்படி தேடியதில் கிடைத்ததே தமிழ் ஸ்டுடியோவும் படிமையும்.

இலவசமாய் நல்ல சினிமா கற்றுத்தருவதாய் இருந்த அறிவிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதைவிடப் பிரம்மிப்பாக அடுத்த அறிவிப்பு, நீங்கள் வேலை செய்துகொண்டே வாரந்தோறும் சனி, ஞாயிறு மட்டும் வகுப்பில் கலந்துகொள்ளலாம் என்றிருந்தது.

சினிமா துறையில் சேர ஒரு இடம் இருக்கிறது, ஆனால் எனக்கு ஒரு வேலை இல்லை என்று உணர்தேன். முயற்சி செய்தும், சென்னை தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. நான் படித்த உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் ஓசூரில் இருப்பதால், அதில் நான் சேரவில்லை. பிறகு சென்னையில் இருந்து வந்து ஒரு நிறுவனத்தில் நான் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். வேலை உறுதியானதை அடுத்து பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு இறுதியாக நான் அழைத்தது தமிழ் ஸ்டுடியோ அருண் அவர்களுக்கு.

“சார் என்னக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டது, தற்போது படித்துகொண்டு இருக்கிறேன். படிமையில் சேரணும்.” என்று சொன்னேன். “நீ படிச்சு முடிச்சதும், சென்னைக்கு வந்து பாருப்பா,” என்றார்.

கல்லூரி முடிந்து இரண்டு நாட்களில் நண்பர்களிடம் பிரியாவிடை பெற்று, பெற்றோர்களையும் சந்திக்காது நேராக வந்த இடம் சென்னை, தமிழ் ஸ்டுடியோ.

இப்பொழுது படிமை மாணவன் நான். தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்குள் என்னை இணைத்துக்கொண்டு படிமை மாணவனாய் இயங்கி கொண்டிருக்கிறேன்.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio