காட்சி – 7
ஒரு ஆட்டோவிலிருந்து இறங்குகிறான் அன்பு. அவன் தனியே படுத்துகிடக்கிறான். பின்பு தனியே அமர்ந்திருக்கிறான். பின்பு நான்கு பேர் உள்ளே வருகிறார்கள். வளர்மதி அமர வைக்கப்பட்டிருக்கிறார். அவனின் பின்னாள் நான்கு பேர் நிற்கிறார்கள் பின்பு அவரது கன்னங்களில் சந்தனம் போட்டு சடங்கு செய்கிறார்கள். பின்பு முகத்ததை மூடியபடி தலையில் சொம்புடன் இருவர் அழைத்து வருகிறார்கள்.
அவனை ஒரு காளையின் படத்திற்கு முன்பு அமரவைத்து அவனது முகத்தை விளக்கி காளி படத்தை பார்க்கிறான். பின்பு இருவர் அவனது முகத்தை விளக்கி பார்த்துவிட்டு திருஸ்ட்டி கழிக்கிறார்கள். பின்பு அங்கே உள்ள ஒரு இனிப்பை எடுத்து உண்ணுகிறான். உடனே அங்கிருக்கும் அனைவரும் கைதட்டுகிறார்கள்.
வளர்மதி தனியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். பின்பு அவள் படுத்திருக்கிறாள். அவன் முன்பு ஒரு தட்டில் இரண்டு இட்லி இருக்கிறது. அவளின் நாநி அவளுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். பின்பு ஒரு வேனில் ஏறி அமருகிறாள். வேன் கிளம்புகிறது.
காட்சி – 8
இரவு நேரத்து வளர்மதியின் வீடு. வீட்டின் முன்புறம் இருக்கும் படிகளில் மெதுவாக ஏறுகிறாள் வளர்மதி. பின்பு கதவினை தட்டுகிறாள். லட்சுமி மெதுவாக வெளி விளக்கினை போடுகிறான். பின்பு தனது மகனை அடையாளம் கண்டு அருகில் சென்று அணைத்துக் கொள்கிறாள். உடனே அவளுடைய மகளும் உள்ளே இருந்து வெளியெ வருகிறாள். இறுதியில் அப்பாவும் வந்து யார் என்று புரியாமல் விழிக்கிறார். பின்பு புரிந்ததும் இடிந்துபோய் அமருகிறார். பின்னர் அனைவரையும் உள்ளே போக சொல்லிவிட்டு ஏதிர் திண்ணையில் வளர்மதியை வெளியில் நிறுத்தி பேசுகிறார். அவனது முகத்தை பார்க்காது வீட்டின் உள்ளே பார்த்தபடியே பேசுகிறார். பின்னர் உள்ளெ சென்று கதவினை தாள் போடுகிறார். வளர்மதி தலையில் அடித்துக்கொண்டு அழுகிறாள்.
அவளுடைய தாயார் சன்னலருகே அழைத்து ஒரு பைல் ஒன்றை தருகிறார். அதை கையில் வாங்கி பழைய வீட்டு நினைவுகளுடன் வெளியேறுகிறாள் வளர்மதி.
காட்சி -9
ஒரு சில கடைகள் கொண்ட அடுக்குமாடி கட்டிட வாசலில் கீழே தள்ளபடுகிறாள் வளர்மதி. பின்பு மெதுவாக எழுந்து நடந்து செல்கிறாள். ஒரு அலுவலக அறைக்குள் நுழைகிறாள். உள்ளே அமர்ந்திருக்கும் ஒருவர் எழுந்து வெளியெ வருகிறார். பின்பு அவளின் கையில் உள்ள பைலை அவரிடம் தருகிறாள். அவர் அதனை புரட்டி பார்க்கிறார். பின்பு சில விளக்கங்கள் கேட்கிறான். வளர்மதி அவரிடம் ஏதோ வேண்டி கெஞ்சுகிறாள். பின்பு தனது தலையில் அடித்துக்கொண்டு பலமாக அழுகிறாள்.
சாலையில் வளர்மதி ஒரு இருட்டான இடத்தில் இருந்து வெளிச்சத்திற்கு வந்து நிற்கிறாள். |
அன்பு கூட வந்த பெண் - அழுவாதாடி வளரு
அன்பு: நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை தெரியலேயெ வளரு..
வி. ஓ. பல கொடுமைகளையும் கஸ்டங்களையும் தாங்கிகிட்டு கொஞ்ச கொஞ்சமா பணம் சேர்த்து ஆந்திராவுல கடப்பாவுல நிர்வாணம் பண்ணிகிட்டேன். வலியால சிரமபட்டாலும் நான் ஒரு முழு பெண்ணா ஆனதால அன்னைக்கு தான் நாம் ரொம்ப சந்தோசப்பட்டேன். அன்றையிலிருந்து 40 நாளைக்கு ஆம்பளைங்க முகத்தையெ பார்க்காது வீட்டலயே இருந்தேன்.
பெண் குரல்: வளரு யார பார்கணும்
வளர்மதி – என் குருவ பார்கணும்
பெ, கு. – அடுத்தது யாரை பார்கணும்
வளர்மதி என் குருபாய பார்கணும்
பெ, கு, எது வேணுமோ அத எடுத்து சாப்பிடு
வி. ஓ. எல்லாம் முடிந்ததும் எனக்கு எங்க அம்மாவ பார்க்கணும்னு ஆசையா இருந்தது. சாப்ட பிடிக்கல. தூங்கவும் பிடிக்கல. ஊருக்கு போரேணு நாநி கிட்ட கேட்டேன்
நாநி – ஊருக்கு போனமா, வந்தமான்னு இரு. அங்கேயே போய் இருந்துடாத அங்கயே இருந்திட்ட நாங்க வந்து அசிங்க படுத்துடுவோம் என்ன புரிஞ்சதா?
வாகனங்ளின் சப்தம்..
விசில் சப்தம்..
இசை
காலடி சப்தம்..
இசை
லட்சுமி – யாரு..
வளர்மதி : நான்தாம்மா
லட்சுமி – நான்தான்னா
அழுகை சப்தம்
லட்சுமி – அன்பு அய்யய்யோ. அய்யோ
வ. மதி – அம்மா
வ. மதி அம்மா – அன்பு எங்கடா போன
வ. மதி அம்மா - இங்க பாருமா
மூவரின் அழுகை
வ. மதி அம்மா- நம்ப பிள்ளைய பாருங்க
அழுகை
வ. அம்மா: நம்ம அன்பு எப்படி மாறிட்டான்னு பாருங்க.. சாப்பிடலாம் வாடா
வ. மதி அப்பா – டேய் நில்லுங்கடி.. ஏய் போடி நீயும் போடி
அம்மா.. நம்ம குழந்தைங்க
அப்பா போடி.. தெருவுல போறவங்கலுக்கெல்லாம் சாப்பாடு போடுறேன்னு...
வ. மதி – அப்பா
அப்பா – என் பொண்ணுக்கு நல்ல சம்மந்தம் அமைஞ்சிருக்கு.. நாளைக்கு நிச்சய தாம்பலம்.. நீ இங்கிருந்த அது நடக்காது.. நாங்க 3 பேரும் செத்துபோக வேண்டியதுதான்.
வ. மதி – அப்பா நானும் உங்க பிள்ளைதான்
நான் என்ன தப்பு பா பண்ணினேன்
அன்பு அழுகை சப்தம்
வ. மதி அப்பா அன்பு .. அன்பு
வ. மதி அம்மா
அம்மா – நீ என்னவாவேணும் நானும் இருந்துட்டு போ ஆன உழைச்சி சாப்பிடுப்பா
வ. மதி போயிட்டு வரேன்மா.
அம்மா (அழுகையுடன்) போயிட்டு வாப்பா
இசை
வி.ஓ. எங்கம்மாவ பார்த்துட்டு வந்ததுக்கு அப்புறம் ஏதாவது கவுரமா வேலை பார்த்து வாழனும்னு ஆசைப்பட்டேன்.
ஆண்குரல் - உனக்கெல்லாம் என்ன வேலை தர்றது.
வி.ஓ. நிறைய கம்பெனிலே வேலை கேட்டு பார்த்தும்..
வ. மதி. வணக்கம் சார்
ஆண் குரல் - சொல்லுங்கமா நான் என்ன செய்யணும்?
வ. மதி. - இந்தாங்க சார் இது என்னோட சர்டிபிகெட்
ஆ. கு. – நீங்க வளர்மதின்னு சொன்னிங்க இதுல அன்புன்னு இருக்கு..
வ. மதி – சார் அது. வந்து.... வந்து.... புரியுது புரியுது
இங்க வேலை கிடைக்கணும்னா ஒன்னு ஆணா இருக்கணும், இல்ல பெண்ணா இருக்கணும்.
வ. மதி. – சார் எங்கபோனாலும் இதையே சொல்றாங்க.. என்னோட பிறப்புக்கு ரேசன் கார்டு கேட்டாலும் இதையேதான் சொல்றாங்க.. மிருகத்தகூட காப்பாத்த சட்டமிருக்குது.. ஆனா இந்த உலகத்துல எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.
ஆ.கு. அதுக்கு நான் என்ன பன்னமுடியும்.. நான் என்ன அரசாங்கமா..
வ.மதி எங்களுக்கு நீங்க சொர்க்கத்தை காட்ட வேண்டாம் ஆனால் நரகத்தை காட்டிவிடாதிங்கதான் சொல்ரோம்.
( வி. ஒ. - Voice Over) |