வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 2

சக்தி ஜோதி  

சீனாவில் நாங்கள் இருந்த ஒவ்வொரு கணத்திலும் சீனர்களின் தாய்மொழிப் பற்றினை எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தார்கள். அனேகமாக அனைத்து கடைகளின் பெயர் பலகைகளிலும் சீன மொழியே இடம் பெற்றிருக்கிறது. ஏறக்குறைய நம் காலத்தில் அதாவது 1950 ஆம் ஆண்டு தான் மன்னராட்சியிலிருந்து விடுதலை பெற்றார்கள். ஆனால் அவர்களது முன்னேற்றம் பலமடங்கு நம்மை விட முன்னேறியிருப்பது பிரமிப்பாக இருந்தது.

முதலில் அவர்களது தொலை நோக்குப் பார்வை. அதற்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள். அரசாங்க கட்டளைகள் அவர்களைச் செலுத்துகின்றன. சற்றே இயந்திரத்தனம் கலந்து இருந்தாலும் இயல்பு வாழ்க்கையும் அதில் அவர்களின் ஈடுபாடும் அதிகம் தான். சீனர்களின் உணவுப்பழக்கம், உடைகளில் நம்மைவிட வித்தியாசமாக இருந்தாலும் குடும்பம் என்கிற அமைப்பில் நம் போலவே மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள்.

வயதானவர்களை நம் நாட்டில் புறக்கணித்து வருகிறோம் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் சீன அரசாங்கம் மூத்தக் குடிமக்களுக்கு செய்கின்ற சேவைகள் சிறப்பாக உள்ளது. அதிகமான ஓய்வூதியம், வயதானவர்கள் கூடி மகிழ பூங்காக்கள் என மூத்த குடிமக்களை மதிப்புடன் நடத்துகின்றனர்.

சீனாவில் மனதை கவரும் இன்னொரு விஷயம், சீனர்கள் சைக்கிள் பிரியர்கள். பெரும்பாலான சீனர்களின் வீடுகளில் சைக்கிள் கட்டாயமாக இடம் பெற்றிருக்கிறது. சாலையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் சைக்கிள் நிறுத்த தனி இடம் என முடிந்தவரை எங்கும் சைக்கிள் பயணம் என்பதை பார்க்க முடிந்தது. சைக்கிள் பயணம் பெட்ரோல் செலவு குறைவு என்பதை விட சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமைகிறது என்பதை நம்புகிறார்கள்.

எளிமையான சைக்கிள் பயணம் கண்டு வியந்து கொண்டே நாங்கள் சென்ற முதல் இடம், நேசனல் சென்டர் ஃபார் த பர்பாமிங் ஆர்ட்ஸ்!’ (National Center for the Performing Arts) கட்டிடம்! சாதாரண கட்டிடமல்ல அது. கலை உணர்வோடு கட்டப்பட்ட ஓவல் வடிவிலான ஒரு ‘அடேங்கப்பா’ கட்டிடம். சர்வதேச நிகழ்ச்சிகள், ஹைடெக் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரே சமயத்தில் சுமார் 6,500 பேரை அமர வைக்கத் தோதான கட்டிடம். இதில் நடக்கும் நிகழ்ச்சிகளை யாரும் கண்டுகளிக்கலாம்.

கட்டணம்? வெறும் 2,000 டாலர்கள் தான். அதாவது நம்ம ஊர் மதிப்பில் சுமார் 80,000 ரூபாய்! இந்த ‘ஓபரா ஹவுஸ்’ எங்களிடம் வெறும் பிரமிப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை. இந்த மாதிரி ஒரு விசாலமான சர்வதேசத் தரமான அரங்கம் நம்ம ஊரிலும் அமைக்கலாமே. “கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் யோசிக்கக் கூடாது? “ – என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.

சீனாவின் தேசிய நிறமான சிவப்பு வர்ணத்தில் ஓபரா ஹவுஸ் நிறைந்திருந்தது. உட்புற சுவர்களும், நாற்காலிகளும் இன்னும் திரைசிலைகளும் சிவப்பால் நிறைக்க, சீனர்கள் சிவப்பு வர்ணத்தை விரும்பும் காரணத்தை மாலையில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அடுத்ததாக ‘திபெத் நேற்று - இன்று’ கண்காட்சிக்கு சென்றோம்.திபெத்துடன் நல்லுறவு இருப்பதை அல்லது இருக்கும் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நிகழ்ச்சி நிரலில் இந்த விஸிட் அமைந்திருந்ததாகவே எங்களுக்கு தோன்றிற்று. அண்டை நாடுகளுடன் இனக்கமாக இருக்க விரும்புவதும், போர் புரிந்து ஆளுகைக்குள் வைத்துக்கொள்ள விரும்புவதுமான மனநிலை எந்த சமூகத்திலும் மாறி மாறி தொடர்ந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது என தோன்றியது.

''சுதன் ராஜ்’ என்ற சீனமொழி படிக்கும் இந்திய மாணவர் எங்களது குழுவின் தலைவர். இவர் எப்போதும் ஹிந்தியிலேயே தகவல்களைச் சொல்ல, கமலக்கண்ணன் கடுப்பாகிச் சண்டையே போட்டு விட்டார். நானும் கண்மணியும் உள்ளே புகுந்து சமாதானப்படுத்த வேண்டியதாய் போய் விட்டது. இருப்பினும் கமலக்கண்ணன் தன் தரப்பு நியாயத்தை கூறிய பின்பு தான் ஆங்கில உரையாடல் நிகழ்ந்தது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.