வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


நெருநல் நினைவுகள்…..

கலாப்ரியா  

”வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
வாழ்ந்து விட்டுச் சொல்லுகிறேன் அந்த வித்தியாசம்..”-

-ஜெயகாந்தன்

சமீபத்தில் ஒரு கனவு. எங்கள் பழைய்ய்ய திருநெல்வேலி வீடு…., புறவாசலில் உள்ள குச்சுகள் ஒன்றில் புதுமைப்பித்தன் குடியிருக்கிறார். அவருக்குத் தபால்க்காரர் தரும் ஒரு தபாலை எடுத்துக் கொண்டு ஒரு ஏழு எட்டு வயதுப் பையனாகப் புறவாசலுக்கு ஓடுவது போல்…..ஒரு கனவு. என் ஏழு எட்டு வயது உருவம், குரல், அரை டிராயர்…எல்லாம் அப்படியே நினைவு போலிருக்கிறது. புதுமைப்பித்தனின் முகம் பிடிபடவில்லை, மசங்கலாக இருக்கிறது.

வீட்டின் புறவாசலில் (புழக்கடை) இரண்டு மூன்று குச்சுகள் உண்டு. அவற்றில் ஒன்றில், நாகர்கோயில்ப் பக்கம் பாரசாலையிலிருந்து வந்த ஒரு பிராமணக் குடும்பம் குடியிருந்தது. அவர் ஜங்ஷன் ‘சந்திர விலாஸ்’ ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்தார். அதிகாலையில் போனால் இரவு பதினோரு மணிக்கு வருவார். வாடகை தருவதற்கெல்லாம், ஏகக் கஷ்டம். ஆனாலும் ஏனோ அப்பா அவர்களைக் காலி செய்யச் சொல்வதில்லை. அம்மாவுக்கு அந்த வீட்டு மாமிதான் ஊறுகாய் போட்டுத் தருவாள். அம்மா ஊறுகாய் போட்டால் நாலே நாளில் பூசனம் பூத்து விடும். மாமி நேந்திரம் பழத்தில், இனிப்புச் சிப்ஸ் மற்றும் சாதாரணச் சிப்ஸ் போடுவதிலும் கைப்பக்குவம் அப்படி மொறு மொறுவெனப் பேசும். அவ்வப்போது நாகர்கோயிலிலிருந்து, நேந்திரங்காய் வாங்கி வந்து, சிப்ஸ் போட்டுத் தருவாள் மாமி. அதுவும், இரண்டு மூன்று சீப்பு, நன்றாக விளைந்த காய்களைச் சீவி, வருவல் போட்டு ஒரு பிஸ்கட்டின் நிறையத் தருவாள். இல்லாவிட்டால் இங்கே பெரிய வீட்டிற்குக் காணுமா. மற்றப்படி வீட்டுப் பெண்களுக்கு, குச்சு வீட்டுக் காரர்களைக் குறிப்பாகப் பெண்களை அவ்வளவாய்ப் பிடிப்பதேயில்லை. தெருவில் பல வீடுகளின் பின்னாலும் இதே போல் குச்சு வீடுகளும் அதில் ‘குச்சு வீட்டு மனிதர்களும்’, இதே போன்ற ‘மரியாதையுடன்’ குடியிருப்பதுண்டு.

அவர் வீட்டுக்கு, ராஜம் கிருஷ்ணனா, அநுத்தமாவா யாரென்று நினைவில்லை, ஒரு பிரபல பெண் எழுத்தாளர், அவர்களது உறவினர், வந்திருந்தார். அம்மா, அக்காவெல்லாம் மாமியின் வீட்டுக்குள் போய் அவரைப் பார்த்து வந்தார்கள். நான் வாசலில் நின்று எட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான் இடமிருந்தது. அதைப் பற்றிக் கொஞ்ச நாள் முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். அதே போல் பாப்லோ நெருதாவுக்கு தபால் கொண்டு தரும் ’போஸ்ட்மேன்’ (எல் போஸ்டினோ) படம் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன்….புதுமைப்பித்தன் பற்றி எப்போது யோசித்தேன், நினைவில்லை. எல்லாமுமாகச் சேர்ந்து இந்தக் கனவு வந்திருக்க வேண்டும்.

நான் பத்தாயிரம் மைல்களை ’நடந்து’ கடந்தவனும் இல்லை, பத்தாயிரம் நூல்கள் படித்தவனும் இல்லை. (ஒரு பிரபல எழுத்தாள நண்பர் குறிப்பிட்டது போல (!) என் வாசிப்பு என்பது, அதிகமும் சினிமாப் போஸ்டர் மட்டும்தான்). அங்குமிங்கும் ஆடுகிற ஊஞ்சல் போலத்தான் என் பயண விசாலம். அதில்க் கூட சில துணிச்சல்க்காரக் குழந்தைகள் போல, தலை குப்புற ஊஞ்சலாடியதுமில்லை. ஆனாலும் நான் அசலான சில மனிதர்களையும், அவர்கள் அபிலாஷைகள் நிறைந்த வாழ்க்கையையும் அவர்களது வியர்வை வாசத்தின் நெருக்கத்திலிருந்தபடி அவர்களுடன் வாழ வாய்த்து, உணர்ந்திருக்கிறேன். சில பால்ய காலத் தெரு நண்பர்கள் என்னை ஏனோ புறக்கணித்தபோது - அது ஒரு செல்லப் புறக்கணிப்புத்தான்- நான் அப்படியொரு அசாதாரண இனஞ்சேரலுடன் அந்த இன்னொரு உலகினரின் அன்புக்குள் அடைக்கலம் கண்டேன். அவர்கள் யார் வீட்டின் அடுக்களை வரைக்கும் சாதாரணமாகப் போவேன். கேட்டும் கேட்காமலும் சாப்பிடுவேன். சுதந்திரமாகவும் அதிகப் பிரசிங்கித் தனமாகவும் அலைந்து திரிந்திருக்கிறேன். எல்லாமும் எல்லாரும் என் கனவிலும் நினைவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்களுடனான என் இயைபு என் நினைவில் தேர்த்தடம் போல் பதிந்திருக்கிறது..

தேரோட்டத்திலும், திருவிழாவிலும் எல்லோரும், எல்லோரின் கவனமும், கொண்டாட்டம் நிறைந்த முன் பகுதியிலேயே இருப்பார்கள்/ இருக்கும். தேர், கை விட்டு நகர்கிற அதன் பின்புறத்தில், வீதியில் அது உண்டாக்கும் அழுத்தமான தடம், மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் உருள, நம்மை வாய் திறந்து சொல்லவைக்கும், பிரமிக்க வைக்கும், ”தேர்ன்னா தேர்தான்”. பார்த்துத் திரும்பிய பலமுறை மனசுக்குள் தோன்றியிருக்கிறது, “கால்வல் நெடுந்தேர்”, ’உருள்பெருந்தேர்’ என்ற சொற் சேர்க்கைகள். கொண்டாட்டமும் வெறுமையும், தேருக்கு இப்புறமும் அப்புறமுமாய் நிலை கொள்ள, வருடாவருடம் தேர் நகர்கிறது. வருடாவருடம் அது நிலையம் சேரவும் செய்கிறது. இரண்டு தேரோட்டங்களுக்கிடையில் என்னவெல்லாமோ நிகழ்கிறது. ஒரு தேரோட்டத்திற்கு இருக்கும் ஒருவன் அடுத்த தேரோட்டத்தில் இல்லாமல்ப் போகிறான். தேருக்கு எதிராகவே பாடையில்ப் போகிறான். போன தேரோட்டத்தின் போது, புறவாசல்க் குச்சு வீட்டில் இருந்த குடும்பம் இந்தத் தேரோட்டத்தின் போது இன்னொரு தெருவிற்கு, இன்னொரு தகரக் குச்சுக்குக் குடி பெயர்ந்து, அதே மத்தியான வேனல்ப் புழுக்கத்தில் புணர்ந்து பெற்ற புதிய, ‘பீத்தொலி’ உரிகிற சிவந்தமேனியுடனான கைச் சிசுவுடன் தேரோட்டம் பார்க்க நிற்கிறது. செயலாக இருந்த குடும்பம் செயிலிழந்து நிற்கிறது. தச்சநல்லூர் அண்ணா சிலையின் முன் “குடிக்க மாட்டோம்” என்று உறுதி மொழி எடுத்தவர்களுக்குத் தலைமை ஏற்றவன், ஒரு சிகரெட்டைக் கூடத் தொட்டறியாதவன், அப்படிக் குடிக்கிறான். மெல்ல மெல்ல அரசியல் மாற்றம் நிகழ்ந்து ஆட்சி மாறுகிறது.. எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாகவும் சிலவற்றிற்கு நேரடியான சாட்சியாகவும் இருக்க நேர்கிறது..

”தனிமை இனி நிரந்தரக் குத்தகை

துயரக்கனவுகள் எனக்கினி எத்தனை….”

என்ற தேவகோட்டை வா.மூர்த்தியின் கவிதை வரிகளைப் பகிர்ந்து கொண்டபோது “காத்திரு வசந்தம் வராமலே போகாது..” என்று சுப்ரமணிய ராஜு கடிதம் எழுதினது போல், எதற்காகவோ காத்திருந்தேன், கொஞ்சம் அறிவு ஜீவியாக மாறி. ஆனாலும் உள்ளாடை அணியாதவர்கள், கக்கூஸ்பத்தும் சீலைப்பேனும் தொந்தரவு செய்ய தனிச்சையாய் சொறிந்து கொள்ளுபவர்கள், இன்னும் தனிச்சையாய் சொறிந்த கையை முகந்து பார்ப்பவர்கள்…… இதற்கு நேர் எதிராய் வாசனையில் வாழ்பவர்கள் என்று தனிச்சையான பலருடனுமான என் அணுக்கத்தை நான் விட்டு விடத் தயாராயில்லை.. வீடு, தெரு, என்ற வாழ்க்கை, தேரோடும் வீதி, அவ்வீதியில் இணையும் தெருக்கள், நூற்றுக்கணக்கான அதன் மனிதர்கள் என்று விரிவடைந்தபோது கண்டவையும் அனுபவித்தவையும் இன்னும் இருக்கின்றன. அவற்றை இன்னொரு வகையில் இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை ஒரு நாவல் வடிவத்தில்.

இக்கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் போது பல பின்னூட்டங்கள், பெரும்பாலும் பாராட்டுரைகளுடன், ’கூடு’ இணையதளத்தில் வந்தன. அவற்றில் பலரும் தங்களுக்கு முந்திய தலைமுறையின் நிகழ்வுகளை ஆவணப்படுத்துங்கள் என்று கேட்டிருந்தார்கள்.. அதையும் (வலிந்து செய்யாமல்) செய்திருப்பதாய் நினைக்கிறேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் அன்பாந்த நன்றி. உங்கள் அன்பு இல்லாதிருந்தால் இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நீண்டிருக்குமா என்பது சந்தேகமே.

இதில், காலமும் சூழலையும் தவிர்த்து, நிகழ்வுகளை, நினைவுகளைப் பெரும்பாலும் புனைவாகவே பதிவு செய்திருக்கிறேன்.. இதை எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய. தமிழ்ஸ்டுடியோ.காம் நண்பர்கள் அருண், குணா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

--------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

30 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

ஐயா கட்டுரை முடிகிறதா? கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. எப்போது உங்கள் கட்டுரையும், உங்கள் முகமும் முகப்பில் பார்த்தே பழகிப் போய் இருக்கிறோம். இப்போது கட்டுரை முடிகிறது என்பதை கேட்கவே கொஞ்சம் அச்சமாக இருக்கிறது. தயவு செய்து உங்கள் கட்டுரையைத் தொடருங்கள்.

அனுப்பியவர் செல்வராஜ் on Monday, 12.09.11 @ 10:09am

இப்போதுதான் தொடங்கியது போல் இருக்கிறது. இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. அதனால் என்ன? உங்கள் கட்டுரை இன்னும் தொடரலாமே? இந்த கட்டுரையையே மீண்டும் படித்தால் தெரிகிறது. உங்கள் எழுத்து இன்னும் எத்துனை வலுவானது என்று. விரைவில் உங்களை சந்திக்க ஆசை. நன்றி.

அனுப்பியவர் பிரகாஷ் on Monday, 12.09.11 @ 10:15am

ஆனாலும் உள்ளாடை அணியாதவர்கள், கக்கூஸ்பத்தும் சீலைப்பேனும் தொந்தரவு செய்ய தனிச்சையாய் சொறிந்து கொள்ளுபவர்கள், இன்னும் தனிச்சையாய் சொறிந்த கையை முகந்து பார்ப்பவர்கள்…… இதற்கு நேர் எதிராய் வாசனையில் வாழ்பவர்கள் என்று தனிச்சையான பலருடனுமான என் அணுக்கத்தை நான் விட்டு விடத் தயாராயில்லை.// எத்தனை நேர்மையான வரிகள். படிக்க அப்படிக்க உங்கள் மீதான காதல் அதிமாகிறது. இனி உங்கள் கட்டுரை வராது என்பதை நினைக்கையில் கொஞ்சம் கோபமும் வருகிறது. ஆனால் எதுவும் முடிந்தேப் போகும். இதுவரை உங்கள் கட்டுரைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். மனதுக்குள் இளமை அப்படியே தக்க வைத்தது அவைகள்தான். உங்கள் எழுத்து மேலும் மேலும் வாழ்க. வளர்க.

அனுப்பியவர் சங்கரலிங்கம் on Monday, 12.09.11 @ 10:25am

உங்கள் எழுத்தே பல சமயங்களில் எனக்கு புத்துணர்ச்சி அளித்தது. இப்போது தொடர் முடிகிறது என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் நாவல் எழுதும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி.

அனுப்பியவர் விக்னேஷ் on Monday, 12.09.11 @ 10:28am

உங்கள் தொடரை முடிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அலுத்துப் போகும்போதுதானே நிறுத்த வேண்டும். இப்போது அதற்கு என்ன அவரசம்? மீண்டும் தொடருங்கள் நன்றி.

அனுப்பியவர் வாசுதேவன் on Monday, 12.09.11 @ 23:19pm

அது என்ன முடிக்கும்போது இத்தனை காட்டமான எழுத்து. படிக்கும்போது முடிப்பதை என்னை மனம் வருந்துகிறது. இந்த வாரம் சிறியதாக முடிவுரை என்றாலும் மிகவும் விரும்பிப் படிக்க செய்வது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

அனுப்பியவர் அன்பழகன் on Monday, 12.09.11 @ 23:23pm

ஏன் என்னாச்சு? எதற்கு இந்த அவரசம்? எங்களை இதமாக ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்த உங்களை இவ்வளவு சீக்கிரம் விட மாட்டோம்? தயவு செய்து மீண்டும் தொடருங்கள். சில நேரங்களில் உங்கள் கட்டுரையே ஒட்டு மொத்த நாளின் பூச்டராக இருந்துள்ளது. தயவு செய்து தொடருங்கள்.

அனுப்பியவர் ஹரி on Tuesday, 13.09.11 @ 00:04am

தேரோட்டத்திலும், திருவிழாவிலும் எல்லோரும், எல்லோரின் கவனமும், கொண்டாட்டம் நிறைந்த முன் பகுதியிலேயே இருப்பார்கள்/ இருக்கும். தேர், கை விட்டு நகர்கிற அதன் பின்புறத்தில், வீதியில் அது உண்டாக்கும் அழுத்தமான தடம், மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் உருள, நம்மை வாய் திறந்து சொல்லவைக்கும், பிரமிக்க வைக்கும், ”தேர்ன்னா தேர்தான்”. /// இதில் ஏதும் உள்குத்து இல்லையே? சும்மா சொள்ளக்கொடாது. இளைஞர்கள் அந்த கால வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க இந்த கட்டுரைகளே போதும். இன்னும் நிறைய எழுதலாமே? ஏன் அதற்குள் முடிக்க வேண்டும்>

அனுப்பியவர் நீலகண்டன் on Tuesday, 13.09.11 @ 00:09am

ஒவ்வொரு தலைப்பு அருமை. ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஜெயகாந்தன் வரிகள் அருமை. எங்கே இருது தேடிப் பிடிக்கிறீர்களோ? உங்கள் தலைப்புக்காகவே ஒவ்வொரு வாரமும் ஓடி வந்து படிப்பேன். இனி என்ன செய்வது? விரைவில் வாருங்கள்.

அனுப்பியவர் பிரசன்னா கென்னெடி on Tuesday, 13.09.11 @ 00:18am

தொடரை தயவு செய்து நிறுத்தாதீர்கள்.. உங்கள் எழுத்தை பார்த்தே நான் சில நேரங்களில் எழுதி பழகி இருக்கிறேன். நீங்கள் கூடு இதழில் எழுத ஆரம்பித்த நாளில் இருந்தே நான் படித்து வருகிறேன். நீங்கள் எழுதத் தொடங்கும்போது இங்கே உங்களை தவிர வேறெந்த பெரிய எழுத்தாளர்களும் எழுத வில்லை. ஆனால் இன்று கூடு மிக நன்றாக வளர்ந்து விட்டது. இப்போது உங்கள் கட்டுரைகளை இன்னும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே வேறு ஒரு தலைப்பில் மீண்டும் எழுத தொடங்குங்கள்.

அனுப்பியவர் கலையரசன் on Tuesday, 13.09.11 @ 00:31am

இந்தக் கட்டுரைகளை புத்தக வடிவில் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் நல்ல வரவேற்பை அடையும் என்றே நினைக்கிறேன். நானே நிச்சயம் பத்து புத்தகங்கள் வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பேன்.

அனுப்பியவர் வளவன் on Tuesday, 13.09.11 @ 00:33am

தெளிவான பார்வையில், தெளிவான வார்த்தைகள். தேவகோட்டை வா.மூர்த்தியின் கவிதை வரிகள் மேற்கோள் காட்டப்பட்ட இடம் அவ்வளவு பொருத்தம்

அனுப்பியவர் ராஜதுரை on Tuesday, 13.09.11 @ 02:42am

நல்ல தொடர்.. உங்கள் தொடர்தான் கூடுவின் முதல் தொடர் என்று நினைக்கிறேன். விரைவில் மீண்டும் உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளோம்.

அனுப்பியவர் செல்வி on Tuesday, 13.09.11 @ 03:09am

கட்டுரை வழக்கம் போல் அருமையாக உள்ளது. ஆனால் இதுதான் கடைசி எனும்ம்போது படிக்க தோன்றவில்லை. சில நாட்கள் கழித்துதான படிக்க முடியும்.

அனுப்பியவர் ராஜேஷ் on Tuesday, 13.09.11 @ 03:32am

கலாப்ரியாவின் கட்டுரைகள் அனைத்தையும் இங்கே படித்திருக்கிறேன். இன்னொரு முறை கூட படிக்கலாம். உங்கள் கட்டுரைகளை மீண்டும் தொடரும் நாளை எதிர்பார்க்கிறேன்.

அனுப்பியவர் வினோத் on Tuesday, 13.09.11 @ 03:39am

அட டா அதற்குள் இரண்டு வருடங்கள் ஓடி விட்டதா? உங்கள் கட்டுரை அந்த அளவிற்கு மயக்கி இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்.

அனுப்பியவர் நடேசன் R on Tuesday, 13.09.11 @ 22:41pm

தொடர் முடியப்போகிறதா?? ஏன் என்னாச்சு சார்.

அனுப்பியவர் பசுபதி on Tuesday, 13.09.11 @ 22:53pm

நெருநல் நினைவுகள் கடைசியில் எங்களுக்கு நெருடலாக முடிந்துவிட்டது. ஏன் தொடர் முடியப்போகிறது. இன்னும் நீங்கள் நிறைய எழுதலாமே?

அனுப்பியவர் உமா ராணி on Tuesday, 13.09.11 @ 22:55pm

ஐயா உங்கள் எழுத்து பயணம் மென்மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள். விரைவில் உங்களை நாவலுடந்தான் சந்திக்க வேண்டும்..

அனுப்பியவர் முருகன், கணபதி, சுதாங்கன் on Tuesday, 13.09.11 @ 23:05pm

பிரமாண்ட ஆலமரம் ஓய்வெடுக்க செல்வது போல் உணர்கிறேன். விரைவில் உங்களை சந்திக்க ஆவல்.

அனுப்பியவர் நடராஜன் on Wednesday, 14.09.11 @ 00:03am

வீடு, தெரு, என்ற வாழ்க்கை, தேரோடும் வீதி, அவ்வீதியில் இணையும் தெருக்கள், நூற்றுக்கணக்கான அதன் மனிதர்கள் என்று விரிவடைந்தபோது கண்டவையும் அனுபவித்தவையும் இன்னும் இருக்கின்றன. // இதில் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கு சார். அலுப்பு தட்டும்போது நிறுத்தினால் போதுமே? இன்னும் இன்னும் வேண்டும் என்று அல்லவா நாங்க கேட்கிறோம்.

அனுப்பியவர் ராகவி on Wednesday, 14.09.11 @ 00:07am

இந்த வாரக் கட்டுரையில் வேகமாக படித்தால் காட்டமாக எழுதியிருப்பது போல் உள்ளது. உங்கள் கவிதைகளை அடுத்து எதிர்பார்க்கிறோம்.

அனுப்பியவர் தனசேகர் on Wednesday, 14.09.11 @ 00:36am

தொடரின் தொடக்கமே இப்போதுதான் வந்தது போல் இருக்கிறது. அதற்குள் முடியப் போகிறதா?

அனுப்பியவர் ஜெயசீலன் on Wednesday, 14.09.11 @ 03:09am

உங்கள் அனைத்துக் கட்டுரைகளும் வெகு ஜோர்.. நீங்கள் விரைவில் மீண்டும் எழுத வேண்டும். நன்றி.

அனுப்பியவர் ஜெகன் on Wednesday, 14.09.11 @ 03:22am

தங்கள் கவிதைகளை விட இப்போது கட்டுரைகளை நான் அதிகம் நேசிக்கிறேன். வேறொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்.

அனுப்பியவர் தி. ரமேஷ் on Wednesday, 14.09.11 @ 04:12am

உங்களுக்காகவே தனது முதல் பக்கத்தின் முக்கிய இடத்தை கூடு கொடுத்திருந்தது. இனி அந்த இடத்தில் யார் வருவார்கள் என்று ஆவலுடன் எதிபார்க்கிறேன்.

அனுப்பியவர் தரணி on Wednesday, 14.09.11 @ 05:36am

ஐயா நீங்கள் இதனை நிச்சயம் புத்தகமாக கொண்டு வர வேண்டும். அந்த விழாவில் நாங்கள் பங்கேற்று உங்களுடன் உரையாத் அவேண்டும். தயவு செய்து ஏற்பாடு செய்யுங்கள்.

அனுப்பியவர் கிருஷ்ணன் on Wednesday, 14.09.11 @ 23:08pm

நீண்ட நாள் கழித்து கதைசொல்லியை படிக்கிறேன். அதே வேகம். அதே நிதானம். அருமை நண்பர்களே.. யார் கதைசொல்லியை சந்தித்தாலும் அருமயான கட்டுரை ஒன்றைக் கொடுத்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

அனுப்பியவர் மருது on Wednesday, 14.09.11 @ 23:36pm

இதுநாள் வரை தொடர்ந்து எங்களுக்கு உங்கள் எழுத்க்களால் ஊக்கமளித்து வந்தீர்கள்.மிக்க நன்றி சார்.

அனுப்பியவர் வேந்தன் on Wednesday, 14.09.11 @ 23:37pm

கலாப்ரியா சார்.
உங்கள் ஊஞ்சல் என் மனதில் அழுத்தமான நினைவுத் தடத்தை பதித்து விட்டிருக்கிறது. தேரின் தடம் போல.
எளிமையான, இனிமையான மனதைத் தொடும் வண்ணம் மிக அருமையாக அமைந்துவிட்டது உங்கள் தொடர்.
தொடர்ந்து என் கருத்தைப் பதிவு செய்யாவிட்டாலும் அனைத்து இடுகைகளையும் விடாமல் படித்துவிடுவேன்.
வெளியிட்ட தமிழ் ஸ்டூடியோவுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்கள் அடுத்த படைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன் - பி.ஜி.எஸ். மணியன்.

அனுப்பியவர் பி.ஜி.எஸ். மணியன். on Wednesday, 21.09.11 @ 09:39am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.